-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/10/20* அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் தங்கியிருந்த தாய் வார இதழின் உதவி ஆசிரியர் திரு.கல்யாண்குமார் நல்ல செயல்களை, இயல்பான செயல்களை எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து தெரிவித்தார் .ராமாவரம் தோட்டத்தில் இருந்து ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக அழைக்கப்படுகிறார் . மறுமுனையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசுகிறார் .கடந்த வாரம் தாய் வார இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வெளியாகி இருந்தது தெரியுமா என்று கேட்கிறார் ..இல்லை ஐயா, நான் உதவி ஆசிரியர் , விளம்பர துறையைத்தான் கேட்க வேண்டும் .ஆசிரியர் வந்த பிறகு உங்களிடம் பேச சொல்லட்டுமா என்று சொல்ல பதிலுக்கு எம்.ஜி.ஆர். பரவாயில்லை .உங்களிடம் எந்த தகவலும் இருக்காது .இருந்தாலும் ஆசிரியர் வந்த உடன் போனில் பேச சொல்லுங்கள் என்று பொறுமையாக சொன்னாராம் எம்.ஜி.ஆர். யாரிடம் எதை கேட்பது ,யாரிடம் எந்த விவரங்கள் பற்றி கேட்டால் தெரியும் என்கிற யுக்தியை அறிந்து இருந்தவர்*
எப்படி வலம்புரி ஜான் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணின் தன்மையை, நிலைமையை அக்கறையோடு விசாரித்து ,நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் ,என்று அந்த பெண்ணுக்கே பேசுவது எம்.ஜி.ஆர்.தான் என்று தெரியாமல் வியப்பு அடைய செய்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்காக கணிசமாக தொகையை கொடுத்து அனுப்பினாரோ ,அப்படிப்பட்ட ஒரு தாயுள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . அவருடைய தாயுள்ளத்திற்கு பல்வேறு உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் . 1966ல் காவல்காரன் படத்தில் நடிக்க நடிகர் சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்தது .படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரிடம் தன்* தாயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற விஷயத்தை தெரிவித்தால் ,எங்கே தன்னை பார்க்க மகன் ஓடிவந்து விடுவானோ என்று தாயார் தெரிவிக்காமலே இருந்துவிட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார் சிவகுமார் .இந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர். தன மனதில் நிலைநிறுத்தி கொள்கிறார் .1967 ஜனவரி 12ல் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரை சென்று பார்க்க* பலமுறை சிவகுமார் முயன்று முடியாமல் போனது .இந்த முயற்சி முடியாமலே போய்விடுமோ என்று நினைத்த நேரத்தில் ஒரு நாள் சிவகுமாரை கவனித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்*அவரை பார்வையாளராக சென்று கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துவிட்டு வர சொன்னார்.அவரை சிரமப்படுத்தாதீர்கள் என்றும்* சொன்னார் .சற்று தூரத்தில் இருந்த சிவகுமாரை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு உள்ளே வரும்படி சைகை செய்கிறார் .சிவகுமார் அருகில் வந்ததும் ,தன்னுடைய உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் உன் தாயார் எப்படி இருக்கிறார் . ஊருக்கு சென்று அவரை பார்த்தாயா என்று மிகவும் லேசான குரலில் கேட்டாராம் .எப்போதும் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். மற்றவர்களின் தாயார்களின் உடல்நிலை, பற்றியும் அக்கறையோடு விசாரிப்பது, அவர்களை மதிப்பது என்கிற குணம் எம்.ஜி.ஆரிடம் உண்டு .
திரு.கா. லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உள்ளத்தில் தான் முதல்வராகாமல் வேறு யாரையாவது முதல்வராக நியமிக்கலாமா என்ற யோசனை இருந்தது .ஆனால் காலத்தின் கட்டாயமாக அவரே முதல்வராக இருந்து ஆளக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அப்படி இருந்தார் .ரஷ்யாவிற்கு புறப்பட்டு போன எம்.ஜி.ஆர். அவர்கள் அங்கிருந்து சிலமுக்கிய நபர்களுக்கு கடிதம் எழுதுகிறார் .* தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட* சோதனை, கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில் ,தனக்கு ஆதரவாக, உதவியாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் தன்னை முன்னிலை படுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதுகிறார் .முதல் கடிதம் மாணவர் அமைப்பாளராக இருந்த திரு.வெள்ளைசாமிக்கு ரஷ்யாவில் இருந்து*வருகிறது .தமிழக மக்கள் போற்றும் மக்கள் தலைவர் எப்படிஎளிமையாக நடந்து கொண்டார்** பாருங்கள் .*அதே போல அனைவருக்கும் எழுதுகிறார் . கோவைத்தம்பி, அரங்கநாயகம் ,திருப்பூர் மணிமாறன், நாஞ்சில் மனோகரன் , கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம்,அழகு திருநாவுக்கரசு ,,தஞ்சை சாமிநாதன், ஏ.சி.சண்முகம் ,ஜெகத்ரட்சகன்* என்று ஏகப்பட்ட நபர்கள் ..அன்புள்ள தம்பிக்கு , நீங்கள் நலமா ,நான் இங்கு நலமாக இருக்கிறேன் .ரஷ்யாவில் கடும்குளிராக இருக்கிறது .நீங்களெல்லாம் ஜாக்கிரதையாக இருந்து கட்சி பணியில் ஈடுபடுங்கள் .உங்கள் உடலை வருத்தி கொள்ளாதீர்கள் என்று பொன்மொழிகளாக எழுதினார்* வெள்ளைச்சாமி என்பவரை ஒழித்துவிடலாம் என்று பலர் கணக்கு போட்டார்கள் . ஆனால் முடியவில்லை .சட்ட கல்லூரி மாணவர் தலைவராக வெள்ளைச்சாமி ,எம்.ஜி.ஆர். அவர்களை தி.மு.க.வில் இருந்து நீக்கிய சமயம் சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் நடத்தி , காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று* அடி, உதை வாங்கியவர் என்கிற நினைவு எத்தனை வருடம் ஆனாலும் எம்.ஜி.ஆர். மறக்கமாட்டார் .என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், கருணாநிதிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்கு நான்,பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா நம்பி, கே.பி.ராஜு, கருப்பசாமி போன்றவர்கள் அடக்குமுறையால் அவதிப்பட்ட நேரத்தில் மாணவர் தலைவராக இருந்த என்னை, வெள்ளைச்சாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்று அண்ணே ,கருப்பு கொடி காட்டிய எங்களை ரவுண்டு கட்டி ,காவல்துறையினர் லத்தியால் அடித்து காயப்படுத்தினர் என்றார் .நான்,வயதில் அவர்களைவிட இளையவன் .எங்களை பார்த்ததும், விவரங்களை சொன்னதும்* எம்.ஜி.ஆர். பதறிவிட்டார் .என்னை பார்த்து, உன்னையும் அடித்தார்களா என்று கேட்டார் .அதாவது 30 காவலர்கள், ஒரு டி.எஸ்.பி.,எஸ்.ஐ .,ஆய்வாளர் அங்கு*எங்களை ரவுண்ட் அப் செய்தனர் .* காவல்துறையினருக்கு மாவட்ட அளவில் நாங்கள் எல்லாம் ஓரளவு தெரிந்து இருந்தவர்கள் இருப்பினும் ,தகாத வார்த்தைகளால், வெளியில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினர் .எனக்கு லேசான அடிதான் . ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.ராஜு, கருப்பசாமி, சிங்கன்னா போன்றவர்களுக்கு கடுமையான அடி ,பலத்த காயங்கள் ஏற்பட்டன .அவர்களெல்லாம் பார்வைக்கு நல்ல உடற்கட்டோடு இருப்பார்கள் .இதையெல்லாம் பரிவோடு கேட்ட புரட்சித்தலைவர் எனக்கு லேசான அடி, மற்றவர்களுக்கு பலத்த காயங்கள் என்று சொன்னதுமே, என்னுடைய செயல்கள், ஈடுபாடுகள் ,லேசான அடி இதையெல்லாம் மனதில் வைத்து அவர் ஒரு கணக்கு போட்டார் .* என் மீது மிகுந்த அன்பு காட்டினார் .காரணம் நான் உண்மை விவரத்தை சொன்னேன் என்ற நம்பிக்கையில் .இனிமேல் பொறுமை காத்திருக்க முடியாது .கவலைப்படாதீர்கள் . நானே,இனி நேரடியாக செயலில் இறங்கி வேலை செய்யப்போகிறேன் அவர்களை நான் கவனித்து கொள்கிறேன் ..உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று என் தோளை தட்டினார் .தைரியமாக இரு என்றார் .(இந்த வார்த்தைகளை சொல்லும்போது திரு.லியாகத் அலிகான் தொண்டை அடைத்தது .உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் .சில வினாடிகள் பேச முடியவில்லை. கொஞ்சம் தண்ணீர் அருந்தி, தன்னை ஆசுவாசப்படுத்திய பின் பேசினார் ) அதே மாதிரி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எங்களை கைவிடவில்லை .ஒருபக்க பலமாக இருந்தார் .
1977ல்எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்ததும்* முதன் முதலாக என்னை பால்வள துறை இயக்குனராக* நியமித்தார் .அப்போது பால்வள துறை அமைச்சராக இருந்தவர் குழந்தைவேலு .கோவை மருதாச்சலம் அவர்களை தலைவராகவும் ,சின்னராஜு,எம்.எல்.ஏ.,, மேட்டுப்பாளையம் பழனிசாமி , காட்டூர் கிருஷ்ணசாமி ,அண்ணா நம்பி, பேரூர் சண்முகசுந்தரம் ,இப்படி கட்சிக்காக பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் இயக்குனர்களாக நியமித்தார் .அதாவது அவர்கள் பக்கம் நியாயம் இருக்கவேண்டும், கட்சிக்காக உழைத்தவர்களாக* இருக்க வேண்டும் ,ரவுடித்தனம் செய்து இருக்க கூடாது இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார் .எம்.ஜி.ஆர்.அவர்களின் குணாதிசயங்கள் நினைத்து இப்போது கணக்கிட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும்*அர்த்தம் இல்லாமல் அவர் செய்ததில்லை .அதே சமயத்தில் அவரை யாராலும் கணிக்க முடியாத வல்லவர் .ரஷ்யாவில் தான் இருந்தாலும் ஒய்வு நேரத்தில்*எங்களிடத்தில் அன்பை பரிமாறி கொண்டு, நீங்கள் எல்லாம் என் இதயத்தில் இடம் பெற்றுள்ளீர்கள் என்று சொல்லி, அனைவரையும் தட்டி கொடுத்து* வளர்த்து ஆளாக்கியவர் . அவர் ஒருமுறை முதல்வரான பின்* வெளிநாட்டுக்கு சென்று வந்தபோது, நீல நிற கோட்டும் ,கால் சட்டையும் அணிந்து வந்தார் ..அப்போது அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் உள்ளே* சுமார் பத்தாயிரம் பேர் திரண்டு இருந்தனர் .இப்போது போல பாதுகாப்பு அரண் எல்லாம் அப்போது கிடையாது .பார்வையாளர் கட்டணம் ரூ.5/- இருக்கும் .எங்கு பார்த்தாலும் மனித தலைகள் .காவல்துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர் . 1979 என்று நினைக்கிறேன் .எனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் சென்றுவிட்டார் .அப்போது நான் மணப்பெண்ணாகிய என் மனைவி* சர்புன்னிசாவை* சந்திக்க முடியவில்லை . ஏனென்றால் ,மணப்பெண்ணை மேடையில் உட்கார வைக்க கூடாது என்று என் தந்தையார் சொன்னதால் ,மேற்கொண்டு தலைவரையும் சந்திக்க முடியவில்லை .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் வெளிநாடு சென்று திரும்பியபோது ஒரு பெரிய மாலையுடன் சென்று வரவேற்றேன் .அந்த மகத்தான கூட்டத்தில் சைகை மூலம் என்னை அருகில் அழைத்து ,நாலைந்து நாட்களுக்குள் உன் மனைவியை அழைத்து வந்து வீட்டில் என்னை பார் என்றார்*என்னை அவருடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்தார் .அவருடைய நினைவாற்றலை எண்ணி அப்போது வியந்தேன் .* இப்போது கூட எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது . அதாவது அவருக்கு நான் இன்னும் நன்றாக கடமை ஆற்றியிருக்க வேண்டும் . இன்னும் சிறப்பாக பணியாற்றி இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வருகிறது .அந்த அளவிற்கு எல்லோரையுமே சகோதரர்களாக நேசிக்க கூடிய, தொண்டர்களை கூட தம்பிகளாகத்தான் நேசித்தாரே ஒழிய, அண்ணாவை போல அன்புள்ள தம்பிக்கு என்று எழுதுவாரே அதுபோல ,தம்பிகளாக, தோழர்களாக, சகோதரர்களாக தவிர ஆண்டான், அடிமை என்ற சிஸ்டம் அவரிடம் கிடையாது ..இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
1977ல் நாகப்பட்டினத்தில் புயல்,மழை, வெள்ளம் பாதிப்பு .அப்போது சிவகுமார், தன் தாயாருடன் சென்னையில் இருக்கிறார் .அவர் முதல்வர் புயல்/வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10,000/-க்கான காசோலையை முதல்வர் எம்.ஜி.ஆரிடம்*தருவதற்கு முற்படுகிறார் .சிவகுமார் தன் தாயாரிடம் விஷயத்தை சொல்ல, உடனே 10 நிமிடங்களில் தாயாராகிய அவரின் தாயாரோடு கோட்டைக்கு மனமகிழ்வோடு வருகிறார் .சிவகுமார் தாயாரோடு வருகை புரிந்த விஷயம் அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். வாயில்படிவரை விரைந்து வந்து தன் முதுகை காட்டாமல் சிவகுமாரின் தாயாரை வரவேற்கும் பொருட்டு பின்பக்கமாகவே*படிகள் ஏறிஅவருடன்* வந்தார் உள்ளே அறைக்கு வந்ததும் அமரவைத்து ,உபசரித்து பேசி கொண்டிருந்தாராம் .அப்படி தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த தாய்க்கு மரியாதை கொடுத்து, மதிப்பளித்து நடந்து கொண்டாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்
---------------------------------------------------------------------------------
1.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
2.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*
3.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
5.திருநிறைச்செல்வி மங்கையற்கரசி - இதயவீணை*
*.
