அருமை மது சார்
தலை வணங்குகிறேன் உங்கள் இசை அறிவு மற்றும் உடனடி பதிலுக்கு
எல்லாம் வல்ல இறை ஆற்றல் உங்களுக்கு என்றும் கிட்ட அந்த இறை ஆற்றலை வேண்டுகிறேன்
சாமி தக்ஷினமுர்த்தி போட்ட பாடல் இது
நந்தா என் நிலா ஆஆஆஆஆ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா - விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா

