உனக்கு பன்முகங்கள்.
பல்வேறு தளங்களில் வெற்றி தடம் பதித்தவன் நீ!
படிப்பில் நிபுணன்! முதுகலை பொறியாளன்!
வணிகத்தில் வித்தகன்!
அறுபது நாடுகளின் அத்தாட்சி பத்திரம் பெற்றவன்!
அந்நிய மண்ணில் கோலோச்சுபவன்!
பாரம்பரிய பத்திரிக்கை குடும்ப உறுப்பினன்!
இலக்கிய பித்தன்!
மணிக்கொடி காலமும் தெரியும்! இன்றைய மங்கிய காலமும் தெரியும்
கணையாழி முதல் கசடதபற வரை வாசிப்பவன்!
யதார்த்த நாடக கலைஞன்! உலக சினிமா ரசிகன்!
நல்ல சினிமாவை நேசிப்பவன்! நல்ல சினிமாவை சுவாசிப்பவன்!
சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன்!
ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிவாஜி ரசிகன் என்பதே எனது தலையாய பெருமை என்று உவகை கொண்டு எந்த சபையாய் இருப்பினும் அதை முன் வைக்கிறாயே அந்த அர்ப்பணிப்புக்கு என் தலை சாய்ந்த வணக்கங்கள்!
விஜய விக்ரம கோபால காத்தவராயரே!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
அன்புடன்