http://i59.tinypic.com/2qiv0vk.jpg
Printable View
குட்மார்னிங் ஆல்
ஹாய் வாசு சார்.. நலம் தானே..
காலையில் பயணம் பாட்டு…சூப்பர்..எப்படி இதை மறந்தோம்
சந்திப்பு வரும் வழி கண்டு
மனிதர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர் கதை யாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ (இறைவன் தான்)
புகைவண்டி ஓட்டிட ஒருவன்
அது செல்லும் வழிசொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்…
அழகிய வரிகள் கொண்ட பாடல் தாங்க்ஸ் வாசு சார்.
ஜில் ஜில் ஜில் என்றது காளைக்கன்னு பாடலும் நைஸ்..உற்சாகப் பாடல்.. முதன் முதல் பார்க்கிறேன்..அகெய்ன் தாங்க்ஸ்..என் எருமைக் கன்னுக்குட்டியும் நல்ல பாட்டு. (எனக்கு என் சகோதரி நினைவு தான் வருகிறது.. இருபது வருடம் முன் ஒரு நாய் வளர்த்து வந்தார் துபாயில்..அது ஏதாவது விஷமம் செய்தால் உதைப்பேன் எருமை மாடே என் கூட்ப் பேசாதே என்பார்..அப்புறம் அது பரிதாபமாய் ஒரு பார்வை பார்த்து சுற்றிச் சுற்றி வர என் கன்னுக்குட்டிய திட்டிட்டேனாடா ஸாரி எனக் கொஞ்சுவார்!) தாங்க்ஸ்..
என் கண்மணி காதலி உனைப்பார்த்ததும் இனிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ – பஸ் பாட்டு..
அப்புறம் இன்றைய ஸ்பெஷல் என்ன வாசு ஜி..
எஸ்.வி சார்..ரேர் படங்களுக்கு ஒரு ஓ.. தாங்க்ஸ்.. அந்த சந்திரபாபுவுடன் இருப்பது யார்..அவர் மனைவியா..அவர் திருமணஃபோட்டோ இருக்கிறதா என்ன..
CHINNAKANNAN SIR
CHANDRA BABU WITH HIS WIFE
http://i61.tinypic.com/2evapg2.jpg
ஓ.. உடனே தந்தமைக்கு நன்றி எஸ்வி சார்.. திருமண உறவு நீடித்தது ஒருமாதம் தானே சந்திர பாபுவிற்கும் அவர் மனைவிக்கும்..
சந்திரபாபு என்றவுடன் நினைவுக்கு வருவது உற்சாகப் பாடல்கள் தான்
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்து சிரிப்பார்
அவள் கனவில் யார் வருவார் யாரைப் பார்த்து அழைப்பார்..
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உயிரும் உடலும்
ஒட்டியிருப்பது உனக்காக.
மேடை \ஏறி ப் பேசும் போது ஆவல் கொள்ளும் பேச்சு
கீழே இறங்கிப்போகும் போது உள்ளதெல்லாம் போச்சு..
ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போல அழ்கிருக்க அனுமார் ஜாதியைப் பிடித்தேனே என எல் ஆர் ஈ இழுக்க பரம்பரை ஞாபகம் போகலையே பழச இன்னும் மறக்கலியே
மரத்துக்கு மரமும் தாவுறியே மனுஷனக் குரங்கா நினைக்கறியே என்ற போலீஸ்காரன் மகள் பாடல்..
காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும் வரை
ம்ம் இன்னும் பலவருடங்க்ள் போனாலும் மறக்காத பாடல்கள் மறக்க முடியாத குரல்
எஸ்வி சார். நாடோடி மன்னன் படப்பாட்டை விட்டுட்டேனே
தடுக்காதே என்னை தடுக்காதே தடுத்து தடுத்து என் கணக்கை முடிக்காதே..(லிரிக்ஸ் மறந்து போச்சு)