ராஜேஷ் - உங்கள் "திரையில் பக்தி " என்னவாயிற்று ? intermission ஆ ??
Printable View
ராஜேஷ் - உங்கள் "திரையில் பக்தி " என்னவாயிற்று ? intermission ஆ ??
திரு கல்நாயக் - பூக்களை பறித்துவிட்டு மாலையாக தொடுக்கா விட்டால் அவைகள் வாடிப்போக வாய்ப்பு அதிகம் - நீங்கள் இதுவரை போட்ட பூக்கள் பதிவுகளை நுகர்ந்தவுடன் , வீட்டில் இருந்த எல்லா நறுமண , வாசனை திரவியங்களையும் தூக்கி எறிந்து விட்டேன் - பூக்கள் வரவில்லை என்றால் , மீண்டும் தூக்கி எறிந்த பொருள்களை தேவை இல்லாமல் வாங்க வேண்டியதாகி விடும் . தொடர வேண்டுகிறேன் ----
டியர் வாசு சார்,
சத்தியம் தவறாதே படத்தில் இடம்பெற்ற 'முத்துக் குளிப்பவரே' பாடல் அலசல் அருமை (ஸர்ப் எக்ஸல்..??)
சின்ன வயது விஜயநிர்மலா என்றால் எனக்கு எப்போதும் ஒரு கிக்தான். (கிருஷ்ணா இந்த பதிவெல்லாம் படிக்க மாட்டார்தானே..! அட, நம்ம கிருஷ்ணாஜி இல்லீங்க, திருவாளர் விஜியைச் சொன்னேன்). விஜி கொஞ்சம் கருப்பு நிறம்தான். கருப்புவெள்ளை படங்களிலேயே நடித்ததால் தெரியவில்லை. ஆனால் என் அண்ணன் காட்டிக்கொடுத்து விட்டார்.
இதென்ன அதிசயம்..?.
பணமா பாசமா, மோசக்காரனுக்கு மோசக்காரன் எல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஞான ஒளியைக் காணோம்.
நீங்களாவது..., ஞான ஒளியையாவது... தவிர்ப்பதாவது..... எப்படி?.
'சவாலே சமாளி'...'தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி'
ஆதிராம் சார்,
கலக்கல். விழுந்து விழுந்து சிரித்தேன். நன்றி!
எனக்கு ஒளியை மற்றவற்றுடன் கலக்க மனதில்லை சார். அது த.........னி. 'மோசக்காரனுக்கு மோசக்கார'னுடன் சேர்த்து மோசம் போகாமல் காத்துக் கொண்டேன்.:)
இப்போ வேலை வைத்து விட்டீர்களே! தமிழில் வர்ணத்தில் திருமதி கிருஷ்ணா வேறு எதிலாவது அகப்படுகிறாரா என்று தேட வேண்டுமே!:)
http://rymimg.com/lk/f/l/d9ea44bd406...9a/4430891.jpg
'ஒளி' தவிர்த்து பார்த்தால் என் ஓட்டு 'உயிரா மானா' விற்கே. விஜி விளையாடுவார் இந்தப் படத்தில்.
நம் தலைவரின் பட டைட்டிலின் தலைப்பு உள்ள பாடல் வரியில் ஜெய்யுடன் இணைந்து அம்மணி அட்டகாசம் பண்ணுவாரே ஆண்பிள்ளை ரேஞ்சுக்கு.
போதாதற்கு என் ராட்சஸி (இதற்கு 'நம்' ராட்சஸி போட மாட்டேன்):) வேறு குரலாயிற்றா? பாடகர் திலகம் உடன் சேர்ந்து பட்டை கிளப்புவார். சின்னா பார்க்காத புயலை, இன்பப் புயலை இப்பாட்டில் அனுபவிக்கலாம்.
இன்னா ஆட்டம்... இன்னா பாட்டம்... இன்னா லிரிக்ஸ். அமர்க்களம் போங்க.
எப்பேர்ப்பட்ட கோழைக்கும் தன்னம்பிக்கை தந்து வீரமாக்கிவிடும் அசுரப் பாடல்.
அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் பளீர் என்று, பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு, 'குதிரைவால்' கொண்டை போட்டு, 'மக்கள் கலைஞ'ருடன் மகா நெருக்கம். (அந்த மச்சம் வேறு மனுஷனைப் பாடாப் படுத்துது). 'மயங்கும் வயது' பாடலில் எம்.ஜி.ஆர் அவர்களும், மேடமும் பண்ணும் அதே காரியங்களைத்தான் இங்கே இவர்களும் செய்கிறார்கள்.:) பாறாங்கல் குன்றுகளின் மீது நின்று டப்பாப்ங்குத்து குத்தாட்டம் போடுவது குற்றால குதூகலம். ஜெய் பல இடங்களில் ஜாலியாக ஆடினாலும் சில இடங்களில் தடுமாறுவார்.
கருங்கல் குன்று ஒன்றின் மேல் விஜி துணிச்சலாக ஏறி நின்று, அந்தக் கால ஏர் உழவன் ரேஞ்சிற்கு கைகளை உயர்த்தி, 'எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி' நம்மை சமாளிக்க சொல்வது உண்மையிலே பார்க்கும் நமக்கு 'மூச்சு முட்டும்' சவால்தான் சாமி.
ஜெய்யாவது பரவாயில்லை... மனிதர் ஷூ போட்டுக் கொண்டு சமாளித்து ஆடுவார். ஆனால் விஜியோ காலில் காலணி இல்லாமலேயே அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.
அந்தக் காலத்தில் அப்படி ஒரு தொழில் பக்தி, சின்ஸியாரிட்டி, அர்ப்பணிப்பு இருந்தது. பெண்டு கழன்று விடும். இப்போது காரவான், ஏ.சி சொகுசு என்று இளசுங்க நோகாம மினுக்கிகிட்டு 'கேட் வாக்' போகுதுங்க. பணமா சம்பாதிச்சி ரியல் எஸ்டேட் பிசினெஸ் பண்ணுதுங்க.
ராட்சஸியப் பத்தி சொல்லாமலா? வேறு எவரையும் இந்தப் பாட்டிற்கு இவரை விட்டால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
தெனாவாட்டு, திமிர், 'சொல்வதை அப்போதே கேட்டு செய்' என்பது போல உத்தரவு, அகங்காரம், ஆணை, அலட்சியம் என்று வார்த்தைகளில், எழுத்துக்களின் உச்சரிப்பில் உன்னத அதிசயங்கள் படைப்பார்.
ஒரே ஒரு இடம் உதாரணத்திற்கு சொல்கிறேனே...
'கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி'
இந்த வரிகளை அவர் பாடுவதை கவனியுங்கள். அப்படியே சரண்டர் ஆகி விடுவீர்கள். 'சவாலே' என்பதை அழுத்தி அதனுடன் வ்' சேர்த்து சவ்..வாலே' என்று அவர் உச்சரிக்கும் போது நம் உடல் சிலிர்த்துப் போகும். 'லே' முடிவதே தெரியாது. கண்ணதாசனின் வலுவான வரிகளுக்கு எல்.ஆர் ஈஸ்வரி மேலும் வலு சேர்த்திருப்பார். இசை 'மெல்லிசை மன்னர்'. ராட்சஸியை யூஸ் பண்ணும்போதே தெரியுதே.
அமர்ஜோதி மூவீஸ் அளிக்கும் இப்படத்தை இயக்கியவர் 'கேள்வி தலைப்பு' இயக்குனர் கே.எஸ்.ஜி.:)
இன்று ஞாயிற்றுக் கிழமை. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். வச்சார் ஆதிராம் வேலை. விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து.
ஆதிராம் சார்! ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். தூண்டுகோலாய் துணை நின்றதற்கு நன்றி!
ஆனால் எல்லாவற்றுக்கும் மூல காரணகர்த்தாவாக 'முத்துக் குளித்துவிட்டு' நம் இருவரையும் 'கொஞ்சம் பக்கத்துல வரச்' சொல்லி, புயல் வரலயேன்னு ஒரு மனுஷர் கவலைப்படுகிறாரே:) அவரை என்ன செய்தால் தகும்?
நீங்களே சொல்லுங்கள்.
http://i.ytimg.com/vi/BIVSyDEm_2g/hqdefault.jpg
இன்னொரு விஷயம்...இந்தப் படத்தின் சில காட்சிகள் நெய்வேலி டவுன்ஷிப்பில் ஷூட் செய்யப்பட்டது. நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வரும் மண்ணை அப்படியே மலை போல குவித்து வைத்து விடுவார்கள். விண்ணைத் தொடும் அளவிற்கு அந்த மணல் மலை இறுகி இருக்கும். அங்கேயெல்லாம் இந்தப் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. முதலாம் அனல் மின் நிலையம், முதாலம் சுரங்கம் இவைகளின் அருகே.)
முத்துராமன் அயல்நாட்டு அம்மணி கிருஷ்ணகுமாரியிடம் பாடும்,
'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' (சீர்காழியார் குரல்)
பாடல் வரிகள் இன்னும் நெய்வேலிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.
அற்புதமான இந்த லோ-கிளாஸ் பாடலை ஆனந்தத்துடன் கேளுங்கள். ஆனால் கருத்து ரொம்ப ஹை-கிளாஸ்.
என்ன? நண்பர்களே! சவாலை சமாளிக்கத் தயாரா?:)
https://i1.ytimg.com/vi/mnrlgPC4Pb0/hqdefault.jpg
சவாலே சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி
ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி
ஏய்ச்சி வாழும் கூட்டமிட்ட சவாலே
நீ மூச்சு நிற்கும் நேரம் மட்டும் சமாளி
நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு
நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
கையைத் தூக்கி எதிரி விட்ட சவாலே
ஆஹா காலைத் தூக்கி தலையில் வச்சி சமாளி
காசுக்கார கூட்டமிட்ட சவாலே
நீ தூசு போல தூக்கிப் போட்டு சமாளி
துணிச்சலுக்கு தோல்வி இல்லே துக்கமில்லே
துக்கம் வந்தா நானிருக்கேன் பக்கத்திலே
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
அழகுப் பொண்ணு உனக்கு விட்ட சவாலே
நான் அதிசயமா நெனைக்குமட்டும் சமாளி
கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
சவாலே சமாளி
https://youtu.be/PthwY8km7r8
வாசுங்க்ணா. இது நியாய்மா தர்மமா நீதியா முறையா..
ஞான் முன்பே எடுத்து வைத்திருந்த பாட்டாணு இது.. நிஞ்ஞள்கிட்ட போட்டாச் கேட்ட பின்னால் போடலாம் என சவாலே சமாளியை வைத்திருந்தேன்.. நீங்கள் என்னடா என்றால் ஆற அமரத் துவைத்து சர்ஃப் எக்ஸெல் போட்டு பின் உஜாலாவும் இட்டு வெளுத்துவிட்டீர்கள்..
கேட்பதற்கு இனிமையான இந்தப் பாடலை பாகம் 4 ஆரம்பிக்கும் போது தான் பார்த்து வைத்திருந்தேன்..
விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து. // வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன் :)
//அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.// பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.:)
அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் // என்னா ஒரு பார்வை..சாமி சத்தியமா அது பட் பாவாடை தாவணின்னு நான் கவனிக்கலை..
//அவரை என்ன செய்தால் தகும்? // பாவம் இவரும் குழந்தை தான் விட்டுடுங்க.. :) தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் த நைஸ் எழுத்தாடல் அண்ட் காணொளி.. எதுக்கும் போற போக்குல ஒண்ணு கேட்டு வச்சுடலாம் :)
நீங்க எப்போ பாட் தரப் போறீங்க ஆதிராம் ?
டியர் வாசு சார்,
கொஞ்சம் தூண்டி விட்டால் போதும், மனிதர் நர்த்தனம் ஆடிடுவீங்களே. கிட்டத்தட்ட எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை. பார்த்தால் சாதாரணமாக தெரியும் பாடலில் கூட எப்படி இவ்வளவு நுணுக்கங்களை ஆராய முடிகிறது என்பது ஆச்சரியமே.
ஜெய்சங்கருக்கு சண்டைபோடத் தெரிந்த அளவுக்கு ஆடத்தெரியாது. ஒருமாதிரி தையா தக்கா என்று குதித்து, தனது ட்ரேட்மார்க் நடை நடந்து 'சமாளித்து' விடுவார். 'முத்துப்பொண்ணு வாம்மா' பாடலில் ஆட்டத்தில் தேர்ந்த விஜயலட்சுமியுடன் ரொம்பவே பரிதாபப்பட வைப்பார்.
பாறை சூட்டில் விஜயநிர்மலா வெறுங்காலுடன் ஆடுவது பாவமாகத்தான் இருக்கும். போக்கிரி ராஜா படத்தின் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா' பாடல் ஷூட்டிங்கில் ரஜினிக்கு மட்டும் ஷூ கொடுத்து தன்னை வெறும் கால்களுடன் ஆடச்சொன்ன எஸ்.பி. முத்துராமனுடன் போக்கிரி ராணி ராதிகா சண்டைக்குப்போனாறாம் தனக்கும் காலணி வேண்டுமென்று. "நீ போட்டிருக்கும் உடைக்கும் காலணிக்கும் பொருந்துமா?" என்று கேட்டு ரஜினிதான் நிலைமையை சமாளித்தாராம் (பெண்ணுரிமை இயக்கங்களே குறித்துக் கொள்ளுங்கள்)
'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' வரிகளுக்கு நடித்தவர் கிருஷ்ணகுமாரியா?. நான் பாரதி என்று நினைத்திருந்தேன். (இங்கு ஒருவர் மகாகவி பாரதியாரை நீச்சல் உடையில் கற்பனை செய்த கொடுமை வேறு).
நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.
நன்றியுடன்
திரு ஆதிராம் - தயிரியமாக என் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே - ஏன் சுத்தி வளைத்து யாரோ ஒருவர் என்று எழுதுகிறீர்கள் - நண்பர்களாகத்தானே பழகுகிறோம் - முக மூடி தேவை இல்லையே - உங்கள் பதிவுகளில் யாராவது ஒருவர் மாட்டுவார் என்று தெரியும் - ஆனால் இன்றே நான் மாட்டுவேன் என்று நினைக்கவில்லை . என் பதிவுகளுக்கு "likes " போடும் உங்களுக்கு என்னை திட்டவும் உரிமை உள்ளது - ஆனால் ஒரு நகைச்சுவை உணர்ச்சியுடன் எழுதினதை " கொடுமை " என்று நீங்கள் சொன்னததுதான் "கொடுமை " - உங்களுக்கு அதிக நகைச்சுவை உணர்ச்சிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .உடையினில் வறுமை என்பதை பாரதி தன் வாழ்நாள் முழுவதும் கண்டவர் . நண்பர்களாக பழகும் இந்த திரியில் மறைமுகத்தை தவிர்க்க வேண்டுகிறேன் . உங்களுக்காக இந்த பாடல் என் அன்பளிப்பு
https://youtu.be/2jI17IGAtUI
சின்னக்கண்ணன் சார்,
உடையினில் வறுமை என்று காந்தியை சொல்கிறீர்களா அல்லது பாரதியாரை சொல்கிறீர்களா?. எனக்கென்னவோ பாரதியாரை கோட்டும் முண்டாசும் இல்லாமல் ஒரு படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அவருக்கு உடையினில் வறுமையா?. சரி, ஆன்றோர்கள் சொல்லும்போது நம்பித்தான் ஆகணும்
//எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை.//
:):)
//நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.//
நானும் தரவே மாட்டேன்.:):)
//'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'//
ஜாக்கிரதையா இருக்கணும்பா மனுஷர்கிட்ட.:) இதைக் கூட ஞாபகம் வச்சுண்டிருக்கார்.:)
இன்னைய டார்கெட் அப்பாவிப் பிள்ளை ரவியோ?
//வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன்//
நீண்ட கியூ இருக்குமே! பரா...ல்லியா?:)
ரவி சார்,
தைரியமா 'லைக்' போட நான் இருக்கேன்.:) :) 'நிலா'வுக்கு அல்ல:)
//பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.//
அப்பாடா! போட்டியில ஒன்னு குறைஞ்சுது.:)
ஆதி ராம்.. நான் எதுவுமே சொல்லவில்லையே..என்னை ஏன் இழுக்கிறீர்கள் (அதுவும் கஷ்டம் தான் 108 கிலோ ) :)
அது ரவி சொன்னது..
