http://i1170.photobucket.com/albums/...psqsqe4nmv.jpg
Printable View
மக்கள் திலகத்தை தாக்கி வேண்டும் என்றே மதிஒலி பத்திரிகையில் வெளியான செய்திகளை மற்றொரு துணை நடிகர் திரியில் போட்டிருக்கார்கள். போடாமல் அவர்கள் தவிர்க்க நினைத்தால் தவிருத்திருக்காலாம். வேண்டும் என்று மக்கள் திலகத்தை தாக்குகிறார்கள்.
அப்படியானால் வாருங்கள். ஆரோக்கியமாக விவாதம் நடத்தலாம். யார் படங்கள் நஷ்டம் என்று விவாதிக்கலாம் வாருங்காள். ப்ராப்தம் படம் படுதோல்வி. நஷ்டமடைந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்த அந்த படத்தை தயாரித்த நடிகை சாவித்திரிக்கு புரட்சித் தலைவர் பணமும் வீடும் கொடுத்து உதவிகள் செய்தார். அது தொடர்பான பதிவுகள் இங்கே.
http://www.sramakrishnan.com/?p=2590
பறவைக் கோணம்
சாவித்தியை நாம் நடிகையர் திலகம் என்றே சொல்கிறோம், சினிமாவில் இவர் ஒருவரே இப் பட்டத்தை பெற்றவர், சாவித்திரியினை மஹாநடிகை என்கிறது தெலுங்கு சினிமா, சொந்த வாழ்வில் அதிகமும் துன்பத்தையும் வேதனைகளையும் அனுபவித்து குடியால் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டார் சாவித்திரி, ஆனால் அவரைப்போல சினிமாவை நேசித்த. சினிமாவிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகை இன்று வரை எவருமில்லை,
சாவித்திரி தனிப்பெரும் ஆளுமை, எந்தக் கதாநாயனுடன் நடித்தாலும் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் ,துடுக்குதனமிக்க பேச்சுமாக சாவித்திரி தனது தனித்ன்மையை வெளிப்படுத்த தவறியதேயில்லை, தேவதாஸ் படத்தில் வரும் சாவித்திரிக்கும் மிஸ்ஸியம்மாவில் வரும் சாவித்திரிக்கும் இடையில் நடிப்பில் எவ்வளவு பெரிய மாறுபாடு, அந்த வேறுபாட்டை அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கவனமாக வெளிப்படுத்தியவர்,
மிகக் குறைவான நடிகைகளே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள், பானுமதி. அதில் ஒரு முன்னோடி, சாவித்திரி தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.
மணம் போல் மாங்கல்யம் படத்தில் நடித்த போது ஜெமினி கணேசனைக் காதலிக்க ஆரம்பித்து 1956-ல் அவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.
சிவாஜியை வைத்து அவர் இயக்கிய பிராப்தம் படத்தை சமீபத்தில் மறுமுறை பார்த்தேன், பாசமலர் படத்தின் வழியே சிவாஜியின் தங்கை என்ற அழியாத பிம்பத்தை உருவாக்கி கொண்ட சாவித்திரி, சிவாஜியை வைத்தே பிராப்தம் படத்தை உருவாக்கினார், அப்படத்தால் உருவான பிரச்சனைகள் தான் சாவித்திரியின் வீழ்ச்சிக்கான முக்கியகாரணமாக அமைந்தது
அடூர்த்தி சுப்பாராவ் இயக்கி நாகேஸ்வர ராவ் சாவித்திரி ஜமுனா நடித்த மூக மனசுலு என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இப்படத்தில் கே,விஸ்வநாத் உதவிஇயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்
முந்நூறு நாட்களை கடந்து ஒடிச் சாதனை செய்த அப் படத்தை சாவித்திரி தமிழில் இயக்க விரும்பினார், அதே படம் மிலன் என்ற பெயரில் இந்தியில் வெளியாகி அங்கேயும் வெற்றி பெற்றது, ஆகவே இப்படம் தமிழில் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினார்,
மூக மனசுலு கோதாவரி ஆற்றின் கரையில் வாழும் ஒரு ஜமீன்தார் குடும்பத்தினைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் கோபி என்ற படகோட்டி ஒருவனுக்குமான உறவைப் பற்றியது, பிறவி தோறும் தொடரும் பந்தம் என்பது போல மறுபிறவியில் இவர்கள் வேறு ஊரில் வேறு ஒரு கல்லூரியில் படித்து திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக அதே கோதாவரி ஆற்றங்கரை பகுதிக்கு வருகிறார்கள், முந்தைய பிறவியின் நினைவுகளுடன் அவருக்காக காத்திருக்கும் கௌரி என்ற பெண்ணைச் சந்திக்கிறான் கோபி,
கோபிக்காகவே காத்திருந்த கௌரி அவரது மடியில் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் இறந்து போய்விடுகிறாள், முந்தைய பிறவியின் நினைவுகள் வழியாக படம் துவங்குகிறது, தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் காட்சிபடுத்தபட்ட விதமும் சிறப்பாக இருக்கின்றன, கோதாவிரியைப் பிஎல் ராய் ஒளிப்பதிவு செய்துள்ள விதம் அபாரமானது, இன்றும் அது முன்மாதிரி படமாகவே இருக்கிறது,
அதைத் தமிழில் சிவாஜி நடித்தால் வெற்றிபெறும் என்ற கணிப்பில் படம் துவங்கப்பட்டது, ஆரூர்தாஸ் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார், சிவாஜியின் தங்கை என்று அறியப்பட்ட சாவித்திரியை சிவாஜி காதலிப்பதையோ. மனைவியாக்கி கொள்வதையோ மக்கள் விரும்பமாட்டார்கள் என்று படம் துவங்கப்படும் நாட்களில் கூறப்பட்டது, ஆனால் சாவித்திரி சின்னம்மா என்ற தனது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது என்று உறுதியாக நம்பினார்,
படத்தின் ஆரம்பத்தில் இருந்த சிவாஜிக்கும் அவருக்குமான சிக்கல்களும் கருத்துவேறுபாடுகளும் துவங்கிவிட்டிருந்தன, சிவாஜி தனது கதாபாத்திரத்தை விட சாவித்திரியே மேலோங்கியிருப்பதாக உணர்ந்திருக்ககூடும், இந்தக் கசப்பு படத்தின் பிரச்சனையாகி இரண்டு ஆண்டுகள் படமாக்குதல் நடைபெற்றிருக்கிறது
மூக மனசிலு படத்தையும் பிராப்தம் படத்தையும் ஒரு சேரப் பார்க்கும்போது அந்த படத்தின் பத்தின் ஒரு பங்கு கூட தமிழில் இல்லை என்றே தோன்றுகிறது, காரணம் ஈடுபாடு இல்லாத நடிப்பு மற்றும் சிவாஜி சம்மதிக்க மறுத்த காரணத்தால் படத்தில் இருந்து தூக்கபட்ட காட்சிகள், தொடர்பில்லாத கதைப்போக்கு, அது போலவே இப்படத்தில் சந்திரகலாவை இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் சாவித்திரி, ( இவரே உலகம் சுற்றும் வாலிபனில் எம்ஜிஆரோடு இணைந்து நடித்தவர் ), ஐமுனாவின் துடுக்குதனமும் இயல்பும் இப்படத்தில் இவரிடமும் சுத்தமாகயில்லை
மூக மனசுலு படம் பாடலுக்காகவே ஒடியது, எட்டு பாடல்கள் அதிலும் கே.வி.மகாதேவன் நாட்டுப்புற தவில் மற்றும் நாதஸ்வர இசையை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார். கண்டசாலா மற்றும் சுசிலாவின் குரலில் உள்ள பாடல்கள் பெரும்வரவேற்பை பெற்றன
