குடியியரசு தினத்தினையொட்டி, பாரத தேச நலனில் அக்கறை கொண்ட, தேச பக்தி மிகுந்த, நம் ஒப்பற்ற தலைவர் அவர்களின் related வீடியோ படக் காட்சியை பதிவிட்ட அருமை சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மிக்க நன்றி.
Printable View
5,000 பதிவுகளை கடந்து, தொடர்ந்து இந்த திரியினில் பதிவுகளை வேகமாக வழங்கி வரும், எனது இனிய சகோதரரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் இணை செயலாளருமாகிய திரு. லோகநாதன் அவர்களுக்கு எனது தாமதமான வாழ்த்துக்கள்.
பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்கள், மாதமிருமுறை மற்றும் மாத பத்திரிகைகளில், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைப் போற்றும் செய்திகளை, சிரம் மேற்கொண்டு, பார்வையாளர்கள் அறியும்படி பதிவிட்டு வரும் தங்கள் பணி பாராட்டுக்குரியது.
நன்றி !. தொடரட்டும் தங்கள் சேவை !
மீண்டும் வாழ்த்துக்கள் பல !
கோவை மாநகரில், மக்கள் திலகத்தின் மூத்த அபிமானி, முரட்டு பக்தன் பொறியாளர் திரு. துரைசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொன்மனசெம்மலின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளை அருமையாக படம் பிடித்து அவைகளை அற்புதமாக பதிவிட்ட அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி !
உலகில், மறைந்து 27 ஆண்டுகள் (கால் நூற்றாண்டு) ஆகியும் நம் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவருக்கு இருக்கும் புகழ் வேறு எவருக்கும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நான் கல்வி கற்று வாங்கிய ஏராளமான பட்டங்களை விட, மக்கள் திலகத்தின் பக்தன் என்பதில்தான் எனக்கு பெருமை. அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததும், அவரை ஐந்தாறு முறை சந்தித்து உரையாடிய நிகழ்வுகளும் என் வாழ்க்கையில் நான் அடைந்த பிறவிப்பயன்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .25.1.2015
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான கோவை திரு துரை சாமி அவர்களில் இல்லத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடந்தேறியது .சென்னை , மதுரை , திருச்சி , நெல்லை , பெங்களூர் ,திண்டுக்கல் , சேலம் , வேலூர் நகரங்களில் இருந்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் திரளாக
வந்து விழாவில் கலந்து கொண்டர்கள் .
பெங்களுர் -காந்திநகர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு முனியப்பா
தமிழ்நாடு -பேருர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு மருதாசலம்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
அன்று மாலை கோவை ராயல் அரங்கில் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் திரைப்படத்தை
மிக ஆவலுடன் நண்பர்களுடன் பார்த்தோம் . மனதிற்கு நிறைவு தந்த பொன்னான நாள் .
விழவை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி .
FROM MY MOBILE PICS- KOVAI -ROYAL -POSTER
http://i60.tinypic.com/w1zeb5.jpg