https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...1b&oe=5C8B2800
This is a web version. Not enough for printing.
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...1b&oe=5C8B2800
This is a web version. Not enough for printing.
http://oi68.tinypic.com/206iuj4.jpghttp://oi68.tinypic.com/2gwrrk7.jpg
நன்றி V C G திருப்பதி
வணக்கம்!
1953 ம் ஆண்டளவில் இலங்கை யாழ் மூளாய் என்ற இடத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு
நடிகர் திலகம் அவர்கள் மிகப்பெரிய உதவி செய்ததையும் அதனை எனது நண்பருடன் பகிர்ந்துகொண்டதையும்
அதன் காரணமாக அன்நண்பர் மூளாய் சென்று மேலும்சில விபரங்கள் பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என்றவரை
முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சி...
எனது நண்பர் முளாய் வைத்தியசாலை சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளை
சந்தித்து உரையாடியதில் கிடைத்த விபரங்கள்,
நிதி திரட்டலுக்கான நிகழ்ச்சிகள் கொழும்பில் நடைபெற்றது
அதன்பின்னர் யாழ்நகர் வந்து மூளாய் வைத்தியசாலைக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கொடைவள்ளலின் கரங்களினாலேயே
கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கொடைவள்ளலின் கரங்களால் மாங்கன்று
ஒன்றும் நாட்டப்பட்டதையும் கூறி தற்பொழுது பெருமரமாக வளர்ந்து
நிற்கும் மாமரத்தையும் காட்டியுள்ளார்கள்
நண்பர் அதற்கான புகைப்படங்கள் பற்றி கேட்டுள்ளார்
அதற்கு அவர்கள் புகைப்படங்கள் இருந்ததாகவும்
ஆனால் தற்சமயம் இங்கே இல்லை என்பதை கவலையுடன் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் காரியாலயத்தில் மாட்டி வைத்திருக்கும் படத்தை எடுத்து
அதற்கு போடப்பட்டிருந்த பிfரேமை கழட்டி அதனை புகைப்படம் எடுக்க
உதவி செய்து கொடுத்திருக்கிறார்கள்.
ஏனைய புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில்
நண்பரை அழைத்து அவற்றை புகைப்படம் எடுப்பதற்கு தருவதாக கூறியுள்ளார்கள்
அதன்பின் நண்பர் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டார்.
http://oi63.tinypic.com/2r5gc2h.jpg
http://oi65.tinypic.com/syktmx.jpg
http://oi68.tinypic.com/2zf8u82.jpg
நன்றி கிருஸ்ணா கிருஸ்ணமூர்த்தி
இது நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பகுதி19 ஐ தொடக்கியபொழுது 3 யூன் 2017 ல் எழுதியது.Quote:
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19
திரைஉலகின் சக்கரவர்த்தி ,அரசியலில் கிங் மேக்கர் தலைவர்
காமராஜ் அவர்களின் தொண்டன், நடிப்புலக மாமேதை ,வசூல் சக்கரவர்த்தி,
மனிதாபிமானம் மிக்க தலைவன், நேர்மையான பண்பாளர் , திரைஉலக சக்கரவர்த்தி,
சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பரப்பும்,
நடிகர் திலகம் சிவாஜி பாகம் 19 ஐ தொடக்கிவைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்;
பாகம் 19ஐ ஆரம்பித்துவைக்க என்னை அழைத்த திரு முரளி சார் அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி.
வழி மொழிந்த உறவுகள்
நண்பர் கோபால்
நண்பர் செந்தில்வேல்
திரு ராகவேந்திரா சார்
நண்பர் ஹரிஸ்
திரு ஆதவன் ரவி
அனைவருக்கும் நன்றி.
நடிகர் திலகம்; நடிப்பு சக்கரவர்த்தி;கலைக்குரிசில்நடிப்பலக மாமேதை
இதுபொன்ற பல பட்டங்கள் அவரது சிறந்த நடிப்பினால் கிடைக்கப்பெற்றவையாகும்.
அவைஅனைத்தும் நிலைபெற்று அவரை அழைக்கவும் அவரைபற்றி எழுதும் பொழுது
குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.
.நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சிறந்தவர் மட்டுமல்ல பல நல்லவிடயங்களை செய்தவர்,
நாட்டிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களின்போது அரசுக்கு உதவியாக பல நன்கொடைகளை அளித்தவர்;
பலரது கஷ்டங்களின்போது தேவை அறிந்து உதவியவர்,
அரசியலில் நேர்மையாக வாழ்ந்தவர், பதவிமோகம் இல்லாதவர்,
இப்படியான சிறந்த பண்புகள் கொடுத்த கொடைகள் என்பன
பொதுமக்களின் காதுகளுக்கு சென்றடையவில்லை .
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றன
வசூல் சாதனை படைத்துள்ளன,
அவரைபற்றி எழுதப்படும்பொழுது
அவரது நடிப்பாற்றலை மட்டும் முன்நிறுத்தி எழுதுவதன்மூலம்
இவை எல்லாம் மறக்கப்பட்டுவிடுகின்றன, மக்களுக்கு இவர்பற்றிய
முழுமையான விபரமான தகவல்கள் சென்றடைவதில்லை.
எனவே,
அன்புமிகு நண்பர்களே இத்திரியில் அவரது நடிப்பாற்றலை எழுதுவதோடு
மட்டுமல்லாது, இதுவரை நடிகர் திலகம் பற்றி அறிந்த அறிந்திராத வெளிவராத
அவரது உதவிகள் கொடைகள் சாதனைகள்என்பனவற்றை
எடுத்துவந்து பதிவிட்டு செவேலியர் சிவாஜி கணேசன் புகழ்
உலகறிய உதவிட அன்புடன் வேண்டுகிறேன்
நன்றி
அன்புடன்
சிவா.
அண்மையில் தி ஹிண்டு பத்திரிகை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90 வது
பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கிறது.
அதுபற்றிய விபரங்களை நண்பர்கள் முகநூலில் பதிவிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு நண்பர் எழுதியிருந்தார் (அன்நண்பரின் பதிவை பிரதி எடுக்க தவறிவிட்டேன்)
வழக்கத்துக்கு மாறாக இம்மகிறை நடிகர் திலகத்தின் விழாவில்
அவரது நடிப்புக்களை சிலாகிப்பதை குறைத்து அவர் செய்த உதவிகள்,
கொடைகள் என்பனவற்றை முதன்மைபடுத்தியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
எனக்கு மிகவும் மடடற்ற மகிழ்ச்சி என்னவெனில் நான் குறிப்பிட்டவிடயம்
பல முகம் தெரியாத நண்பர்களால் கவனத்தில் எடுக்கப்பட்டு செயல்படத்த தொடங்கிருக்கிறார்கள்
அந்த முகம் தெரியாநண்பர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.
இது எல்லா நிகழ்ச்சிகளிலும் தொடரவேண்டும் என்பது என் அவா.
தொடர்ந்து நடக்கும் என நம்புகிறேன்.
http://oi68.tinypic.com/1x4eb.jpg
நன்றி V C G thiruppathy
http://oi67.tinypic.com/2mhvl9t.jpg
திரையிசை திலகம் - மெல்லிசை மன்னர்-வாணிஸ்ரீ- ஷர்மிளா தாகூர்- நடிகர் திலகம் .
நன்றி suhumar shan
http://oi65.tinypic.com/bgvb0n.jpg
Rare photo of NT.thanks to NTFans
நன்றி Vasudevan .S
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
இனிதே நடந்தேறியது இன்றைய பதின்மூன்றாம் வார அன்னதான நிகழ்ச்சி.
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக திரு.பி.கணேஷ் அவர்கள் நடத்தி வரும் 52 வார தொடர் அன்னதானத்தின் பதின்மூன்றாம் வார அன்னதான நிகழ்ச்சியின் உபயதாரர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திருமதி. ஷர்மிளா முருகன் அவர்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்பித்தவர் திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் அவர்க...ள். இவர், கவியரசர் கண்ணதாசன் அவர்களின் சகோதரர் திரு. ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் மருமகளாவார். அவருக்கு இதயவேந்தன் சிவாஜி மன்றத்து செயல்வீரர் திரு. சங்கர் அவர்களின் துணைவியார் திருமதி. ரமணி சங்கர் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
உபயதாரர் திருமதி.ஷர்மிளா முருகன் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சிக்கு வர இயலாததால், அவருக்கான நினைவுக்குறிப்பேடு, 2019 வருட நடிகர்திலகத்தின் காலண்டர் மற்றும் நடிகர்திலகத்தைப் பற்றிய கையடக்க நூல் ஆகியவற்றை அவர் சார்பாக கலந்து கொண்ட திரு. முரளி சீனிவாஸ் அவர்களிடம் திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னைவாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் திரு.ML.கான், திரு. RS. சிவா, திரு. கேசவன், திரு. காமராஜ், திரு. சுகுமார், திரு. KS. நரசிம்மன், திரு. ஜெயகுமார், திரு. பாண்டியன், திரு. பாஸ்கர், திரு. சங்கர், திரு. சிவசங்கரன், திரு. வி.ராகவேந்திரன், திரு. நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு திடீரென வருகை தந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு, அனைவரையும் வாழ்த்தி பாராட்டிச் சென்றார் நம் நடிகர்திலகத்தின் புதல்வர் திரு. தளபதி ராம்குமார் அவர்கள்.
பொதுமக்களின் ஆதரவுடன் மகிழ்ச்சியுடன் வாரவாரம் சிறப்புடன் நிகழ்ந்து வரும் நிகழ்ச்சியின் களத்திலிருந்து மனமகிழ்வுடன் உங்கள்...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi66.tinypic.com/2q38wme.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
வணக்கம்,
தமிழகத்தில், முதல் முறையாக, பெருந்தலைவர் காமராஜர் அவருடைய சீடராக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நடிகர்திலகம் சிவாஜி இருவருக்கும் ஒரே பீடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், புறம்போக்கு இடத்திலோ, அரசு இடத்திலோ இச்சிலைகள் அமையவில்லை. கிராமத்தின் முக்கிய சாலை சந்திப்பில், திரு.நடராஜன் என்ற தீவிர நடிகர்திலகம் ரசிகருடைய சொந்த பட்டா இடத்தில் இச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
... கடலூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இராமாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளின் திறப்பு விழா வரும் ஜனவரி 19 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
விழா சிறக்க, அணிவகுப்போம்....... அலை அலையாய்....
அன்புடன்
K . சந்திரசேகரன் .
http://oi68.tinypic.com/opwx95.jpghttp://oi63.tinypic.com/2ibl2ci.jpghttp://oi65.tinypic.com/2w1skjs.jpghttp://oi68.tinypic.com/jpu1ee.jpg
நன்றி சிவாஜி பேரவை
http://oi63.tinypic.com/154wti0.jpghttp://oi67.tinypic.com/2upsbbm.jpg
நன்றி V C G திருப்பதி