தமிழிலும் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தழுவிக் கொண்டோடுது தென்னங்காத்து பாடல் மிகுந்த புகழ்பெற்றது, அதிலும் குறிப்பாக தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும். வெகு நாளாக என் ஆசை சின்னம்மா என்ற பாடலின் ஊடே கண்ணா என்று சாவித்திரி மெய்யுருக அழைக்கும் குரல் சிலிர்ப்பூட்டக்கூடியது,
படத்தின் ஆரம்பக் காட்சியில் தேனிலவிற்காக சிவாஜியும் சாவித்திரியும் ஒரு காரில் பயணம் செய்கிறார்கள், அந்தக் காரை சாவித்திரி ஒட்டிக் கொண்டுவருகிறார், அருகில் சிவாஜி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே வருவார், அநேகமாக இந்த படத்தில் தான் மணப்பெண் வெட்கப்பட்டு தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிராமல் சந்தோஷமாக சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவேயில்லாதது என்று பாட்டுப் பாடியபடியே காரை ஒட்டிக் கொண்டு போகிறார், அபூர்வமான சித்தரிப்பு அது, பொதுவாக கதாநாயகர்கள் இது போன்ற காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள், அதை மீறி சாவித்திரி அது தான் கதாபாத்திரத்தின் இயல்பு என்று ஒத்துக் கொள்ள செய்திருக்கிறார்,
படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் சாவித்திரிக்கே ஷாட் முதன்மையாக உள்ளது, பிரேமின் ஒரு ஒரம் தான் சிவாஜி இடம் பெறுகிறார், கேமிரா நகரும் போது கூட அது சாவித்திரியை நோக்கியே நகர்கிறது, சிவாஜியின் உடையலங்காரம் முற்றிலும் தெலுங்குச் சாயல் கொண்டது, உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அப்படியே தெலுங்கில் உள்ளது போலவே சாவித்திரி எடுத்திருக்கிறார், ஆனால் சில காட்சிகளைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றும் போது அதிக அக்கறை கொள்ளவேயில்லை
தெலுங்கு படத்தில் கைதட்டு பெற்ற பல வசனங்கள் தமிழில் அப்படியே இருக்கின்றன, ஆனால் ஒன்று கூட தனித்துப் பாராட்டு பெறவேயில்லை, ஒரு இயக்குனராகத் தான் நினைத்த படத்தை உருவாக்க முடியவில்லை என்பதை சாவித்திரி நன்றாக உணர்ந்திருக்கிறார், கடன்சுமைகளோடு படத்தை உருவாக்கிய சாவித்திரி 1971 ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட்டார், படம் பெரும்தோல்வியை தழுவியது, அதனால் கடனாளியான சாவித்திரி மனநிம்மதி இழந்து அவதிப்படத்துவங்கினார், ஒரு இயக்குனராகப் படத்தின் தோல்விக்கு தானே காரணம் என்று ஒப்புக் கொண்டதோடு தன்னோடு முரண்பட்ட எவரையும் பற்றி ஒருவார்த்தை அவர் தவறாகப் பேசவேயில்லை,
மதுமதி மோகமனசிலு இரண்டுமே மறுபிறவி கதையின் வெற்றிகரமான இரண்டுபடங்கள், இதில் மதுமதி நெஞ்சம் மறப்பதில்லை என்ற படமாகி பெரும் வெற்றிபெற்றது, ஆனால் பிராப்தம் தோல்வியை அடைந்தது, இதே வகைப்பாட்டில் ஹிந்தியில் உருவாக்கபட்ட ஒம்சாந்தி ஒம் பெரும்வெற்றியை பெற்றது
சாவித்திரி என்ற ஆளுமையின் பன்முகத்தன்மையில் ஒன்று இயக்குனரானது, அதை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார், பொதுவாக நடிகைகளைக் கவர்ச்சிபொம்மையாகச் சித்தரிக்கும் சினிமா உலகில், கவர்ச்சியின் நிழல் கூட தன்மீது விழாமல் பார்த்துக் கொண்டதோடு சினிமாவில் நடிகர்கள் இயக்குனர் ஆனதைப் போல தன்னால் சாதித்து காட்ட முடியும் என்று நிரூபணம் செய்தவர் சாவித்திரி, படத்தின் எல்லாக் குறைபாடுகளுக்கும் முக்கியக் காரணம் கசப்புணர்வோடு முக்கியநடிகர்கள் பணியாற்றியதே,
மனம் வருந்தி வடிக்கும் கண்ணீர் வாளை விட கூர்மையானது. அது தவறுக்கு காரணமானவர்களை நிச்சயம் தண்டித்துவிடும் என்று நம்பினார் சாவித்திரி, ஆனால் அது அவரது வாழ்நாளில் நடைபெறவேயில்லை, மனவேதனை தாளமுடியாமல் குடித்துத்குடித்துத் தன்னை உருத்தெறியாமல் சிதைத்துக் கொண்டு மீளமுடியாத துயரச் சின்னமாக இறந்து போன சாவித்திரி என்ற மகாநடிகையின் வீழ்ச்சியை ஒரு காவியத்துயரம் என்றே சொல்வேன்,
மூகமனசிலு இன்றும் விரும்பிப் பார்க்கபடுகிறது, ஆனால் பிராப்தம் கைவிடப்பட்ட படமாகவே இருக்கிறது, இந்த படத்தின் ஊடாக ஒளிர்விடும் சாவித்திரியின் ஆசையும் கனவுகளுக்காக அதை யாவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது
சினிமாவின் பகட்டான வெளிச்சம் எப்போதும் வெற்றியின் பக்கமே சுழன்று கொண்டிருக்கிறது, தோற்றும் கைவிடப்பட்டும் போன திரைக்கலைஞர்கள் படம் முடிந்து போன பிறகு மிஞ்சும் வெற்றுத்திரையைப் போல மௌனமாக, கண்ணீர் கறைபடிந்த நினைவுகளோடு இருக்கிறார்கள், சினிமாவின் இத்தனை கோடி ஜனத்திரளில் அது பலராலும் உணரப்படுவதேயில்லை என்பதே கூடுதல் துயரம்.
http://mix.looktamil.com/cinema-arti...E%B0%E0%AE%BF/
டைரக்டர் சாவித்திரி
சிவாஜி கணேசன் அத்தியாயத்துக்குள் இன்னொரு கதை – வழி காட்டலின்றி ஒரு கலைஞர் வீழ்ச்சியுற்ற கதை… தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவுக்கு ஒரு ஆசை. ‘நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, தற்போது உடம்பு கொஞ்சம் கனத்துப் போய் விட்டதால் அதிக வாய்ப்பில்லாமலிருக்கும் நடிகை சாவித்திரியை டைரக்ட் செய்ய வைத்து ஒரு படத்தை உருவாக்கினால் பரபரப்பாக இருக்குமோ?’
சாவித்திரியைத் தேடி வந்தார்; “இதோ பாரம்மா எங்கள் டைரக்டர் ஆதுர்த்தி கப்பாராவ் ரொம்ப பிஸியாகி விட்டார். அதனால் எங்கள் படக் கம்பெனியின் அடுத்த படத்தை நீ டைரக்ட் செய்ய வேண்டும்”
உடனே சம்மதம் சொல்லவில்லை. சில நாட்களுக்கு பின் திருமதி மதுசூதனராவ் வந்தார்.
“இருங்கள் ஒரு நிமிஷம். அவரைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு ஜெமினி கணேசனுக்குப் போன் செய்தார் சாவித்திரி.
“உன்னை டைரக்டர் செய்யச் சொல்றாங்க! அவ்வளவு தானே, தயங்காம ஒத்துக்கோ” என்றார் ஜெமினி கணேசன்: வேண்டாம் என்று அவர் தடுத்திருக்கலாம்.
தயாரிப்பாளர் – திருமதி மதுசூதனராவ்; டைரக்டர் – சாவித்திரி; உதவி டைரக்டர் – மோகனகுமாரி; கதை – சரோஜினி; இசையமைப்பாளர் – பி. லீலா… தெலுங்குப் படம் உருவாகி வெளியாகியது. தமிழ்ப்படம் ஒன்றை டைரக்ட் செய்ய சாவித்திரிக்கு ஆசை வந்தது தமிழ்ப் படத்தில் நடித்து வெகு நாட்களாகி விட்டனவே… தமிழ்ப் படத்தை டைரக்ட் செய்ய எந்தத் தயாரிப்பாளரும் கூப்பிடவில்லை… சொந்தத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்து டைரக்ட் செய்தால்? அதில் நடித்தால்?
சொந்தப் படம் தமிழில் தயாரிக்கவும், டைரக்ட் செய்யவும் முற்பட்டார் சாவித்திரி. கதாநாயகன் – ஜெமினி கணேசன்தான். “வேண்டாம், சொந்தப் படமும் வேண்டாம், டைரக்னும் வேண்டாம்” என்று தடுத்திருக்கலாம் ஜெமினி கணேசன். ஸ்ரீ சாவித்திரி புரொடக்ஷன்ஸ் அளிக்கும் ‘குழந்தை உள்ளம்’ தயாராகியது; வெளி வந்தது: வசூலில் தோல்வி கண்டது… ‘அடுத்து ஒரு பெரிய ஸ்டாரைப் போட்டு, படம் தயாரித்து, டைரக்ட் செய்தால், இழந்த பொருளை மீட்டு விடலாமே.’ சிவாஜி கணேசனிடம் வந்தார் சாவித்திரி. நடிகர்களில் தலைவர் என்ற முறையிலும், சாவித்திரி நண்பர் என்ற முறையிலும், “சொந்தப்பட ஆசை வேண்டாம்” என்று கூறி சிவாஜி கணேசன் தடுத்திருக்கலாம்…
1971 – ல் சாவித்திரி டைரக்ஷனில், சிவாஜ் கணேசன் நடித்த ‘பிராப்தம்’ வெளிவந்து, வசூலில் படுதோல்வி அடைந்தது. இந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வெளிவந்த சிவாஜி கணேசனின் இதர படங்கள்: ‘இரு துருவம்’, ‘தங்கைக்காக’, ‘அருணோதயம்’, ‘குலமா குணமா’, ‘சுமதி என் சுந்தரி’.
[COLOR="#008000"]நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்
from dinamani
சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST
தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.
‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’ என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.
‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா என்று பேசி நடிக்க வேண்டும். எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.
ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.
எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’, ‘சந்தனத்தில் நல்ல’, ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. எனக்குப் பெரிய நஷ்டம்.
‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட, நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’
-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.
பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?
டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும். மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?
எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம். மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.
அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும் சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.
பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை. முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.
நான் சுபாவமாகக் கருப்பு நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.
பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்! யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.
நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.
கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?
என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.
நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.
சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.
நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும் அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.
உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.
பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.
பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.
நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.
எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.
நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும் நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.
நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972 தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா! தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.
அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’
மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.
ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம், தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக் கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!
நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.
‘என் மனம் அறிஞ்சி நானாக எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’
மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.
தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.
தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!
‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’
ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.
பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின் ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி! தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக 25 வாரங்கள் ஓடியது.
அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100 நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.
தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன் சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள் உயர்த்தின.
1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.
சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!
காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.
சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும் வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.
--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.
பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?
‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அங்கேயே மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?
சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.
அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.
மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும் மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.
மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...
அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல், வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...? அல்லது ஆட்சி நடத்தும் பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?
ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?
நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.
திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம் கூப்பிடச் சொல்...
தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு, இரண்டு மதில் சுவர்களையாவது ஓடோடி வந்து, ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?
யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்! நேரம் ஓடியது.
மக்கள் திலகம் அழைத்ததும்,
மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.
உடனடியாகத் தமிழக முதல்வர் வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.
மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்![/COLOR]
http://www.appusami.com/v273mgrsavithri.asp
எம்ஜிஆரின் சொந்த மெய்க்காப்பாளராக இருந்த
கே.பி. ராமகிருஷ்ணனின் 'எம்ஜிஆர் ஒரு சகாப்தம'
என்ற நூலிலிருந்து...
சாவித்ரிக்கு லட்ச ரூபாய் நன்கொடை தந்த எம்.ஜி.ஆர்.
கே.ஜே. ஆஸ்பத்திரியில் ராமகிருஷ்ணன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 'நடிகையர் திலகம்' சாவித்ரியும் அதே ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டதால், டைரக்டர் ஏ. சுப்பாராவ் அவரை இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 'அட்மிட்' செய்திருந்தார். நோயாலும் பணமில்லாததாலும் தான் கஷ்டப்படுவதாக ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார் சாவித்ரி.
அதற்கு மறுநாள் ராமகிருஷ்ணனை எம்.ஜி.ஆர். பார்க்க வந்தபோது, இங்கு சாவித்ரி சிகிச்சை பெறுகிறார் என்பதை அவரிடம் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.
சாவித்ரியை எம்ஜிஆர் அவரது ஆஸ்பத்திரி அறையில் சென்று சந்தித்தார். 'எனக்கு ஆதரவாக இப்போ யாரும் இல்லை. ரொம்ப கஷ்டமாக இருக்குண்ணே...' என்று எம்ஜிஆரிடம் கூறினார் சாவித்ரி.
நல்ல செல்வாக்கில் வாழ்ந்த சாவித்ரியின் நிலைமை எம்ஜிஆரை மிகவும் பாதித்துவிட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகியை அழைத்து, ராமகிருஷ்ணன் சிகிச்சைக்கான கட்டணத்தை அவர் கொடுக்க பொறுப்பு ஏற்றதைப் போல சாவித்ரியின் சிகிச்சைக்கான முழு தொகையையும் தானே கட்டுவதாக உறுதியளித்தார்.
ஒரு மாதம் சாவித்ரி அங்கு சிகிச்சை பெற்றதற்கான பல ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லை கட்டி, செட்டில் பண்ணினார் எம்ஜிஆர்.
நடிகை சாவித்ரி மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் ஒரு நாள் காலை 10.30 மணிக்கு எம்ஜிஆரின் மாம்பலம் ஆபீசுக்கு வந்தார் சாவித்ரி. 'அவரை நான் கண்டிப்பாக பார்த்தே ஆகணும்!' என்று பரபரப்பாக இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தார் முதல்வர் எம்ஜிஆர்.
'எனக்கு எந்த ஆதரவும் இல்லை, நீங்கதான் ஹெல்ப் பண்ணணும், என்று உருக்கமாக கேட்டார். அவரோடு பேசியதில் அவருக்கு தங்குவதற்கு சொந்தமான வீடு இல்லை என்பதை அறிந்து கொண்டார் எம்ஜிஆர். வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் திருப்பூர் மணிமாறனுக்கு போன் போட்டு, அவரை இங்கே உடனே வரச் சொல்லு!' என்றார்.
அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மாம்பலத்திற்கு அருகே இருந்ததால் காலதாமதமின்றி வந்துவிட்டார். அதுவரை வரவேற்பு அறையில் காத்துக் கொண்டிருந்தார் சாவித்ரி.
திருப்பூர் மணிமாறனிடம், 'அண்ணா நகரிலே இவங்களுக்கு ஒரு வீடு ஏற்பாடு பண்ணுங்க...' என்றார். சவுகரியமாக சாவித்ரி இருப்பதற்கு ஒரு சொந்த வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாடிக்குச் சென்று ஒரு பையோடு திரும்பினார். அதை சாவித்ரியிடம் கொடுத்து, 'இதிலே ஒரு லட்சம் ரூபாய் இருக்கு. இதை வச்சுக்கோம்மா. உங்க உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோம்மா..' என்றார் எம்ஜிஆர்.
ஆதாரம் - கே.பி. ராமகிருஷ்ணன்
http://i66.tinypic.com/sykn5i.jpg
1972-ம் வருஷம் வெளிவந்த பொம்மை பத்திரிகை கேள்வி பதிலில் மக்கள் திலகம்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று போட்டுள்ளார்கள். வேறு எந்த நடிகரும் துணை நடிகர்களும் அவர் அளவு சம்பளத்தை அவர் திரைப்படத்தில் இருந்த வரை வாங்க முடியவில்லை.
ஒரு சில நடிகர்களின் படங்கள் சில ஊர்களில் கடைசி காலத்தில் ரிலீசே ஆகவில்லை. கடைசி வரை திரையிலும் அரசியலிலும் செல்வாக்காக இருந்தவர் புரட்சித் தலைவரே.
http://i67.tinypic.com/a2c2oh.jpg
திரைப்படத்திலும் அரசியலிலும் செல்வாக்கோடு இருந்தவர்கள் ஆந்திராவில் சூப்பர்ஸ்டார் என்.டி.ராமாராவும் தமிழகத்தில் புரட்சித் தலைவருமே. ராமாராவ் கூட ஒரு தடைவை தேர்தலில் தோற்றுப் போய் ஆட்சியை இழந்தார். ஆனாலும், அவர் நின்ற இடத்தில் ஜெயித்தார். தோற்கவில்லை.
ஆனால், திரைப்படத்திலயும் சரி, அரசியல்லேயும் சரி, செல்வாக்கோடு இருந்தவர் புரட்சித் தலைவர். தேர்தலில் தான் நின்ற இடத்தில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி, 3 முறை தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே தலைவர் புரட்சித் தலைவரே.
செல்வாக்கோடு விளங்கிய என்.டி.ஆரும் இன்னும் செல்வாக்கோடும் புகழோடும் இருக்கும் பொன்மனத் தலைவனும் கட்டி அணைத்து கொள்ளும் அபூர்வ படம். தலைவர்கள் சந்திப்பு.
மக்கள் மனங்களை மட்டுமே கொள்ளை கொண்ட ஒரே மக்கள் தலைவர்......
யார்......?????
திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை
ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !
ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!
ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.
அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.
எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !
சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...
அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !
சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.
அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.
ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 )
தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)
ஜெமினியோடு கருத்துவேறுபாடு ப்ராப்தம் திரைப்படத்திற்கு சில வருடங்கள் முன்னால் எடுக்கப்பட்ட குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..
காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம்.
நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !
மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !
அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -
திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.
அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.
17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.
ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.
டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் !
அவரை சாவித்திரி அவர்கள் சொந்த பணத்தில் 1950களில் வாங்கிய ,அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...
இதுதான் உண்மையான நிகழ்வு !
இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !
திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.
ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.
திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !
திரு ஜெமினி அவர்கள்.....
1969 இல்10 படங்கள்
1970 இல் 6 படங்கள்
1071 இல் 4 படங்கள்
1972 இல் 13 படங்கள்
1973 இல் 6 திரைப்படங்கள்
1974 இல் 4 படங்கள்
1975 இல் 3 படங்கள்
1976 இல் 5 படங்கள்
1977 இல் 3 படங்கள் ,
1978 இல் 2,
1979 இல் 1,
1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
1981, 1982 படங்கள் இல்லை
நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்
1969 - 9 படங்கள்
1970 - 9 படங்கள்
1971 - 10 படங்கள்
1972 - 7 படங்கள்
1973 - 9 படங்கள்
1974 - 6 படங்கள்
1975 - 8 படங்கள்
1976 - 6 படங்கள்
1977 - 8 படங்கள்
1978 - 9 படங்கள்
1979 - 7 படங்கள்
1980 - 6 படங்கள்
1981 - 7 படங்கள்
1982 - 13 படங்கள்
1983 - 8 படங்கள்
1984 - 10 படங்கள்
1985 - 8 படங்கள்
1986 - 7 படங்கள்
1987 - 10 படங்கள்
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !
திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !