-
மலரும் நினைவுகள்
கோலாகலமான முறையில் மிகமிக பிரம்மாண்டமாக நடைபெற்ற
நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா [ரிப்போர்ட்]
[1.10.1970 & 2.10.1970 : எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் : சென்னை]
வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1970
[மூன்று பக்க விழாத் தொகுப்பு]
முதல் இரண்டு பக்கங்கள்
http://i1094.photobucket.com/albums/...EDC4722a-1.jpg
முதல் இரண்டு பக்கங்கள் (தனித்தனியாக)
http://i1094.photobucket.com/albums/...EDC4723a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4724a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4725a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
1.10.1970 வியாழன் அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட நடிகர் திலகத்தின் 43வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது முதன்முதல் 'சிவாஜி ரசிகன்' சிறப்பு மலர். இம்மலரின் தனிச்சிறப்பு என்னவென்றால், அதுவரை வெளிவந்திருந்த ஒவ்வொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்தினுடைய புகைப்படத்தையும் ஒரு பக்கம் அளித்து, அதன் கீழே அப்படம் குறித்த நடிகர் திலகத்தின் கருத்தையும் சேர்த்து ஒரு ஆல்பம் போல் கொடுத்திருந்தார்கள் மலர்க்குழுவினர். இந்த மலரின் ஒவ்வொரு பக்கமும் இன்றிலிருந்து இங்கே தொடராகத் தொடர்கிறது...
அன்புடன்,
பம்மலார்.
-
-
-
-
பம்மலாரின் அட்டகாசமான பதிவுகளுக்கு நடுவே குறுக்கிடுவதற்கு மன்னிக்கக வேண்டும்.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிப்பான செய்தி.
நமது நெடுநாள் கனவு, முரளி சாரின் சீரிய முயற்சியால் நனவாகிறது.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பாட புத்தகமாக வைக்கவேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு மறந்து போகும் வெற்று வாய் வீரர்களை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, அதற்கான முதல் படியில் நாம் அடியெடுத்து வைக்கிறோம்.
06.10.2011 விஜயதசமி அன்று பூஜையுடன் நமது
NTFANS - Nadigar Thilagam Film Analysis and Nostalgic Society - நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் கருத்தாய்வு மற்றும் நினைவூட்டல் அமைப்பு - தொடங்கப் படுகிறது
விரைவில் இதற்கான உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் மற்றும் சட்ட திட்டங்கள் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் வெளியிடப் படும். ஏற்கெனவே நம் மய்ய நண்பர்கள் சிலர் உறுப்பினர் ஆக பெயர் தந்து விட்டனர். ஆர்வம் உள்ளோர் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இந்த அமைப்பின் தலைவராக திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களும், துணைத் தலைவராக நமது ஹப்பர் திரு மோகன் ராம் அவர்களும், ஆடிட்டர் ஸ்ரீதர் அவர்களும், பொருளாளராக நமது ஒப்பில்லா ரசிக திலகம் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக திரு கவிதாலயா கிருஷ்ணன், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர், ருஷ்ய கலாச்சார மற்றும் நட்பு அமைப்பு சார்பில் அதன் செயலாளர், உள்பட பலர் அழைக்கப் பட்டுள்ளனர். இந்தக் குழு தற்காலிகமாக உருவாக்கப் பட்டுள்ளது. நாளடைவில் இது உறுப்பினர்களின் முடிவுகளுக்கேற்ப மாற்றியமைக்கப் படலாம்.
இந்த அமைப்பு முழுக்க முழுக்க அவரது படங்களைப் பாடமாக்கும் முயற்சி.. எனவே இந்த அமைப்பின் தமிழ் TAG LINE இப்படி இருக்கலாம் -
படங்களைப் பாடமாக்குவோம்
தங்கள் ஆதரவினை எதிர் நோக்குகிறோம்.
அன்புடன்
-
-
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் தொடர் பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தைப் போல், அடுத்த ஐந்து ஆண்டு போராட்டத்தை துவக்கியுள்ளீர்கள் ! தங்களது பெருமுயற்சிகள் பெரும் வெற்றியடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !! சிங்கத்தமிழனுக்கு சிறப்பானதொரு நினைவாலயம் சீரிய முறையில் சீக்கிரமே அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவா !!!
சிறப்பு அன்னதான விழா புகைப்படங்கள் Superb !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்து வரும் கலக்கல் பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
கடலூரில் கலைக்குரிசிலுக்கு விரைவில் திருவுருவச்சிலை என்கின்ற செய்தி காதுகளில் தேன் பாய்ச்சுகிறது ! கூடிய விரைவில் அமைய பிரார்த்திப்போமாக!
"வசந்த மாளிகை" ஷூட்டிங் வீடியோ தேடினாலும் கிடைக்காத ஒன்று !
"அன்பே ஆருயிரே" பதிவு அருமை !
பிறந்தநாள் புகைப்படங்கள் அருமை என்றால் நடிகர் திலகத்தின் மணிவிழா மலரிலிருந்து அளிக்கப்பட்ட பிறந்தநாள் சிறப்பு நிழற்படங்கள் அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"கர்ணன்" விளம்பரத்தை 'hot'ஆக அளித்தமைக்கு 'sweet' நன்றிகள் ! 'திவ்யா' உலகளாவிய வெற்றியைப் பெறப் போவது உறுதி !
" வசந்த மாளிகை" ஷூட்டிங் ஸ்பாட் நிழற்படம் அரிய பொக்கிஷம் !
"துணை" ஆவணங்கள் dhool !
அன்புடன்,
பம்மலார்.