-
#காலத்தால் #அழிக்கமுடியாத திரைக்காவியம் தான் #திருடாதே...
பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு திருடனின் கதை...ஆனால் படத்திற்கு என்ன தலைப்பு வெச்சுருக்கார் பாத்தீங்களா !!!
திருடாதே திரைக்காவியம்...
படம் வெளிவந்த சில தினங்களில்...ரசிகர்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது...என்பதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ரகசியமாக ஒரு சினிமா தியேட்டருக்கு புரட்சித்தலைவர், நம்பியார் மற்றும் இயக்குனர் நீலகண்டன் ஆகியோர் காணச்சென்றனர்...
கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் - நம்பியார் விறுவிறுப்பான சண்டைக்காட்சில்..."எம்ஜிஆர் அடிக்கிற அடியில் நம்பியாரின் பொய்முகம் (முகமூடி) கிழிந்து தனது உண்மை உருவம் தெரிந்துவிடும்.
அதனால் எம்ஜிஆரிடமிருந்து தப்பிப்பதற்காக நம்பியார் ஒரு பாதாள அறைக்குச் சென்று ஒளிந்துகொள்வார். அவரைப் பிடிப்பதற்காக எம்ஜிஆர் பாதாளஅறைக்குள் மெதுவாகச் செல்வார்..
தங்களின் தலைவரை நம்பியார் தாக்கிவிடக்கூடாதே என்று பயந்த ரசிகர்கள்..."#இறங்காதே ! #இறங்காதே...#கீழே #நம்பியார் #ஒளிஞ்சிட்ருக்கான்" என்று பதறியபடிக் கூக்குரலிட்டனர்...
இக்காட்சியைக் கண்ட இம்மூவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டனர்...#எம்ஜிஆருக்கு #கண்ணீர் #பீறிட்டுக்கொண்டு ##வந்துவிட்டது...
இந்த அளவு ரசிகர்கள் இதயங்களில் எம்ஜிஆர் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்...
மக்களின் இதயத்தில் மட்டுமா என்ன?
அவர்களின் முகத்திலும் கூடத்தான்...!!!
என்ன புரியலையா ???
"அவர் தான் #மக்கள் #திலகமாச்சே".........bsm...
-
நடிப்பில் பிடித்தவர்கள் பலர்.சரித்திரப்படங்களில் சிவாஜிகணேசன், 80–90 களில் கமல், ரஜினி, எல்லாப்படங்களிலும் நாகேஷ், இப்படி…
ஆனால் ஒரு மனிதராக அடுத்தவர் சாப்பிடக் கஷ்டப்படக்கூடாது என்று மனதார நினைத்து முதலமைச்சர் ஆனபோதும் மறவாமல் அதற்கான திட்டங்களை செயல்படுத்திய MGR பல விஷயங்களில் உயர்ந்து நிற்கிறார். சிகரெட் குடி போன்ற தீய பழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை திரைப்படங்களில் ஹீரோ அதெல்லாம் செய்ததாக காணவைத்ததில்லை… சிறுவர்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து பார்த்தபோதெல்லாம் நன்றாகப்படிக்க சொல்லி வலியுறுத்தி, நடித்த படங்களில் பாடல்வரிகளை கவனமாக நல்ல சிந்தனைகளை தூண்டும்படி செய்தது சிறப்பு. எனக்கு அவரை அதனால் ஒரு தனிநபராகப் பிடிக்கும்.
சமீபத்தில் அஜித். பரவலான பின்தொடர்பு இருந்தாலும் நிறைய நல்ல விஷயங்களை வெளிச்சம் தொடர்ந்துவிடாமல் செய்துவருகிறார். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களாலும் பாராட்டபடுகிறார். தேவையில்லாத அரசியல் செய்வதில்லை.
பாலசந்தர் பாரதிராஜா மணிரத்னம் பாலா ஷங்கர் போன்ற நடிப்பை வளர்த்துவிடும் பலரின் படங்களில் நடிக்காமலேயே சொந்த உழைப்பால் முன்னேறி இருக்கிறார். பலதரப்பட்ட திறமைகள் கொண்டவராக இருக்கிறார்.
நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்பிக்கை தருகிறார்.
லாரன்ஸ் பற்றியும் நிறையப்பேர் எழுதுகிறார்கள். நம்பிக்கை தருகிறார்.
நடிகர் என்ற பட்டம் தாண்டி மனிதர் என்ற பட்டம் பெறும்போது அவர்கள் உயர்கிறார்கள்......Quora Q&A...
-
நிஜத்திலும் படத்திலும் சிறுமிகளுக்கு ஆதரவளித்த எம் ஜி ஆர்
"ரிக்க்ஷாக்காரன் " படத்தில் முதல் பாடலாக எம்ஜிஆர் ஒரு அனாதைக் குழந்தையைப் பார்த்து அதன் சிரிப்பை ரசித்து அதன் வாழ்க்கையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தை நினைத்து கொதித்துப்போய் அதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கருத்தில் பாடும் பாடல் குழந்தையின் அழகுச் சிரிப்பையும் அக்கிரமக் காரர்களின் ஆணவச் சிரிப்பையும் ஒப்பிட்டு எழுதப்பட்திருக்கும்.
அனாதைக் குழந்தையிடம் ‘’நீ இன்று உன் தாயை இழந்து அனாதையாக இருக்கின்றாய், அதற்குக் காரணமானவர்கள் நீதியின் கண்களை மூடி விட்டதாக நினைத்து சிரித்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கயவர்களின் ஆர்ப்பாட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடும். அவர்களை நீதிதேவன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன், என பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அல்லது பாதிக்கப்பட்ட எவருக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீதியின் கரங்கள் உங்களை காப்பாற்றும் என்று ஆறுதல் அளிப்பதாக பாடப்பட்ட பாடல் ஆகும்.
ரிக்க்ஷாக்காரன் படத்தில் வரும் இப்பாட்டு பெரியவர்கள் மத்தியில் படாமல் ஏன் ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு பாட வேண்டும் என்று கேட்டால் இப் படத்தில் பெரியவர்களுக்காக ஒரு கருத்துப் பாடல் பிற்பகுதியில் எம் ஜி ஆர் மாறுவேடம் போட்டு உடுக்கை, பம்பை போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் ஆடுகின்ற ஒரு குழுப் பாடலாக இடம்பெறுகிறது. எனவே இந்தப் பாட்டு சிறுவர்களுக்கு ஒரு ஆபத்து வரும்போது அவர்கள் சோர்ந்து போய் விடக்கூடாது என்ற கருத்தில் தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் தம்மை அனாதை என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்கும் ஆதரவளிக்க அன்பு நிறைந்த மக்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காக ஒரு அனாதை சிறுமியிடம் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
கெட்டவர்களிடம் நீதியும் நேர்மையும் எழுத்தளவில் ஏட்டளவில் இருக்கின்றது; நடைமுறை வாழ்க்கையில் இல்லை.
ஆனால் அதற்காக அவர்களுடைய வாழ்க்கை அப்படியே இருந்து விடாது. அவர்களுக்கு நாம் அஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் அடுத்த சரணமாக
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
என்று பாடல் நிறைவடையும் .
அப்போது எம் ஜி ஆரின் முகத்தில் சிவப்பு ஒளி பாய்ச்சப்பட்டு அவரது அறச்சீற்றம் தெரியும்படி காட்சி அமைந்திருக்கும். அவர் முகத்தில் சிவப்பு ஒளியை காண்பித்து அவர் கோபமாக அநீதியைக் கண்டு பொங்குவாய் எனக் காட்டப்படும் அதேவேளையில் அந்தப் பாடல் வரிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அங்கு வந்து நான் உங்களின் துன்பங்களைப் போக்குவேன் என்று கண்ண பரமாத்மா கலியுகத்தில் நான் அவதரிப்பேன் என்று கூறியதைப் போல உணர்த்தப்படும். ரசிகர்கள் அவ்வாறு உணர்ந்து நிம்மதி அடைவார்கள் .
‘’எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே ஆபத்பாந்தவனாக நான் வந்து உங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன். உங்களுக்கு தீமை செய்தவர்களை கட்டோடு ஒழிப்பேன்,’’ என்ற கருத்தை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை மனதில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியே இந்த பாடலாகும். அந்தப் பாடலின் கருத்து அந்த சிறுமிக்கு அல்லது அந்த வயதில் உள்ள சிறுவர்களுக்கு தெளிவாக புரியாவிட்டாலும் அதன் மையக் கருத்து ஆழமாக அவர்கள் மனதில் பதியும்.
எம்ஜிஆர் ஒரு இரட்சகர்; மீட்பர்; ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் அதை துடைக்கும் முதல் கரம் எம்ஜிஆரின் திருக்கரமே என்ற எண்ணத்தை நம்பிக்கையை இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர் வரை ஊட்டுவதில் ஐயமில்லை...
-
1972 ல் தமிழகத்தில் அதிக வசூலை ஏற்படுத்திய காவியம். 6 மாதத்தில் 1கோடியை வசூலாக பெற்று 40 லட்சத்தை அரசுக்கு வரியாக செலுத்திய காவியம்.........."நல்லநேரம்"...
+++++++++++++++++++++++++++++++++
56 திரையரங்கில் 50 நாட்களை கடந்த ஒரே காவியம். 21 திரையரங்கில்
10 வாரங்களை கடந்த காவியம்.
சென்னை 4, மதுரை, சேலம்
கோவை, திருச்சி, நெல்லை
திண்டுக்கல், ஈரோடு, பாண்டி
தஞ்சை, குடந்தை, வேலூர், கரூர்
மாயூரம், ப.கோட்டை, இலங்கை (3)
++++++++++++++++++++++++++++
பெங்களுர் 3 அரங்கு 56 நாட்கள், மைசூர்,மங்களுர்,சித்தூர் 50 நாட்கள்.
இலங்கையில் 5 அரங்கில் 50 நாட்கள்
செல்லமஹால் 100நாட்கள்,
வின்ஸர் 85 நாட்கள்.
1972 ல் சென்னையில் 4 அரங்கில்
100 நாள் ஒடிய ஒரே காவியம். சித்ரா, மகாராணி 116 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
+++++++++++++++++++++++++++++
2 ம் வெளியீட்டில்
50 நாட்கள் ஒடிய ஊர்கள்...
விருத்தாசலம்,தின்டிவனம்,குடியாத்தம்
திருப்பத்தூர், துறையூர், கோவில்பட்டி
தென்காசி,தேனீ, மன்னார்குடி, காரைக்கால், மேட்டுப்பாளையம்,
செங்கல்பட்டு.....
+++++++++++++++++++++++
100 நாட்கள்....
சென்னை
சித்ரா, மகாராணி,மேகலா,ராம்
மதுரை அலங்கார்.
திருச்சி ஜூபிடர்
சேலம் ஒரியண்டல்
கோவை ராயல் (சிவசக்தி)
நெல்லை சென்ட்ரல் (அசோக்)
இலங்கை செல்லமஹால்
+++++++++++++++++++++++++
மதுரையில் இரண்டு அரங்கு வெளியிடப்பட்டு சாதனை.
அலங்கார் 105 நாள்
மூவிலேண்ட் 35 நாள்
கோவையில் இரண்டு
தொடர்ச்சி அரங்குகள்
ராயல் 86 நாள்
சிவசக்தி 21 நாள்
நெல்லை இரண்டு தொடர்ச்சி
சென்ட்ரல் 84 நாள்
அசோக் 21 நாள்
++++++++++++++++++++++++++
இன்று வரை நல்லநேரம் திரைப்படம் மகத்தான தொடர் வெளியீடுகளை சந்தித்து வருகிறது.....
எங்கள் மக்கள் திலகம் ஒருவரே...
வசூலின் நிரந்தர சக்கரவர்த்தி ஆவார்..........ur...
-
திமுகவில் இருந்தும்
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப் படுவதாக
பொதுக்குழுவைகூட்டி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டார்கள்
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டு வந்ததார் அதை
திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக
அறிவித்தார்கள்
எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கப் பட்டதுகுறித்து பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி கேட்டார்கள்
அண்ணாவின் இதயக்கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் தூர தூக்கி எறியவேண்டியதாயிற்று
என்றார்
[பின் விளைவுகளை அறியாமல்]
அன்றைய கோவை மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் இளைஞர் ஒருவர் எம்ஜிஆரை கட்சியில்இருந்து நீக்கியதற்க்காக தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது.
எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும்
தமிழகம் முழுவதும் மோதிக்கொண்டார்கள் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்தது கருணாநிதி அரசு
அண்ணா வளர்த்த கட்சியில் சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. கருணாநிதியின் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும் என்று
அறிக்கை வெளியிட்டார் mgr
துரோகம் தொடரும்...vr...
-
#புரட்சி_தலைவர்
#மக்கள்_திலகம்
மன்னாதி மன்னன்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு
#நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_வியாழக்கிழமை
#காலை_வணக்கம்...
புரட்சி தலைவரின் காலத்தில்
புகழ் பெற்ற தமிழ் புலமை பற்று கொண்டவர்கள் அதிகம் அதில் அரசியல் ரீதியாக #சி_என்_அண்ணாதுரை
#கலைஞர்_மு_கருணாநிதி போன்றவர்
தமிழ் பேச்சால் தமிழக மக்களை கட்டி போட்டனர் என்றால் அது மிகையாகாது
அது போல #புரட்சி_தலைவர்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
அவர்களும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்கு பேசினாலும் தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்
அவர் தமிழுக்கு ஆற்றிய பல விஷயங்களில் சிலவற்றை இங்கு பதிவிடுகிறேன்...
1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!
‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.
இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.
புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.
கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டது தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
தமிழறிஞர்
டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!
தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.
உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.
அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது.
தேவநேயப்பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
அது போலவே தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் பிள்ளைகள் படிக்க மருத்துவ கல்லூரியில் இரண்டு இடங்கள் ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்..
‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!
அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!
சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
இப்போது இருக்கும் தலைமுறை நடிகர்கள் பலர் பாடி லாங்க்வேஜ் , ஸ்டைல் மானரிசம் தங்களுக்கே உரிய பாணியில் பண்ணுவதற்கு கொஞ்சம் கூட தெரிவதில்லை ... ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அருமையான மேனரிசங்களை செய்து அசத்தியவர் நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவரைப் பற்றி சொல்லத் தெரிய வேண்டியதில்லை. இப்போது இருக்கும் புதிய நடிகர்கள் படங்கள் ஓடினால் தான் ஹீரோ. ஆனால் நம்முடைய புரட்சித்தலைவர் என்றும் எப்போதும் ஆல் டைம் எவர்கிரீன் மாஸ் ஹீரோ. இன்னும் பல தலைமுறைகளை தாண்டினாலும் எங்கள் உயிரிலும் மேலான அன்பு புரட்சித் தலைவா தாங்கள் தான் என்றுமே நிஜமான ஹீரோ.
புரட்சித் தலைவருக்கு முன்பும் அவரைப் போல் எவரும் இல்லை ... புரட்சித் தலைவருக்கு பின்பும் இனி எப்போதும் அவரைப் போல் எவருமே இல்லை ....
தலைவர் என்றாலே நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !
பொன் போல் மின்னும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கடந்து வந்த 48 ஆண்டுகள் ..ஒரு சிறிய கண்ணோட்டம் .
1972-1987
17.10. 1972ல் புரட்சித்தலைவரால் துவங்கப்பட்ட அண்ணா திமுக இயக்கத்தில் 100 சதவீத லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்து கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தீவிரமாக பணியாற்றி கொண்டு வந்தார் . 1972- 1978 வரை அவர் நடித்த 17 படங்கள் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது .
அதே நேரத்தில் 1973/1974 ல் நடந்த தேர்தல் களத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டது .
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இந்திய அரசியலில் ஹீரோ ஆனார் .
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் எம்ஜிஆர் முதல்வராக உயர்ந்தார் . அகில உலகமே எம்ஜிஆரின் செல்வாக்கை கண்டு வியந்தது .
1977- 1987 எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி
அதிமுகவில் எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கும் கட்சியில் நல்ல பொறுப்புகளும் பிறகு ஆட்சியிலும்
நல்ல பதவிகள் கிடைத்தது .உண்மையான ரசிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது ,உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலருக்கும் சட்ட மன்ற /
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது தேர்தலில் போட்டியிட்டார்கள் ..பலரும் வெற்றி வாகை சூட்டினார்கள்.சிலர் அமைச்சர்களாக பதவி ஏற்றார்கள் மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள் ..
.
15 ஆண்டுகள் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த பெருமைகள் ஏராளம் . ஏராளம் .
1987-2020
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பிறகு அதிமுக இயக்கம் பல சோதனைகள் சந்தித்தது .ஜெயலலிதாவின் தலைமை இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது .1991/2001/ 2011/ 2016 ல் நடந்த 4 தேர்தல்களில் இவருடைய தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றிகளை கண்டது .
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் / விசுவாசிகள் / நல்ல தலைவர்கள் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது வருத்தமான செய்தி .
இருந்தாலும் கடந்த 33 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் மூலம் எம்ஜிஆர் புகழிற்கு மென்மேலும் புகழ் கிடைத்துள்ளது .
1. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாரத ரத்னா
2. எம்ஜிஆர் நூற்றாண்டு - எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
3. எம்ஜிஆர் - ஸ்டாம்ப்
4. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
5. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
6. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு தூண்
7. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்
8. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
9. டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்
இன்னும் பட்டியல் தொடரும்......
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இயக்கம் , இரட்டை இலைச்சின்னம் , கொடி மூன்றும் கடந்த 48 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வலம் வருகிறது . எம்ஜிஆர் பெயரையும் , உருவத்தையும் மறந்துவிட்ட இன்றைய அதிமுக கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் நல்ல பாடம் கிடைக்கும் என்பது உறுதி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு 1972 முதல் 2020 இன்று வரை வெற்றிமேல் வெற்றி சந்தித்து வருகிறோம் .
இனி வரும் காலத்திலும் வெற்றிகளை சிந்திப்போம் .
எம்ஜிஆர் நம்முடன் வாழ்ந்தார் வாழ்கிறார் .வாழ்வார்.......vr...
-
"மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ?" தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப நாம் அடக்கமாக இருக்கிறோம். ஆனால் மாற்று அணியில் நம்முடைய வலுவான ஆதாரத்தை கண்டு இவ்வளவு நாட்கள் ஊரை ஏமாற்றி திரிந்தோம். இன்று நம்மை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்களே என்ற வெறுப்பில் இனி நாம் பொய் சாதனையை சொன்னால் உடனே வெளிச்சம் போட்டு உண்மையை வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்ற ஆத்திரத்தில் தலைவரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களுடைய தோல்வி இதன்மூலம் தெளிவாகிறது. மாற்று அணியை சேர்ந்த ஒருவர் 1958 ம் ஆண்டில் மிகை நடிகர்
கணேசனுக்கு 8 படம் வந்ததாம். அந்த எட்டில் ஒன்றைத்தவிர 7 படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். யாருக்கும் உண்மை ஞாபகம் இருக்காது என்று நினைத்து ஒருவர் உளறியதை பத்திரிகையில் செய்தியாகப் போட்டால் அது உண்மையாகி விடுமா? "சாரங்கதாரா" "காத்தவராயன்" "அன்னையின் ஆணை" போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். எந்த ஊரில் என்று தெரியவில்லை..
"பொம்மை கல்யாணம்" 50 நாட்கள் ஓடியதாம். அதுவும் எந்த ஊரில் ஓடியது என்று தெரியவில்லை. தங்களிடம் உள்ள புழுகு மூட்டையை அசிங்கம் பாராமல் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த படங்கள் எல்லாம் நிறைய ஊர்களில் திரையை சந்திக்கவே இல்லை என்பதே உண்மைநிலை. "சாரங்கதாரா" "பொம்மை கல்யாணம்" "காத்தவராயன்" போன்ற படங்கள் 'b' சென்டரில் ஒருவாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் தியேட்டரை காலி செய்த படங்கள்.
அதே காலகட்டத்தில் சிங்கத்தின் வாரிசாக வெளிவந்த ஒரு படம் கிளப்பிய புழுதியில் அத்தனை படங்களும் மக்களின் கண்களுக்கே தெரியாமல் போனதில் வியப்பில்லை.. அந்த படம்தான் கவிஞர் பாடிய 'நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்' என்று பாடும் போது திரையில் "நாடோடி மன்னனை" காண்பித்து அது போல் ஒரு படம் வரவில்லை என்று சுட்டிகாட்டி எழுதியிருப்பார் கவிஞர்.
இந்த எட்டு .....குட்டிகளும் சிதறி, பதறி ஓடியது யாரை பார்த்து என்றால். சிங்க குட்டியை பார்த்து. அந்த சிங்கம்தான் "நாடோடி மன்னன்".
இந்த எட்டு படங்களும் ஓடிய ஒரு சில 100 நாட்களை ஒரே படம்
அடித்து சாப்பிட்டது என்றால் அதுதான் சிங்கத்தின் வீரியம். அதிலும் ஒன்றிரண்டு மண்டுகள் "உத்தம புத்திரனை" பார்த்து எம்ஜிஆர் "நாடோடி மன்னனை" எடுத்தாராம். என்ன சிரிப்பு வருகிறதா? அப்படியென்றால் "உத்தம புத்திரன்" 10 திரையரங்குக்கு மேலே அல்லவா 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். பரீட்சையில் ஒரு பேப்பரை காப்பியடித்த மாணவன் 100 மார்க் வாங்குவானாம். பாராமல் எழுதியவன் பெயிலாகி விடுவானாம். கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? மிகை நடிகரின் கைபுள்ளைங்களுக்கு.
"உத்தம புத்திரனை" வடக்கயிறு கட்டி 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டுவதற்குள் படாதபாடு பட்டனர்.
"நாடோடி மன்னன்" ஓடியதோ 13 திரையரங்குகள். நினைத்து பார்க்க முடியுமா புல்லுருவிகளுக்கு. அதன்பின்பும் "நாடோடி மன்னனி"ன் ஓட்டத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. ஒன்றை மட்டும் அடித்து சொல்லலாம். உலகத்திலேயே இன்று வரை திரையிட்டதில் "நாடோடி மன்னன்தா"ன் அதிக நாட்கள் ஓடிய படம் என்று.
நான் தமிழ் மொழியை மட்டும் சொல்லவில்லை. எல்லா மொழிகளில் திரையிட்ட எல்லா படங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதை மறுத்து சொல்லி ஆதாரம் காட்ட முடியுமா? அந்த ஆண்டின் வெளியான எட்டு படங்களின் வசூலை கூட்டினாலும் அது "நாடோடி மன்னனு"க்கு இணையாகுமா?. இது போன்ற தலைவரின் வெற்றியை சகிக்க முடியாதவர்கள் தாங்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ளாமல் கண்டபடி பேசுவது அநாகரீகமான செயல்.
நாங்களும் அதைப்போல் இறங்கினால் நீங்கள் தாங்குவீர்களா?. தலைவரின் ரசிகர்களை கொதிப்படைய செய்யாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்பு வெளிவந்து வெள்ளி விழா ஓடிய "தியாகமா"வது "இதயக்கனியின்" வசூலை தொட முடிந்ததா? இல்லையே. இதோ அதற்கான பத்திரிகை ஆதாரங்கள்.
இவ்வளவுக்கும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடாத படம், எப்படி "தியாகத்து"க்கு கொள்ளி வைத்த கதையை பாருங்கள். 1978 ல் வெளியான "தியாகம்" 75 நாட்களில் சென்னையில் பெற்ற வசூல் ரூ1478301.75 . ஆனால் அதே 75 நாட்களில் "இதயக்கனி" பெற்ற வசூல் ரூ 1589243.90. இவ்வளவு வசூல் பெற்றும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடவில்லை. ஆனால் தியாகத்தை வெள்ளிவிழா ஓட்டி முடித்தனர்.
சென்னை மட்டுமல்ல நெல்லையிலும் இதே கதைதான். மதுரையில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபனை"யும் 74 ல் வெளியான "உரிமைக்குரலை"யும் வெல்ல முடியவில்லை. இத்தனை வருடம் கழித்தும் "இதயக்கனி"யையும் வெல்ல முடியவில்லை. நெல்லை அவர்களுக்கு தீராத தொல்லை தலைவர் அபிமானிகளுக்கு இன்பத்தின் எல்லை. நெல்லையில்
"தியாகம்" பெற்ற வசூல் 258000 தான். ஆனால் 75 ல் வெளியான "பல்லாண்டு வாழ்க" பெற்ற வசூல் 260000 "இதயக்கனி" பெற்ற வசூல் 288000 "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்ற வசூல் 315000. எல்லாத்துக்கும் மேலே "உரிமைக்குரல்". "தியாகத்தி"ன் வசூலும் அவர்கள் வசூல் பேக்டரியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவுக்கும் 73 ல் வெளியான படங்களின் பணமதிப்பு 78 ல் 150 சதமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் "தியாகம்" பெற்ற வசூல் 674000 . ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்றதோ 685000. "உரிமைக்குரல்" பெற்றது 701000 . கோவையில் "தியாகம்" பெற்றதோ 643000 ஆனால் "உரிமைக்குரலோ" பெற்றது 850000 . சூரியன் அருகில் செல்வது ஆபத்தானது. தள்ளி நின்று தரிசித்து விட்டு போங்கள் மிகையின் கைபுள்ளைங்களே.
காலம் கடந்தும் கணேசனுக்கு மோகம். வசூல் சக்கரவர்த்தியுடன் மோத இன்னெரு சக்கரவர்த்தி இங்கே கிடையாது. சாதா (குடி) மகனால் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் புல்லர்களே. சாதனைக்கென்று பிறந்த புரட்சி நடிகரிடம் தோற்று புறமுதுகு காட்டுவதே மிகை நடிகனின் மாமூல் வேலை என்பதை புரிந்து கொண்டு வாயை அடக்குங்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்..........ksr...
-
மேலும் மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 117 படங்களில் 100 படங்களுக்கு குறையாமல் மறுவெளியீடு கண்டு வருகிறது.. சில படங்கள் பிரிண்ட் இல்லாமல் வராமலிருக்கிறது.. ஆனால் 300 படங்களில் நடித்துள்ள கணேசன் படத்தில் 25 வேண்டுமானால் மறுவெளியீடு கண்டிருக்கிறது.. மற்றவை? உதாரணமாக வெள்ளிவிழா ஒட்டிய தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்கள் மறுவெளியீடு கண்டதுண்டா? ...Shnm...
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 13/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று .* ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து பல்வேறு விஷயங்களை நெகிழ்வோடு பேசியிருந்தார் .வாழ்க்கையில் ஒரு மனிதன் ,வறுமைப்பட்ட வாழ்க்கையை ,ஒரு பெரிய படிப்பில்லாத* வாழ்க்கையை, ஜாதி,பலமில்லாத வாழ்க்கையில் இருந்து அவர் மகோன்னதமான இவ்வளவு பெரிய இடத்தை பெற முடிந்தது என்றால் அவரிடம் இருந்த அன்பு, பாசம், நேசம், கருணை, இரக்கம் ஆகியவைதான் .ஒரு வற்றாத ஜீவநதியாக இருந்து , தான் பார்க்கிற மனிதர்களுக்கு எல்லாம் எதையாவது கொடுத்தாக வேண்டும் என்றும், சிலருக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கொண்ட உள்ளம்* , பிறர் மீது அக்கறை ,பிறர் மீது அன்பு, பாசம் காட்டுகின்ற பண்பு ஆகிய தத்துவங்களை* கொண்டு ஒரு மகத்தான இடத்தை அடைந்தார் என்று சொல்லி கொண்டே போகலாம் .அவருடைய ஒரு பாடலை கேட்டாலோ, புத்தகத்தில் உள்ள ஒரு வரியை படித்தாலோ ,நமக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய மாபெரும் தலைவர் என்று ஐ.பி.எஸ். படித்த பல்வேறு மொழிகள் அறிந்த திலகவதி அவர்கள் நெகிழ்ந்து சொன்னார்கள் .தன்னால் பேசமுடியவில்லையே என்பதற்காக எந்தெந்த வசனங்களை சொன்னால்தமிழில்* உச்சரிக்க முடியாதோ அந்த வார்த்தைகள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சித்து ,தன்னுடைய படங்களில் நடித்து காட்டினார் .
கண்ணின் மணி போல கணீரென ஒலிக்கும் அந்த தமிழுக்காகவே ஆசைப்பட்டவர்கள்,அந்த தமிழை கேட்பதற்காகவே பிரியப்பட்டவர்கள் , ஏன் நாடோடி மன்னன் படத்தில் புரட்சிக்காரன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் ,நாங்கள் கொள்ளை அடிப்போம் நல்ல உள்ளங்களை , தீயிடுவோம் தீமைகளுக்கு என்ற வசனங்களை மனப்பாடமாக சொன்னார் காவல்துறை அதிகாரியான திலகவதி அவர்கள் .அரண்மனையில் இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது உங்கள் பிரச்னை .இங்கே காலில் குத்திய முள்ளை பாதியை உடைத்தெறிந்து விட்டு ,மானத்தை மறைப்பதற்காக ஏதாவது ஒரு ஆடை இருந்தால் போதும் என்று எண்ணிய மக்கள் பிரச்னை எங்கே என்கிற அருமையான வசனங்களை குறிப்பிட்டு பேசினார் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதர் நம் நாட்டில் பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்துவிட்டதால் அவர் அருமை*நமக்கு தெரியவில்லை .உண்மையில் வேறு ஒரு நாட்டில் ,வேறு ஒரு மண்ணில் அவர் அவதரித்து இருந்தால் அவரை கொண்டாடி இருப்பார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மா .
எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புத்தகத்தை படித்தோ, அல்லது யாரையாவது படிக்க சொல்லி கேட்டோ அறிந்து கொள்வது என்கிற பழக்கம் எப்படி உருவானது .ஒரு பத்திரிகையில் வரும் செய்தியை எப்படி அறிந்து கொள்வார் .
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் புத்தகங்கள் படி த்தாரா இல்லையா என்பதை அவருடைய* தத்துவங்கள் பற்றி அறிந்து தெரிந்து கொள்ளலாம் .முன்பு அவர் காங்கிரஸ் தொண்டராக இருந்த கால கட்டத்தில் ,கதர் ஆடையணிந்து, ருத்திராட்ச மாலை அணிந்து வாழ்ந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூல்களை படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது . குறிப்பாக பணத்தோட்டம் நூலில் எழுதியபடி வடக்கு வாழ்கிறது .தெற்கு* தேய்கிறது ,வட நாட்டிலே மிக பெரிய பணக்காரர்கள்தான் நன்றாக சுக போகத்துடன் வாழ முடிகிறது .* தென்னாட்டில் இருக்கும் மக்களுக்கு ,குறிப்பாக ஏழை மக்களுக்கு வசதிகள்* வாய்ப்புகள் குறைவு .நிறைவான வாழ்க்கை இல்லைஎன்கிற கருத்துக்களை படித்த பின்னர் பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்று கொள்ள முடிவு செய்கிறார் .*இதுதான் முதல் தொடக்கப்புள்ளி ..ஒருமுறை இதயவீணை மணியன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லத்திற்கு சென்றபோது அவரது கீழ் தளத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு அழைத்து சென்று நூல்கள் படிக்கும் இடத்தை காட்டினார் . அதை பார்த்த மணியன் வியப்புடன் எம்.ஜி.ஆரிடம் இவ்வளவு நூல்களை வைத்திருக்கிறீர்கள்**எல்லாவற்றையும் படிக்க நேரம் இருக்கிறதா என்று கேட்க ,சட்டம் குறித்த நூல்கள் தவிர்த்து அனைத்து நூல்களையும் படித்து முடித்துவிட்டேன் .என்றார் எம்.ஜி.ஆர்.*அதே போல ம.பொ .சிவஞானம் அவர்களை அதே நூலகத்திற்கு அழைத்து சென்று காட்டி ,இங்குள்ள சட்டம் குறித்த நூல்கள் தவிர ,அனைத்து நூல்களையும் படித்து இருக்கிறேன் என்று சொன்னதும் ம .பொ .சி.உண்மையில் மிரண்டு விட்டார் .நாம் இவரை ஒரு சாதாரண நடிகர் என்று எண்ணினோம் .இந்த அளவு படிப்பறிவில் கெட்டிக்காரராக இருக்கிறாரே என வியந்தார் .இலங்கைவாழ் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த கால கட்டத்தில்*இலங்கையில், யாழ்ப்பாணம் நூலகத்தில் உள்ள நூல்களை எரித்துவிட்டு நூலகத்தையே நாசமாக்கி விட்டார்கள் சிங்களர்கள்* இந்த தகவலை விடுதலை புலி வீரர்கள் தலைவர் பிரபாகரன் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் தெரிவிக்க படுகிறது .உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் எதற்கு இங்கு இத்தனை தேவையில்லாத நூல்கள் இருப்பு இருக்க வேண்டும் என்று எண்ணி, அவற்றை மூட்டை கட்டி ,மத்திய அரசின் உதவியோடு ரூ.15 லட்சம் மதிப்புள்ள நூல்களை* யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அனுப்பி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
1979ல் கோவை நகரில் உள்ள ஆர்.எச்.ஆர்.ஓட்டல் உரிமையாளர் திரு.முனுசாமி அவர்களின் வீட்டுக்கு மாலையில்* தேநீர் அருந்த செல்லும்போது நான் மாணவர்களோடு,முன்னாள் அமைச்சர் வேலுச்சாமியோடு* ,லிங்குராஜ் என்கிற நண்பர்களோடுஒரு பெரிய மாலையோடு* நான் நின்று கொண்டிருந்தேன் எம்.ஜி.ஆர்*.வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது .ஆனால் சரியான நேரத்தில் வந்துவிட்டார் .எதிர்பாராத தலைவரின் வருகையால் யாரும் மாலைகள் கொண்டுவரவில்லை .சிலர் சால்வை கொண்டுவந்து அணிவித்தனர் .நான் ஒருவன்தான் பெரிய மாலையை அணிவித்தேன்.* மிக பெரிய மகிழ்ச்சி அடைந்த தலைவர் நீ எப்போது ,எப்படி வந்தாய் என விசாரித்தார் . அண்ணே நீங்கள் வருவதாக தகவல் கிடைத்து*ஓடி வந்தேன்*என்றேன் .உன்னை*புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராக நியமித்துள்ளேன். தகவல் கிடைத்ததா என்றார்*அண்ணே*இது குறித்து விசாரிக்க நேரில் எங்கள் வீட்டிற்கு*சிலர் வந்து இருந்தார்கள் . ஆனால் புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராவதற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவர்* விவசாயியாக இருக்க வேண்டும் .என் தந்தையார்*ஒரு விறகு வியாபாரி .என் தந்தையாருக்கு விவசாய நிலம் இல்லை .குறைந்த பட்சம்*2 ஏக்கர் நிலமாவது*இருக்க வேண்டும் விவசாயிக்கான ஆதார அட்டை இருக்க வேண்டும் எதுவுமில்லை .விசாரித்துவிட்டு அவர்களும்*போய்விட்டார்கள் என்றேன் .சரி பரவாயில்லை .உனக்கு வேறு வாய்ப்பு தருகிறேன் . நீ சும்மா*இருந்தால்*என்னுடன் சென்னைக்கு வந்துவிடு .என் வீட்டு*நூலகத்தில்*ஏராளமான புத்தகங்கள் உள்ளன .அவற்றை படித்து அறிவுத்திறனை மேம்படுத்தி கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .வெளியில் நாங்கள்நண்பர்கள்* காபி அருந்தினோம்*சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த தலைவர் மீண்டும் என் தோளில்*தட்டி ,வசதிப்பட்டால் சென்னைக்கு வந்துவிடு என்றார் .என் மரமண்டைக்கு அது ஏறவில்லை . புரட்சி தலைவரின் அழைப்பு என்பது*எவ்வளவு பெரியது*என்று அப்போது தெரியவில்லை*.* அதை விட்டுவிட்டு உள்ளூரிலேயே நான்* கட்சி*பணியாற்றி* வருகிறேன் .அப்போதும் தலைவருக்கு மகிழ்ச்சிதான் .இவன் நம்மிடம் வராமல்*உள்ளூரில் கட்சி*பணியாற்றுகிறேன் என்று மகிழ்ச்சியுற்றார்* . அந்த நேரத்தில் எம்.எல்.சி.தேர்தல் நடக்கிறது .* பட்டதாரிகளுக்கான தேர்தல் ,ஆசிரியர்களுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது .அந்த சமயத்தில் அமைச்சர் குழந்தைவேலு ஒரு திட்டமிடாத சென்னை*பயணத்தை*மேற்கொள்ள இருந்தார் .நான் வாக்காளர் பட்டியலை வைத்து, பட்டதாரிகள்,ஆசிரியர்கள் இவர்களையெல்லாம் உடுமலை மற்றும் பக்கத்து*ஏரியாவில் வாக்கு சேகரிக்க செல்லும்போது திடீரென*எம்.ஜி.ஆர்.வருகிறார் என்று தகவல் வருகிறது .அப்போது ஜனார்த்தனன் எம்.எல்.சி.என்பவருக்காக வாக்கு சேகரிக்க*சென்றிருந்தேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வருகை தருகிறார் .அவருக்கு மிகவும் பிடித்தமான மாளிகை . அமைச்சர் குழந்தைவேலு எப்போதும்*அந்த பகுதிக்கு*எம்.ஜி.ஆர். வந்தால் , எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் சரி ,அங்குதான்*தங்குவார்*.நான் வாக்கு சேகரிப்பு முடித்துவிட்டு*பிற்பகல் 1.45க்கு அந்த ஆய்வு மாளிகைக்கு சென்றேன் .அனைத்து முக்கியஸ்தர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் .நான் உள்ளே கதவை*திறந்து சென்றதும் எம்.ஜி.ஆர். கோபமாக*.அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளும்* கூட்டத்தில் இல்லாமல் எங்கே போனாய்*என்று ஒரு பார்வை .பார்த்தார் .அண்ணே,* நான் எம்.எல்.சி.பட்டதாரிகளுக்கான* வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் ,இங்கு வந்துசேர நேரமாகிவிட்டது .மன்னிக்க வேண்டும் என்றேன் .* பிறகு ஏன் இங்குவந்தாய் .என்று கேட்க, இல்லை அண்ணே, நீங்கள் வந்திருக்கும்போது* உங்களை*பார்த்து வணக்கம் தெரிவித்து வாழ்த்துக்கள் பெற்றபின்*தொடரலாம்* என்று இருந்தேன் என்றதும் .அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது .நான் கொண்டு வந்திருந்த சால்வை, துண்டு ஆகியவற்றை அணிவித்துவிட்டு வணக்கம் தெரிவித்தேன் . சரி, நீ போய்* தேர்தல்**பணியாற்று என்று தோளில்*தட்டி கொடுத்தார் . அதுதான்*புரட்சி தலைவர்** எம்.ஜி.ஆர். அதாவது எந்த சூழ்நிலையிலும் கட்சி வேலை செய்பவனை, எந்த காரணத்தை கொண்டும் கைவிடாமல் அப்படியே கோபப்பட்டாலும், உண்மை விவரம் தெரிந்ததும்*தட்டி கொடுத்து பாராட்ட கூடிய ஒரு மாபெரும் வள்ளல்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் கொடையிலே மட்டும் வள்ளல் அல்ல. நிதானத்திலும் , வாழ்த்துவதிலும் வள்ளலாக இருந்தார் .நெய்வேலியில் உள்ள வள்ளலாரின் நெருப்பு* எப்படி அணையாமல் இருக்குமோ*அதுபோல வாழ்நாளில்**அவரது அன்பு அணையாமல்* இருந்தது .அவருடைய பண்பு, பாசம், கருணை, இரக்கம் குறையாமல் இருந்தது .பெற்றால்தான் பிள்ளையா*படத்தில்*அவர் பாடி நடித்தது போல கருணை, கடமை, பொறுமை இந்த மூன்றும்*அவரிடம் இருந்ததால்*மக்கள் போற்றும்*மகோன்னத*தலைவராக*அவர் திகழ்ந்தார் என்று திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**
1957 பொது தேர்தலில்*போட்டியிடலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .அந்த கூட்டத்திலே ஒலித்த பாடல்கள் மதுரை வீரன் படத்தில் வரும் ஏய்ச்சி*பிழைக்கும் தொழிலே*சரிதானா எண்ணி பாருங்கள்*, வாங்க மச்சான் வாங்க சொந்த வழியை*பார்த்து போங்க*, மலைக்கள்ளன் படத்தில் வரும் எத்தனை காலம்தான்*ஏமாற்றுவார் நம் நாட்டிலே*என்கிற பாடல்கள்தான் தி.மு.க. மாநாட்டிலே*பிரச்சாரமாக ஒலித்தது .மக்களிடத்தில், மக்களை சென்று அடையும்*ஒரே ஆயுதமாக திரையுலகத்தை தி.மு.க. பயன்படுத்துவதற்கு எம்.ஜி.ஆர். என்கிற*மகத்தான சக்தி இருந்தது .அவரால்தான், அவருடைய பாடல்களால்தான் தி.மு.க.என்கிற கட்சியை, உதய சூரியன் என்கிற*சின்னத்தை*பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல முடிந்தது .* அப்படி ஒரு தனி நபராக, பெரும் இயக்கமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மற்ற* தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.ஏதோ*ஏதோ* ஏதோ ஒரு மயக்கம்* -குடும்ப தலைவன்*
2.எம்.ஜி.ஆர்.-தங்கவேலு உரையாடல் -உழைக்கும் கரங்கள்*
3.மார்த்தாண்டன் -வீராங்கன் பேசும் வசனங்கள் -நாடோடி மன்னன்*
4.திரு.கா. லியாகத் அலிகான்*பேட்டி*
5.ஏய்ச்சி* பிழைக்கும் தொழிலே சரிதானா*- மதுரை வீரன்*
-
சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
வசூல் என போட்டாலும்...
தனிப்பெரும் கதாநாயகன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
1958 ல் வெளியான
கலைசக்கரவர்த்தியின்
"நாடோடி மன்னன்"
முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
ஆயிரக்கணக்கான
திரையரங்கில்....
கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...
சில குறிப்புகள்
2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
வசூலையும் போட்டது.
7 நாள் வசூல் : 2,85,000
(இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
அடுத்து...
2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
1,லட்சத்து 95 ஆயிரமாகும்.
