பம்மலார் அவர்கள் நடிகர்திலகத்தின் ஒலிம்பிக் விஜயம் பற்றிய ஆவணங்களைப் பதித்தாலும் பதித்தார். தொடர்ந்து வாசுதேவன், முரளி சீனிவாஸ், ராகவேந்தர் என அனைவரும் தங்கள் கிரிக்கெட் அனுபவங்களை (அவற்றோடு நடிகர்திலகத்தின் கிரிக்கெட் ஈடுபாட்டையும் தொடர்பு படுத்தி) பதித்து தள்ளி விட்டனர். (கூடவே 'டெயில் எண்டராக' நானும்).
தவிர, அப்போதெல்லாம் பல்வேறு நல நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும்போதெல்லாம் தானும் ஒரு அணியின் தலைவராக நடிகர்திலகம் கலந்துகொள்வார். (கூடவே ஜெமினிகணேஷ், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், நாகேஷ் என கிரிக்கெட் ஆர்வம் கொண்ட பல நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள்). பழைய நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதுபோன்ற பல மேட்சுகளைக் கண்டுகளித்த இனிமையான அனுபவம் எனக்கு உண்டு. அதெல்லாம் எவ்வளவு இனிமையான நாட்கள்.