எல்லா பதிவுகளும் அருமை அருமை
Printable View
எல்லா பதிவுகளும் அருமை அருமை
ராஜேஷ் சார் வணக்கம்
ராஜேஷ் சார்
ராஜேந்தர் இன் இசையில் இசைஅரசி சுசீலா பாடல்கள் எடுத்து விடுங்களேன்
நிறைய பாடல்கள் ஜானகி,சசிரேகா,சித்ரா பாடி இருக்கிறார்கள்
எனக்கு பூக்களை பறிக்காதீர்கள் 'அடியே வனிதா அழைத்தால் வாடி ' நினைவில் உண்டு
இதோ வசந்த அழைப்புகளில் ரூபாவுக்காக கங்கை பொங்குது கண்களோரம்
http://www.inbaminge.com/t/v/Vasanth...loram.vid.html
கிளிஞ்சல்களில் பூர்ணிமா ஜெயராமுக்காக சின்ன சின்ன கண்ணா
http://www.inbaminge.com/t/k/Kilinja...hinna.vid.html
உறவைக் காத்த கிளியில் சரிதாவுக்காக புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது
http://youtu.be/qVFtRXfRsm0
டி.ராஜேந்தர் ஆரம்ப காலங்களில் பல அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார்.
அவருடைய ஹிட் பாடல்களை விடுத்து சற்று அரிதான அவர் பாடல்கள் மூன்று பார்ப்போம்.
முதலாவது
அவருடைய 'வசந்த அழைப்புகள்' படத்தில் ரூபா, விஜயன் குழுவினர் பங்கு பெறும் ஒரு பாடல்.
வித்தியாசமான காஸ்ட்யூமில் ரூபா. நம்ப முடியவில்லை.
ஜானகி பாடும் இப்பாடல் ஓஹோ என்றில்லா விட்டாலும் கேட்க ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது. இப்போது பார்க்க விஜயனும், ரூபாவும் புதிதாகத் தெரிகிறார்கள்.
'தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா
தேவனைத் தேடிட வா'
http://www.youtube.com/watch?v=XOFQe...yer_detailpage
இரண்டாவது
பிரபு,.சரிதா, அமலா நடித்த 'பூப்பூவா பூத்திருக்கு' என்ற ஒரு படம் சற்றும் எதிர்பாராமல் சக்கை போடு போட்டது. இப்படத்திற்கு இசை டி.ராஜேந்தர். இதில் ஒரு அருமையான பாடல்.
வாணி ஜெயராம், மனோ காம்பினேஷன்.
பாடல் சரிதாவிற்கும், பிரபுவிற்கும்.
'வாசம் சிந்தும் வண்ணச் சோலை
என் வாசல் தேடி வந்த வேளை.
இந்த இரண்டு வரிகளுக்குப் பின் வரும்
'ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்'
நிஜமாகவே ஆனந்தம் தரும் வரிகள்.
ரசிக்கத் தகுந்த நல்ல பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Iy7tqavqr4E
few more
sattam sirikkudhu - malare malare
idhamana ragam -pookal vidum thoodhu
adiye vanitha neeyum vaadi