A Seperation -2011- Iran - Asghar Farhadi
பல விருதுகளை வென்று குவித்த ஈரானிய படம்.கே.எஸ்.ஜி படங்களை பார்த்து ரசித்த ,தமிழ் உள்ளங்களுக்கு அன்னியமாக தெரியாத குடும்ப படம். இந்த கால மெகா சீரியல் போல குடும்ப சிதைவை(குற்றங்களையும்) உள்ளடக்காது ,குடும்ப பிரச்சினைகளை, நாடு,மத,தனி மனித பின்னணியில் அணுகிய படம். அற்புதமான திரை கதை,இயக்கம், நடிப்பு என்று நம்மை அசத்தி அசத்தி ,அந்நிய தன்மை தோன்றாமல் செய்து விடும். கட்டி போட்டு விடும். மொழிக்கு subtitle தேவை ஆனாலும் ,மிக குறைந்த வசனங்களே .நடேர் என்ற கணவன்,
சிமின் என்னும் மனைவி,தோமே என்னும் பெண் குழந்தை,நடேர் தந்தை ,ரசியா என்னும் பனி பெண்,சாட்ஜா என்னும் அவள் கணவன் இவர்கள்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்.
1)பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியும் அளவு,தங்களை நம்பி வாழும் மற்ற உறவுகளின் முக்கிய துவம் தெரியாது போலும். இது மத,இன,மொழி,நாடு வேறுபாடு கடந்த இணைப்பு சங்கிலி போலும்.
2)ஆண்களுக்கோ பல வித உறவின் முரண்களை அணைத்து நின்று , அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம். ஆனாலும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது ,சுயநலம் அற்ற போக்கில் ஆண்களே முதன்மை.
3)எல்லா மதங்களும் தனி வாழ்விலும், சமூக பொது வாழ்விலும் இடையூறு செய்து மனிதம் குலைக்கும். ஒரு கால கிறிஸ்துவம் தேவாலயம் சார்ந்த சர்வாதிகாரம், ஹிந்து மதம் ப்ராமணம் அரசின் மீது செலுத்தி தன மக்களையே பிரித்த அநீதி,தற்காலங்களில் மட்டு பட்டாலும், இஸ்லாம் இன்னும் மனிதத்தை துறந்து மதமே என்று நாடுகளில் கோலோச்சும் வினோதம்.
4)மத்திய வர்க்கமே,இன்னொரு தாழ்ந்த தன வர்க்கத்தின் பிரச்சினையில் கண் மூடி சுயநலம் காட்டும் சுயநல ஆதிக்க வக்கிரம்.
5)வயதான மனிதர்கள் வாழ்வு ,மற்றவர்களின் வாழ்வை ஆக்கிரமித்து ,வாழ வேண்டிய வயதினரின் வாழ்வு குலைக்கும் ,நோக்கமில்லா துன்பங்கள்.
6)பணத்தை விட ,மத நம்பிக்கை,மனசாட்சி மனிதர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம்.
7)ஒரு பிரச்சினையின் பல கோணங்கள்.சிக்கல்கள். தெளிவான சுளுவான குழந்தைதன தீர்வு முறை.
நாடென்ன,மதமென்ன,இனமென்ன,மொழியென்ன,மதமென்ன, சமூக கட்டமைப்பை தூக்கி பிடிக்கும் மத்திய தர வர்க்கம் , தன்னுடைய பிரச்சினையின் தீர்வுக்கு ,அனைத்து கோணத்தையும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவு.
அவசியம் பார்த்தே ஆக வேண்டிய உன்னத படைப்பு.
கோபால் தொடருங்கள்..ஒவ்வொரு படமாக ப் பார்த்த பிறகு தான் என்னால் பின்னூட்டம் என ச்சொல்லமுடியும்.. ஆனால் உங்கள் இடுகைகள் படம்பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றன..
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..
