http://i61.tinypic.com/dr6s0h.jpg
Printable View
http://i59.tinypic.com/14dq1iv.jpgஎனது 900 பதிவு இது//
இரண்டே மாதங்களில் 900 பதிவுகள் முடித்து விரைவில் 1,000 பதிவுகள் காணப்போகும் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2 மாதங்களில் 900 பதிவுகள் போட்டவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது திரி நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.
கணிப்பொறி பழுது ஆனதாலும், இணையதள இணைப்பு துண்டிப்பு காரணமாகவும்
பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போனது.திரி வாயிலாக நண்பர்களின் தொடர்பு
இல்லாமல் போனது. நண்பர் திரு. கலைவேந்தன் குறிப்பிட்டது போல பணிச்சுமை
ஏதுமில்லை. ஓரிரு நாட்களில் வழக்கம் போல பதிவுகள் தொடரும் என தெரிவித்துக்
கொள்கிறேன் .
ஆர். லோகநாதன்
http://i57.tinypic.com/27wy9o3.jpg
மக்கள் திலகம் பாகம் 11 ஐ துவக்கி வைத்த நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கும்
அதில் பதிவுகள் மேற்கொண்டு குறுகிய நாட்களில் முடிய காரணமாக திகழ்ந்த
அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
http://i62.tinypic.com/33ndc8o.jpg
மக்கள் திலகம் பாகம் -12 ஐ துவக்கி வைத்த இனிய நண்பர் திரு. கலைவேந்தன்
அவர்களுக்கு வணக்கங்கள்,! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !!!
புரட்சி தலைவரின் வெற்றி வெற்றி எனும் பொன்னான வார்த்தைகளுடன்
தொடங்கியுள்ள தங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
வெற்றிதேவதைதான் நம் வீட்டு வேலைக்காரி ஆயிற்றே (ஆயிரத்தில் ஒருவன் -வசனம்) .தங்களிடம் எந்த ஆவணங்களோ, அரிய புகைப்படங்களோ இல்லாவிட்டாலும் , புரட்சி தலைவரின் புகழ் வாய்ந்த தேரை நமது நண்பர்கள்
அனைவரும் கூடி சிகரத்தின் எல்லைக்கு இழுத்து செல்வர் என்பதில் எள்ளலவும்
ஐயம் கொள்ள வேண்டாம். அதில் எனது பங்களிப்பும் தொடரும் என்று உறுதி
அளிக்கிறேன்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.!!!
வாழ்ந்தவர் கோடி !! நடித்தவர் கோடி !! மறைந்தவர் கோடி !!
மக்களின் மனதில் என்றும் நிற்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே.!!
http://i61.tinypic.com/28jcwo2.jpg
இன்று (28/11/2014)முதல் சென்னை மகாலட்சுமியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை )-நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.