Happy birhtday Ganpat Sir
Printable View
Happy birhtday Ganpat Sir
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்பத் சார்.. :)
Darmam Enge ?baratha ratna...sarithana?
கண்பத் சார்.. Like NT's fame - long live with good health and prosperity
Ravi
:):smokesmile:
Dear Vasu sir - awaiting your return to thread 12 - many more happy returns in advance with good health and peace
Ravi
:):smokesmile:
ஒரு பெரிய சோதனையில் , என்னுடைய பேராசையினால் உந்தப்பட்டு மாட்டிகொண்டுள்ளேன் . என்ன பெரிய சோதனை - இந்த பாண்டிய நாட்டுக்கு
வராத சோதனை ?? - ஆமாம் - ஞான ஒளி யை அலசலாம் என்று ! அதில் அலச என்ன பாக்கி உள்ளது - முரளி சாரும் , வாசு சாரும் , கோபால் சாரும்
அணு அணுவாக அலசியபின் , என்னத்தை நான் புதியதாக சொல்லபோகிறேன் ?? இருந்தாலும் ஒரு முயற்சி - அது சரி , அது என்ன பேராசை ??? -
ஆமாம் பேராசைதான் - எதாவது புதியதாக சொல்ல வாய்ப்பு உண்டா , புதிய கோணத்தில், புதிய அணுகு முறையில் ??? இந்த பதிவு ஒரு வேலை நன்றாக
அமைந்து விட்டால் , வாசு சார் பாராட்ட வரும் பொது , கபெக்கென்று பிடித்துவிட்டு 4000th பதிவை கேட்டு விடலாம் - முரளி சாரின் தமிழை படிக்க
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் - கோபால் சாரின் கலாய்ப்பு இல்லாத பதிவை படிக்கலாம் - ராகவேந்திர சாரின் ஆவணகள் போடும் வேகத்தை
பார்க்கலாம் - கார்த்திக் சாரின் சபாஷ்யை வாங்கிகொள்ளலாம் - சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் - கிருபா சாரிடம்
இருந்து அன்புடன் சில திட்டுக்களை வாங்கலாம் - இந்த திரியின் சாரதியிடம் இருந்து " பலே பாண்டியா " என்று பாராட்டுகளை பெறலாம் ---------KC
சேகர் சாரின் பாராட்டுகள் எப்பவும் கிடைத்துக்கொண்டே இருப்பதால் - என் பேராசை list இல் அவர் பெயரை சேர்க்கவில்லை .
தொடரும் ------
Ravi
:smile2::smokesmile:
இன்று பிறந்தநாள் காணும் கணபதி சாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
கர்த்தரே நான் தெரிந்து செய்ய போகும் ஒரு சின்ன அலசல் என்ற கொலையை மன்னியுங்கள் !!!
Foreword :
என்னுடைய நண்பருடிய தந்தை 85 வருடங்கள் - நோய் நொடிகளக்கு டாட்டா காட்டியவர் - கண்களில் என்றுமே ஒரு torch இருக்கும் - பற்கள் புன்னகை அரசியை நினைவு படுத்தும் . காதுகள் - விக்ரமாதித்தன் உயிரை போல - பல மலை தாண்டியும் கேட்க்கும் - எல்லா உறுப்புகளும் அவர் சொல் படி கேட்க்கும் - அவர் ஆணையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் - அவர் பல தோல்விகளையும் , ஏமாற்றகளையும் கண்டவர் - காதலித்தார் - காதலிக்கு வேறு நல்ல இடம் கிடைத்தது - பிறகு ஒரு திருமணம் செய்துகொண்டார் - அதன் மூலம் பல கனவுகளை கண்டார் - ஒரு கனவும் பலிக்கவில்லை - ஆனால் என்றுமே தன்னம்பிக்கையை கைவிட்டது இல்லை - அவரின் கடைசி கனவு தன் மகளை ஓர் விஞ்சானி யாக்க வேண்டும் என்பது - கனவு பலித்தது ஒரு நாள் - மறு நாள் - அவருடைய மகள் உயிருடன் இல்லை - அவள் கனவுகளையும் தாங்கி கொண்டு வாழ்ந்தார் - சேர்த்த பணத்தை அவர் மகளின் பெயரில் science institution அமைத்தார் - மன நிம்மதியில் மகளின் மகிழ்ச்சியை மான சீகமாக கண்டு பெருமை கொள்கிறார் - இவரை எண்னும்போது ஒரு Antony , அருணையும் தான் பார்கிறேன் - இந்த ஒரு அலசல் இப்படி முகம் தெரியாத பல அண்டோநிகளுக்கும் , அருண்களுக்கும் சமர்ப்பணம்
