Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ப்ளாகர்ஸ் எல்லாம் இப்ப மண்டைல டெம்ப்ளேட் ரெடியா வெச்சிருக்காங்க, பாராட்டவும் திட்டவும் கிட்டதட்ட ஒரே பேட்டர்ன் தான். "அவர் கருத்து புடிக்கலைன்னு சொன்னேன்" அப்படின்னு சொல்லவேண்டிய இடத்துல "எதிர்வினையாற்றினேன்" அப்படிம்பாங்க. இது ஒரு சாம்பிள் தான்! சுவாரஸ்யமா எழுதலைன்னாலும் பரவாயில்லை, லாஜிக்கோட எழுதனும், அது ரொம்ப கம்மியாகிடுச்சி.
எண்பதுகள்ல 'ஆர்ட் ஃபிலிம்' ந்னு ஒரு வகை படம் இருந்தது. ஒருத்தன் பல்லு வெளக்குறதை பொறுமையா ரெண்டு நிமிஷம் காட்டுவாங்க (பாலுமகேந்திரா கூட இந்த கொடுமை எல்லாம் பண்ணிருக்கார்) அப்ப ஒரு பேட்டியி மணிரத்னம் இதைப்பத்தி சரியா சொன்னார் - "தோணுனதையெல்லாம் எடுத்துட்டு, சஹிக்கலைன்னா, ஆர்ட் ஃபிலிம் ன்னுடறாங்க"
இப்ப அறிவுஜீவி பதிவர்கள் அது மாதிரி பண்றாங்க! எல்லாருக்குள்ளயும் ஒரு முட்டாள் இருக்கான், இவிங்களுக்கு உள்ளயும் அப்படித்தான், ஆனா, இவிங்க அதை ஏத்துக்க மாட்டாங்க.