http://i65.tinypic.com/2lcsqdt.jpg
Printable View
புகைப்பட கண்காட்சி பற்றிய படங்கள்
http://i65.tinypic.com/jaxm5j.jpg
#ஒரு #சிவாஜி #ரசிகரின் #நெகிழ்ச்சியான #அனுபவம் :
ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.
வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் என் தலைவர் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க) சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார். "சீ " என்றாகிவிட்டது.
அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர். சந்துகள் சாலையில் சேரும் இடங்களில் பெண்கள் கூட்டம். எம்ஜியாரின் வேன் ஒரு வழியாக வந்தது. சந்து முனை பெண்கள் வரை உற்சாக ஆரவாரம்
எம்ஜிஆர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். ஒருவரையும் 'மிஸ் பண்ணாமல் கையசைத்தும் கும்பிட்டுக்கொண்டும் இருந்தார்.
நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன். "கடு கடு" என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்துக் கையசைத்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். நான் நெகிழ்ந்தேன். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி வேகமாக கைகளை அசைத்தேன். சிரித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.
அரை நிஜார் பருவத்தை கடந்தபோதுதான், எம்ஜிஆர் அவர்கள் மக்களின் இதயங்களில் எந்தளவு கொலு வீற்றிருக்கிறார் என்பதும் அரசியலில் எம்ஜிஆர் அவர்களின் மகத்தான வெற்றிக்கான காரணமும் சிவாஜியின் தோல்விக்கான காரணங்களும் புரிந்தது............. Thanks wa., Sharing...