டியர் ஆனந்த்,
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்
http://tamil.way2movies.com/wp-conte...iswanathan.jpg
படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...
தொடரும்...