-
If Nt could have taken care in issues like his own film posing a threat to his other films more earth shattering records could have been achieved which no one might have broken but on the other hand there lies the magnanimity of NT concentration only on acting rather than other issues
Dear Pammalar sir,
When I see your posts and say thank you for every post I remember Thiruvilayadal Dharumni dialouge , Some poets earn nmae by reciting poems, some by pointing mistakes
Like Wise
You increase your posts count by posting rare info, photos, records
I increase my post count by thanking you
-
One small request If u post rcors , info about NT movie pl compare it with other movie released during that period in such case we will be able to get vivid picture of its record, any theats, problems occured during that period for movie of course without hurting any one
Also pl make steps to directly navigate to latest thread as we have to reach previous thread last page and come to new thread
-
அன்பு பம்மலார் சார்,
ஞானத்தந்தையும், மேஜரும் கை கோர்த்து நிற்கும் அந்த அட்டகாச நிழற்படம் நம் நட்பை எடுத்துக் காட்டுவது போல் உள்ளதல்லவா!
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" மிக மிக வித்தியாசமான விளம்பரம்.
முதல் வெளியீட்டு விளம்பரம் (தினத்தந்தி) கண்களைக் குளமாக்குகிறது. தலைவர் சோகமாக சாய்ந்திருக்கும் அந்த போஸ் கரையாத நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.
என்னுடைய காவியம் (உரிமையின் பொருட்டு)அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை படைத்திருப்பதை அறியும் போது என் மகிழ்ச்சிக்கு அளவேது! அந்த அற்புத விளம்பரத்தைப் பதித்த தங்களின் தயாள குணத்திற்கும் அளவுதான் ஏது!
'இன்றுமுதல்' தினத்தந்தி விளம்பரம் என்றும் மறக்க முடியாதது.
எத்தனை பிரம்மாஸ்திரங்கள்! என் காவியத்தைத் தாக்க... அதுவும் நம்முடைய பிரம்மாஸ்திரங்கள்... ஆனால் ஞானஒளி அத்தன பிரம்மாஸ்திரங்களையும் எதிர்கொண்டு பகலவனாய்,ஒளிவெள்ளமாய் பிரகாசித்ததே! அந்த ஒரு பெருமை போதும் எனக்கு.
சிங்காரச் சென்னையில் 1000 வெற்றிக் காட்சிகள்... வெற்றிக் களிநடம் புரியும் என் 'ஆண்டனி'... நெருங்குபவர் எவரேனும் உண்டா...
சென்னை 'பிளாசா'வில் வரலாறு காணாத சாதனை. 25 வருட 'பிளாசா'வின் சரித்திரத்தில் எவருமே ஈடு செய்ய முடியாத சாதனை! 'கண் திருஷ்டி படும் அளவிற்கு' என்ற இது போன்ற விளம்பரம் என் உயிர்க் காவியத்தைத் தவிர வேறு எதற்கும் உண்டா!...அப்போதே அட்வான்ஸ் புக்கிங் சார்ட்... இருங்கள்... காலரை தூக்கி விட்டுக் கொண்டு வருகிறேன்.
உயிர்க் காவியத்தின் நூறாவது நாள் விளம்பரம் தந்து என்னை பெருமிதத்தொடு பீடுநடை போட்டு நடக்க வைத்த செம்மலே! என் உயிரினும் மேலானவரே! உம்மை இந்த பதிவிற்காகவே வாழ்நாள் முழுதும் போற்றி வணங்குவேன். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அந்தக் கர்ணன்... ஆனால் என்னால் தீர்க்க முடியுமா...
'ஆனந்த விகடன்' காவிய விமர்சனம் ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது. பட்டை தீட்டப்பட்ட வைரமென நடிகர் திலகத்தைப் பாராட்டியுள்ள விகடன் உண்மையிலேயே பத்திரிக்கைகளின் முதல்வன். தாங்களோ பதிவுகளின் முதல்வர்.
'ஞானஒளி' பற்றிய குறிப்புகள் ஒவ்வொன்றும் வைரங்கள். தலைவரின் வேறு படங்கள் களத்தில் இல்லாமல் இருந்திருந்தால் என் 'ஞானஒளி' திரிசூலத்தை விஞ்சி இருக்கும் வெற்றியில். அதிர்ஷ்டக் காற்று மாறி அடித்து விட்டது... பரவாயில்லை. எத்தனை ஆயிரம் காவியங்கள் வந்தாலென்ன...
என் ஆண்டனியின் ஒரு கண்ணசைவுக்கு அவையெல்லாம் ஈடாகுமா!
தங்கள் அற்புத 'ஞானஒளி' பதிவுகளுக்கு உலகையே விலையாகக் கொடுத்தாலும் ஈடாகுமா!
நன்றியில்
'பாபு'வாய்
தங்கள் வாசுதேவன்
-
எல்லோருக்கும் நன்றி,வாழ்த்துக்குள். கொண்டாடுவோம்.
-
-
-
-
-
அந்தக் காலத்தில் பேசும்படம் பத்திரிகைக்கு மட்டும் வாசுதேவன் கிடைத்திருந்தால்... பத்திரிகை விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கும்..
கலக்குகிறார் சார்....
வாசுதேவன் சார்... நீங்கள் ஒரு புறம்... பம்மலார் மறுபுறம் என்று நடிகர் திலகம் என்கிற வசந்தமாளிகைக்கு கல்தூண்களாய்த் தாங்கி நிற்கிறீர்கள்...
சூப்பர்...
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அளவில்லாத அன்பிற்கு என்றும் என்னுடைய நன்றிகள் சார்.
நடிகர் திலகம் என்ற வசந்த மாளிகைக்கு அஸ்திவாரமே தாங்களல்லவா! தங்கள் அடியொற்றி, மாளிகையைத் தாங்கும் சிறு கல்தூண்களாய் நானும் அன்புப் பம்மலாரும் நிற்பதுதானே எங்களுக்குப் பெருமை.