.
இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.
-----------------
அந்த நாடகத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கடைசி நிமிடத்தில் கூறிவிட்டு திரு MGR அவர்கள் சென்றுவிட்டார் என்பது உலகறிந்த செய்தி. நாடகம் நடக்க ஓரிரு தினங்களே மீதி இருக்கையில் அதை சவாலாக கருதி சில மணி நேரத்தில் வசனம் முதல் காட்சி வரை மனதில் ஏற்று அதை செவ்வன செய்து முடித்து அறிஞர் அண்ணாவை அவமானத்திலிருந்து காப்பாற்றியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...அதை யாரும் மறக்கவோ, மறைக்கவோ முயற்சிசெய்ய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் !! ------------------
மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.
--------------------------
21-09-1957 இல் வந்த ராணி லலிதாங்கி திரைப்படம் நடிகர் திலகத்தின் 41வது திரைப்படம்...அதாவது 17-10-1952இல் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராணி லலிதாங்கி வெளிவரும்போது 40 படங்கள் நிறைவு செய்த நிலையில் அதாவது 5 வருடங்களில் 40 படங்களை நிறைவு செய்திருந்தார்.
வருடத்திற்கு 8 படங்கள் என்ற விகிதத்தில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் நடிகர் திலகத்திற்கு திரு MGR அவர்கள் அதுவும் ராணி லலிதாங்கி திரைப்படத்திற்கு சிபாரிசாம் ! எப்படி இருக்கிறது இவர்களின் புதுக்கதை ! இந்த திரைப்படத்தில் கொள்கை காரணம் நடிக்கமுடியாமல் போனபோது, தயாரிப்பாளர் தாமாகவே நடிகர் திலகத்தின் மேன்மை அறிந்து...நடிகர் திலகத்தை வைத்து தயாரித்தார் என்பது உண்மையான தகவல்...நடிகர் திலகம் எவரும் சிபாரிசு செய்யும் நிலையில் பராசக்தி வெளிவந்த பிறகு இருந்ததில்லை என்பது திரை உலகம் அறிந்த விஷயம்.!!! இதில் எது 21நூற்றாண்டின் JOKE என்பது பொதுமக்களாகிய நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் ------------------------
எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.
------------------------------
அடுத்த குற்றச்சாட்டு .சிவந்த மண் எதிர்பார்த்த லாபம் கொடுக்கவில்லையாம்...! ஒரு காலத்தில் ஓடவே இல்லை என்று கூறினார்கள்...பிறகு நாம் ஆதாரம் கொடுத்தவுடன் ஓடியதை ஒத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் !
இப்போது எதிர்பார்த்த வசூல் இல்லை என்று ஒரு டூப் ! இன்னும் என்னனென்ன டூப் பாக்கி உள்ளதோ தெரியவில்லை.
அன்று சிந்திய ரத்தம் பல காட்சிகள் with Mr. MGR படபிடிப்பு நடத்தப்பட்டு பிறகு தயாரிப்பாளர் படபிடிப்பை நிறுத்தி அதுவரை செலவு செய்தது போனாலும் பரவா இல்லை என்று நடிகர் திலகத்தை வைத்து புதிய TITLE சிவந்த மண் வைத்து வெற்றிகரமாக படபிடிப்பை நடத்தி வெளியிட்டு பல ஊர்களில் சிவந்த மண் வசூல் மழை பொழிய சக்கை போடு போட்டது உலகத்திற்கே தெரியும்...
உண்மை இப்படி இருக்க எதிர்பார்த்த வசூல் இல்லையாம்...எதிர் பார்த்த வசூல்...! ஏன் இந்த காழ்புணர்ச்சி புத்தி..!
சிவந்த மண் பல இடங்களில் வெற்றி நடை ஆதாரம் இதோ பொது மக்கள் பார்வைக்கு ! ------------------------------------
50 days advertisement in all release centers !!
http://i501.photobucket.com/albums/e...ps2336dd32.jpg
100 days advertisement in multiple centers !
http://i501.photobucket.com/albums/e...psf9adafb2.jpg
A REQUEST TO THOSE WHO PUBLISH DELIBERATE LIES WITHOUT ANY PROOFs....
PLEASE DONT TRY TO PUBLISH YOUR SUBSTANDARD LIES BECAUSE OF YOUR INFERIORITY COMPLEX.....PUBLISH AUTHENTIC PROOFs ( NOT YOUR RASIGAR MANDRAM NOTICES ) TO JUSTIFY YOUR STATEMENTS...!