ம்ம்
சரின்னு ச்சின்னதா ஒரு ரவுண்ட் அடிச்சேனா.. ஒரு பவழப் பாட் கிடைச்சுச்சே
ரவிச்சந்திரன் ஒல்லிஒல்லிப்ரமீளா
நெஞ்சுக்குள் தஞ்சமென நேரிழையின் முன்னாலே
கொஞ்சியே பேசிடும் கோ
*
அது அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
எது எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக்கிடக்கும் வெல்லக் கட்டி..
https://youtu.be/N4doLtqxCVk
வள்ளி தெய்வானை என்பது படமாம்..எப்படி இருக்கும்..
என்னமோ போங்க – 24
கொஞ்சம் நடக்கும் சில நடவடிக்கைகளைப் பார்த்ததில் மனதுக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. கொழுந்துவிட்டும் எரிந்தது..அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து என்ன செய்தேன்…
அப்படியே பக்கத்தறைக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தேனா.. ஏற்கெனவே கொஞ்சம் சுமாரழகான முகம் இன்னும் கொஞ்சம் சுமாராக மாறி இருக்க ரொம்பவே கோபம்..
வந்து ஏதாவது அது இதுன்னு பாட்டுக் கிடைக்கிறதா என்று பார்த்தால் கீழே உள்ளபாட்டு தான் முதலில் கிடைத்தது..
அதற்கப்புறம் தான் அது இது ..
அந்த முதல்பாட்டு பார்த்த போது குறள் தான் நினைவுக்கு வந்தது
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
மனஸ் புண்ணாய்டுச்சுன்னா அது எங்க தெரியுமாம் ஃபேஸ்புக்ல ஸாரி ஃபேஸ்ல தெரியுமாம் வள்ளுவர் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கார்..
அப்புறம் இந்தப் பாட் முழுக்கக்கேட்ட பிறகு மறுபடி கண்ணாடியைப்பார்த்தேன்.. என்முகம் சிரித்தபடி வெகு அழகாக..
ஸோ கோபம் வந்துச்சுன்னா டைவர்ஷனா ஒண்ணை எடுத்துக்கிட்டு பண்ணிடனும் என்று ஆன்றோர்கள் சொல்வாங்க..உண்மை தாங்க..நம்பலையா.. சரி..என்னமோ போங்க..
*
ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் (அது என்ன உடை சுடிதாரும் இல்லாமல் நைட்டி போலும் இல்லாமல்) வெகு அழகாக உடற்பயிற்சி போல் நடனம் ஆடுகிறார்கள்..(புலியூர் சரோஜா டான்ஸ் போல இருந்தது) பட் பாடல் வரிகள் வெகு அழகு..
*
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி
சபையறியாமல் நடக்கும் அது
தலைமுறை கால்வரை அளக்கும்
இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசி போல் இருக்கும்
ஆசையை ப் பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது
கண்ணுக்கு த் திரைகிடையாது
அது கலந்தபின் விலகுவதேது ஏது
https://youtu.be/RBzqNmOqcvo
மாடி வீட்டு மாப்பிள்ளை படமாம் :)
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..//
சின்னா!
கவலை வேண்டாம். இந்த லிங்கில் டவுன்லோட் செய்து 'பவழமணித் தேர் ஏறி பவனி' வாருங்கள்.
http://tamiltunes.com/neram-nalla-neram.html
ooh Sorry.. pavalamani paat sidela kEtkittu irukkEn..:) Thanks vasu sir
பார்த்தேன் பார்த்தேன்
பார்த்தேன் உம்விழியில் பரிந்துரைத்த நல்லழகை
கோர்த்தேன் சரம்சரமாய்க் கொஞ்சுதமிழ் மாலையிலே
வார்த்தேன் எனதன்பை வண்ணமுடன் சித்திரமாய்
சேர்ந்தேன் உமதன்பில் சென்றவிடம் நல்ல இடம்!
புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன் :)..
//புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன்// ..
ஏன் புரியல சின்னா?
நன்னா புரியறது. உம்ம அன்பு.:)
chinnaa
meendum pm paarungo:)
ரொம்ப டயர்டா இருக்கா..தூக்கம் தூக்கமா வருதா.. என்னபண்ணலாம்
தூங்கறதுக்கு முன்னாடி பாட்டுப் போட்டுடலாமா
ஆமா சாரதாவிற்கு 70 வயசாமே உண்மையா..
