Dear SIVAA sir,
You are fabulous when collecting true records
Printable View
Dear SIVAA sir,
You are fabulous when collecting true records
அன்புள்ள ராகுல் - நீங்கள் 1000 பதிவுகளை தாண்டி விட்டீர்கள் என்பதை இப்பொழுதுதான் பார்த்தேன் - NT பண்ணிய சாதனைகள் போல உள்ளது உங்களுடைய இந்த முயற்சி , முன்னேற்றம் .
இவ்வளவு சீக்கிரம் , அதுவும் தரமான பதிவுகள் போடுவது என்பது நினைக்க முடியாத காரியம் - யாருடைய பாராட்டுக்களுக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து பதிவுகள் போடுவது என்பதிற்கு மிகவும் ஆர்வம் , உற்சாகம் , தன்னம்பிக்கை வேண்டும் - அது உங்களிடத்தில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது - உங்கள் எல்லா முயற்சிகளும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் , இந்த திரியினிலும் வெற்றி பெற இறைவனை மனமார வேண்டுகிறேன்
தாமதமாக Notice பண்ணியதற்கு மன்னிக்கவும் - hearty congratulations !
நடிகர் திலகத்தின் பல்வேறு வேடங்கள் பற்றி நான் பதித்திருந்த பதிவிற்கு பாராட்டுதல்கள் தெரிவித்த அருமை உள்ளங்கள் கல்நாயக், ராகுல்ராம், ரவி, சந்திரசேகரன் மற்றும் அனைவருக்கும் என் பேருவகை கலந்த நன்றி!
மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள்,மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய காலம் இப்போது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. எந்தெந்தப் படிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று மாணாக்கர்கள் சிந்தனை முழுதும் தத்தம் எதிர்காலத்தைப் பற்றியே சுழன்று கொண்டிருக்கும்.
ஆமாம்... அதற்கு நம் நடிகர் திலகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? உண்டு... சம்பந்தம் உண்டு.
பாரிவேந்தர் என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் திரு டி.ஆர்.பச்சைமுத்து அவர்கள் பச்சைத் தமிழர் சிவாஜி அவர்களின் பரம ரசிகர் என்பது நாம் அறிந்த ஒன்று. அவர் நம் நடிகர் திலகம் பெயரில் சென்னை வடபழனியில் எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட் நடத்தி வருகிறார். பல மாணாக்கர்கள் திரைப்படத் துறை சம்பந்தமான இயக்குனர், எடிட்டிங், சவுண்ட் எஞ்சினீரிங், அனிமேஷன், ஒளிப்பதிவு முக்கியமாக நடிப்பு போன்ற துறைகள் சார்ந்த பல்வேறு பட்டப் படிப்புகளை இங்கு பயின்று பலன் அடைந்து வருகிறார்கள். நடிப்பின் நாயகனாக விளங்கும் நம் நாயகரின் பெயரில் இயங்கும் இத்திரைப்படக் கல்லூரி கலைத்துறையில் முன்னேற விரும்பும் பல மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி.
இப்போது சொல்லுங்கள். இப்பதிவு நடிகர் திலகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்று.
நம் நடிகர் திலகம் அன்றும் ஆசான். இன்றும் ஆசான். என்றுமே ஆசான்.
http://i1.ytimg.com/vi/cPGMlU9EMa0/maxresdefault.jpg
இனி மேலும் அதிகமான தகவல்களை இந்த ஒளிக்காட்சி இங்கே உங்களுக்கு அளிக்கும். ஒரு ஆசிரியராக இதை இங்கே பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
http://www.youtube.com/watch?feature...&v=cPGMlU9EMa0
ராமதாஸ் ஐயா.. ஒரு ஆசானைப் பற்றி இன்னொருஆசான்(தாங்கள்) எழுதியிருப்பது மகிழ்வாக இருக்கிற்து..நன்றி..
