அற்புதம் யுகேஷ் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
வேலூர் records
அன்றைய கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள்
http://i60.tinypic.com/t9jjic.jpg
http://i62.tinypic.com/ofstjm.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
சென்னை பாட்சாவில் (மினர்வா ), நாளை முதல் (29/08/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் வெள்ளி திரைக்கு வருகிறது.
http://i57.tinypic.com/34rhm35.jpg
மறுவெளியீட்டில் மீண்டும் "குடியிருந்த கோயில் "
------------------------------------------------------------------------------------
செப்டம்பர் மாத வெளியீடு.
பெரிய திரைஅரங்கில் வெளியாக தயாராகிறது.
http://i57.tinypic.com/2dr8aqe.jpg
கடவுளுக்கு வழிபாடு செய்யும் பொழுது
http://i1170.photobucket.com/albums/...ps5eac1310.jpg
http://i1170.photobucket.com/albums/...psb7a0245f.jpg
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி முருகன் மற்றும் அவரது தம்பி ராஜு என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தான் கண்டுபிடித்த அனுகுண்டு பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜப்பானில் உள்ள புத்தபிட்ச்சுவிடம் கொடுத்து வைத்திருப்பார். புத்த பிட்சுவிடம் இதை யாரிடமும் கொடுக்கக்கூடாது நானோ எனது தம்பி ராஜுவோ வந்து கேட்டால் மட்டுமே கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார். அந்த புத்தபிட்சுவின் வீடு பிரம்மாண்டமாக இருக்கும். சின்னதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் இருக்கும். அமைதி தவழும் முகத்துடன் புத்தபிட்சு இருப்பார் .
சிறிது காலம் சென்றவுடன் நம்பியார் புத்த பிட்ச்சுவிடம் சென்று நான்தான் சாமி விஞ்ஞானி முருகனின் தம்பி ராஜு, என்னிடம் அண்ணன் கொடுத்த ஆராய்ச்சி குறிப்புகளை தாருங்கள் என்பார் . உடனே பிட்சுவும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார், குறியீடு வார்த்தைகள் தெரியாத நம்பியார் அந்த பிட்ச்சுவை அடித்து மயக்கம் போட வைத்துவிட்டு பிட்சு அமர்ந்திருந்த இடத்தில் தான் ஒரு பிட்சு போல் அமர்ந்துகொள்ளுவார். .
சிறிது நேரத்தில் தம்பி (ராஜு) எம்ஜிஆர் வந்து நம்பியாரை பிட்சு என்று நினைத்து வணங்கி சாமி நான்தான் விஞ்ஞானி முருகனின் தம்பி என்றவுடன் நம்பியார் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்ப்பார் . தன்னுடைய அண்ணன் தங்களிடம் தந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை என்னிடம் தாருங்கள் என்று கேட்ப்பார், உடனே நம்பியாரும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார். உடனே எம்ஜிஆரும் அந்த குறியீடு வார்த்தைகள் எனக்குத் தெரியும் சாமி என்று சொல்லிவிட்டு “தொசிக்கா” , “கிமாக்கோ” , “மிக்காயு” , “ஹிமோனா” என்று குறியீடு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு “தொசிக்கா” என்பது பெரிய புத்தருக்கு இடது மூலை, “கிமாக்கோ” என்பது அந்த மூலையிலிருந்து தரையில் பதிக்கப்பட்டு இருக்கும் ஐந்தாவது கல் , “மிக்காயு” என்பது வலது புறம் நான்காவது கல் , “ஹிமோனோ” அந்த கல்லுக்கு அடியில்தான் ஆராய்ச்சிக் குறிப்பு இருக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லைப் பெயர்த்து எடுத்துவிட்டு ஆராய்ச்சிக் குறிப்பை கையில் எடுப்பார் . அந்த நேரத்தில் பாய்ந்து வரும் நம்பியாரை அடித்து வீழ்த்திவிட்டு , புத்த பிட்சுவையும் காப்பாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்புவார்
SWEET MEMORIES OF USV
http://i1170.photobucket.com/albums/...ps88a8bad9.jpg
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் !
