http://i61.tinypic.com/vspa8k.jpg
Printable View
Hearty Congratulations Mr. Muththaiyan Ammu Sir for crossing 6K postings in an engrossing way of presentations on NT and MT!! Continue your good works....Kudos!
senthil
http://i1146.photobucket.com/albums/...psmqpz7m81.jpg
அன்பு நண்பர் முத்தையன்,
தங்கள் அபிமான நடிகரின் பால் தங்களுக்குள்ள ஈடுபாடு, அவருடைய புகழ் பரப்பும் பணியில் தாங்கள் சற்றும் காலம், நேரம், சிரமம் பார்க்காமல் தரும் அர்பணிப்பு நிறைந்த உழைப்பு, அதன் பின்னாலுள்ள தங்களின் திறமை இவையெல்லாம் இங்குள்ளவர்களுக்கு ஒரு உதாரணமாய் விளங்குகின்றன. இம்மய்யத்தில் தாங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இணைந்துள்ளீர்கள். ஆனால் அதற்குள் தங்களின் பங்களிப்பில் 6000 பதிவுகளுக்கு மேல் இங்கு இடம் பெற்றுள்ளன. இது சாதாரமான விஷயமல்ல. இவ்வளவு ஈடுபாட்டிற்கும் காரணம் தங்களுக்கு எம்.ஜி.ஆரின் மேல் இருக்கும் ஆழமான அபிமானமே. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட எங்கள் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் அழகிய அபூர்வமான நிழற்படங்களையும் பல நூறு பதிவுகளில் பகிர்ந்து கொண்டு எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். இதற்கும் என் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள் இரு திரிகளிலும்.
ஆதவன் ரவி
நன்றி தெரிவித்தல் தமிழ்க்கலாச்சாரமாகும். அதை நீங்கள் அருமையாக தங்கள் கவிதையில் எடுத்தியம்பியுள்ளீர்கள். இதன் மூலம் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகன் என நிரூபித்துள்ளீர்கள். தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை தங்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, முழுமையான அபிமானம் உள்ளிட்ட பல நற்குணங்கள். தங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து தங்கள் உள்ளத்துணர்வுகளைத் தயங்காமல் தங்கள் கவிதைகளில் படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
முத்தையன்
காலத்தால் அழிக்க முடியாத கலைப்படைப்பான நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல்லாக மின்னும் பாபு திரைக்காவியத்தின் நிழற்படங்களை அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். பல நிழற்படங்கள் அபூர்வமானவை. இவற்றிற்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
அதே போல அதிகபட்சமாக லைக் பட்டன் அதாவது விருப்பங்களைப் பெற்றவர்களில் தாங்கள் இரண்டாமிடத்தில் உள்ளதும் பாராட்டத்தக்கது. இதுவும் குறிப்பிடத்தக்க அங்கீகாரமே.
தொடரட்டும் தங்கள் பங்களிப்பு. சிறக்கட்டும் உங்கள் பணி.
29th AUGUST SATURDAY & 30th AUGUST SATURDAY - 3.45pm SHOW @ SATHYAM - STUDIO - 5 is ALREADY FULL HOUSE.
http://i501.photobucket.com/albums/e...psldzwhii7.png
TODAY's 3.45pm Show @ STUDIO - 5 - Very Few Tickets ( 7 ) Available . Will post the update @ 3.30pm about TODAY's Matinee !
RKS.. !
அனைவருக்கும் உளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.
28th AUGUST
29th AUGUST
30th AUGUST
FRIDAY, SATURDAY & SUNDAY - 3.45pm SHOW @ SATHYAM - STUDIO - 5 - VEERAPANDIYA KATTABOMMAN - FULL HOUSE !!!
http://i501.photobucket.com/albums/e...pso6eooz0j.png
RKS
அன்பு நண்பர் முத்தையன் அம்மு சார் ,
தாங்கள் 6000 பதிவுகள் கடந்தமைக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
தாங்கள் சிவாஜி பட பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்வதுக்கு எனது மனபூர்வமான நன்றிகள் !
உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் இரு திரியிலும் உண்டு!
நன்றி !
அன்பு நண்பர் திரு சைலேஷ் பாபு சார்,
திராவிட கலாச்சார அரசியல் வாதிகளென்று நான் குறிப்பிட்டதில் மக்கள் திலகம் இல்லை சார் !
சிவாஜி எம்ஜிஆர் இடையே தொழில் போட்டி இருந்தது! லேசான பொறாமைகூட இருந்திருக்கலாம்! ஆனால் இருவருக்கும் இடையே நல்ல உயர்ந்த
உண்மையான நட்பும் அன்பும் இருந்தது! ஜல்லிக்கட்டு பட விழாவை நான் நேரில் கண்டவன்! அப்போது எம்ஜிஆர் சிவாஜிக்கு கொடுத்த முத்த காட்சி
வீடியோ youtube இல் இப்போதும் பார்க்கலாம் ! அதில் எம்ஜிஆர் முகத்தை பாருங்கள்! கள்ளம் கபடம் இல்லாத உண்மையான குழந்தையை காண்பீர்கள்!
இப்போது உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறித்து தான் நான் கூறினேன்! கருணாநிதி அவர்களும் சிவாஜி மீது அன்புடய வர் தான்! ஆனால்
அவர் சிவாஜிக்கு அந்த காலங்களில் நன்மைகளை மட்டும் செய்தவரல்ல நிறைய கெடுதல்களையும் செய்தவர்! ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜி மேல்
உள்ள மதிப்பும் மரியாதையும் எப்படிபட்டது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!
நன்றி
Prabu and Vikram Prabu interview in Sun TV part-1.
https://www.youtube.com/watch?v=5az_CX_H07c
Prabu and Vikram Prabu interview in Sun TV part-2
https://www.youtube.com/watch?v=O8G8oQHkdHs
MUTHAIYAN AMMU MUTHANA MUTHU FOR OUR TWO THIRIS'
BABU COVERAGE EXCLLENT CATHEGERY. EVENTHOGH i AM A STRONG NT fan sixities aythirathiloruvan season most of the mgr moviies first day enjoyed with my late friend jaga strong mgr fan.
most memorable days which will not comebac,
Congrats for your 6000 plus postings pl contiue the good work.
blessings
Dear Muthayan sir
Your Visual Treat of both the Thilagam is simply fantastic. Your dedication, focus and thematic presentation is beyond comparison sir.
You are an asset to both the threads of thilagams. Both the soul of thilagams will shower their blessings to you and your family.
Rks
நெகிழ்கிறேன்.
மகிழ்கிறேன்.
திரிக்குள் நான் நுழைந்து சில
தினங்களே ஆகின்றன.
மிகச் சில பதிவுகளே என்னுடையதாயிருக்கின்றன.
ஆனாலும்..
அனைவராலும் நான் கொண்டாடப்படுகிறேன்.
வரவேற்புகள்..
பாராட்டுகள்..
பெருமைகள்..பூரிப்புகள்..
நெகிழ்கிறேன்.
மகிழ்கிறேன்.
நெஞ்சத்தில் பண்போடும்,
கண்களில் துளிர்க்கும் ஆனந்தக் கண்ணீரோடும்..
ஒருத்தர் பாக்கியில்லாமல்
எல்லோர்க்கும் நன்றி சொல்கிறேன்.
---------
என்பால் கொண்ட அக்கறையோடும், என் கவிதைகளின் மீதான மதிப்போடும் எழுதப்பட்ட
அய்யா.திருச்சி.திரு.பாஸ்கர்
அவர்களின் பதிவினைப்
படித்தேன்.
மணிமண்டபம் குறித்து அறிவித்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி சொல்லி
நானெழுதிய கவிதையைப்
படித்து விட்டு, ஆண்டவன் கொடுத்த கவியாற்றலை அரசியல்வாதிகளைப் புகழ்ந்து
வீணாக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.
அய்யா நடிகர் திலகத்திற்கு நேர்ந்த அரசியல் அவமதிப்புகள் குறித்த அவரது ஆதங்கத்தை
அவர் வார்த்தைகளில் படிக்க முடிகிறது.
என்னுடைய கவிதைகளை நான் பொய் சொல்லச் சொல்லி
வற்புறுத்துவதில்லை.
அந்தக் கவிதையின் கடைசி வரியில் "இன்றிரவு எங்கள் தலைணைகளை ஆனந்தக் கண்ணீர் நனைக்கும்" என்று
எழுதியிருந்தேன்.
மெய்யாகவே
என் தலையணை நனைந்ததால்தான்,நனைக்கும்
என்று எழுத முடிந்தது என்னால்.
ஆனந்தப்படுத்திய அந்தச் செய்தியை வாசித்தவரை ஒரு
அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை.
ஆழ்ந்த திறமையோடு அய்யா
நடிகர் திலகத்தின் அருகிருந்து
கலை செய்து சிறந்த சாதனையாளராகவும், ஒப்பற்ற
நடிகருக்கு உரிய மரியாதை
செய்யவிருக்கிற நாட்டின் தலைவியாகவும் பார்க்கிறேன்.
அது, வெறும் புகழ்ச்சியல்ல..
கவிதை காட்டும் திரைக்காட்சிகளுக்குள் நான்
அசந்து கிடப்பது நிஜம்.
எந்த நல்ல விஷயம் நடக்க
வேண்டுமென்று தவம் கிடந்தோமோ..அது நடக்கப் போவதறிந்து மகிழ்வில் திளைத்தது நிஜம்.
அந்த மகிழ்வே கவிதையானது
நிஜம்.
என் கவிதையின் சந்தோஷம்
தோற்காது என நான் நம்புவது
நிஜம்.
மாசற்ற கலைஞனுக்கு மணிமண்டபம் கட்டித் தருதல்
அரசின் கடமையாதல் போல,
நல்ல செய்தி தந்தவருக்கு
நன்றி தெரிவித்தல் எனது கடமை என்று நினைத்தது
நிஜம்.
--------
அரசியல் அவலங்களை மாற்றி,
நம் பயங்களையும்,அவநம்பிக்கைகளையும் தகர்த்து,அய்யா நடிகர் திலகம்
ஆசைப்பட்ட மாதிரி தூய அரசியல் தர ஒரு சிவாஜி படை நிச்சயம் வரும்.
அந்தக் காலம் வரும் வரை,
வரும் என்கிற நம்பிக்கை
அவசியம்.
-------
அப்புறம்..
அய்யா பாஸ்கர் அவர்களே..!
மன்னிப்பெல்லாம் எதற்கு?
விமர்சனத்திற்கு முதுகு காட்டுகிறவன்,வாழ்வின் வெற்றிக்கு முகம் காட்ட
முடியாதென நான் அறிந்திருக்கிறேன்.
தங்கள் அக்கறைக்கும்,
அன்புக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.
-------
அய்யா திரு.ராகவேந்திரா
அவர்களே..!
வணங்கிப் பணிகிறேன்..
உங்கள் ஆசியில் நனைந்த
வார்த்தைகளை.
ஒரு வியட்நாம் வீடுதான்
என்னைப் பொறுப்புள்ளவனாக்கியது.
ஒரு தெய்வமகன்தான் என்னை
தன்னம்பிக்கையுள்ளவனாக
மாற்றியது.
ஒரு திருவிளையாடல்தான்
என்னுள் இறைப் பற்று விதைத்தது.
நடிகர் திலகத்தின் மீதான லயிப்புதான் என்னை கவிஞனாக்கிற்று.
அவர்தான் நம்மைப் பிணைத்திருக்கிறார்.
அவர் புகழ் சொல்வோம்.
வெல்வோம்.
-ஆதவன் ரவி-
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...4a3796f3dfd658
image courtesy: Khanthan SB from FB
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த
படமாகவும் நடிகர் திலகம்
சிவாஜியை சிறந்த நடிகராகவும்
தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள்.
பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னை...யில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய
முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர்.
நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள
கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்
என்று சொல்லி அரசிடம் விசேஷ
அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை.
சிவாஜிக்கு அதிர்ச்சி ..பப்பிம்மாவை எப்படியும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பப்பியம்மா
ஆஜர் !!. என்ன மேஜிக் நடந்தது ?
ஆயர்பாடி கோபியர் யூனிபாமில் விமான
நிலையம் போன ராகினி , டாய்லட் அறைக்கு பத்மினியை வரச்சொல்லி இருவரும் அங்கே உடையை மாற்றி, அக்காவை நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார் . இரண்டு பேர் முகமும் ஒன்று போல் இருந்ததால் அதிகாரிகளை எளிதாக ஏமாற்ற முடிந்தது.
60 அடி நீளம் 15 அடி உயரமுள்ள திரையில்' கிஸ்தி - திரை- வரி - வட்டி'-
வசனம் 5 நிமிடம்... குளோசப்பில் சிங்கம் சிவாஜி கர்ஜனை !!
'மிஸ்டர், சிவாஜி கணேசன் ' ....
மைக்கில் அறிவிப்பு.
எறும்பு போல் சிறு உருவம் மேடை மீது
ஊறிச் சென்றது.. சற்று முன் நெருப்பை உமிழும் கண்களுடன், கொடுவாள் மீசையுடன் ,கர்ஜனை செய்தது இவரா !! கரவொலியில், அதிர்ந்த அரங்கம் அடங்க ஐந்து நிமிடம் ஆயிற்று !
இடி விழுந்தாலும் அசராத நடிக மன்னன்
இரண்டு நொடி, தன் வசமிழந்தார்..
'சிவாஜி ! சிவாஜி !!'- என்று பத்மினி உலுக்கி சுயநினைவுக்கு வரவழைத்தார்.
என்னே தருணம் ! எத்தனை பேருக்கு
இது வாய்க்கும் !! தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தவப் புதல்வன் வாழ்க்கையில் இப்படி எத்தனை தருணங்களோ !!!
See More
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...2f&oe=566E3F13
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...9d&oe=56679E6E
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் முகநூலில் இருந்து
இரு மலர்கள்.
இந்த திரைக்காவியத்தைக்
குறித்து சிந்தித்தாலே..
மனம்,இந்தக் காட்சியை
நோக்கி ஆவலாய் நகர்கிறது.
இதயம் முழுதும் இனிப்புத்
தடவிய பழைய நாள்
காதலியை,
காலம் வீசச் செய்த புயலில்,
தன் காதல் காணாமல் போகப்
போவதை உணர்ந்திராத
காதலியை,
"காத்திருங்கள்..விரைவில்
வருவேன்" என்று உறுதி
சொல்லிப் பிரிந்த காதலியை,
காத்திருந்த காதலனின்
கண்களுக்குள் அமிலம்
ஊற்றுகிற காரியமாய்..
"மறந்து விடுங்கள் என்னை"
என்று மடல் எழுதிய
காதலியை,
தனது அன்பான பெண்
குழந்தையின் ஆசிரியையாய்
ஆண்டுகள் பல கழித்துச்
சந்திக்கும் போது, அடக்கி
வைத்த தன் கோபத் தீயால்
அவள் உள்ளஞ் சுடும் காட்சி.
அவள் கடிதத்துக்காகக்
காத்திருந்து ஏமாந்த கதையை
ஏக்கத்துடன் சொல்லும்
போதே,
ஏமாற்றம் தந்த வன்மத்தில்
முகம் மாறி, உணர்வு
கொந்தளித்து, "ஆமா..உன்னைப்
பாக்க வந்தானே..அந்த
பணக்கார வாலிபன்..என்ன
ஆனான்?"-என்று சிரித்து,
அழுது..
சிரித்தழுது..
அழுது சிரித்து..
என்னவென்று சொல்ல..?
இழக்கக் கூடாத நாயகனை
இழந்துவிட்டு,
செய்வதறியாது,
பேசுவதற்கு
வார்த்தையில்லாமல், கை
பிசைந்து நிற்கிறோம்..
அந்தக் காட்சியில்
பத்மினியம்மா போல!
கல்விக்கண் திறந்த காமராஜர் படத்தை நடிகர் ஒருவர் வீட்டில் மாட்டி வைத்துள்ளார்.
நாடார் சமுதாய இளைஞர் ஆர்வ மிகுதியால் அந்த நடிகரிடம் அய்யா நீங்க நாடார் சமுதாயமா ?????
என கேட்டிருக்கார்.
நடிகர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
..
.
.
..
.
.
.
.
..
.
நான் தேவர் சமுதயத்தை சேர்ந்தவர் என்று.
காமராஜரை கல்விக்கண் திறந்த தெய்வமாக தான் அணைத்து சாதி மக்களும் பாக்குறாங்க தம்பி. காமராஜர் போட்டோ வைத்திருப்பவர்கள் எல்லோரும் நாடார் சமுதாயமாக தான் இருப்பார்கள் என்ற உன் எண்ணத்தை மாற்றிக்கொள் ,காமராஜர் இந்திய பாரத தேசத்திற்கே சொந்தம் என்றாராம்.
காமராஜர் நினைவால் தங்கள் குழந்தை களுக்கு காமராஜர் என பெயர் சூட்டியதில் பல சமுதாய மக்களும் உண்டு.
சாதி மத வேறுபாடு இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்து தமிழ்நாட்டின் தலைஎழுத்தையே மாற்றிபோட்டு காட்டிய தலைவர் காமராஜர் அவர்.
நீங்கள் காமராஜர் வாழ்க்கையை நன்றாக படியுங்கள்.அவரை போல வாழ்ந்து காட்டுங்கள் என்றாரம்.
அந்த இளைஞன் தெளிவான சிந்தனையுடன் வெளியேறினான்.. அந்த நடிகர் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" தான் .
சிவாஜி கணேசன் காமராஜர் படத்தை மாட்டிவைத்திருந்த இடம் அவருடைய பூஜை அறை என்பது கூடுதல் சிறப்பு தகவல். காமராஜர் இறந்த பின் சிவாஜி கணேசன் எந்த பொது மேடையில் பேசினாலும் " என்னை படைத்த இறைவன் அருளும் என் தலைவன் காமராஜர் அருளும் " என்று சொல்லியே நிறைவு செய்வார் .......
http://i501.photobucket.com/albums/e...pszeaqj6fw.jpg
COURTESY - FACEBOOK