சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps1c4b837f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
Printable View
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps1c4b837f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...psa5e26d09.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...pse70a6630.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps44dacd13.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்
SUNDARAJAN
http://i1369.photobucket.com/albums/...ps6288609f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
புதிய பறவை படத்துக்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம்
July 30, 2010
http://www.alaikal.com/news/wp-content/putiya.jpg
சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்து 1964-ல் ரிலீசான படம் புதிய பறவை. கடந்த வெள்ளியன்று சிவாஜியின் 9-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது இப்படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர். இதையொட்டி தியேட்டரை சிவாஜி ரசிகர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரித்தனர். 40 அடி உயர கட் அவுட்டும் நிறுவினர்.
படத்தை பார்க்க சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்தனர். முதல் இரு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றனர். ஞாயிற்றுக்கிழமை 80 ரூபாய் டிக்கெட் ரூ.150-க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாக படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் கூறினார். தொடர்ந்து 6 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.
இதுபற்றி சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு கூறும்போது, புதிய பறவை படம் பார்க்க கூட்டம் கூட்டமாய் ரசிகர்கள் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டனர். இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது என்றார். “புதிய பறவை” படம் ரிலீசானபோது சாந்தி தியேட்டரில் இந்திப்படமான “சங்கம்” படம் ஓடிக் கொண்டிருந்தது. எனவே “புதிய பறவை” படம் பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பட்டது என்றும் அவர் கூறினார்.
நிறைய புதுப்படங்கள் ரிலீசான ஓரிரு நாளிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்படும் இக்கால கட்டத்தில் 46 வருடங்களுக்கு பிறகும் சிவாஜி படம் பார்க்க ரசிகர்கள் திரண்டது வியப்பாக இருந்தது என்று தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார்.
சிவாஜியை திரையில் பார்த்து ரசிகர்கள் பூக்களை அள்ளி வீசினார்கள். “எங்கே நிம்மதி”, “சிட்டுக் குருவி”, “ஆஹா மெல்ல நட”, “உன்னை ஒன்று கேட்பேன்” போன்ற இனிமையான பாடல் ஒலித்தபோது ரசிகர்கள் விசில் சத்தம் தியேட்டரை குலுங்க வைத்தது
alaikal
சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள பாரத் திரையரங்கில் நாளை 6.8.2010 வெள்ளி முதல் "புதிய பறவை" திரையிடப்படுகிறது.
திரைப்பட வரலாற்றில், பாரத் திரையரங்கிற்கு, வேறு எந்த திரையரங்கத்திற்கும் இல்லாத ஒரு மாபெரும் சிறப்பு உண்டு. நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான "பராசக்தி" யும் முதல் வெளியீட்டில் (25.10.1952) 'பாரத்'தில் தான் வெளியானது. நடிகர் திலகத்தின் 288வது இறுதித் திரைப்படமான "பூப்பறிக்க வருகிறோம்" திரைப்படமும் முதல் வெளியீட்டில் (17.9.1999) 'பாரத்'தில் தான் வெளியானது. கலைப்பெருஞ்ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் வெளியிட்ட 'பாரத்' அரங்கிற்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!
குறிப்பு:
"பராசக்தி" முதல் வெளியீட்டில், சென்னை (பாரகன், அசோக்) மற்றும் தென்னகமெங்கும் 17.10.1952 தீபாவளித் திருநாளன்று வெளியானது. சென்னை 'பாரத்'தில் மட்டும் 8 நாட்கள் கழித்து 25.10.1952 அன்று வெளியானது.
அன்புடன்,
பம்மலார்.
சாரதா,
பாட்டும் பரதமும் அலசல் அருமை என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றிய செய்திகள் நாளை எழுதுகிறேன். அதற்கு முன் கொஞ்சம் புதிய பறவை.
இன்று மாலை பாரத் அரங்கத்தை ஏன் அந்த ஏரியாவையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டார்கள் ரசிகர்கள். வாண வேடிக்கை என்ன, பாண்ட் மேளங்கள் என்ன ஒலிபெருக்கியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் என்ன என்று ஒரே திருவிழா கோலம். இது தவிர வழக்கம் போல் ஏராளமான மாலைகள், சூட தீப ஆராதனைகள் எல்லாம் நடந்தேறியன.
டிக்கெட்கள் Rs 50 /- என்று இருந்த போதிலும் ஏராளமான கூட்டம். அரங்கத்தின் உள்ளே அமர்க்களம் மிக அதிகமாகவே இருந்தது. சாந்தியில் சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக சில நேரங்களில் அடக்கி வாசித்த ரசிகர்கள் இங்கே அணை மீறிய வெள்ளமாக பாய்ந்தனர்.
வடசென்னை ரசிகர்கள் வெறி அதிகமாகவே இருக்கும் என்று சுவாமி சொன்னார். அப்படியே நடந்தது.ஆனால் யாரும் எல்லை மீறவில்லை. பாரத் அரங்கம் இப்போது குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதால் உள்ளே சூடங்கள் அனுமதிக்கப்படவில்லை. அரங்க நிர்வாகத்தினரே அதை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு பாடல் காட்சியின் போதும் திரையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சின்ன மின்சார விளக்குகளை எரிய விட காட்சிகள் ஜெகஜோதியாக விளங்கின. சிட்டுகுருவி முத்தம் கொடுத்து மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல்களுக்கு நடந்த ஆரவாரத்தை பார்த்தால் இன்று முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களே தங்களுக்கு இப்படி ரசிகர்கள் இல்லையே என்று ஏங்கி போவார்கள். எங்கே நிம்மதி பாடலுக்கு இதை விட அதிகமாக நடந்திருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் அதற்கு முன்பு கிளம்பி விட்டோம்.
இனி சில தகவல் துளிகள்
நடிகர் திலகத்தின் முதல் படத்தையும் கடைசி படத்தையும் வெளியிட்ட பாரத் அரங்கின் உரிமையாளருக்கு மன்றங்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது.
சாந்தியில் புதிய பறவை ஒரு வார வசூல் Rs 3,40,000 /- . இது பழைய பட மறு வெளியீட்டில் புதிய சாதனை.
மறு வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படங்களைப் பற்றி செய்திகள் அங்கே கிடைத்தன. அவை சவாலே சமாளி, வசந்த மாளிகை, கெளரவம்[அநேகமாக சாந்தியில் வெளியாகலாம்] போன்றவை. அது தவிர எந்த படங்கள் வெளியிட்டால் நன்றாக போகும் என்பது பற்றியும் விநியோகஸ்தர்கள் நமது சுவாமி, ராகவேந்தர் சார் போன்றவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டனர்.
தியேட்டர் புகைப்படங்களை சுவாமி மற்றும் ராகவேந்தர் சார் உங்களுக்கு வழங்குவார்கள்
அன்புடன்
murali
கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று மாலை பாரத் திரையரங்கில் புதிய பறவை திரைப்படத்திற்கான பார்வையாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 600ஐ எட்டியது. தற்பொழுது சென்னை நகர சினிமா வட்டாரத்தில் இது ஒரு சிறப்பம்சமாக கருதப் படுகிறது. காரணம் அன்று தொலைக்காட்சியில் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் தான். அன்றைய மாலைக்காட்சியில் நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளுமே 100 அல்லது 200 பார்வையாளருக்கு மேல் ஒரு குறிப்பிட்ட அரங்கில் ஒரு குறிப்பிட்ட படத்தின் ஒரு காட்சிக்கு வரவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. தனித்து நிற்கும் விதமாக பாரத் திரையரங்கு மட்டுமே விழாக் கோலம் பூண்டதோடு மட்டுமல்லாமல் 550க்கும் மேல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு சாதனையாக வியாபார நோக்கர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இது நமக்கு நேரடி தகவல் இல்லை என்றாலும் இதனை ருசுப்படுத்துவதாகத்தான் அன்றைய பாரத் திரையரங்கில் கண்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளது.
ராகவேந்திரன்
From 03.09.2010, at Saravana Theatre, Otteri, Chennai, Nadigar Thilagam's evergreen superhit movie UTHAMA PUTHIRAN, 4 shows daily. Show timings: 11.30 a.m., 2.30 p.m., 6.30 p.m. & 10.00 p.m. Don't miss.
03.09.2010 முதல் சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியம், வீனஸ் பிக்சர்ஸ் உத்தம புத்திரன், தினசரி 4 காட்சிகளாக திரையிடப் படுகிறது. காணத் தவறாதீரகள்.
ராகவேந்திரன்