-
வசந்தமாளிகையை கொண்டாடும் சிவாஜி ரசிகர்கள்!
புதிய படங்களுக்கே பகல் காட்சிகளுக்கு ஆட்கள் வராத சூழலில், திருப்பூரில் திரையரங்க வாயிலில் காலைக் காட்சி முடியும்முன்பே, பகல் காட்சிக்கு டிக்கெட் வாங்க கூட்டம் கூடுகிறதாம்.
இதெல்லாம் எந்தப் படத்துக்காக? டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வசந்த மாளிகை' திரையரங்க வாசல்களில் தான் இந்த திருவிழாக்கோலமாம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fc&oe=5D862C13
நன்றி Subbiah
-
-
-
-
திருப்பூர் கஜலட்சுமி , அனுப்பர் பாளையம் கலைவாணி, பாளையக்காடு கேஎஸ், பாரப்பாளையம் எம்பிஎஸ் என திருப்பூரில் மட்டும் 4 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது வசந்தமாளிகை திரைப்படம்.
நான்கு திரையரங்குகளிலும் சிவாஜி ரசிகர்களும், பெண்களும் படம் பார்க்கத் திரள்கிறார்கள். பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் சிவாஜி ரசிகர்கள். நான்கு திரையரங்குகளிலும் சேர்த்து தினமும் 16 காட்சிகளுக்கு ரசிகர்கள் குவிகின்றனர். சமீபத்தில் வெளியான புதுப்படங்களை கடந்து, நல்ல வசூல் இருப்பதாக மகிழ்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
"கடந்த 20 ஆண்டுகளாக திரையரங்கு பக்கமே வராதவர்களைக்கூட, திரையரங்குக்கு வர வைத்துள்ளது வசந்தமாளிகை திரைப்படம்"
http://oi68.tinypic.com/21ovndi.jpg
நன்றி Subbiah
-
-
-
-
ஹிந்தி நட்சத்திரப் பட்டாளமே, சிவாஜியின் அபிமானிகள்....
ராஜ்கபூர் தொட்டு, தேவ் ஆனந்த், ( இவர்கள் இருவரும் அங்கே, ஆல்ரவுன்டர்கள்) மற்றும், குணச்சித்திர நடிகர் பிரான், பிரித்திவி ராஜ், ராஜேஷ் கன்னா, சசிகபூர்,ஷம்மிகபூர்,அசோக் குமார், சஞ்சீவ் குமார், விஜய் அராரோ என பட்டியல் நீள்கிறது.....
ஒரு முறை " தி இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி " எனும், மும்பையிலிருந்து வெளிவரும், வாரப் பத்திரிகையின் சார்பில், ஏற்பாடான, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பாக, "வியட்நாம் வீடு" நாடகம் சண்முகானந்தா அரங்கி...ல் நடைபெற்றது...
அனைத்து ஹிந்தி நட்சத்திரப் பட்டாளமும் அங்கே ஆஜர்....
கூட்டம் கட்டுக்கடங்காமல், காவல்துறை மூலம் ஒழுங்குபடுத்தியும் ஓரளவுக்கு தான் சமாளிக்க முடிந்தது...
மும்பை வாழ்மக்கள், நடிகர் திலகத்தின் மீது, அளவுகடந்த பாசம் கொண்டவர்கள்...
காரணம், சத்ரபதி சிவாஜியின் சாயலில், கணக்கச்சிதமாக பொருந்தி நடிக்கும் ஆற்றலில், நடிகர் திலகத்தை எவரும் மிஞ்சிட பிறந்திட வில்லை..
இனியும் பிறக்கப் போவதுமில்லை... எனும் கண்ணோட்டத்தில், மக்களும், திரைப் பட ஜாம்பவான்கள்களும் தெளிவான கருத்தில் அவரை அங்கு கொண்டாடுகின்றனர்...
நாடகத்தின் இறுதி வரை, ( தமிழ் அவ்வளவாக புரியாமல் இருந்தாலும் )
சிவாஜியின் உருக்கமான அங்க அசைவுகள், கதையின் சூழல் இவைகளை தனது உருக்கமான நடிப்பில் மயங்கி, அவர்களை உலுக்கிக் கட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.....
தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்ற, பிரான் அவர்கள், கண் கலங்க சிவாஜியின் ஓரத்தில் கூட நிற்க முடியாத அளவுக்கு, என்னை பிரம்மிக்க வைத்து, என்னுள் நிரந்தரமாக கலந்து விட்டவர், சிவாஜி... என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்...
உடனிருந்த சக கலைஞர்களும், அதை ஆமோதிதித்தனர்....
சிவாஜியவாதிகளுக்கு, இனிய காலை வணக்கம் நட்புகளே....
நன்றி நிர்மல் தியாகராஜன்
-