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் ஐந்து
*
“ஒரு நடிகனோட ஸ்டேஜஸ் மூன்று பிரிவா இருக்கு தெரியுமோ” கேட்டவர் ந.தி. கேள்வி எனக்கு என்பதால் கை கால் உடல் உள்ளம் எல்லாம் பதறின…இடம் : கற்பனையூர்
*
“…………”
*”என்னடா படவா பேசமாட்டேங்கற”
*
“பேசணும்னு ஆசையாகத் தான் இருக்கு.. ஆனா பேச்சு வரமாட்டேங்குது..கற்பனையூர்ல பாக்கறச்சே இப்படித்தான்னா நேர்ல பார்த்திருந்தா கொஞ்சம் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்”
*
“அப்படில்லாம் பேசாதே.. நீ என்னதான் தம்மாத்தூண்டு ரசிகனா இருந்தாலும் என்னோட ரசிகன்..உன்னை ப் பிடிக்கும்..அது சரி கேட்ட கேள்விக்கு பதில்..”
*
*”நீங்களே சொல்லுங்க குருஜி”
*
“என்னடா பேர்லாம் கொடுக்கற எனக்கு” கடகடவென சிரிப்பு.. சரி சொல்றேன்..*
*
ஒரு நடிகனோட நடிப்புல மூணு ஸ்டேஜஸ்…செக்*ஷன்னு வெச்சுக்கயேன்.. தன்னிலை, உள் நிலை, எதிர் நிலை..
*
தன்னிலைன்னா என்ன தெரியுமா.. தன்னோட நிலை..அதாவது உனக்கு என்னதெரியும்..ஒன்னோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் மைனஸ் பாய்ண்ட்ஸ் என்ன…..நடிப்புன்னு எடுத்துக்கிட்டீன்னா உன்னோட திறமை என்னன்னு புரிந்து கொள்வது..
*
சரி..பட்டுன்னு ஒரு ஆளுக்குத்திறமை வந்துடுமா என்ன. முடியாது..கடின உழைப்பு வேண்டும்.. நமக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்க வேண்டும்..
*
இப்ப என்னய எடுத்துக்கோ கண்ணா.. நான் வந்தது நாடக வழி.. என்னோட ஸ்கூல் நு கேட்டா ட்ராமா ஸ்டேஜ் தான்.. என்னோட தாட் ப்ராஸஸ் என்னன்னு கேட்டா நாடக மேடை தான் யூகேன் ப்ராக்டிஸ் ஆக்டிங்..
*
இப்பத் தான் நிறைய ஃபெஸிலிட்டீஸ் வந்துடுத்தேப்பா கவர்ன்மெண்ட் காலேஜ்ஸ், ப்ரைவேட் காலேஜெல்லம் இருக்கே ஆக்டிங்க் ப்ராக்டிஸ் பண்றதுக்கு..
*
அப்படிப் போய் நீ பயிற்சி பண்றேன்னு வச்சுக்க..உனக்கு ஆக்டிங்க்வந்துடுமா… ஏன் ஒண்ணுமே பேசாம ஆன்னு பாத்துக்கிட்டு இருக்க..
*
”குருஜி..ஒங்களோட ஃப்ளோ பிரமிக்க வைக்குது.. நான் உங்க பேச்சுலருந்து கத்துக்கிட்டு இருக்கேன் அதான்”
*
“சொல்லு.. நீ போய் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல போய் ஆக்டிங்க் ப்ராக்டிஸ் எடுத்துக்கறன்னு வை.. நீ ஸ்டேஜ்ல ஏறினா என்னாகும்..
*
வெண்டைக்காய் தக்காளி வேறுபல காய்களையும்
சிண்டில் எறிவார் சிலர்..
