-
Oh that movie was produced by Bharathiraja I think and marked the directorial debut of his brother-in-law Manojkumar, who I suspect lent his name to Manoj Creations(or was it his son that BR named the movie company after?).
It was supposed to be a promising debut but Manojkumar went on to make several anonymous, ordinary movies. Latest I remember from him is Puratchikalaignar's Raajjiyam.
-
one humble request.. this thread shifted it's focus on the statistics rather than discussing about NT's films..
why not continue the film discussion and where's saradha and others..
-
Rakesh, Plum,
One more film is there. Balajee's Kudumbam Oru Kovil that came after Mannukkul Vairam.
EID Wishes to all Islamic Brethern.
Regards
-
அனைவருக்கும் ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்கள்.
வசந்த மாளிகை தயாரிப்பாளர் ராமா நாயுடு அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப் பட உள்ளது. அவருக்கு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவேந்திரன்
-
நடிகர் முரளியின் மறைவுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
நடிகர் திலகத்துடன் நடிகர் முரளி இணைந்த திரைப்படங்கள்:
1. மண்ணுக்குள் வைரம்(1986)
2. குடும்பம் ஒரு கோவில்(1987)
3. என் ஆச ராசாவே(1998)
அன்புடன்,
பம்மலார்.
-
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 121
கே: நீங்கள் சிவாஜி ரசிகர் தானே? (ஞ.அ.ராஜ், சென்னை - 28)
ப: சிவாஜியின் நடிப்பு ரசிகன்.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்த/படைக்கின்ற முப்பெரும் காவியங்களான பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் ஆகிய மூன்று காவியங்களை அதன் பொன்விழா ஆண்டில் நினைவு கூர்ந்ததோடு மட்டுமல்லாமல், வேதங்கள் நான்கு என்பது போல் நான்காவது காவியமாக கப்பலோட்டிய தமிழனும் விரைவில் (7.11.2010) பொன்விழா தொடக்கத்தை காண இருப்பதையும் சுட்டிக்காட்டிய இத்திரியின் முதல்வர் முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'
இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.
பதிபக்தி(1958)[100 நாள்], பாகப்பிரிவினை(1959)[31 வாரம்], படிக்காத மேதை(1960)[22 வாரம்], பாவமன்னிப்பு(1961)[25 வாரம்], பாசமலர்(1961)[25 வாரம்] ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]
தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!
'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.
இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.
"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.
வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)
வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்
2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்
3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்
4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்
5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்
6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்
7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்
8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்
9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்
10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்
11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்
12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்
13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்
14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்
15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்
16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்
17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்
18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்
19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்
20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்
21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்
22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்
23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்
24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்
25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்
6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்
2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்
3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்
4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்
5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்
6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்
7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்
பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.