டியர் வாசுதேவன் சார்,
தங்களது வளமான பாராட்டுக்கு கனிவான நன்றி !
"கர்ணர்" ஆல்பம் கம்பீர மயம் !
'பொம்மை' இதழின் "கவரிமான்" ஸ்டில் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் வாசுதேவன் சார்,
தங்களது வளமான பாராட்டுக்கு கனிவான நன்றி !
"கர்ணர்" ஆல்பம் கம்பீர மயம் !
'பொம்மை' இதழின் "கவரிமான்" ஸ்டில் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்துள்ள திருச்சி தகவல் சுட்டி மிக அருமை ! எல்லா ஊர்களையும் போலவே திருச்சியையும் "கர்ணர்" கலக்கி வருகிறார். திருச்சி சிவாஜி பேரவையின் நற்பணிகளும் இத்தகவலில் நயம்பட அளிக்கப்பட்டுள்ளன. நமது ஹப்பர், சிவாஜி பேரவை மாநிலத் தலைவர், திரு.சந்திரசேகரன் அவர்கள் இச்சுட்டியைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார் !
அரிய சுட்டியை அளித்த உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 4
ஸ்பெஷல் ரிப்போர்ட்
குமுதம் ரிப்போர்ட்டர்: 29.3.2012
இரண்டு பக்கங்களும் ஒரு சேர...
http://i1110.photobucket.com/albums/...GEDC5649-1.jpg
முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5650-1.jpg
இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5651-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 5
காவிய விமர்சனம்
சினிக்கூத்து : 27.3.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC5652-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
25.3.2012 ஞாயிறன்று பெங்களூரூ 'நட்ராஜ்' அரங்கில் நடைபெற்ற "வசந்த மாளிகை" திருவிழாவிற்காக, நெய்வேலியிலிருந்து பெங்களூரூ சென்று அவ்வைபவத்தில் கலந்து கொண்டு, கண்டு களித்து ரசித்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அதன் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் படம்பிடித்து இணையத்திலும், நமது திரியிலும் சிரமம் கருதாது தரவேற்றி, அக்காணொளிகள் மூலமாகவும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்புள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் குளிர்ச்சியாக மிதக்கவிட்டு ஈடுஇணையற்ற சேவை புரிந்த தங்களுக்கு இந்த பெங்களூரூ "வசந்த மாளிகை" சிறப்புப் பதிவை காணிக்கையாக்குகின்றேன் !
அன்புடன்,
பம்மலார்.
பெங்களூரூ "வசந்த மாளிகை" ஸ்பெஷல்
கணேச சேவை : தினச்சுடர்(பெங்களூரூ) : 24.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/...EDC5637a-2.jpg
கணேச அலங்காரம் : தினச்சுடர்(பெங்களூரூ) : 27.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/...EDC5636a-2.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.
தங்களின் 'கர்ணன்' கருவூலம் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்ற அருமையான தலைப்பு 'குமுதம் ரிப்போர்டர்' கர்ணன் கட்டுரைக்கு சாலப் பொருந்துவது போல தங்களுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீகளா?... சில மாத இடைவெளிக்குப் பின் திரும்ப வந்து திரியில் அதகளப் படுத்துகிறீர்களே! தங்களின் மறு வருகையை 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது? அந்தத் தலைப்புக்கு மிக மிகப் பொருத்தமான நபர் தாங்களல்லவா!
'சினிக்கூத்து' காவிய விமர்சனம் படிப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. அதிகம் கேள்விப்படாத பத்திரிக்கைகளிலிருந்தும் நடிகர் திலகம் பற்றிய செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து திரியில் பதிவு செய்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே! அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
பெங்களூரு வசந்த மாளிகையின் அடியேன் பதிவுகளுக்காக தாங்கள் பாராட்டுக்களை அள்ளிக் குவித்து, (வண்ணமயமான 'வசந்தமாளிகை'யின் ஆசிரியர் வேறு ஆயிற்றே! தங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?) அதற்குப் பரிசாக 'தினச்சுடர்' (பெங்களூரூ) பத்திரிக்கையின் 'வசந்தமாளிகை' பதிவுகளையும் அளித்து ஆனந்தக் கண்ணீர் பெருக வைத்து விட்டீர்கள். (கணேச சேவையும், கணேச அலங்காரமும் கன கச்சிதம். பாராட்டுக்கள்) பல்வேறு வேலைப்பளுவின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாங்கள் திரியில் பங்கு கொள்ள இயலாவிட்டாலும் திரியின் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனித்துப் படித்து, சம்பந்தப்பட்டவர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தும் தங்களது உயரிய குணமும், பாராட்டும் பண்பும் மலைப்பைத் தருகிறது. தங்களைப் போன்றவர்களின் அன்பான ஆதரவும், நமது திரியின் அனைத்து தூய உள்ளங்களின் ஆதரவும் இருக்கும் வரையில் பெங்களூரு என்ன பெல்ஜியத்திற்குக் கூட சென்று தலைவரைப் பற்றிய செய்திகளைக் சேகரித்து வந்து நமது திரியில் பதிவாகத் தந்து விடலாம்.
மீண்டும் தங்களுக்கும், தங்கள் அசத்தல் பதிவுகளுக்கும் என் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/11-4.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/10-5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-12.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-14.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-17.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-27.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-30.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-42.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-58.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-87.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...31355/5-29.jpg
அன்புடன்,
வாசுதேவன்.