ஆல்பட் அரங்கில் மட்டும்
++++++++++++++++++++
1991 ல் 8 நாள்
1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
2006 ல் ஆல்பட் 21 நாள்
5 லட்சம் வசூல்....
2018 ல் 35 நாள்
வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
வரலாற்று சிற்பத்தின்
2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
1958 ல் வெளியான சாதாரண நடிகர்
8 படம் மட்டுமல்ல...
250 யையும் துவம்சம் செய்த காவிய படைப்பு...
250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார் பிக்க்சர்ஸின்
நாடோடி மன்னனை
வெல்ல முடியாது...
போ.ரோ.வி.சி. கணேசனார்
பெறாத பிள்ளைகள்
தெரிந்து கொள்ளட்டும்.......bsr...
-
இணைய தளத்தில் ...
முகநூல்
யூடியூப்
வாட்ஸ் ஆப்
மய்யம்
மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
பொய்யான செய்திகள்
தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........
1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .
பிள்ளைகளே
சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்
1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .
சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .
ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
எங்களுக்கு விளம்பரம் இல்லை
பத்திரிகை ஆதரவு இல்லை
மக்கள் ஆதரிக்கவில்லை
என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
.எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...
-
#அனைத்திந்திய #அண்ணா #திராவிட
#முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
மக்களின் கட்சி
#சரித்திரம் #பொற்காலம்
#49வதுஆண்டு #தொடக்க #விழா
(17.10.1972 - 17.10.2020)
தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.
முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...
1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.
இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.
1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.
அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...
எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....
#OPS #EPS #TAMILNADU #NOTE
#அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
#AMMA #AIADMK #ITWING #TAMILNADU
#TWOLEAF
#17thoctober2020......... Kannan...
-
காத்தவராயன், சாரங்கதாரா, அன்னையின் ஆணை திரை அரங்கை விட்டு ஓடியே விட்டது. பொம்மை கல்யாணம் 50 நாட்கள் ஒட்டப்பட்டது என்று கேள்வி.
அப்புறம் மருது மோகன், முரளி ஸ்ரீனிவாசா, ராகவேந்திரா சார், சுப்பு, அடையாறு சேகர் பரசுராமன் மற்றும் கூட்டம் 1958 ஆம் ஆண்டு 7 படங்கள் எந்த அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது என்று சொல்ல முடியுமா???? சுப்புவிடம் ரெகார்டஸ் இருக்கிறது அவர் கண்டிப்பாக சொல்லுவார்!!!!!!! சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும். புளுகுவதற்கு ஒருநடிகர் திலகம் டி.வி[அங்கு பில்ட்-அப் புனலூப் பண்ணி பொய்யா பேசினால் முட்டாள்கள் விருப்பம் போடுவார்கள்]. ரூம் போட்டு யோசிப்பாங்களோ????.....Sailesh Basu...
-
சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
வசூல் என போட்டாலும்...
தனிப்பெரும் கதாநாயகன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
1958 ல் வெளியான
கலைசக்கரவர்த்தியின்
"நாடோடி மன்னன்"...
முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
ஆயிரக்கணக்கான
திரையரங்கில்....
கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...
சில குறிப்புகள்
2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
வசூலையும் போட்டது.
7 நாள் வசூல் : 2,85,000
(இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
அடுத்து...
2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
1,லட்சத்து 95 ஆயிரமாகும்.
ஆல்பட் அரங்கில் மட்டும்
++++++++++++++++++++
1991 ல் 8 நாள்
1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
2006 ல் ஆல்பட் 21 நாள்
5 லட்சம் வசூல்....
2018 ல் 35 நாள்
வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
வரலாற்று சிற்பத்தின்
2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
1958 ல் வெளியான சாதாரண நடிகர்
8 படம் மட்டுமல்ல...
250 யையும் துவசம் செய்த காவிய படைப்பு...
250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
நாடோடி மன்னனை
வெல்ல முடியாது...
போ.ரோ.வி.சி. கணேசனார்
பெறாத பிள்ளைகள்
தெரிந்து கொள்ளட்டும். Bsr...
-
இணைய தளத்தில் ...
முகநூல்
யூடியூப்
வாட்ஸ் ஆப்
மய்யம்
மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
பொய்யான செய்திகள்
தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........
1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .
பிள்ளைகளே
சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்
1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .
சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .
ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
எங்களுக்கு விளம்பரம் இல்லை
பத்திரிகை ஆதரவு இல்லை
மக்கள் ஆதரிக்கவில்லை
என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
.எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...
-
#அனைத்திந்திய #அண்ணா #திராவிட
#முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
மக்களின் கட்சி
#சரித்திரம் #பொற்காலம்
#49வதுஆண்டு #தொடக்க #விழா
(17.10.1972 - 17.10.2020)
தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.
முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...
1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.
இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.
1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.
அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...
எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....
#OPS #EPS #TAMILNADU #NOTE
#அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
#AMMA #AIADMK #ITWING #TAMILNADU
#TWOLEAF
#17thoctober2020....... Kannan...
-
கணேசமூர்த்தி நடித்த 288 தமிழ் படங்களில் கிட்டத்தட்ட 50 படங்கள் நாட்களை தொடவில்லை என்கிறேன் நான் மறுக்க முடியுமா. கிட்டத்தட்ட 100 படங்கள் மறுவெளியீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை....மறுக்கமுடியுமா????? ஆவண புலிகளே ஆதாரத்துடன் சொல்லுங்கள் பாப்போம்!!! விவரங்களை ஆவணங்களை ஆராய்ந்தால் உங்கள் கோவணத்தையும் அவுத்து ஓடவிடம். சுப்புவை நாம் எப்போது "wig" இல்லாமல் பார்ப்பது. இதற்கு பதில் சொல்ல வில்லை என்றால் அப்படி செய்வாரோ???.....sb...
-
வேறு வழியே இல்லை எனும்போது அந்த மாற்று அணி கும்பல் ஆற்றாமை, இயலாமை, முடியாமை, அளவில்லா ஆதங்கம் கொண்டு புலம்பி தீர்கின்றனர். அப்புறம் எந்தவித வழியும் இல்லாமல் அவர்கள் சார்ந்த தராத்தரதோடு ஆபாச விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நம் பக்கத்தில் அது போல தரகுறைவு தாக்குதல் நடத்த மாட்டோம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் நிச்சயமாக தகுந்த பதிலடி அளிக்க வாய்ப்புண்டு...........CeeYem...
-
From Mr.SaileshBasu...அப்புறம் சுப்பு, ஆங்கில நாளிதழில் அதாவது தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தில் "முதல் முறையாக இல்லையே" சரிதானே? இது ரசிகர்கள் பிட் நோட்டீஸ் அல்ல!!!!!! உங்கள் தயாரிப்பாளர் திருவிளையாடல் 17வது வாரம் விளம்பரத்தை பார்த்தால் அதிலும் தவறான தகவல் உண்டு.
அப்புறம் ஏதோ "அந்த மகா நடிகர் 1952முதல் 1978வரை 136 படங்களில் ஆறு படங்கள் தான் வெள்ளி விழா. சிவாஜி 199 படங்கள் "19" வெள்ளி விழா படங்கள்" என்று தங்களது அக்டோபர் ஒன்று காணொளி காட்சியை பார்த்தேன். எங்களுக்கு தான் அதை பார்த்து குபீர் சிரிப்பு வருகிறது சுப்பு. கணக்கில் நீங்கள் "புலி" மண்டைக்கு வெளியிலும் ஒன்றும் இல்லை உள்ளேயும் அதுவே!!!.....SB...
-
நம் இதயம் கவர்ந்த மன்னன் நடிகர் ஆக இருந்து மன்னன் ஆக வழிகோலிய தினம் 17.10.1972.
நேற்று வரை ஒன்றாய் கூடி கொஞ்சி குலாவி உயர்பதவி பெற்றவர்கள் ஒரே இந்த மாதத்தில் மலையாளி என்று மொழி சான்றிதழ் பெற்ற மாதம்.
தமிழர் பாதுகாப்பு படை என்ற ஒன்று மதுரை முத்து தலைமையில் ஒரு போலி குடும்பம் காக்க புறப்பட்ட மாதம்.
நம் கண்ணின் மணியின் உழைப்பை பெயரை பணத்தை சுரண்டி கொழுத்த கூட்டம் ஆட்சி அதிகாரம் கொண்டு நன்றி மறந்து பேயாட்டம் ஆடிய மாதம்.
நேற்று வரை நல்லவர் ஆக தெரிந்த நம் மாணிக்கத்தின் படம் நேற்று இன்று நாளையை வீதியில் வீசி தூக்கி எறிய நினைத்து தோல்வி கண்ட கூட்டம்.
ஒரு பத்து நிமிடம் ஆவது எங்கள் தொகுதிக்கு வந்து செல்லுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய கூட்டம்..
கூத்தாடி எம்ஜிஆர் என்று வஞ்சகம் கொண்டு வாய் கொழுத்து பேசிய நேரம்...
நடிகன் நாடாள முடியுமா?....
அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் ஆகுமா?...
இது என்ன எம்ஜிஆர் நடிக்கும் திரைப்படமா?
100 நாட்கள் ஓடுமா...
அரைகால் ட்ரவுசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி....
விசில் அடித்தான் குஞ்சுகளா...வெம்பி பழுத்த பிஞ்சுகளா என்று ஏளனம் பேசிய நாட்கள் அவை.
பரம்பரை ரத்தம் உடம்புலதான்...அது முறுக்கேரி கிடப்பது நரம்புலதான் என்று வீறு கொண்டு எழுந்த வீரத்தலைவன் பட்டாளம்...
உலக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய செய்தியை உலகுக்கு சொல்ல புறப்பட்ட தினம்..
100 நாட்கள் ஓடுமா என்று கேட்ட நல்லவர்களுக்கு சொல்கிறோம் ...
இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகி விரைவில் 50 வது ஆண்டை எட்ட போகிறோம்....
நினைத்து பார்த்தால் நம்ப கூட முடியவில்லை.
இன்றும் கோட்டையில் அவர் கண்ட கொடி பறந்து கொண்டு இருக்கிறது....
எங்கள் நோக்கம் தெளிவானது... இடையில் ஏற்பட்ட தவறுகளுக்கு ஒரு நாளும் நாங்கள் காரணம் அல்ல.
அதற்கு உண்மை எம்ஜிஆர் ரசிகர்கள் ஒரு நாளும் காரணம் அல்ல...
மீண்டும் உரக்க சொல்லுவோம்.
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
இப்படை இவர்படை தோற்கின் இனி எவர் படை வெல்லும்?
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...உங்களின் குரலாக எண்ணம் ஆக உங்களில் ஒருவன்.
தொடரும்.............
-
நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….net...
’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.
படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.vnd...
-
இந்திய திரையுலகின் இதிகாசத் தலைவரின்
எழில்மிகு காவியமான நாடோடி மன்னன்
இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரில் 113 நாட்கள் ஒடியது.
இலங்கையில் ஒரே நேரத்தில் 15 தியேட்டர்கள் வெளியிடபட்டது.
வண்டன் பிரிட்டனில்
8 வாரங்கள் ஒடியது.
அதற்கான பரிசை நாவலர் நெடுஞ்செழியன் 1964 லண்டன் சென்ற போது அவரிடம் லண்டன் தமிழ்சங்கம் வழங்கியது.
அந்த கேடயத்தை மக்கள் திலகத்திடம் சென்னை வந்த பின் விழா வைத்து வழங்கபட்டது. இன்றும் தி.நகர் தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ளது.
மலேசியா நகரில் 5 இடங்களில் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
இப்படி அடுக்கடுக்காண வெற்றிகளை படைத்த காவியம் நாடோடி மன்னன் ஆகும்.
முதல் வெளியீட்டோடு
தோல்விகளுடன் மூடப்பட்ட ....கரைசேராத அழுகை படங்களை கொண்டு வந்து இமாலயபடைப்புடன் ஒப்பிடும் தரங்கெட்ட சாதாரண நடிகரின் படங்களை நடிகர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும்
முத்துராமன், சிவக்குமார் படங்களுடன் கணேசனாரின் பெறாத பிள்ளைகள் போய் ஒப்பிடட்டும்....
உலக சரித்திரத்தில்
வெள்ளித்திரையில்....
ஒய்வில்லா வெற்றிகளை ஆண்டு தோறும் படைக்கும் படைப்பு
நாடோடி மன்னன்....
சென்னையில் 20 க்கும் மேற்பட்ட குளிர்சாதன அரங்கில் வெளியிட்ட
ஒரே கறுப்பு வெள்ளை கலர் காவியமாகும்.
ஆல்பட் (மூன்று முறை)
ஒடிய நாள் 64
(9 வாரங்கள்)
பிருந்தா 3 முறை 21 நாள்
சங்கம் 7நாள்
பாரத் (மூன்று முறை)
21 நாள்.
உட்லாண்ட்ஸ் 7 நாள்
எம்.எம்.தியேட்டர் 7 நாள்
நூர்ஜகான் (ராஜ்)
21 நாள் (3 முறை)
தேவிபாரடைஸ்
7 நாள் (1988)
கணபதிராம்
கோல்டன் ஈகிள்
கோபிகிருஷ்ணா
ரோகினி காம்பளக்ஸ்
ராதா அரங்கு
முரளிகிருஷ்ணா
மற்றும் பலஅரங்குகள் சாதனைகள்.
முறைபடி பொன்விழா
வைரவிழா கொண்டாடிய புரட்சிக்காவியம்...
நாடோடி மன்னன் ஆகும்....bsr...
-
"நாடோடி மன்னன்" காவிய படம் எடுக்க மக்கள் திலகம் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?... பெரும் பொருட் செலவு, பானுமதியின் ஒத்துழைப்பு இல்லாதது, (அதனால் அவரை படத்தில் மக்கள் திலகம் கொன்றுவிட்டார். இருந்தாலும் எல்லாரையும் மன்னித்துவிடுவார். உங்களுக்கு இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட பானுமதியை மக்கள் திலகம் முதல்வரான பிறகு தமிழக அரசு இசைக் கல்லூரி முதல்வராக நியமித்தார். தலைவரின் தண்டனையே வித்தியாசமப்பா. பானுமதியும் வெட்கமில்லாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்) காங்கிரஸ் அரசின் கெடுபிடிகள், காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க.. என்ற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. காளைமாடு காங்கிரஸ் சின்னமாம். படத்தை எடுக்க செலவு செய்தததற்கு ஈடாக படம் எடுக்கப்பட்டபோது படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சாப்பிட மினி ஓட்டலையே ஏற்பாடு செய்துவிட்டார். ஓவல்டின் என்ற பானத்தை அண்டாவில் கலக்கி வைத்திருந்தார்கள் என்று வசனகர்த்தா ரவீந்தர் கூறியிருந்தார். பணக்காரர்கள் குடிக்கும் ஓவல்டின் பானத்தை பல தொழிலாளர்கள் அப்போதுதான் முதல் முறையாக குடித்திருக்கிறார்கள். அடிமைப் பெண் படப்பிடிப்பின்போதும் பாலைவனத்தில் குடிக்க தண்ணீர் கஷ்டம் என்பதால் கோககோலா குளிர்பான வேனையே மக்கள் திலகம் ஏற்பாடு செய்தார்.
‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இனி உயரமுடியாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் ’ என்று கவிஞர் வாலி கூறினார். இரண்டு வருடம் முன் ஏ.சி.சண்முகம் நடத்தி வரும் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மக்கள் திலகத்தின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது ரஜினி பேசும்போது ‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இதிகாசம் படைத்தார். சிவாஜியைவிட மார்கெட் பிடித்து அவரைவிட பெரிய படங்களில் நடித்து அவரை விட அதிக சம்பளம் வாங்கினார் எம்ஜிஆர்’ என்று கூறினார். ரஜினியின் பேச்சு இன்னும் யூடியூபில் உள்ளது. அவர்கள் என்ன பொய் சொல்லி கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் நடக்காது.... Swamy...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்..ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*14/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை* பொறுத்தவரையில்*அரசு அதிகாரிகளை அவ்வளவு அருமையாக*மரியாதை செய்து மதிப்பளிப்பார் . அதாவது சமீபத்தில் ஒய்வு*பெற்ற காவல்துறை*அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.அவர்கள் சொல்லும்போது பல்வேறு அரிய தகவல்களை*எம்.ஜி.ஆர். குறித்து*சொன்னார் .* அவர் கோட்டைக்குள்*தலைமை செயலகம் உள்ளே நுழையும்போது பணியில்*இருந்த* ஒவ்வொரு காவலரையும் பார்த்து நீங்கள் சாப்பீட்டீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்வாராம் இவர் ஒரு அதிசய*மனிதர் என்று காவல்துறை வட்டாரத்தில் வியந்தது* உண்டு . அதே போல மறைந்த*திரு.ரவி*ஆறுமுகம்*அவர்களுக்கு கை*கடிகாரம் கொடுத்து*பாராட்டியுள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே*தனக்கு*பிடித்தவர்களுக்கு எல்லாம் கைக்கடிகாரங்கள், புகைப்பட*நிபுணராக இருந்தால்*காமிராக்கள் பரிசளிப்பது என்பதை*ஒரு வழக்கமாக*வைத்திருந்தார் .
ஒரு அதிகாரி எம்.ஜி.ஆரிடம் எந்த உதவியும்*பெறவில்லை . ஆனால் எம்.ஜி.ஆர். அவரை*தன் வீட்டுக்கு அழைக்கிறார் . நான் யார் யாருக்கோ*என்னவெல்லாமோ செய்திருக்கிறேன் . பலர் என்னிடம் உதவியை கேட்டு பெற்றிருக்கிறார்கள் . நீங்கள் என்னிடம் எதுவும்*கேட்டு பெற்றதில்லை .நான் கொடுத்ததுமில்லை .அது எனக்கு ஒரு குறையாக இருக்கிறது.* என்று அவர் சொல்கிறார் .* நான் உங்களை*பார்க்க வரும்போதெல்லாம் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களே . அதுவே*போதும் என்றார் .அதிகாரி .இல்லை. நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது .அந்த குறையும்*எனக்கு*இருக்கக்கூடாது .என்று சொல்லி*ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தாராம் .இப்படி ஒவ்வொரு மன* நிலையிலும் ஏதாவது , எப்போதாவது எதையாவது கொடுத்து*அவர்களின்*மனதில்*இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். என்பது*அவரது வள்ளல்தன்மைக்கு எடுத்துக்காட்டு .நல்லவனாக இருப்பது*என்பது*போதிப்பு**.*மட்டுமல்ல.நல்லவனா க வாழ்வது*அப்படி நல்லவனாக வாழ்வதன் மூலம் பல நல்லவர்களை உருவாக்குவது என்கிற*புதிய பாதையை, புதிய அத்தியாயத்தை வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.*
திரு.கா. லியாகத்*அலிகான்*பேட்டி : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா*அவர்களிடம் எவ்வளவு அன்பு,பாசம் ,பற்று* வைத்திருந்தார் என்று எனக்கு*தெரியும்*.அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அரசியல் நெருக்கம் எப்படி என்றும் எனக்கு*தெரியும்*ஜெயலலிதா*அவர்கள்* நேர்மை , ஒழுக்க*கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடு மிகவும் கண்டிப்புடன் கடைபிடித்தார் .*10மணிக்கு ஒருவரை வர சொன்னால்*நாம் 5 நிமிடங்கள் முன்னதாக அங்கு இருக்கவேண்டும் .5 நிமிடம் தாமதமாக சென்றால் பார்க்க மாட்டார்*.அப்படி நேரத்தை*மிக சரியாக*கடைபிடித்தார் .நேரம் கடைபிடிக்கும் விஷயங்கள்*கூட*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பண்பு . என்னை*பற்றி ஜெயலலிதா அவர்களிடம் எம்.ஜி.ஆர். அவர்கள் ,தனி உதவியாளர் பிச்சாண்டி அவர்களின்* முன்னிலையில் நல்ல முறையில்*பல தகவல்கள் சொல்லி இருக்கிறார் . கடலூர்*மாநாட்டில்*கலந்து*கொள்ள*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் செல்கிறார்கள் .பண்ருட்டியார் தலைமை தாங்க உள்ள மாநாட்டில்*நாங்கள் எல்லாம் ஒருநாள் முன்கூட்டியே சென்றுவிட்டோம் .அந்த துவக்க மாநாட்டிற்கு காரில்**வரும்போது*வழியில்*தனி உதவியாளர் பிச்சாண்டி*உடனிருக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் உனக்கு*பிரபல*கட்சி*பிரமுகர் லியாகத் அலிகான்*பற்றி தெரியுமா*என்று சொன்னதற்கு ஜெயலலிதா*தெரியாது*என்று சொன்னார் . அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் மாநாட்டில்*நீ பேசிய பிறகு சில*மணி நேரத்தில் அவரும்*பேசுவார் .அவருடைய பேச்சாற்றலை கண்டால், கேட்டால்*நீயே*வியந்து போவாய் என்று சொல்லியுள்ளார் . பொள்ளாச்சி*ஜெயராமன் சில காலம் தொழில்துறை*அமைச்சராக இருந்தார் .நண்பர் என்ற முறையில்*ஜெயராமனை சந்திக்க*சென்றபோது அங்கு பிச்சாண்டி*வந்திருந்தார் . பிச்சாண்டி , ஜெயராமனிடம் அண்ணே*, இந்த லியாகத்*அலிகான்*மீது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்திருக்கும் அன்பு அளவற்றது அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை*என்னிடமும் அவ்வளவு பெருமையாக பேசுவார் ..*.ஜெயலலிதா அவர்களிடம் அவரை*பற்றி என் முன்னே காரில்*மாநாட்டுக்கு செல்லும்போது* மிகவும் பெருமையாக அவர் பேச்சாற்றலை பற்றி புகழ்ந்து பேசினார் . அந்த மாநாட்டில்*ஜெயலலிதா அவர்கள் பேசியபின் ,லியாகத்*அலிகான் பேசினார்*.நீங்கள் பார்த்து* இருப்பீர்கள் என்றார் .ஆமாம் நானும்*பார்த்தேன்*என்றார்*ஜெயராமன் .* அந்த மாநாட்டின் இறுதியில் பேசிய*புரட்சி தலைவர் ,லியாகத்*அலிகான்*என்ற இளைஞரின்*பேச்சை*சுட்டிக்காட்டி*,நீங்கள் எல்லாம் மாநாட்டின் முற்பகுதியில்*லியாகத் அலிகான் என்ற இளைஞரின்*பேச்சை கேட்டிருப்பீர்கள் நீங்கள் உங்கள் ஊருக்கு*சென்றதும் நினைத்து பார்ப்பீர்கள், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள் .இவ்வளவு சிறிய வயதில்*இந்த இளைஞர்*எவ்வளவு ஆர்வமாக*அருமையாக பேசுகிறார் என்று . வெளியூரில் இருந்து வந்துள்ளவர்கள் அனைவரும் அவரை*பேச அழைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி*தலைவர் பேசியதை*ஜெயராமன் ,பிச்சாண்டிக்கு நினைவுபடுத்தினார் . அங்கு நடந்தது என்னவென்றால்* எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி அங்குள்ள ராஜேந்திரன்*என்பவரின்* படத்தை நான் திறந்து வைப்பதாக* ஏற்பாடு .மதியம் 12* மணியளவில் ஜெயலலிதா அவர்கள் பேசி முடித்துவிட்டார்கள் .அதன்பின் மாநாட்டில் மற்ற தலைவர்கள் கே.ஏ.கே.,குழந்தைவேலு, எஸ்.டி.எஸ் ,அரங்கநாயகம், அடியார், ராஜா முகமது பேசினார்கள் .* பின்புறம் ,நான், ஜெகத்ரட்சகன், வெள்ளைச்சாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் அமர்ந்துள்ளோம்*இனி நமக்கு பேச வாய்ப்பு கிடைக்காது என்று நாங்கள் பேசி கொண்டிருக்கும்போது பிற்பகல் 1.30 மணியளவில் பண்ருட்டியார் மேடையில்*அடுத்து லியாகத் அலிகான் ,ராஜேந்திரன் படத்தை திறந்துவைத்து ஒரு 5 நிமிடம் பேசுவார் என்று அறிவிக்கிறார் .மற்ற சில தலைவர்கள் எல்லாம் பேச இருக்கும் நேரத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை .நான் ராஜேந்திரன் படத்தை திறந்து வைத்துவிட்டு ,பேச முற்படும்போது, புரட்சி தலைவர் கைதட்டி என்னை அழைக்கிறார் .எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இரு பக்கங்களிலும் கே.ஏ.கே.,பண்ருட்டியார் அமர்ந்திருக்க,என்னை அருகில் வைத்து பண்ருட்டியார் 5 நிமிடம் என்று அறிவித்தது இருக்கட்டும் .நான் சொல்கிறேன் நீ 30 நிமிடங்கள் பேசு. அன்றைக்கு உடுமலையில் பேசிய பேச்சுக்களை* மறுபடியும் பேசு என்றார் .ஆனால் நான் பேசுவதற்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை .இருந்தாலும் சுதாரித்து கொண்டு மேடையில் சுமார் 35 நிமிடம் பேசினேன் .*
பொதுவாக எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்கள் பேசும் கூட்டத்தில் என்னை போன்றவர்கள் பேச ஆரம்பித்தால் 5 நிமிடத்தில் நீ போய் உட்காரு என்பார்கள் .ஆனால் உடுமலையில் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் பேசும்போது இடைவிடாது ஆரவாரங்கள், கைதட்டல்கள் எழுந்ததால் தலைவரே பிரமித்து போனார் .* அதை நினைத்துதான் தலைவர் நீண்ட நேரம் பேச அனுமதித்தார் .நான் பேசும்போது கிட்டத்தட்ட 85 தடவைகளுக்கு மேல் பலத்த கைதட்டல்கள் எழுந்தன .அந்த மாநாட்டில் சுமார் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர் .அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை .தானாகவே கூட்டம் சேர்ந்துவிடும் .அவனவன் கட்டு சோறு எடுத்து கொண்டு ,வண்டி கட்டி வந்துவிடுவான் .அப்படி நான் பேசி முடிக்கும்போது ஒரே ஆரவாரம் .நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஆசி பெற்றபோது ,என் கன்னத்தில் லேசாக ஒரு தட்டு தட்டினார் .பின்னர் அண்ணன் காளிமுத்துவை இறுதியாக* பேச அழைத்தார்கள் .அவர் பேசி முடிந்ததும் கூட்டம் கலைகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் புறப்பட தயாராகிறார் .நான் திறந்து வைத்த ராஜேந்திரன் படத்தை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென ஆயிரம் ரோஜா பூக்கள் ஒன்று சேர்ந்து வருவது போல ஒரு நறுமணம்*அந்த நறுமணத்தை நுகர திரும்பும்போது ,புரட்சி தலைவர் என்னை அப்படியே கட்டி பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு போய்விட்டார் .இதை கண்ட பத்திரிகையாளர்கள் லியாகத் அலிகானுக்கு எம்.ஜி.ஆர். முத்தம் என்று மாலையில் செய்திகளுடன் புகைப்படத்தை போட்டார்கள் .முந்தைய தினம் இரவு எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை பாராட்டி உயர்வாக பேசியதும் செய்திகளாக வந்தது .லியாகத் அலிகான் போன்ற இளைஞர்கள் பிற்காலத்தில் பெரிய அமைச்சர்களாக, கட்சியின் நிர்வாக தலைவர்களாக ஏன் எதிர்காலத்தில் இவர்களை போன்றவர்கள் எல்லாம் முதல்வராக கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேசினார் .அவர் பேசிய பின்னர் என்னுடன் நட்புடன் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்னை எதிர்க்கவும், ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .நான் உள்ளபடியே சொல்கிறேன் .ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்து ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் பேசும்போது*உடுமலையில் ஒரு அரைக்கால் சட்டை போட்டு கொண்டு வந்த இந்த லியாகத் அலிகானை அமைச்சர் என்ற அந்தஸ்தோடு ,15 ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் உள்ள ஒரு வாரியத்தில் என்னை தலைவராக நியமித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களே ,பத்திரிகைகளில் நான் அமைச்சர் என்ற வகையில் செய்திகள் வெளியாகின்றன .எனக்கு அந்த ஆசையே இல்லை .நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பும், பாசமும், பற்றும், நேசமும்தான் மிக பெரிய அமைச்சர் பதவியாக நான் கருதுகிறேன்.எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .அப்போது கோவை மேற்கு, துறைமுகம் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் .உண்மையில் எனக்கு அந்த ஆசை உள்ளபடியே நிச்சயம் கிடையாது .யாரும் சொன்னாலும் நம்பமாட்டார்கள் .ஏனென்றால் பதவிக்காக நான் போராடியதில்லை .யாரையும் குறை சொன்னதுமில்லை .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*
நல்லவன் வாழ்வான் என்ற அவரின் படத்தின் தலைப்பின்படி, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற* ஒரு ஜீவநதியாக எம்.ஜி.ஆர். இருந்தார் .இன்றைக்கும் அவரது பாடல்களை கேட்கும்போது ஒவ்வொருவரும் தான் பிறந்து வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்திற்கும்* வாழ்க்கைக்கும்**பெருமைப்படுகிற மாதிரியாக ,ஒரு மகோன்னத மனிதராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி. ஆர் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*
2..பட்டு வண்ண சிட்டு படகுத்துறை விட்டு- பரிசு*
3.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*
5.கட்டான கட்டழகு கண்ணா* - குடும்ப தலைவன்*
-
"ராஜா தேசிங்கு". 1960 செப் 2 ந் தேதி வெளியான ஒரு அற்புதமான வரலாற்று படம். தேசிங்கு, தாவூத்கான் என்ற இரு வேடங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் திலகம் வேறு படுத்தி காட்டியிருப்பார்.
