-
//தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா
தேவனைத் தேடிட வா'// நல்ல பாட்டு வாசு சார் தாங்க்ஸ்..இது நாள் வரை பிடித்த காரணம் ஆடியோ மட்டும் கேட்டது தான்..விக் விக்விக்..:)
வாசம் தரும் வண்ணச் சோலை..ஓ.க்கே. தான்..இளமைபிரபு நன்னா இருக்கார்..
ராஜேஷ்..பாட்டுக் கேட்டால் தான் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்.. பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஒரு படம் சுர்ரேஷ் நதியா.. காதலர்கள் இணைந்து பிரிந்து இணைந்து பிரிந்து இணைந்து பிரிந்து கடைசியில் பிரிந்து மேலே போகும் படம்.. செம ஓட்டம்.. அதில் வரும் பாட்டு மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது
-
மூன்றாவது.
'உனக்காக ஒரு ரோஜா' என்ற படம்
மோகன், அம்பிகா, சுரேஷ் நடித்தது. நம் சி.வி.ஆர்.இயக்கம் என்று நினைவு.
ஒரு மோக ராகம்
நான் பாடும் நேரம்
அன்பினைப் பொழிய
அம்பிகை வந்தாள்
பூக்களைத் தூவினேன்
பாக்களைப் பாடினேன்
மோகன், அம்பிகா காதல் டூயட். பாடல் சுமார்.
http://www.youtube.com/watch?feature...&v=4hNCFCgZwAU
-
மறுபடியும் வெகுகாலத்துக்குப் பின் இப்போது தான் இந்த மூங்கிலிலே, ஆழ்கடலில் தத்தளித்து அப்புறம் வைகைக் கரைக் காற்றே நில்லு கேட்கிறேன்..பார்க்கிறேன்..மறுபடியும் தாங்க்ஸ் மதுண்ணா..
//ஒரு மோக ராகம்
நான் பாடும் நேரம்
அன்பினைப் பொழிய
அம்பிகை வந்தாள்
பூக்களைத் தூவினேன்
பாக்களைப் பாடினேன்
மோகன், அம்பிகா காதல் டூயட். பாடல் சுமார்.// இந்தப் பாட்டுக் கேட்டிருக்கிறேன் வாசு சார் தாங்க்ஸ்..பார்த்ததில்லை இப்போது பார்த்தேன்..அந்தக் காலத்தில் எல்லாம் ஏன் திடீரென எல்லாரும் புலியூர் சரோஜாவிடம் போய் விழுந்தார்கள் என்பது எனக்கு இன்னும் ஒரு புதிர்.. நல்ல கணித மேதை அவர்! பெர்முட்டேஷன்ஸ் அண்ட் காம்பினேஷன்ஸ் நன்னாவே தெரியும்..! ஒரு சில படங்களில் ரொம்பவே படுத்தியிருப்பார்கள்..
மழை தருமோ என் மேகம்.. இங்க பேசியாச்சா மனிதரில் இத்தனை நிறங்களா.. ஸ்ரீ தேவி..
-
enna vasu ji
nalam thaane
-
ராஜேஷ்ஜி
நலம்தான். தாங்கள் நலம்தானே! ஸாரி ! ஒரு வாரம் சிஸ்டம் படாத பாடு படுத்திவிட்டது. அதுதான் தங்களுடன் இணையமுடியவில்லை. இப்போது சரியாகி விட்டது. இனி இசையரசி பாடல்களுடன் விளையாடலாம். ஓகே தானே!
-
வண்டிப் பாடல்
ரயில் ஓடிக்கொண்டே இருக்க, டைட்டில் அதனுடன் சேர்ந்து ஓடிக் கொண்டே இருக்க, இவற்றுடன் மெல்லிசை மன்னர்
"இறைவனும், மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவாரோ"
என்று அதிசய கற்பனை செய்து பாட,
'சந்திப்பு வருவது கண்டு பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு'
என்ற அருமையான வரிகளோடு ஒலிக்கும்
'பயணம் பயணம் பயணம்'
http://www.youtube.com/watch?v=0MC9AJW6g1k&feature=player_detailpage
-
வண்டிப் பாடல்.
இதோ பாருங்கள்.
நடிகர் திலகம் தன் அண்ணன் ராமகிருஷ்ணாவுக்கு சங்கீதாவை கல்யாணம் பண்ணி வைத்து, மாட்டு வண்டி பூட்டிகிட்டு, சிங்காரச் சிட்டுக்களை பல மாட்டு வண்டிகளில் உடன் அழைத்துக் கொண்டு, பொண்ணு மாப்பிளையையும் வண்டியில் கூட்டி வந்து, தலையில் மஞ்சள் நிறத் தலைப்பாகை கட்டி, மாட்டு வண்டி ஓட்டியபடியே வெகு உற்சாகமாக பாடி வரும் அபூர்வ பாடல்.
'புண்ணிய பூமி' திரைப்படத்தில் அழகுச் சிட்டுக்கள் பவானி, ஒய்.விஜயா இவர்களும் வண்டியில் அமர்ந்து வர
ஜில் ஜில் என்றது காளைக் கண்ணு
ஜிலு ஜிலு என்றது நாலு கண்ணு
சிங்காரத் தோப்புக்கு மச்சான வரச் சொல்லு
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு
'ஹேய் ஹேய்' என்று உற்சாகக் குரலிடும் இளம் கிளிகள், அவர்களுடன் போட்டி போடும் நடிகர் திலகம்.
மாட்டு வண்டிகள் வரிசயாக வேகமாகச் செல்ல, பாடகர் திலகம்,ஈஸ்வரி சும்மா பட்டை கிளப்ப, உற்சாகம் பீறிடும் பாடல்.
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... உங்கொப்பன்தன்னானே!
http://www.youtube.com/watch?v=rN3lEKvr9ug&feature=player_detailpage
-
வண்டிப் பாடல் (!)
கோபால் வண்டிப் பாடல்கள் வரிசையில் எருமை வாகனத்தையும் சேர்த்து விட்டதால் அவருக்காக இந்த பாடல்.:)
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
எருமைக் கன்னுக்குட்டி
என் எருமைக் கன்னுக்குட்டி
'ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே
அவன் பேச்சை மறுக்கிறவன் (அல்லது மறைக்கிறவன்?)
பிச்சை எடுக்கிறானே'
'மந்திரிகுமாரி' படத்தின் மறக்கமுடியாத பாட்டு. மாட்டில் பயணிக்கும் சிறுவன் சதுரவட்டை:) தலையோடு, வற்றிய உடலோடு, மார்பெலும்புகள் வெளியே பிதுங்கித் தெரிய பாட, அம்பலம் ஏறும் ஏழை சொல் பாட்டு.
http://www.youtube.com/watch?v=9B5fPkL-vEo&feature=player_detailpage
-
-