குருஜி.. நமக்கெல்லாம் நடிப்புசுட்டு போட்டா கூட வராது.. திருவிளையாடல் நாகேஷ் ஒங்க கிட்ட சொன்ன மாதிரி உங்க கிட்ட நான் சொல்றேன்..எனக்கு ரசிக்கத் தான் வரும்.. நடிக்க வராது”
*
ஏன் வராது.. வரும்..ஆனா கட்டுக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கூட வரும்னு ஒரு சொலவடை உண்டு..ஆனா நடிப்புல பத்தாது..
*
த லெஸன்ஸ் யூ லேர்ண்ட் வில் ஹெல்ப் யூ டு நோ அபெளட் யுவர் ஸ்கில்ஸ்.. நீ படிச்ச பாடங்கள் உன்னுடைய திறமையை உனக்கு அறிமுகம் தான் படுத்தும்.. அப்ப அத டெவலப் பண்ணனும்னா மத்தவங்களைப் பார்க்கணும்..மத்தவங்களோட நடிப்பைப் பார்க்கணும்.. நீ சொல்ற வசனத்துக்கு அந்தாளோ அந்தம்மாவோ எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்கணும் அதுக்கேத்த மாதிரி நீயும் பண்ணனும்..அப்பத் தான் நீ மத்தவங்களுக்குச் சமமாக, அவர்களை விட கூடுதலாக ஆற்றலக் காட்டமுடியும்.. நானும் அப்படித்தான் வந்தேன்.. ஆமா இத எதுக்குச் சொல்றேன்..
*
இத எதுக்குச் சொல்றேன்னா. தன் நிலையிலருந்து ஒருத்தன் முன்னேறி முழுமை நிலைய அடைய முடியும் புரிஞ்சுதா..
*
டேய்.. முழிச்சுண்டு தானே இருக்க.. ஓ.கே..உள் நிலைங்கறது ஒரு நடிகனோட ரெண்டாவது ஸ்டேஜ்..
*
டெவலப் பண்றது.ன்னு சுருக்கமா சொல்லலாம்.. அதாவது உனக்கு இந்த கதாபாத்திரமா அதை எப்படி டெவலப் பண்ணலாம்..னு புத்திய செலுத்திக்கிட்டு இருக்கணும்..கதாசிரியர் ஒன்ன வீரன்னு சொல்றார்னு வெச்சுக்கோ.. அதையே டைரக்டர் கொஞ்சம் படபடப்புள்ள வீரன்னு சொல்றார்னு வெச்சுக்கோ நான் தான் மன்னன்னு வெச்சுக்கோ..*
*
“நீங்க தான் எந்தக் காலத்திலயும் மன்னனாச்சே”
*
“படவா..ஐஸ் வைக்காதே ..சொல்றதைக் கேள்.. எங்கிட்ட வந்து சொல்லணும்.. மன்னா எதிரி நாட்டு படைகள் ஆற்றைக் கடந்து விட்டார்கள்..”
*
*”மன் மன்னா.. எதிரி நாட்டு படைகள் ஆற்றைக் கடந்து விட்டார்கள்..”
*
“என்ன தூங்கி எழுந்துட்டு அரசவைக்கு வந்தியா..”
*
“ஏன் குருஜி..”
*
“ நீ சொல்ல வந்த விஷயமென்ன.. எனிமீஸ் வந்துட்டாங்கன்னு சொல்லணும்.. அவங்கள என்ன வாக் போறமாதிரி பார்த்திருப்பியா என்ன.. ஒளிஞ்சிருந்து பாத்துட்டு அவங்களுக்குத் தெரியாம என்கிட்டவிஷயத்தச் சொல்றதுக்காக ஓடி வர்றே.. வர்றச்சே என்னாகியிருக்கும்.. ஓடிவரச்சே ஏதாவது தடுக்கி விட்டிருக்கும் ஸோ ஒன்னோட டிரஸ் கலைஞ்சிருக்கும்..குறிப்பா வேகமா வந்ததுனால மூச் மூச்சு வாங்கும்..ஹ ஹ ஹனு இரைச்சு மன்னா…ன்னு ஆரம்பிச்சு சொல்லணும்..புரிஞ்சுதாடா..”
*
“மன்னா என்னை மன்னிச்சுடுங்க..ஏதோ ஒரு அல்ப வீரன் நான்னு விட்டுடுங்க.. ஒரு குட்டி வேஷத்துல இவ்வளவு விஷயம் இருக்கா குருஜி..”
*
”யெஸ்.. அதத் தவிர டெக்னிகலா நிறைய இருக்கு ஆங்கிள், உன்னோட ட்ரஸ்கோட்…இதெல்லாம் நீயே டிசைட் பண்ணி இம்ப்ரூப் பண்ணப் பார்க்கணும்.. இதுக்குத் தான் கற்பனை ப்ளஸ் மனோ தர்மம் வேணும்கறது.. இதான் உள் நிலைங்கற ரெண்டாவது ஸ்டேஜ்..”
*
அப்புறம் மூணாவது ஸ்டேஜ் என்ன தெரியுமா..எதிர் நிலை..
*” நான் சொல்றேன் குருஜி… எதிர் நிலை..எதிரிகளோட நிலை..வில்லன் ஆக்டர் என்ன செய்யறாங்கன்னு பாத்துட்டு கத்தி படாம டபக்குன்னு தாவிடணும் அதானே..”
*”
“குறுக்க பேசின கிள்ளிடுவேன்.. எதிர் நிலைன்னா எதிரி நிலையில்லை..எதிர் நிலை..எதிரில் இருப்பவர்கள்.. ஒரு நடிகனுக்கு எதிரில் இருப்பவர்கள் யார்.. ரசிகர்கள்… ஒன்னோட வசனத்துல- நடிப்புல - வீரம் வந்துச்சுன்னா கைதட்டல் வந்துச்சுன்னா கண்ணீர் வந்துச்சுன்னா – அதான் போனஸ் நடிகனுக்கு… அது ஒண்ணு போதும் அந்த மாதிரி பார்க்கற ரசிகர்கள் பிரமிக்க வைக்கறா மாதிரி நம்பளப் பத்தி வீட்டுக்குப் போனப் புறமும் யோசிக்க வச்சா அது அந்த நடிகனின் வெற்றி.. இதான் மூணாவது ஸ்டேஜ்.. இந்த மூணையும் கொண்டிருந்தா தான் பூரண நடிகன்னு சொல்லலாம்..என்னாங்கற..”
*
“நான் என்ன சொல்றது குருஜி.. நீங்க பேசுங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்..”
*
“அட போடா..என்னமோ சிரிப்பு பத்தி எழுதறேன்னு சொல்லிட்ட்டு…பேசிக்கிட்டே இருக்கேங்கற.. சரி நான் அப்புறமா வர்றேன்..”*
*
“தாங்க்ஸ் குருஜி”
*
(மேற்கண்டது கற்பனையூரில் எனக்கும் ந.திக்கும் நிகழ்ந்த உரையாடல் எனப் புரிந்திருக்கும்..ஆனால் ந.தி.. சொன்னது – மூன்று நிலைகள் பற்றி – அது அவரே சொன்னது..- நான் பேச நினைப்பதெல்லாம் என்று அவர் எழுதிய நூலின் இரண்டாம் பாகத்தில்.. சுவாரஸ்யமாக(?) இருக்கவேண்டும் என்பதற்காக உரையாடல் போல் எழுதிப் பார்த்தேன். ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..