தலைவருக்கு ஜோடியாக முதலில் பத்மினிதான் நடிப்பதாக இருந்தது. பாத்திரத்தின் தன்மை உணர்ந்து பானுமதியை கதாநாயகி ஆக்கினார்கள் என்ற பேச்சு உண்டு.
Ssr க்கு ஜோடியாக பத்மினி நடித்திருப்பார். அவருக்கு அதிக வேலையிருக்காது. மக்கள் திலகம் மாறுபட்ட நடிப்பின் மூலம் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் என்றே சொல்ல வேண்டும். "மதுரை வீரனை" எடுத்த கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படம். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் எம்ஜிஆர் மீது மிகுந்த நன்மதிப்பை வைத்திருப்பவர்.
இருப்பினும் படம் ஏதோ காரணத்தால் நீண்ட கால தயாரிப்பாக மாறியதாலும் இரண்டு எம்ஜிஆரில் ஒருவரை இழந்த சோகத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் நல்ல வசூலை எட்டிப் பிடிக்க முடிந்தது. படம் முடிந்து வந்த ரசிகர்கள் கனத்த மனத்துடனே வந்தார்கள். மறுவெளியீட்டில் கலக்கு கலக்கு என்று கலக்கிய படம்.
இசை g ராமனாதன் என்றாலும் ஒரிரு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் மிகவும் பிரபலமடையவில்லை. கதை வசனம் கவிஞர் கண்ணதாசன். வசனத்தை மிக அருமையாக எழுதியிருப்பார்.
'வனமேவும் ராஜகுமாரன்' என்ற பாடலை ஜிக்கியும், சீர்காழியும் பாடியிருப்பார்கள். அருமையான மெலடி பாடல். 'சரசராணி கல்யாணி' பாடல் சிதம்பரம் ஜெயராமனும், p.பானுமதியும் பாடியிருக்கும் மற்றுமொரு அற்புத பாடல். ரேடியோவில் "ராஜாதேசிங்கு" என்று சொன்னவுடனே இந்த பாடலைத்தான் போடுவார்கள் என்று முன்கூட்டியே யூகித்து கொள்ளலாம்
முதல் வெளியீட்டில் சுமார் 40 அரங்குகளில் வெளியானது.
சென்னையில் வெலிங்டன், கிருஷ்ணா, உமா, லிபர்ட்டி என்ற 4 திரையரங்குகளில் வெளியாகி சென்னையில் 56 நாட்களும் தமிழகத்தில் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது...........ksr...
-
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-
1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.
கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.
அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.
எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.
1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............dr...
-
புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களால் "அரசவை கவிஞராக " நியமிக்கப்பட்ட கவியரசு கண்ணதாசன் நினைவு தினம் இன்று! அவா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களை பற்றி மனம்திறந்து சொன்ன செய்தி:
மக்கள்திலகம் நடித்த நேற்று இன்று நாளை படம் வெளிவந்த நேரமிது!கவியரசா் கண்ணதாசன் ,லேனா செட்டியாாின் ம௫மகன் முத்தையா செட்டியாா் இவ௫டன் தி.நகா் நடேசன் பூங்கா அ௫கில் உள்ள தனது இல்லத்திலி௫ந்து மவுண்ட் ரோட்டிற்கு ஒ௫ வேலையாகப் புறப்படுகிறாா்கள். முத்தையா செட்டியாாின் மகன்
கி௫ஷ்ணா காா் ஓட்ட முன் சீட்டில் கவிஞாின் மகன் கலைவாணன்,கண்ணதாசனின் நண்பா் பாக்யநாதன் என்பவ௫ம் அமா்ந்தி௫க்கிறாா்.
எல்.ஐ.சி. கட்டிடத்தை தாண்டி காா் சென்று கொண்டி௫ந்த பொழுது கா௫க்கு வெளியே தலையை அண்ணாந்து அங்கு தேவி தியேட்டா் வாசலில் வைக்கப்பட்டி௫ந்த புரட்சித்தலைவா் எம்ஜிஆா் நடித்த நேற்று இன்று நாளை படத்தின் கட் அவுட்டைக் கவியரசா் கண்ணதாசன் பாா்க்கிறாா்.
உடனே அ௫கில் அமா்ந்தி௫ந்த முத்தையா செட்டியாாிடம் எம்ஜிஆா் கட் அவுட்டைக்காட்டி,
எல்லா௫ம் இவரை வாத்தியாா் வாத்தியாா்னு சொல்லாறங்க.நான்௯ட ஆரம்பத்துல இவா் எந்த ஸ்௯லுக்கு வாத்தியாா்னு கிண்டலடிப்பேன்.இப்ப சொல்றேன் முத்தையா உண்மையிலேயே இவா் வாத்தியாா்தான் இன்னும்சொல்லப்போனா இவா் எனக்கு எனக்குக்௯ட வாத்தியாா்தான் என்கிறாா்.என்ன சொல்றீங்க? முத்தையா செட்டியாா் இடைமறித்துக் கேட்கிறாா்.
ஆமாய்யா அந்த மனுசன் நான் எழுதிய பாட்டுல௯ட தப்பை சிவப்பு மையில தி௫த்தியி௫க்கிறாா். சிவப்பு மையில தி௫த்துறவா் யா௫! ......mss...
-
தமிழக மக்கள் தங்களை ஆட்சி செய்ய அதிக முறை வாய்ப்பளித்த கட்சி.
அரை நூற்றாண்டை தொட்ட கட்சி, அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் ஒரே கட்சி.
வழக்கமாக தலைவர்கள்தான் கட்சியை தொடங்குவார்கள். வழக்கத்திற்கு மாறாக தொண்டர்கள் கட்சியை தொடங்கி, அதற்கு தலைவராக எம்.ஜி.ஆரை அழைத்தார்கள்.
#அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்
தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமூக நீதிக்கு அடையாளமாக 49% இருந்த இட ஒதுக்கீட்டை 68% ஆக உயர்த்திய கட்சி.
69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதை சேர்த்த கட்சி.
ஆண்ட சாதிகளின் பரம்பரை சொத்தாக இருந்த மணியக்காரர் பதவிகளை ஒரே இரவில் பிடுங்கி சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து சாதியினரையும் கிராம நிர்வாக அலுவலராக ( VAO) அரசு ஊதியம் பெற வழிவகை செய்த கட்சி.
தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை ஒழித்து அரசின் சார்பில் பொது விநியோகத்துறையை நிறுவிய கட்சி.
சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த கட்சி.
கல்விப் புரட்சிக்கு ஏதுவாக தமிழகத்தில் அதிக பல்கலைக்கழகங்களையும், மருத்துவக் கல்லூரிகளையும், சட்டக் கல்லூரிகளையும் அமைத்த கட்சி.
தமிழ் மொழிக்கென்று தனியாக பல்கலைக்கழகம் அமைத்து, இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய ஒரே திராவிட கட்சி.
திருவள்ளுவர், அண்ணா, அன்னை தெரசா, பாரதியார், பாரதிதாசன் பெயர்களில் தனித்தனியே பல்கலைக்கழகங்களை கட்டிக்கொடுத்த கட்சி.
காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் நீதிமன்றத்தின் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய கட்சி.எளிய மக்களின் அடையாளமாக இன்றும் திகழும் அதிமுகவின் 49வது பிறந்த தினம் இன்று(நேற்று)... ......Smul...
-
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972
48 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .
திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .
கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .
கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி
ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்
மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை
கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி
இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .
மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்
என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .
ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று
லட்சக்கணக்கான ஆதரவாளர்கள், கோடிக்கணக்கான பொது மக்கள், மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .
திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு
உலக புகழ் நாயகனாக ..., சக்கரவர்த்தி ஆக வெற்றிவலம் வந்த தினம்... துவங்கிய திருநாள் இன்று ....17-10-1972...17-10-2020.........vnd...
-
#மகாசக்தி
நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்...
அந்த அளவு தீவிர சிவாஜி ரசிகன்...!
நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது தொடரந்து எம்ஜிஆர் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டபோது , "இப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரையா வெறுத்தோம்" என வருந்தினேன். அன்றிலிருந்தே எம்ஜிஆர் அவர்களை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசமயம் அம்மன் கோவில் கிழக்காலே படஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன்.. இரவு என் ரூமிலுள்ள டீவியில் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...
அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், "என்ன ஒரு பேரழகுய்யா", நான் திடுக்கிட்டு பின்னால் பார்க்க அங்கே இசைஞானி இளையராஜா...!
'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே...'
திரையில் எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் சாங் ஓடிக்கொண்டிருந்தால் நான் எம்ஜிஆரைத் தான் ரசிப்பேன்...இப்படி பத்மினி, சாவித்திரி யாருடன் டூயட் சாங் நடித்தாலும் என் கண்கள் அனிச்சையாக எம்ஜிஆரை ரசிக்க ஆரம்பித்துவிடும்...
அப்படிப்பட்ட பேரழகன் அவர்... அப்பேர்ப்பட்ட ஈர்ப்புசக்தி எம்ஜிஆருக்கு மட்டும் தான்...
நான் பாடியதால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக ஆனார் என்று ஒரு மேடையில் டிஎம்எஸ் சொன்னார்... அப்படிப் பார்த்தால் சிவாஜிக்குப் பாடியுள்ளாரே? ஏன் அவர் முதலமைச்சராகவில்லை??? ஏன் டிஎம்எஸ்ஸே சில படங்களில் ஹீரோவாக நடித்துப் பாடியும் உள்ளாரே?? அவர் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டுமல்லவா???
எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனிப்பட்ட மகாசக்தி...
ஒப்பீடு செய்ய இயலாத தனிப்பிறவி...
எம்ஜிஆர் 100 வது பிறந்தநாள் விழாவில்
இயக்குனர் திரு. ஆர்.சுந்தர்ராஜன் பேசியது............bsm...
-
ராஜா தேசிங்கு நல்ல படம். மக்கள் திலகம் அற்புதமாக நடித்திருப்பார். தாவூத் கானுக்கும் தேசிங்குக்கும் நடை, உடை, பாவனையில் வேறுபாடு காட்டியிருப்பார். கானாங் குருவி காட்டுப் புறா... பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடியிருப்பார். பாடல் முடிந்ததும் சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் வீச்சு பொறிபறக்கும். அப்போது தம்பி தேசிங்கு ராஜாவை கொல்வதற்காக ஈட்டியை கையிலெடுக்கும் தாவூத்கான், அவர் சண்டையிடும் அழகைப் பார்த்து ரசிப்பது நம்மையும் இருவரையும் ரசிக்க வைக்கும். தேசிங்கு ராஜா அரண்மனைக்கு வைர வியாபாரி போல வேவு பார்க்க வரும் தாவூத்கான், மோதிரத்தைக் கொடுப்பதும் அதை தேசிங்கு கையில் வாங்கி விரலில் மாட்டிக் கொள்வதும் தொழில்நுட்ப வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமான படமாக்கம், எடிட்டிங். கடைசியில் இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சியிலும் எடிட்டிங் திறமையாக இருக்கும்.
பானுமதிக்கு எப்போதுமே வாய்த்துடுக்கு அதிகம். மக்கள் திலகம் வயதில் மூத்தவர் என்றாலும் பலரின் முன்னிலையிலும் ‘என்ன மிஸ்டர் எம்ஜிஆர்’ என்றுதான் அதிகாரமாக கூப்பிடுவார். அதை எல்லாம் மக்கள் திலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். அதனால்தான் அவரை சொந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். ‘இசையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றும் நாடோடி மன்னன் பாடல் ஒலிப்பதிவின்போது பானுமதி கேட்டார். நாடோடி மன்னன் படத்தில் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக மக்கள் திலகம் மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுத்ததைப் பார்த்த பானுமதி, ‘வேறு நல்ல டைரக்டரை வைத்து படம் எடுங்களேன்’ என்று சொன்னதால் கருத்து வேறுபாடு அதிகரித்து படத்திலிருந்து பானுமதி விலகினார். படம் வெளியாகி, தான் நல்ல டைரக்டர் என்பதை மக்கள் திலகம் நிரூபித்தார். அந்தக் கோபம் ராஜாதேசிங்கு, காஞ்சித் தலைவன் உள்ளிட்ட படங்களிலும் எதிரொலித்து படம் தாமதமானது. பழைய வஞ்சத்தை மனதில் கொண்டுதான் அரசின் சிறந்த நடிகர் தேர்வுக்கு கூட மக்கள் திலகத்தை தேர்வு செய்ய பானுமதி எதிர்ப்பு தெரிவித்தார். நம்ப ஆளு எல்லாரையும் மன்னித்து விடுவார். தமிழக முதல்வரான பிறகு பானுமதிக்கு இசைக் கல்லூரி முதல்வர் பதவியைக் கொடுத்தார்.
