கார்த்திக் சார் ,
ராட்ஷஷ பாடகியின் ராட்ஷஷ ரசிகன் நான்.கோவையில் வேலை விஷயமாக தங்கி இருந்த போது அதே ஹோட்டல் தங்கியிருந்த ஈஸ்வரி மேடம் அவர்களிடம் ஒரு மணி நேரம் அவர் பாடல்களை பற்றியே உரையாடி மகிழ்ந்தேன். எனது நம்பர் ஒன்று அம்மம்மா கேளடி தோழி.இரண்டாவது மல்லிகை ஹோய் மான்விழி தேன்மொழி காதலி.
எனதி தீர்க்கமான முடிவு. ரபி, கிஷோர் ,லதா, ஆஷா, கண்டசாலா (வேண்டாமே),ஜேசுதாஸ்,எஸ்.பீ.பீ முதலியோர் மாதிரி லட்ச கணக்கில் பாடகர்கள் உருவாகி விட்டனர். ஆனால் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா, ஒரு எல்.ஆர்.ஈஸ்வரி உருவாவது மகா கஷ்டம். இன்னொரு பந்துலு படமான நம்ம வீட்டு லட்சுமியில் ஜேசுதாஸ்-எல்.ஆர் .ஈ பாடிய அலங்காரம் கலையாமல் அணைப்பதுதான் என்ன சுகமோ எனது இன்னொரு favourite .