தொடரும்
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
Antony : முரடன் , பாதிரியாரை தெய்வமாக மதிப்பவன் - கோபம் வந்தால் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கே தெரியாது - எல்லோருக்கும் வரும் காதல் , அந்த இன்பம் அவனுக்கும் வந்தது - அவன் காதலித்த பெண்ணையே பாதிரியார் முலம் திருமணம் புரிந்துகொள்கிறான் - பாவம், ஆலய மணியோசையில் , அன்று விதி சிரித்ததை அவனால் கேட்க முடியவில்லை - கொஞ்ச நாட்களே வாழபோகும் மனைவியை கொஞ்சுவதில் மும்மரம் ஆனான் - விதியின் கொடுமை - அவனை ஒரு பெண் கொழந்தைக்கு தந்தையாகி விட்டு , அவன் மனைவி கர்த்தரிடம் சரண் அடைந்தாள் - அந்த கொழந்தை அவனுக்கு ஒரு உலகமாகியது - அந்த உலகம் அவனை சுற்ற வில்லை - அவன் அந்த உலகத்தை சுற்றி வளம் வந்தான் - மகள் தான் தனக்கு இனி எல்லாம் என்று வாழ ஆரம்பித்தான் - சூரியனை அவள் முகத்தில் கண்டான் - சந்திரனை அவள் கண்களில் கண்டான் - வெளி உலகத்தை அவன் கண்டுகொள்ளவே இல்லை - மகள் தன் கனவுகளை நிறைவேற்றுவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை - தன் தந்தையினால் பட்ட அவமானங்கள் தன் மகளினால் துடைக்கப்படும் என்று நம்பினான் - அவன் நம்பிக்கை என்னவானது ??
தொடரும்
[QUOTE=g94127302;1091228]எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
மேரி அவன் உலகம் - வேகமாக வளர்கிறாள் - வயதுக்கு வரும் ஆசைகள் அவளையும் விட்டு வைக்கவில்லை - அந்த ஆசைகளில் எரிந்த நெருப்பு அந்தோணியின் கனவுகளை பொசுக்கிவிடுகிறது - அந்த எறிந்த சாம்பலில் அவனுடைய மிஞ்சிய வாழ்க்கை தொடுருகின்றது - புதிய அவதாரத்தை அவனுக்கு அந்த ஏமாற்றங்கள் அன்பளிப்பாக கொடுக்கிறது - பாதிரியாரின் கனவுகளுக்கு அருண் வடிவில் உயிர் கொடுக்கிறான் - தன் மகள் உயிருடுன் இருக்கும் உண்மை கண்டு மீண்டும் ஒரு கொழந்தையாக ஆகுகிறான் - பாசம் அவன் கண்களில் - சட்டம் அவன் நண்பனின் உருவத்தில் - தடுமாற்றம் - கர்த்தரிடம் நிம்மதியை கேட்கிறான் - தன் மகளை வாழ விடும் படி கர்த்தரிடம் கெஞ்சுகிறான் -
மகள் தான் செய்த தவறுக்கு சாட்சியாக ஒரு மகளை பெற்று வளர்க்கிறாள் - அவளும் காதலில் உந்தப்பட்டு தன் தாத்தாவின் எதிரியை மாமனாராக ஆக்க அசை படுகிறாள் - மகளின் மகளை தன் முன்னிலையில் மனம் முடிக்க அந்தோனி ஆசைபடுகிறான் - முடிவு - மீண்டும் அவமானபடுகிறான் - தன் மகளை ஊராரின் முன் நிலையில் ஒழுக்கம் கெட்டவள் என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஈட்டியாக பாய்கிறது - முடிவில் தன்னை மீறிய கோபத்தால் தன் சுய ரூபம் வெளிப்பட சிறை கம்பிகளை மீண்டும் சந்திக்க தயார் ஆகிறான் - மகள் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கை , தான் தெய்வமாக மதிக்கும் பாதிரியாரின் கனவுகள் பூர்த்தி அடைந்த சந்தோஷம் , பேத்தியின் மன வாழ்க்கை நன்ற நடந்த மன நிறைவு - இனி என்ன வாழ்க்கையில் மீதம் என்ற அமைதி - இவைகளுடன் சிறைக்கு செல்ல , நம் கண்கள் குளத்தில் குளிக்க அந்தோனியிடம் இருந்து விடை பெறுகிறோம்
தொடரும்