*
இந்தப் பதிவே சற்று நீளமாகி விட்ட படியால் என்னைக் கவர்ந்த சிரிப்பைப் பற்றிச் அடுத்த போஸ்டில் சொல்கிறேனே என்று சொல்வதற்கு முன்…
*
“ஓ இந்தப் பாத்திரம் என்கூட ஃபுல் படமும் வருதா..அப்ப இந்தாளப் போட்டுக்கோ.. நல்லா வரும்” என ந.தி சொல்ல ப்ரொட்யூஸரும் ந.தி சொன்ன நபரைப் பார்க்க அவர் “ ந. தியே ரெகமண்ட் பண்ணாரா..சரி.. நடிக்கிறேன்.. ஆனால் அவரை விட எனக்கு ஒரு ரூபா கூட வேணும் சரியா” எனக் கேட்க ப்ரொட்யூஸர் அதிர்ந்தாராம்..(உண்மையா எனத் தெரியாது..இதுவும் ஒரு புத்தகத்தில் படித்தது தான்).. அது…அந்தப் படம்…ம்ம்ம்
*
அகெய்ன்..ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..
(தொடரும்)
Hearty congratulations ragul for having crossed the 1K mark
கங்க்ராட்ஸ் ராகுல் ராம் முனைப்பாய் எழுதுவதற்கு..ஆயிரம் என்பது கணக்கே அல்ல.. நிறைய நிறைய எழுதுங்கள்..
உண்மை உணரும் நேரம்
நாம் இந்த தலைப்பில் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் கூட நண்பர் வினோத் போன்றவர்கள் நம்மை விடுவதாக இல்லை.
நேற்றைய தினம் நண்பர் RKS அவர்கள் எங்க வீட்டு பிள்ளை வசூலையும் திருவிளையாடல் வசூலையும் பற்றி ஒரு பதிவு செய்திருந்தார். அவர் சொன்னது மொத்த வசூலைப் பற்றியா அல்லது சென்னை மாநகரத்தின் மொத்த வசூலை குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை. காரணம் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை எங்க வீட்டு பிள்ளை மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 573 நாட்களில் பெற்ற வசூல் Rs 13,23,000 சொச்சம். அதே நேரத்தில் அதே 1965-ம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் சென்னை நகரில் அதே போல் மூன்று அரங்குகளில் ஓடிய 537 நாட்களில் [அதாவது எங்க வீட்டு பிள்ளையை விட 26 நாட்கள் குறைவு] பெற்ற வசூல் Rs 13,82,002.91 p. அதாவது சுமார் 60,000/- அதிகம். அதே போல் மதுரை சென்ட்ரலில் 100 நாட்களில் எங்க வீட்டு பிள்ளை பெற்ற வசூல் Rs 2,78,000/- சொச்சம். மதுரை ஸ்ரீதேவியில் திருவிளையாடல் 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 2,84,000/- சொச்சம். ஒரு வேளை இதைத்தான் RKS குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.
நிற்க. நான் இங்கே சொல்ல வந்தது இதைப் பற்றியல்ல. RKS இப்படி பதிவு இட்டவுடன் நண்பர் வினோத் அவர்கள் கோபமாக வந்து பதில் பதிவிடுகிறார். அதன் மூலமாக இரண்டு செய்திகளை வலியுறுத்துகிறார். அதில் முதல் செய்தி அல்லது முதல் பாயிண்ட் என்னவென்றால்
எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமைப் பெண் படம்தான் முறியடித்தது என்பதாகும். அதற்கு ஆதாரம் இதோ என்று சேலம் மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டிஸை பதிவிடுகிறார். ரசிகர் மன்றம் அடித்த நோட்டிஸ். சரி அது 100% சரியானது என்றே ஒப்புக் கொண்டு விடுவோம். இங்கே என்ன சந்தேகம் என்றால் எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமை பெண் முறியடித்து விட்டது என்று சொன்னால் எங்க வீட்டு பிள்ளையின் வசூல் விவரங்களை கொடுத்து விட்டு அதை இது தாண்டி விட்டது என்று சொல்ல வேண்டும். அப்படி எதுவும் அந்த நோட்டீஸில் என் கண்ணுக்கு தென்படவில்லை. அப்படியிருக்க அதை இது முந்தி விட்டது என்பது எந்த அடிப்படையில்?
நண்பர் வினோத் அடித்து சொல்லிய இரண்டாவது செய்தி அல்லது பாயிண்ட் என்னவென்றால் 1956 முதல் 1977 வரை எம்ஜிஆர் அவர்களின் 10 படங்கள் மொத்த வசூலில் ருபாய் ஒரு கோடியை தாண்டியது என்றும் இதை பல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். [பத்திரிக்கையில் செய்தியாக வெளியாவது எந்த வகை ஆதாரத்தை சேர்ந்தது என்பது என் சிற்றவிற்கு தெரியவில்லை]. சரி இந்த கூற்றில் எத்தனை சதவிதம் உண்மை என்று பார்ப்போம்.
இவர்கள் சொல்லும் 10 படங்களில் நிச்சயம் எங்க வீட்டு பிள்ளையும் அடிமைப் பெண்ணும் அடங்கும். சரி, அடிமை பெண்ணின் வசூல் விவரங்களை மாவட்ட வாரியாக இவர்கள் தொகுத்தளித்திருக்கும் இந்த நோட்டிஸின்படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் கர்நாடக மாநிலமும் சேர்த்தால் வரும் மொத்த வசூல் Rs 66,27,563.71 p. கேரளத்தின் விநியோகஸ்தர் பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் உத்தேசமாக மொத்த வசூலுக்கு மாற்றி அமைத்தால் 70 அல்லது 71 லட்சம் வரும். தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் Rs 58,67,348/- வருகிறது.
அதற்கு பின் ஓடக் கூடிய ஊர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவை அனைத்தையும் சேர்த்தாலும் கூட [கர்நாடகம் + கேரளம் சேர்த்தாலும்] மொத்த வசூல் ஒரு கோடியை தாண்டுமா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம் மெயின் சென்டர்களில் சுமார் 60 லட்சத்திற்கும் கீழே வசூல் செய்த படம் B & C சென்டர்களில் 30 லட்சம் வசூலிப்பது அதுவும் 69-70 காலகட்டங்களில் மிக மிக கடினமான விஷயம்.என்பது விநியோகத் துறையில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கும் நண்பர்களுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் நன்றாக தெரியும்.
அது மட்டுமல்ல இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை என்ன? எங்க வீட்டு பிள்ளையை வசூலில் முந்தி விட்டது என்று இவர்கள் சொல்லும் [இவர்கள் என்ன? எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனமே அடிமை பெண் 100 வது நாள் விளம்பரத்தில் இது எங்க வீட்டு பிள்ளையின் 25 வார வசூலை முறியடித்து விட்டது என்று சொல்லியிருந்தனர்] அடிமை பெண்ணே ஓடி முடிய ஒரு கோடியை எட்ட முடியவில்லை எனும் போது எங்க வீட்டு பிள்ளை எப்படி ஒரு கோடி வசூல் செய்திருக்கும்?
இவர்கள் அடிக்கடி சொல்வது மதுரை வீரன் ஒரு கோடி வசூல் செய்தது. அதை நாடோடி மன்னன் முறியடித்தது, நாடோடி மன்னனை எங்க வீட்டு பிள்ளை தாண்டியது, எங்க வீட்டு பிள்ளையை அடிமை பெண் தாண்டியது என்பார்கள். இப்போது இவர்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி தெரிய வருவது என்னவென்றால் இதில் எந்தப் படமும் ஒரு கோடியை தொடவில்லை என்பதுதான். 1969-ல் இந்த வசூல் என்றால் 1958, 1956-ல் அன்றைய டிக்கெட் விலையை அனுசரித்து எந்தளவிற்கு வசூல் வந்திருக்கும் என்பதும் நம்மால் யூகிக்க முடிந்ததே.
நீங்களே ஒப்புக் கொள்ளும் உண்மை நிலை இவ்வாறிருக்க நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மீது சீறி பாய்வது சரிதானா என்பதை அந்த நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்.
அன்புடன்
CONGRATS RAGHUL for the landmark achieved. wish you many more. blessings.
RAMAJAYAM