சிம்லாவில் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம் ''அன்பே வா ''
புதிய வானம் - புதிய பூமி பாடல் காட்சி படமாக்கப்பட்டது . மக்கள் திலகம் - சரோஜாதேவி ஸ்கேடிங் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது .
https://youtu.be/KHY4ZmJ-8h0
Printable View
சிம்லாவில் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம் ''அன்பே வா ''
புதிய வானம் - புதிய பூமி பாடல் காட்சி படமாக்கப்பட்டது . மக்கள் திலகம் - சரோஜாதேவி ஸ்கேடிங் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது .
https://youtu.be/KHY4ZmJ-8h0
Kumar sir
Thanks for understanding and suggesting how we can about safeguarding both our interests.
Regards
RKS
Dinaethal - 19/3/2014
http://i60.tinypic.com/2eowrad.jpg
Loganathan Sir,
I am just posting the images for record purpose so that everyone could save it for next generations to come. As otherwise I read what you post here, because of my bad eyesight the images which you post here are pleasant to read.
Thanks for your understanding.
அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
நேற்று நான் திரியை பார்க்க முடியவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல பொறுமையாக, அன்போடு நமது கருத்துக்களை கூறலாம். நண்பர்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளலாம். நாமும் அவர்களது தவறை மென்மையாக சுட்டிக் காட்டலாம். உணர்ச்சி வசப்பட வேண்டாமே.
நீங்கள் போட்ட பதிவை உங்கள் நலன் கருதி நீக்கிவிட்டதாக நண்பர் திரு.முரளி கூறியுள்ளார். என்ன சொன்னீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும், நீக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையான வார்த்தைகள் தயவு செய்து வேண்டாமே. நமது தலைவரின் புகழை மட்டும் பாடுவோமே. சகோதர பாசத்துடன் நான் கூறுவதை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. கோபால்,
ஒவ்வொருவராக தரம் இறங்கி என்று (என்னையும் சேர்த்து) குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. என்னுடன் வெஞ்சன்ஸ் கலந்து வெறியுடன் மோத முடியும் என்று கூறியுள்ளீர்கள். நீங்கள் தயாராக இருக்கலாம், நான் தயாராக இல்லை. காரணம், எல்லாரையும் அன்பால் வசப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால்தான், மாற்றுக் கருத்து இருந்தாலும் திரு.ராகவேந்திரா சார், திரு.ஆர்.கே.எஸ்., திரு.வாசு சார் (நெய்வேலி), திரு.கிருஷ்ணா சார், திரு.ஐதராபாத் ரவி சார், கல்நாயக், சின்னக் கண்ணன் (யாரும் தவறாக நினைக்க வேண்டாம். கடைசியில் குறிப்பிட்ட இருவரையும் நான் திரு.போட்டு அழைப்பதில்லை. அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க. அவர்களும் என்னை மரியாதை விகுதியின்றி அழைக்கும் உரிமை உள்ளவர்கள்) ஆகியோருடன் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். ஆனால், உங்கள் விஷயத்தில் அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன். அதனால், வெறுக்க மாட்டேன். அந்த முயற்சியை கைவிட்டு விடுவேன்.
திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த கலைஞர் என்ற வகையில் எனக்கு அவர் மீது மரியாதையும் மதிப்பும் உண்டு. சமீபத்தில் கூட மதுரகானம் திரியில் ‘சொந்தம் எப்போதும்..’ பாடலை பற்றி எழுதும்போது திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சிறந்த நடிப்பை குறிப்பிட்டிருந்தேன். அந்த பாடலை குறித்து எழுதியதற்காக திரு. முரளி நன்றி தெரிவித்திருந்தார். சாந்தி தியேட்டரில் அவருக்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்று கூறியிருந்தேன். திரு. சைலேஷ் பாசு அவர்கள் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். (இதற்கும் முரளி நன்றி தெரிவித்தார்). திரு.செல்வகுமார் சமீபத்தில் உங்கள் திரிக்கே வந்து திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டி கருத்து தெரிவித்தார். ஆனால், நாங்கள் சொல்லத் துணியாததை திரு.சிவாஜி கணேசன் அவர்களை, கிழட்டு மூஞ்சி, 75ம் ஆண்டுக்கு மேல் அவர் உடல் சிதிலமடைந்து விட்டது, அவரது பிற்காலப் படங்களை எப்படி உட்கார்ந்து பார்க்கிறாய்? என்று என் மனைவி கேட்கிறார், ராஜராஜசோழன் வெளியான மார்ச் 31ம் தேதி திரையுலகின் கருப்பு தினம் என்றெல்லாம் தரக்குறைவாக பேசியது நீங்கள்தான் என்பதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறேன்.
சமீபத்தில் கூட மதுரகானம் திரியில் ஒரு நண்பர் தவறான தகவலை கொடுக்கிறார் என்று கூறி, அதற்கு உதாரணமாய் தரம் இறங்கி நீங்கள் கூறிய ‘பத்து மாதக் குழந்தைக்கு..........’ அதற்கு மேல் எழுதி என் கரங்களை கறைபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதிலே என்ன கொடுமை என்றால், ‘வருகிறார் உம்மைத் தேடி’ பாடல் மூலம் முதன்முதலில் அடானா ராகத்தை திரை இசையில் பயன்படுத்தியவர் என்று மெல்லிசை மன்னரை கூறியிருக்கிறீர்கள். நானும் அவரது ரசிகன்தான். ஆனால், அதற்கு முன்பே ரத்தக்கண்ணீரில் ‘கதவை சாத்தடி... ’ பாடல் மூலம் அடானாவை திரு.சிதம்பரம் ஜெயராமன் பயன்படுத்தியுள்ளார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று யாரையும் இகழ்ந்து பேசாதீர்கள்.
*நண்பர்கள் உங்களை திரியை விட்டு போய் பிளாக்கில் எழுதுங்கள் என்று சொன்னபோது வேதனைப்பட்டேன்.
*நீங்கள் திரியை விட்டு போகக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தேன்.
*போன பிறகும் திரும்பி வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
*திரும்பி வந்தபிறகும் வாழ்த்து தெரிவித்தேன்.
*தனது குறைகளையும் பலவீனங்களையும் கூட மறைக்கத் தெரியாத வெள்ளை மனம் கொண்டவர் என்று உங்களைக் கூறினேன்.
*திறமையாளர் என்பதால் உங்களைப் பிடிக்கும் என்று சமீபத்தில் தெரிவித்தேன்.
* வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு சமீபத்தில் நீங்கள் எழுதிய விமர்சனத்தை மனம் விட்டு பாராட்டினேன்.
இவையெல்லாம் 3ஆம் தரமானவை தரக்குறைவானவை என்று நீங்கள் கருதினால், மன்னிக்கவும். அந்த தவறை இனி செய்யமாட்டேன்.
தஞ்சையை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டம், விவசாயிகளை பாதித்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நியூட்ரினோ திட்டம், மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டது, காஷ்மீர் அரசு ஆட்டம், ஆசிரியர் வேலை கோரி போராடும் விழித்திறன் இழந்தோர் ஈவு இரக்கமின்றி குரூரமாக நடத்தப்படுவது போன்றவற்றுடன் புரட்சித் தலைவரின் படக் காட்சிகளையும் பாடல்களையும் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று நினைத்தேன். இந்த சச்சரவுகளால் எனது வேகம் பாதிக்கப்படுகிறது. உழைப்பும், சக்தியும், நேரமும் வீணாகிறது.
உங்கள் திரியில் வரும் கின்னஸ் சாதனையாளர் திரு.சிவாஜி கணேசன் அவர்கள்தான், அரசியலில் வெற்றி பெற்றதால் புரட்சித் தலைவர் திரையுலகில் வெற்றிபெற்றதாக அர்த்தமல்ல என்று கூறப்படும் தவறான கருத்துக்களுக்கு (புரட்சித் தலைவரின் மார்க்கெட் நிலவரம் எல்லாருக்கும் தெரியும். 1975ம் ஆண்டுகளில் திரு.சிவாஜியின் மார்க்கெட் சரிந்திருந்ததாக நீங்களே ஒரு முறை கூறியுள்ளீர்கள். பாட்டும் பரதமும் விமர்சனத்தில் என்று நினைக்கிறேன். திருமதி.சாரதா அவர்களும் கூறியிருந்தார். என்னிடமும் ஆதாரங்கள் உண்டு) நான் பதில் அளிக்கப் போவதில்லை.
நீங்கள் திறமையாளர் நன்றாக எழுதக்கூடியவர் என்பதில்(குறைகளை நீக்கிவிட்டு) இன்னும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சாபம் கொடுப்பதாக நினைக்காதீர்கள். எனக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை. மனம் நொந்து வேதனையோடு சொல்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் திறமையாக எழுதினாலும் உங்கள் குணமே உங்கள் எழுத்துக்களை அழித்து விடும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கடவுள் புண்ணியத்துல சினிமாவில் நல்லா சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம், ரெண்டாயிரம்னுதான் சம்பளம் கொடுத்தாங்க. முதன்முதலா தேவர் ஃபிலிம்ஸ்காரங்கதான் 'வேட்டைக்காரன்’ படத்துக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க - - Vikatan EMagazine
https://www.facebook.com/chandran.ve...31811483576086
என்கூட 'மணிமகுடம்’ நாடகத்துல சம்பத்குமாரினு ஒருத்தங்க நடிச்சாங்க. இப்போ அவங்க பெங்களூருவுல இருக்காங்க. சென்னை வந்தா என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. நடிகை லட்சுமி அடிக்கடி போன்ல விசாரிப்பாங்க, எம்.என்.ராஜம் அடிக்கடி பேசுவாங்க. சிவகுமார் அப்பப்போ நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போவார். அவங்க எல்லாரும் அந்தக் காலத்துல பழக்கமானவங்க. இப்ப உள்ளவங்களுக்கு என்னை வந்து பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே... The current day star should take of veterans, especially moral support is essential.
Thanks to Chandran Veerasamy, FB.
இனிய நண்பர் திரு குமார் சார்
காஷ்மீர் - சிம்லாவில் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தங்கள் பதிவு அருமை .
கோவாவில் படமாக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் - கேரளா- கடற்கரை யில் படகோட்டி பட காட்சிகள் அத்தனையும் கண்ணுக்கு விருந்து .
தாங்கள் கூறியதுபோல் இனி நண்பர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - செய்திகள் மட்டும்பதிவிடுவது நலம். திரிக்கு தேவை இல்லாத நிழற் படங்களை அறவே பதிவிடாமல் இருப்பது நல்லது .சொந்த வேலை - அலுவல் வேலை காரணாமாக சமீப காலமாக திரிக்கு வர இயலாத நண்பர்கள் அனைவரும் விரைவில்திரிக்கு வருகை புரிந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் பாட வேண்டுகிறேன் .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
நண்பர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள பதில் விளக்கம் -புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா
நாளை நடக்கவிருக்கும் வீரபாண்டிய கட்ட பொம்மன் -டிரைலெர் வெளியீட்டு விழா வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் ..
ACTOR DELHI GANESH ABOUT OUR MAKKAL THILAGAM MGR- 1980 - PASI MOVIE AWARD FUNCTION
https://youtu.be/uP-H0baK750
நண்பர் ஒருவர் மக்கள்திலகத்தின் படங்கள் கோவை மாநகரில் ஏதோ கடந்த இரண்டு வருடங்கள் மட்டும் தான் மறுவெளியீடு வருகின்றது அதற்கு ஒரு காரணம் ஒன்று சொல்லி இருக்கும் கதை ஆகா பிரமாதம் . பட்டியல் தருகிறேன் 1987 முதல் தலைவரின் படங்கள் கோவை மட்டும் அல்ல தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களில் தலைவரின் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வசூலில் சாதனை புரிந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் ஏன் உங்களுக்கு கூட தெரியும் .
அப்படி மொத்தமாக வாங்கி திரையீட்டால் என்ன ? லாபம் வராமல் யாரும் சேவை உணர்ச்சியோடு படங்கள் திரை இடுவது கிடையாது . அப்படிபட்டவர் தலைவரின் தீவிர ரசிகராக இருந்தால் கூட மாற்று நடிகரின் வசூலில் சக்கை போடும்பொழுது அதை தூக்கிவிட்டு தலைவர் படங்கள் போடுகிறார் என்றால் என்ன காரணம் அந்த மாற்று நடிகர் படங்களை விட தலைவரின் படங்கள் வசூல் அதிகம் செய்வதாக இருபதனால் தான் உண்மை இப்படி இருக்க ஏதோ ஏதோ ஒரு காரணம் சொல்லி தலைவரின் படங்கள் அதிக அளவில் மறுவெளியீடு ஆகின்ற உண்மை ஒத்துக்கொண்ட நண்பருக்கு நன்றி
கை தட்டி படம் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவன் நானில்லை எத்தனையோ விநியோகஸ்தர்கள் எனக்கு பழக்கம் யார் படம் எப்படி போகும் யார் படம் எவ்வளவு விலை என்ற விவரம் எல்லாம் எங்களுக்கும் தெரியும் .
அதனால் விவரங்கள் தெரியாமல் யாரும் எழுதுவது கிடையாது உண்மைகளை எப்படி சொன்னாலும் சிலரால் ஏற்று கொள்ள முடியாததால் கொட்டை எழுத்தில் போடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன் இப்பொழுதும் தான் புரிகிறது நாம் எப்படி போட்டாலும் முயலுக்கு மூணு கால் என்று சொல்லும் கூட்டத்தை சொல்லி குற்றமில்லை நமது தெய்வத்தின் புகழ் உலகெங்கும் பரவி கிடக்கின்றது இந்த சின்ன திட்டுக்கு தெரியாமல் போனால் பரவாயில்லை .
கடவுள் மறுப்பாளர்கள் வாழும் இந்த உலகத்தில் கடவுளின் அற்புதங்களை நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியாது
இதோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது