https://s33.postimg.cc/4brm1zxwf/1527524629401.jpg
Printable View
மாற்றுத் திரியில் சிவா என்பவர் அடங்கவே மாட்டேன் என்கிறார்.
எப்பவுமே நாம்பளாக வம்புக்கு போறது இல்லை.
நானும் வேண்டாம் என்றுதான் பார்த்தேன். தொடர்ந்து சிவா என்பவர் நம்பளை வம்புக்கு இழுப்பதால் நாம்பளும் வேற வழி இல்லை.
உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கின்றது.
புரட்சித் தலைவரே வசூல் சக்கரவர்த்தி என்பது சத்தியம்.
போன மார்ச் மாசம் 5-ம் தேதி (2018-ம் வருசம்) சென்னையிலே நடந்த விழாவிலே புரட்சித் தலைவர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வெச்சார். அப்போது அவர் பேசிய பேச்சு மார்ச் 6-ம் தேதி தினத்தந்தி பேப்பரில் வந்தது.
ரஜினிகாந்த் பேசும்போது சினிமாவில் நடிக்கும்போதே புரட்சித் தலைவர் ராஜா வாக இருந்தார். அரசியல்ல மட்டும் அவர் ராஜா இல்லை. சினிமாவிலும் புரட்சித் தலைவர் ராஜா என்று பேசினார். அந்த பேப்பர் செய்தி.
http://i66.tinypic.com/jt0xw0.jpg
http://i65.tinypic.com/fblvdx.jpg
சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அவரை விட பெரிய மார்க்கெட்டை பிடிச்சு பணம் சம்பாதிச்சார் புரட்சித் தலைவர். சிவாஜி கணேசனைவிட பெரிய படங்களில் நடிச்சு புரட்சித் தலைவர் சாதனை படைத்தார்
என்று 2018-ம் வருசம் மார்ச் 5ம் தேதி சென்னையில் நடந்த எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இந்த பேச்சு மார்ச் 6 ம் தேதிய இந்து பேப்பரில் வந்த செய்தி.
http://i67.tinypic.com/259inwo.jpg
கருணாநிதிய 13 வருசம் முதல்வர் நாற்காலி பக்கம் திரும்பி பார்க்க முடியாதபடி செய்தவர் எம்ஜிஆர் என்றும் இந்த விழாவில் ரஜினி காந்த் பேசி இருக்கின்றார். அந்த பேச்சு விவரங்கள் வரியும் மேல்கண்ட செய்தியில் உள்ளது.
சுகராம் அய்யா,
மாற்றுத் திரியில் சிவா என்பவர் நேரடியாக நம்ப படங்களை தாக்குகின்றபோது நாம்பளும் நேரடியாகவே தாக்கலாம். எதுக்கு ஒளிவு மறவு. நன்றாக சொல்லுங்கள்.
சென்னை ஆல்பட்டில் சிவாஜி கணேசன் நடிச்ச ராஜா படம் டிஜிட்ட்டலில் போன வெள்ளிக்கிழமை வெளியாகியது. எதிர் முகாமில் நம்பளுக்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்ன தகவல். படத்துக்கு கூட்டம் குறைவாகவே உள்ளது.
எந்த அளவுக்கு என்றால் போன ஞாயித்துக்கிழமை 6.30 மணி காட்சி கூட தியட்டர் நிறையவில்லை. ஹவுஸ்புல் ஆகவில்லை. கேட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் கூட்டம் வரவில்லை என்பார்கள்.
போன ஞாயித்துக்கிழமை மாலைக் காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. இது உண்மை.
ஹவுஸ்புல் ஆனது உண்மை என்றால் சிவாஜி கணேசன் ரசிகர்கள் அவர்கள் அம்மா மீது சத்தியம் செய்யட்டும். அப்படி சத்தியம் செஞ்சால் அடப்பாவிங்களா என்று அவர்களைப் பத்தி நாம்பளும் ஒரு முடிவுக்கு வரலாம்.
இப்ப மட்டும் இல்லை. ராஜா படம் முதல் வெளியீட்டில் வந்தபோதும் 100 நாள் இழுத்துப் பிடித்து ஓட்டினார்கள். கூட்டம் வந்து ஓட்டவில்லை. 100 வது நாள் கடைசி என்று விளம்பரம் வந்தது. 100 நாளுக்காக காத்திருந்தார்கள். அதிலயும் 100 வது நாள் அன்று தேவி பாரடசில் இரவு காட்சி கூட்டம் வராமல் அந்த காட்சி ரத்து செஞ்சு இந்திப் படம் ஓட்டினார்கள்.
அதிலயும் சென்னையில் 2 தியட்டர்தான் இழுத்து வெச்சு ஓட்டினார்கள். ஆனால், சென்னையில் 3 தியட்டரில் 100 நாள் என்று கதை விடுவார்கள்.
ஆனால், நாடோடி மன்னன் படம் போன மாசம் இதே ஆல்பட்டில் 35 நாள் ஓடி சாதனை படைத்தது.
ராஜா படம் இப்போது ஆல்பட்டில் ஒரு காட்சி கூட ஹவுஸ் புல் இல்லை.
என் தாய் மீது ஆணையாக அல்லா மீது ஆணையாக ராஜா படம் போன ஞாயித்துக்கிழமை மாலைக் காட்சி கூட ஹவுஸ்புல் இல்லை.
ஞாயிறு மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்றால் சிவாஜி கணேசன் ரசிகர் யாராச்சும் ஒருத்தர் அவர்கள் அம்மா மீது சத்தியம் செய்யட்டும். செய்யவில்லை என்றால் ராஜா படம் ஹவுஸ்புல் இல்லை என்று ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். தியட்டர் வாசலில் 10 பேர் கூடி நிற்கும் போட்டா வைப் போட்டு விட்டு அலப்பரை என்று சொல்பவர்கள் ஹவுஸ் புல் போர்டு மாட்டினால் அத படம் எடுத்துப் போடமல் இருப்பார்களா.
ராஜா டிஜிட்டல் தோல்வியால் விரக்தியில் உளறுகிறார்கள். ராஜா படம் ஆல்பட் தியட்டரில் நாளை வியாழக்கிழமையோடு கடைசி என்று முதலிலே செய்தி வந்தது. ஆனால் கூட்டம் இல்லாததால் படம் இன்றே ஓடுகிறதா என்று தெரியவில்லை. நண்பர்கள் விவாரம் தெரிவிக்கவும்.
நாடோடி மன்னன் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் போன ஏப்ரல் மாசம் வெளியாகி 35 நாள் ஓடி சாதனனை செய்தது. அதன் விவரங்கள் பதிவுகள்.. எல்லாரின் பார்வைக்கும்..
[IMG]http://i67.tinypic தினமலர்
.com/33ygmkw.jpg[/IMG]
http://i67.tinypic.com/8ze5av.jpg
http://i67.tinypic.com/11sp5qs.jpg
சென்னை ஆல்பட் தியட்டரில் நாடோடி மன்னன் படம் 25 நாள் கடந்தபோது தினமலர் பேப்பரில் வெளியான செய்தி.
http://i67.tinypic.com/33ygmkw.jpg
சினிமா ஸ்டிரைக் நடந்தபோது நாடோடி மன்னன் வெளியானதால் படம் ஆல்பட் தியட்டரில் நன்றாக ஓடினது என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்லுவார்கள்.
அப்படியே ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். அப்பவும் கூட சிவாஜி கணேசன் படங்கள் ஓடவில்லையே.
ரிக்சாக்காரன் படத்தை டிஜிட்டல் செஞ்ச ராமு என்பவர்தான் ராஜா படத்தையும் டிஜிட்டல் செய்திருக்கின்றார். ராஜா படம் டிஜிட்டலில் வசூலில் ஏமாற்றிவிட்டது என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். இனிமேல் சிவாஜி கணேசன் படங்கள் டிஜிட்டலில் வெளிவருமா என்பது சந்தேகம். அப்படியே இவர்களாக சொந்தமாக ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு டிஜிட்டல் செய்து வந்தாலும் ஏசி தியட்டர் கிடைப்பது சந்தேகம். ராஜா படம் கொடுத்த அடி அப்பிடியாம்.
https://s33.postimg.cc/clumuzdgv/IMG_9023.jpg
காலஞ்சென்ற
தமிழ் திரைப்பட இயக்குநர்
திரு முக்தா சீனிவாசன்
மகள் திருமணத்தில்
மணமகளை வாழ்த்தும்
மக்கள் திலகம்.
https://s33.postimg.cc/l5e0ssyov/240...9694d8f27d.jpg[url=https://postimages.org/]
Courtesy- MR.S V JAYABABU
மூத்த ரசிகர் மக்கள் திலகம் அபிமானி கோவை துரைசாமி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
திரு மஸ்தான் சாஹிப் ... நீங்கள் தரும் நெற்றியடி நன்று, நாம்தான் ஏற்கனவே சொன்னபடி மாற்று முகாம் புலம்பல் திலகங்கள் சில நபர்கள் அங்காலைப்புகள் புரிந்த விதம் உள்ளனரே, நாம் யாரையும் நமது மனித புனிதர் மக்கள் திலகம் அவர்களோடு ஓப்பிடவோ, அடுத்த நிலையிலும் வைத்து கூறவோ தேவையில்லை...
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
வாழ்ந்த போது தலைவன்
மறைந்த பின் தெய்வம்
#மக்கள் #திலகம் #எம்ஜிஆரின் #உயர்ந்த #குணம்.
கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுத, தலைவன் பட இயக்குநர் பி.ஏ.தாமஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடிப்பில் ஜோசப் தளியத் இயக்கத்தில் யேசுநாதர் படம் தயாரிக்க பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.
அதற்கு காரணம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பொது நலன் கருதிய உயர்ந்த குணம். அந்தப் படத்தின் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பின்னர் நின்று போன அந்த படத்தின் ஸ்டில் தான் இது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் கூறிய காரணம்
"எதிர்காலத்தில் ஏசுநாதர் என்றால் அது என் முகம் தான் என்பது போல அடுத்த தலைமுறையிடம் ஒரு பிம்பம் உருவாகி விடும். அதனால் வேண்டாம் "
என்று கூறி படத்தை கை விட்டதாக இந்த படத்தில் யேசுநாதர் மேக்கப்பை எம் ஜி ஆருக்கு போட்ட டைரக்டர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இது போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட உயர்ந்த மனம் யாருக்கு வரும்? வாழ்க அவர் புகழ்...👌
http://i64.tinypic.com/2095cep.jpg
துயர செய்தி.
--------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அதிதீவிர பக்தர் கோவை திரு.துரைசாமி, பொறியாளர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிக்க துயருற்றேன்
அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
திரு.துரைசாமி அவர்களின் மறைவு , தமிழகமெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், மன்றங்களுக்கும் பேரிழப்பு .தமிழகம் மட்டுமின்றி , அண்டை மாநில நிகழ்ச்சிகளுக்கும் சென்று கலந்து கொண்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்தவர் .தனது இல்லத்திலேயே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவ சிலையை சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைத்ததோடு, எண்ணற்ற எம்.ஜி.ஆர். பக்தர்களை நிகழ்ச்சிக்கு வரவழைத்து சிறப்பு செய்தவர் .
அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பிலும்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .