Quote:
வாழ்வே மாயம்
கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் `வாழ்வே மாயம்'. அதே பெயரில் மெகா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் `வாழ்வே மாயம்'.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சரிவுகள் மற்றும் வெற்றிகள் அவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது கதை.
பிரேம் சாய், பாவனா, ராஜ்குமார், புவனேஸ்வரி, லெட்சுமிராஜ், ப்ரேமி, டி.வி.ராமானுஜம், காயத்ரி ப்ரியாமகாலட்சுமி, பாலாஜி நடிக்கிறார்கள்.
கதை, வசனம், இயக்கம் எஸ்.வி.சோலைராஜா. ஒளிப்பதிவு: கே.சுதாகர். இசை: விஜய் சங்கர். பின்னணி பாடலை பிரசன்னாவும் ரோஷிணியும் பாடியிருக்கிறார்கள். பாடல்: காதல் மதி. திரைக்கதை: கண்மணி சுப்பு. டீம் விஷன்ஸ்க்காக தயாரித்து இருப்பவர் எஸ்.வி.சோலைராஜா.
விரைவில் மெகா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.