http://i47.tinypic.com/35le0x2.jpg
Printable View
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
courtesy; manidan
http://i47.tinypic.com/s4x7ol.jpg
இந்தப்பாடல் படகோட்டி படத்துக்காக திரு . வாலி அவர்கள் எழுதியது . திரு .TMS அவர்களால் அற்புதகமாக பாடப்பட்டது . MGR உணர்வுபூர்வமாக நடித்து இருந்தார் .மீனவர்களின் துன்பங்களையும் , துயரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்து இருக்கும் . இந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன . ஆனால் , " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் " என்ற வரி இன்றைக்கு பொருந்துமா ? மீன் பிடிக்கச் சென்றவர் எப்படியும் மறுநாள் வருவார் என்ற நம்பிக்கை அன்று இருந்தது , இன்று இல்லை !. சாதாரண மனிதனுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை . ஆனால் , நடப்பதோ மக்கள் ஆட்சி . உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் . இல்லையென்றால், உங்களை யார் வேண்டுமென்றாலும் , என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் . கேட்க நாதி இல்லை .