கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் – 05
விழாப் பாடல்களில் நடிகர் திலகம் பாடி நடிப்பதும் உண்டு, பார்வையாளராகவும் வருவதுண்டு. அவை சில சூழ்நிலைகளில் தன் கதையையும் சொல்லக் கூடியதாக அமைவதுண்டு. அப்படி ஓர் சூழ்நிலையில் இதற்கு முன் பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலைப் பார்த்தோம்.
தற்போது பார்க்க இருப்பதும் ஒரு வாழ்த்துப் பாடலே. இதில் நடிகர் திலகம் பாடி நடிப்பார். நின்று கொண்டும் அசைந்து கொண்டும் நடந்து கொண்டும் படிகளில் ஏறிக் கொண்டும் பாடும் போது அவர் சித்தரிக்கும் நளினம் -- அது அவரால் மட்டுமே முடியும். குறிப்பாக இப் பாடலில் படிக் கட்டில் இருந்து பாடிக் கொண்டே இறங்கும் போது, ஒவ்வொரு படிக் கட்டிலும் வெவ்வேறு நடன வடிவினை வெளிப் படுத்தி, அந்தத் தாளக் கட்டினை மிகச் சரியாக கடைப் பிடித்து, இறங்கும் போது மிகவும் யதார்த்தமாக இறங்கும் போது எப்போது படிக் கட்டு இடறுமோ என்ற நமக்குத் தான் பரபரப்பு உண்டாகும். மிகவும் அநாயாசமாக அந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார். இப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் அதற்கு இப்பாடலும் முக்கிய காரணம். மெல்லிசை மன்னரின் மெட்டு, என்றென்றும் ஹிட்டு....குரல் டி.எம்.எஸ்., பாடல் கண்ணதாசன்....படம் - தங்கை. பாடல் ... கேட்டவரெல்லாம் பாடலாம்...
http://www.dailymotion.com/video/xfkrxw_keettavarellan-paadalam_school
அன்புடன்