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் !
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார் ;
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார் !
ஜூலை 22, 1954 வெளியானது மலைக்கள்ளன் ! அந்தகாலத்தில் எட்டணாவிற்கு என்னேனவெல்லாம் வாங்கலாம் தெரியுமா? எனக்கு நினைவு தெரிந்து 1960 இல் ஒரு ரூபாய்க்கு அருமையான தங்கசம்பா அரிசி ஒரு பட்டினம் படி வாங்கி இருக்கேன் ! அதாவது இன்றைய ரெண்டு கிலோவுக்கு சமம் ! ஒரு லிட்டர் பால் விலை முப்பது பைசாதான் ! 1960 இல் தான் நயா பைசா (புதிய காசு !) நடைமுறைக்கு வந்தது ! ரெண்டு இட்லி ஓரணா ! (ஆறு பைசா) ஒரு மசால் தோசை (நாலணா) அப்போ காங்ரஸ் ஆட்சி ! கொஞ்சம் கொஞ்சமாய் விலைவாசி ஏறி 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்து அடுத்த ஐந்தே மாதங்களில் 620 பேர்கள் கொல்லப்பட்டபின் அரசு பின்வாங்கியது, மொழி திணிப்பு சட்டம் வாபஸ் ஆனது ! ஆனால் விலைவாசியோ திடீரென்று கடுமையாய் ஏறி 1966 ஆம் ஆண்டு நாற்பது பைசா ஒரு கிலோ அரிசியானது ஒரு ரூபாய்க்கு விலை ஏறியதால் அன்றைய தினம் மதுரையில் தி மு கவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துகொண்டு அனைத்து அரிசி கடைகளிருந்து அரிசியை இலவசமாக ஜனங்களுக்கு விநியோகம் செய்தார்கள் ! அடுத்த ஆண்டு தேர்தல் ! ஆட்சி மாறியது ! ஆம் அசைக்கவே முடியாது என்று இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில் மக்கள் விரட்டி அடித்தார்கள் ! காங்கிரஸ் வீழ்ந்தது ! எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு குண்டடிபட்ட எம்ஜியாரின் போஸ்டர் பார்த்தே தமிழ்நாடே வெற்றியை தந்தது என்றால் அது மிகை அல்ல !
Sweet memories of old age fan sharing golden days of 1950-1970
நம் புன்னகை வேந்தன் திராவிட இயக்க தலைவர் திரு அண்ணாவுடன்
http://i1170.photobucket.com/albums/...psc15c9652.jpg
வள்ளல் வேந்தரின் ஞாபக சக்திக்கு இந்த ஒரு நிகழ்வு ஒரு உதாரணம் . இன்னும் எத்தனையோ
இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது நமக்கு நினைவுக்கு வரும் பாடல் வரிகள்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த
நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ்
உரிமையாளர் பரமசிவ முதலியாருடன்
வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும்
வழியில் ஒரு பாட்டியம்மாள்
புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.
தூரத்திலிருந்து வரும்போதே வாசம்
மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த
அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற
எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன்
"மறுநாள் வாங்கி கொள்வதாக"
கூறி நகர்ந்திருக்கிறார்.
"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்
என்று கேட்ட பாட்டியிடம்,
"தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும்
சேர்த்து வாங்க வேண்டும் என்றும்
அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை"
என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
""பரவாயில்லே!
நாளைக்கு வரும்போது காசு குடு''
என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த
பாட்டியிடம், "நாளைக்கு நான்
காசு கொண்டு வராம உன்ன
ஏமாத்திட்டா என்ன பண்ணுவே''
என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது,
வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத்
தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல
சேர்ந்துடும்''
என்று பாட்டியின் பதில்
எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
சொன்னபடி மறுநாள் காசைக்
கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில
நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர்
ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த
எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச்
சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்