*
ஒரு கோடி சுகம்வந்தது
அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மன நிறைவு நீ தந்தது..
https://youtu.be/gr_8Zt7FVIA
இது என்ன படம் மு.க.சு என்ன என்பதை பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு பாட்டு பாடுவேன் !
சின்னா!
வெகு அழகான நேர்மையான விளக்கத்துடன் பொருத்தமாக நீங்கள் போட்ட பாட்டு அட்டகாசம். 'நெஞ்சுக்கு முகமே கண்ணாடி'தான். உள்ளத்தில் கள்ளம் வைக்காமல் நெஞ்சில் உள்ளதை உள்ளபடி உணர்த்தியதற்கு நன்றி சின்னா. எதற்கு வருத்தம்? ஆபீஸில் ஏதாவது மனத்தாங்கலா? எதற்கும் வருத்தப் படாதீர்கள். வருத்தமடையச் செய்ய பலர் இருப்பார்கள். புறந்தள்ளிவிட்டுப் போங்கள்.
ஜி வணக்கம்
வணக்கம்ஜி! நலமா! ஜெமினி திரெட் எல்லாம் போயிட்டு வந்த மாதிரி தெரியுது.:)
மறந்து போன பாடல்கள்
ஒரு ராகம் தராத வீணை
https://www.youtube.com/watch?v=MMwe7MCvGww
சோலை இளங்குயிலே
https://www.youtube.com/watch?v=_XAGI62b8-0
கருவின் கரு - பதிவு 86
பவழம் ( Coral): தொடர்ச்சி
என்ன அருமையான குரல் வளம் - அந்த காலத்து ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள்
https://youtu.be/ExAzcAiIA1c
கருவின் கரு - பதிவு 87
நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)
http://i818.photobucket.com/albums/z...psgaf0yaf4.jpg
http://i818.photobucket.com/albums/z...psdorwrulz.jpg
http://i818.photobucket.com/albums/z...ps2vfxvysn.jpg
A ruby is a pink to blood-red colored gemstone, a variety of the mineral corundum(aluminium oxide). The red color is caused mainly by the presence of the elementchromium. Its name comes fromruber, Latin for red. Other varieties of gem-quality corundum are called sapphires. Ruby is considered one of the four precious stones, together with sapphire, emerald anddiamond.
Prices of rubies are primarily determined by color. The brightest and most valuable "red" called blood-red or "pigeon blood", commands a large premium over other rubies of similar quality. After color follows clarity: similar to diamonds, a clear stone will command a premium, but a ruby without any needle-likerutile inclusions may indicate that the stone has been treated. Cut and carat (weight) are also an important factor in determining the price. Ruby is the traditional birthstone for July and is always lighter red or pinkthan garnet. The world's most expensive ruby is the Sunrise Ruby.
அகஸ்தியரின் நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)
" மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் "
ஒரு நல்ல மாணிக்கத்தின் பிரகாசம் , சூரிய கதிர்களை விட அதிகமானது - அப்படிப்பட்ட பிரகாசத்தை உடைய அன்னையே வருக "
நம் எண்ணங்கள் :
1000 மாணிக்கங்கள் சேர்ந்து வந்தாலும் நம் அன்னையின் அன்பின் முன் அவைகளின் ஒளி எடுபடாது . மாணிக்கத்தின் ஒளியை மிஞ்சியவள் நம் தாய் . அகஸ்த்தியர் " ஒரு தாயின் ஒளிக்கதிரே " என்று எழுதியிருக்கவேண்டும் ..........
ராகம் மொஹனம்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்…
https://youtu.be/PVGm1x0KCRs
கருவின் கரு - பதிவு 88
நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)
https://youtu.be/QiH1TvKtU-M
https://youtu.be/YQ8BtPYapSo
கருவின் கரு - பதிவு 89
நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)
https://youtu.be/2nxpUnhv7Bs
https://youtu.be/ObIGnPyUfSU
https://youtu.be/M-fTWqOBOgw