கார்த்திக் சார்
உங்கள் பதிலில் உள்ள குறும்பை ரசித்தேன்
தஞ்சாவுரா மதுரையா நெல்லையா
Printable View
கார்த்திக் சார்
உங்கள் பதிலில் உள்ள குறும்பை ரசித்தேன்
தஞ்சாவுரா மதுரையா நெல்லையா
ஜெய் பத்மப்ரிய (வைரநெஞ்சம்) ஜோடியில் வெளி வந்த அன்று சிந்தய ரத்தம் குமார் இசை என்று நினைவு பாலுவின் இளமை கொஞ்சும் குரலில் சுசீலா உடன் "இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆனந்த பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்" அசோகன் "உடையப்பன்" என்ற வில்லன் கேரக்டர் ஊர் மக்களை கொடுமை படுத்துவார்
அப்போது இன்னொரு பாடல் "பிருந்தாவனம் யமுனா நதி" பேபி சுமதி பாடுவார் என்று நினவு
அந்த பாடலில் சுமதியின் தம்பி இறுதியாக "உடையப்பனை பழி வாங்குவோம்" என்று சொல்லும்போது திரை அரங்கமே சிரிக்கும்
Hi all,
Will be updating Jai sir's movie frequently expecting all your feedback
ஆயிரம் பொய்
இந்த படத்தில் காட்சிக்கு காட்சி சண்டை , ஏக பட்ட பாடல் , கிளப் டான்ஸ் , முழுக்க முழுக்க வெளிநாட்டில் , outdoor ஷூட்டிங் காட்சிகள்
நகைச்சுவை மருந்து அளவுக்கு இல்லை , வெகு சில characters யை வைத்து படத்தை நகர்த்தி இருக்கார்கள்
படத்தின் பெயர் 1000 பொய் என்று வைத்து விட்டு அதை பற்றி எழுதும் பொது ஒரு 10 பொய் சொல்லாமல் இருந்தால் எப்படி
i
இந்த காலத்து ரசிகர்களுக்கு சொல்லுவதை போலே முழு நீள நகைச்சுவை படம் , படம் பூராவும் ஜெய் &சோ வின் நகைச்சுவை ராஜாங்கம் தான்
கதை என்று பார்த்தல் டிக்கெட் பின்னாடி எழுதி விடலாம். தன் முறை பெண் வாணிஸ்ரீயை கல்யாணம் செய்வதின் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க எண்ணி சென்னை வருகிறார் ஜெய் , கூடவே சோ .(கதை எங்கேயோ பார்த்தது போலே உள்ளது அல்லவா, ஆம் சிங்காரவேலன் படமும் இதே கதை தான் , ஜெய் அதிலும் நடித்து இருப்பார் )
சோவுக்கு லில்லி (மனோரமா) மேல் காதல் . ஒரு நாள் ஜெய் தன் முறை பெண் வாணிஸ்ரீ யை சந்திக்கிறார் , வாணிஸ்ரீயின் தந்தை VKR race பைத்தியம் , ஜெய் எதோ உளற அது VKRக்கு ஜாக்பாட் அடிக்க ஜெய் VKR உடன் நட்பாகிறார்
மனோரமாவின் நாய் க்கு உடம்பு சரி இல்லாததால் டாக்டர் யை அழைக்கிறார் வீட்டு வேலைக்காரன் கோபாலகிருஷ்ணன் , (உண்மையில் அவர் ஒரு வைர necklace யை திருட தன் கூட்டாளி MRR வாசு உடன் முயற்சிக்கிறார் )
சோ டாக்டர் போலே மனோரமாவின் வீட்டுக்கு வருகிறார் , ஜெயின் ஆலோசனை படி (சோ டாக்டர்யிடம் தூக்க மாத்திரை கேட்கும் காட்சி , நாய்க்கு வைத்தியம் பார்க்க பயந்து ஓடுவதும் நல்ல தமாஷ் )
ஜெய் 70,000 ரூபாய்கள் கடன் வாங்கி தன் வீட்டை இழக்க நேருடிகிறார் .
சோ தன் தந்தைக்கு கடிதம் எழுதிகிறார் சாரி உளறி இருப்பார் பாருங்கள் பின்னி இருப்பார் மனுஷன் (கதை , வசனம் கூட அவரே )
இந்த கடிதத்தினால் சோவின் தந்தை (தேங்காய் ஸ்ரீநிவாசன்) ஜெயின் வீட்டுக்கு வருகிறார் , கடன்காரன் தேங்காய் தான் ஜெயின் தந்தை என்று நினைத்து ஏமாறுகிறார், ஜெய் அதை நன்றாக உபயோக படுத்தி கொளுகிறார் .
VKR இதை பார்த்து ஏமாறுகிறார் , ஜெயின் குணத்தை பார்த்து , தேங்காய்யிடம் தன் மகளை ஜெயக்கு கல்யாண பண்ணி வைக்க நினைக்கிறார்
ஜெயின் தந்தை VS ராகவன் ஜெயின் வீட்டுக்கு வருகிறார் ,
இதற்க்கு மத்தியில் வைர necklace திருடு போக போகும் செய்தி சோவின் மூலம் மனோரமாவுக்கு தெரியவருகிறது ,
வைர necklaceயை திருட வரும் வாசு வாணிஸ்ரீ யை கடத்தி சென்று விடுகிறார்
தன் கல்யாணம் நிச்சயம் செய்ய பட்ட உடன் சோ திருடிய டாக்டர் யின் உடமைகளை திருப்பி குடுக்க வரும் இடத்தில , கடத்தி செல்ல படுகிறார் . வாணிஸ்ரீ யை குண படுத்த , சோ தந்திரமாக தான் கடத்தப்பட்டு இருக்கும் செய்தியை ஜெயக்கு தெரிவிக்கிறார்
அப்பறம் என்ன சண்டை தான் , சுபம் தான்
சோ ஆரம்பம் முதல் அமர்க்களம் தான் கொஞ்சம் cliched , childish performance தான் பட் நல்ல என்ஜாய் பண்ணலாம் ,
அவர் fail ஆகி விட்டு பாயசம் கேட்பதும் , என்ன டா உங்க அப்பா பெரிய மனுஷனா என்று கேட்கும் பொது , இல்ல டா வயசு ஆயிடுச்சு அவளவுதான்
சென்னைக்கு வந்த உடன் காதல் வந்திருச்சு , டாக்டர் போலே வேடம் போட்டு , ஹா , ஹ்ஹ என்று சிகரெட்டை ஸ்டைல் அக பிடிப்பதும் , ஒரு பாடலுக்கு நடனம் வேறு கலக்கி இருக்கிறார்
இந்த மாதிரி படத்தில் ஹீரோவுக்கு scope கம்மி , அதை உணர்த்து magnanimous அக சோ யை கொஞ்சம் முன்னிலை படுத்தி , தானும் நகைச்சுவை தோரணம் கட்டி இருக்கிறார் , ஒரே சமயத்தில் இந்த மாதிரியும் , action படத்திலும் கலக்க இவரால் தான் முடியும் (சிவாஜி க்கு அப்புறம் )
சோ மற்றும் ஜெயின் ராஜ்ஜியம் தான் படம் முழுவதும் , கூடவே தேங்காய் ஸ்ரீநிவாசன் , VS ராகவன் , வாணிஸ்ரீ , VKR
மனோரமா - பொம்பளை சிவாஜி - தெருகூத்து ஒன்று போதும் , பிச்சு உதறி இருப்பார்
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் நன்றாக வசூல் செய்த படம் , இன்று பார்த்தாலும் இந்த பொய்யை ரசிக்கலாம் கவலைகளை மறந்து
dear all
just for remembrance shared this
ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.
பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.
ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.
இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.
கிருஷ்ணாஜி,
மக்கள் கலைஞரின் நினைவுநாள் பதிவு இதயத்தைக் கனக்க வைத்தது. 62 என்பது மறையும் வயது அல்ல.
பதினான்கு ஆண்டுகள் அல்ல, இன்னும் பல நூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் நிலைத்திருப்பார்.
நன்றி, வினோத் (esvee) சார்,