-
நினைப்போம்.மகிழ்வோம்-60
"நவராத்திரி."
தனது "சத்தியவான்-சாவித்திரி" தெருக்கூத்தில்
நடிகையர் திலகத்தை நடிக்கக்
கோரும் காட்சி.
ஏற்கனவே தனது தெருக்கூத்தில் நடிக்கவிருந்த
பெண், வயிற்றுப் போக்கு
காரணமாக நடிக்கவியலாமல்
போனதை, ஒரு பெண்ணிடம்
எடுத்துச் சொல்லும் போது அந்த அழகு முகத்தில் மிளிரும்
கூச்சம்.
-
ஆதவன் ரவி சார்,
முரளி சார் சொன்னது போல உங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்களின் நினைப்போம்...மகிழ்வோம் 59 ம், இனி வருவபைகளும் நிச்சயம் பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டு பார்த்து படித்து சுவைத்து ரசிக்கக் கூடியவை. ஏனோ மேலுக்குச் சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும் உங்களின் ரசிப்பின் ஆழம்தான் தென்படுகிறது. அருமை! அருமை! ஒவ்வொரு தலைவரின் ரசிகர்களும் அவரது காட்சிகளைப் பற்றி மனதில் என்ன நினைப்பார்களோ அவையனைத்தும் வார்த்தைகளாக உங்களிடம் வந்து வசியம் செய்கிறது அனைவரையும். 'இங்கிவினை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று நாங்கள் மகிழும் ரங்க ஆதவன் நீங்கள் எங்களுக்கு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
என் சார்பாக ஒன்று.
'அக்கா! விக்கிரமனுக்கும் பெண் பிடித்து விட்டது' என்று பத்மினி பற்றி மகாராணி கண்ணாம்பாவிடம் நஞ்சு நாகநாத தம்பி நம்பியார் நவில, இருவருக்கும் இடையில் பின்னாலிருந்து நாம் எதிரபாராமல் வந்து 'ஹங்' என்று கண நேர கண் சிமிட்டி சந்தோஷ சம்மதத்தைத் தெரிவிப்பது. (எவராலும் செய்ய இயலாதது)
http://i1087.photobucket.com/albums/..._001471275.jpg
-
செந்தில்வேல்,
'சவாலே சமாளி' படத்தை ஆராய்ந்து ஆய்வு எழுதுவதே மிகப் பெரிய சவால். அந்த சவாலில் நீங்கள் சர்வ சாதரணமாய் வெற்றி அடைந்து வருகிறீர்கள். அந்தப் படத்தை நான் ஆய்வு செய்ய எடுத்தால் பக்கங்கள் பத்தாது.
பகுதி பகுதியாய் எடுத்து அழகாக ரசித்து சுவைத்து எங்களையும் அதே சுகத்தைப் பெற வைக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் படங்களில் என் மனதில் முதலிடத்தில் இருக்கும் படம்.
சிவாஜி ரசிகன் ஆவணங்களோடு ஆய்வுகளையும் மேற்கொண்டு திரியை மேலும் பலப்படுத்தி சாதனை நிகழ்த்துகிறீர்கள். என் உளமான ஆசிகளும், பாராட்டுக்களும் என்றும் தங்களுக்கு உண்டு. தொடர்ந்து சவால்களை சமாளியுங்கள். வாழ்த்துக்கள்.
-
முத்தையன் அம்மு சார்!
'எங்க மாமா' படத்தில் மன்மதனாகக் காட்சியளிக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்பு எங்களுக்கு மலைப்பு. வியப்பு. ஆமாம்! எந்த லோகோவும் இல்லாமல் எப்படி படங்களைப் பதிகிறீர்கள்?.
-
முரளி சார்!
மூக்கையா, ஆனந்த், நிர்மல் இவர்கள் உங்கள் மதுரையில் புரிந்த சாதனைகள் நிஜமாகவே மலைக்க வைக்கின்றன. அதைவிட தங்களின் நினைவு சக்தி...எழுத்தாற்றல். அந்த நாள் ஞாபகம் எந்த நாளும் தங்கள் கைவண்ணத்தில் எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். சாதனைகளை என்றும் சத்தியமாய் நிலைக்க வைக்கும்.
எங்கள் கடலூரில் பாடாவதி முத்தையா தியேட்டரில் ரிலீஸ் ஆகி அனைவரும் வியக்கும் வண்ணம் ஓடி சாதனை படைத்தது 'தவப்புதல்வன்'.
-
சவாலே சமாளி தொடர்ச்சி...
மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.
மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.
பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.
ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.
சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?
-
-
-
-