ராஜா தேசிங்கு படத்துக்காக பாற்கடல் அலைமேலே.. என்ற பத்மினியின் நடனத்துடன் பாடல் காட்சி தசாவதாரத்தை விளக்குவதாக இருக்கும். திமுகவின் கடவுள் மறுப்புக் கொள்கை தீவிரமாக இருந்த நேரத்தில் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற மக்கள் திலகம் எதிர்ப்பு தெரிவித்தார். படத்துக்கு வசனம் எழுதிய கண்ணதாசனே அப்போது தீவிர நாத்திகர். லேனா செட்டியார் பத்மினியின் ரசிகர். அந்தப் பாடல் காட்சியை இடைவேளையின்போது தனியே காட்டினார். என்றாலும் மறுவெளியீடுகளில் அந்தப் பாடல் காட்சி இடம்பெறவில்லை. இப்பவும் யூடியூப்பில் பாற்கடல் அலைமேலே... பாடல் காட்சி காணக் கிடைக்கிறது. என்ன இருந்து என்ன? நமக்கு மக்கள் திலகம் இறப்பதை தாங்க முடியாது. அதுவும் தாவூத் கானை ராஜாதேசிங்கே கொன்று உண்மை தெரிந்தபிறகு தானும் தற்கொலை செய்து கொள்வார். இது நமக்கு பிடிக்குமா? அது படத்தின் வெற்றியை பாதித்தது.... Swamy...
-
மக்கள் திலகத்தின் சரித்திர படைப்பில் வெளியான ராஜாதேசிங்கு திரைப்படம் எல்லா சிறப்புகளும் இருந்து மதுரைவீரன் காவியம் பெற்ற இமாலய வெற்றியை பாதி பெற்றிருந்தால் கூட சிறப்பாக இருக்கும்.
ஆனால் மதுரைவீரனில் தலைவர் மரணிக்கும் காட்சியை ஏற்றவர்கள்
ராஜாதேசிங்கில் ஏற்க முடியவில்லை.
1960 ல் இப்படைப்பு வெளியானது ...
இந்து மூஸ்லீம் என மதங்கள் சார்ந்த கதை அமைப்பு ...
அண்ணன் தாவுத்கான் மூஸ்லீம்...
தம்பி தேசிங்கு இந்து வாக இருப்பார்.
தலைவர் கதை மாற்றத்தை சரி செய்ய முற்பட்டார்.
1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம்
1959 ல் இன்பகனவு நாடகத்தில் கால்முறிவு..
1960 ல் பாக்தாத் திருடன் காவியத்தை அருமையாக முன் நின்று முடித்த வெற்றியை தந்தது.
ராஜா தேசிங்கில்
இரட்டை வேடமிட்டும்
கதை அமைப்பு அன்று இந்து முஸ்லீம் மக்கள் மனதை பாதித்தது என்றே சொல்லலாம்.
லேனா செட்டியார் பின்பு ஒரு நாள் ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் வீட்டுக்கு சென்று ராஜாதேசிங்கு பட நிலவரம் பற்றி பேசினார்.
எம்.ஜி.ஆர் இன்னும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என்றார்.
படத்தின் இழப்பு என்று சொல்லாமல் சொல்லிய லேனா அவர்களின் பேச்சை எப்படியே அறிந்த மக்கள் திலகம்
தாய் வீட்டில் அன்று இருந்து உள்ளார்.
உடனே
ஏ.எல் சீனிவாசன் அவர்களின் விட்டிற்கு உடனே காரில் பணத்துடன் வந்துள்ளார்.
ஏ.எல் எஸ் வீட்டு மாடியின் மேலே லேனா இருப்பதை அறிநத மக்கள் திலகம் கீழே உள்ள பணியாளரை அழைத்து நான் ராமசந்திரன் வந்திருக்கின்றேன் என காகிதத்தில் எழுதி முதலாளி ஏ.எல். எஸ்ஸிடம் கொடுங்கள் என்று சொல்லி உள்ளார் மக்கள் திலகம் அவர்கள்.
காகிதத்தை பார்த்த Als அவர்கள் லேனாவிடம்....
Mgr வந்திருக்கிறார் என்றார்.
உடனே லேனா நான் வந்தது Mgr க்கு தெரியவேண்டாம் என்று பக்கத்து ரூம்மில் போய் உட்கார்ந்துள்ளார்.
ஏ.எல்.எஸை யார் பார்க்க வந்தாலும் அவர் சொன்ன பிறகு தான் மேலே போகவேண்டும்..
ஆனால் மக்கள் திலகம் ஒருவருக்காக மட்டுமே கீழே வந்து என்ன விபரம் என கேட்டுள்ளார்.
மக்கள் திலகம் சொன்னார்...( ஏ.எல் எஸ்ஸை முதலாளி என தான் அழைப்பார்) முதலாளி எனக்கு நடந்தது தெரியும்..
அவரிடம் இந்த பெட்டியை கொடுங்கள்..
என்னால் அவருக்கு நஷ்டம் வரக்கூடாது.. நீங்கள் கொடுங்கள்...
நான் கொடுத்தால் வாங்கமாட்டார் என்று சொல்லி விட்டு (தான் நடிக்க வாங்கிய ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை) மக்கள் திலகம் அவர்கள் கொடுத்து விட்டு சென்றார்.
இந்த உண்மையை மறைந்த ஏ.எல்.எஸ். மகன் கண்ணப்பன்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
தன்னால் ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரகூடாது என்று எண்ணி வள்ளல் மக்கள்திலகம் அவர்கள் லேனா செட்டியாருக்கு செய்த உதவி வரலாற்று சிறப்பாகும்.
மேலும் ராஜாதேசிங்கு திரைப்படம் அதன் பின் பலமுறை திரைக்கு வந்து வசூலை படைத்துள்ளது.
மக்கள் திலகத்தின் பெருந்தன்மையை போல் வேறு எந்த நடிகரும் சினிமா உலகில் இல்லை....UR...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று. ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டு இருக்கிறது .ஆரம்பத்தில், திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவில்லை . வதைப்பட்டார். அவமானப்பட்டார். சிரமப்பட்டார் .இந்த முகம் சினிமாவிற்கு ஏற்ற முகமில்லை என்று விமர்சிக்கப்பட்டார் .இவரை ஹீரோவாக நடிக்க வைத்தால் படம் வெற்றி பெறாது என்று கருத்து வெளியிட்டனர் ஒரே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு கணைகள் வந்தவண்ணம் இருந்தன .ஒவ்வொரு நாளும் அவர் தூங்க போகும்போது நாளை விடியாதா என்ற கனவுடன் இருந்தார் .ஆனால் நாளை விடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது . நாடோடி மன்னன் படத்திற்காக கை நிறைய பணம் முன்வைத்து ,ஒரு நாளைக்கு 3 ஷெட்யூல் என்று பிசியாக இருந்த நேரத்தில் தன்னுடைய சொந்த* கருத்தை, கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லுவோம். எடுபடுமா இல்லையா என்று கவலைப்படாமல் கடைசிவரையில் பணத்தை இறைத்து, மூன்று முறை வெளியிடும் தேதிகளை தள்ளிப்போட்டு ,உத்தமபுத்திரன் படம் வெளியானதும் அதன் நகல் என்று சொல்லி விடுவார்களோ என்ற கவலையில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து .வெளியிட்டபின் ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லையானால் நாடோடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் .1958ல்* 25 லட்சம் செலவிடப்பட்டது .பிரம்மாண்டம் ,மெகா ஹிட் என்று சொல்லப்படும் படங்களுக்கு சமமானது .இந்த படத்தில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு லட்சிய புருஷனாக ,தான் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய உயிரினும் மேலான நடிப்பை ,கௌரவத்தை, நேரத்தை ,காலத்தை,குடும்ப சம்பாத்தியம் அத்தனையையும்**மூலதனமாக வைத்தார் .அப்படி ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கு இப்போது அத்தனை தைரியமிக்க ,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவரும் தயாராக இல்லை .
நாடோடி மன்னன் படத்தில் அவர் பாடியிருப்பார் . நானே போடப்போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் .எங்க வீட்டு பிள்ளையில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்*தெய்வத்தாய் படத்தில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் மூன்றெழுத்து என்பதற்கு கடமை, தி.மு.க. ,சினிமா, அண்ணா ,எம்.ஜி.ஆர். வெற்றி இப்படி சொல்லி கொண்டே போகலாம் .சில பாடல்கள் அவருக்காகவே எழுதப்பட்டது . அவருக்கு மட்டுமே பொருந்தும் .குறிப்பாக சொல்ல போனால் ,நான் செத்து பொழைச்சவன்டா ,எமனை பார்த்து சிரிப்பவன்டா எல்லா கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எல்லாம் சொல்லிய கொள்கைகள், தத்துவங்களை நான்கு வரி,ஆறு வரி* பாடல்கள் மூலம் சொல்லி முடித்து இருக்கிறார் .அரசிளங்குமரியில் ,பட்டு கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா என்ற பாடல் இன்றைக்கும் காலம் கடந்து பொது உடமை தத்துவ* கருத்தாக மக்களிடம் இவர் மூலம்* சென்று அடைந்துள்ளது ..கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களுக்கு சிலை வைக்க வேண்டி நிதி கேட்டு எம்.ஜி.ஆரை* சந்திக்க பால தண்டாயுதம், தா. பாண்டியன் இருவரும் செல்கிறார்கள் .அந்த ஜீவா என்ற தலைவரின் உருவச்சிலை அமைக்கும் செலவினை முழுவதும் தானே எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார் .அப்படி பொது உடமை கருத்துக்கள்,தத்துவங்கள் பற்றி பேசிய தலைவர்களை மதித்தவர் .பொது உடமை சிந்தனை உள்ள மணிப்பூரி எழுத்தாளர்களை மதித்தவர் .அதனால்தான் தன வீட்டு நூலகத்தில் லட்சக்கணக்கான ருபாய் மதிப்பில் புத்தகங்களை வாங்கி சேர்த்து , பி.எஸ்.ராமையா, ரவீந்தர் போன்றவர்களை வைத்து படிக்க சொல்லி அறிந்தவர் .அதற்காகவே வாழ்க்கையில் சிறிது நேரம் ஒதுக்கியவர் .* அவர்களுக்கும் தலா ரூ.1,000/- மதிப்பிலான புத்தகங்கள் அளித்து , அந்த கால கட்டத்தில் அவர்களின் குடும்ப நிர்வாக செலவிற்கான பண உதவிகளையும் செய்து சில முக்கியமான திரைப்படங்களையும் பார்த்தார் திரைக்கதையை தேர்வு செய்வதில் திறமையாளராக இருந்தார் .அதனால்தான் கதைகளை முடிவு செய்வதில் அவரின் தலையீடு இருந்தது .கதையை தேர்வு செய்தபின் கம்பெனியின் பெயர் வைப்பது ,பெயர் எத்தனை எழுத்துக்களில் இருப்பது ,பெயரில் உள்ள கதை எப்படி இருப்பது ,கதையில் எந்தெந்த இடங்களில் திருப்பங்கள் வருவது ,பாடல்கள் அமைவது எப்படி ,பாடல்களில் அரங்க அமைப்பு, பாடல் வரிகளில் அர்த்தம் எப்படி இருப்பது ,என்ன சொல்வது*,பாடுபவரின் தேர்வஎடிட்டிங் செய்வது எப்படி,சண்டை காட்சிகள் அமைவது எப்படி , எந்த லொகேஷன் ,வெளியூரில் படம் பிடிப்பது , படப்பிடிப்பை எந்தெந்த காட்சிக்கு எப்படி நடத்துவது ,எத்தனை நாள் கழித்து படம் வெளியிடுவது ,எந்தெந்த ஏரியாக்களுக்கு எப்படி விலை நிர்ணயிப்பது ,நடிகர், நடிகைகள் சம்பள நிர்ணயம் செய்வது என்று ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான அனைத்து விவரங்களும் நூலிழையில் அறிந்து வைத்திருந்தவர் திரைப்பட களஞ்சியம் ஆகிய எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு* சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் 1971ல் நடித்த ரிக்ஷாக்காரன் படத்திற்காக கொடுக்கப்பட்டது .பரத் என்றால் உருதுவில் நிறைவு என்று அர்த்தம் .திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர். நிறைவானவர் என்பதற்காகவே பாரத் பட்டம் வழங்கப்பட்டதாக அவருடன் இருந்த ரவீந்திரன் பேட்டி அளித்துள்ளார் .*
திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி " புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும்*ஜெயலலிதா*அவர்களுக்கு ம் உள்ள மாறுபாடுகள் என்னவென்றால் தலைவரிடம்*ஜனநாயகத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சாதிக்க எண்ணியவர் .ஜெயலலிதா அவர்கள் ஜனநாயகம் கலந்த*அதிகாரத்தை பயன்படுத்துவார் .ஜனநாயகம் பற்றி பேசுவார் .அதன்படி*வேலைகள்*நடக்கவில்லை*என்றால் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த கூடியவர் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொறுத்தவரை*சர்வாதிகாரம் செய்து முரசொலி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சித்திரவதை செய்தார்*என்று கண்டபடி*முரசொலியில் எழுதுகிறார்கள் .ஜெயலலிதா அவர்கள் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்தார்*என்பதை வைத்து திரு.நடராஜன் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து கடிதத்தை*பறிமுதல் செய்து முரசொலியில் பிரசுரம் செய்யும்படி செய்தார்*கருணாநிதி .இந்த செயலை*சர்வாதிகாரம் என்று நாங்கள் சொன்னால்*தி.மு.க.வினருக்கு*கோபம் வரும் புரட்சி தலைவரும், ஜெயலலிதாவும் சட்ட*ரீதியாக எந்த செயலை செய்தாலும்* அது சர்வாதிகாரம் என்று விமர்சிக்க கூடிய*தி.மு.க.வினர் இன்றைக்கும் இருக்கிறார்கள் .* இன்றைக்கு கருணாநிதியை பற்றி நாங்கள் குறை சொல்வதில்லை .ஜெயலலிதா*பற்றியோ*.[புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றியோ*யாரும் எந்த குறையும்*சொல்வதில்லை . காரணம் அவர்கள் எல்லாம் அமரர் ஆகிவிட்டார்கள்*
ஜெயலலிதா அவர்களை பொறுத்தவரையில் நமது விருப்பத்தை சொல்ல வேண்டும் . நமக்கு அந்த தகுதி இருக்கிறது என்று தெரிந்தால் கொடுத்துவிடுவார்கள் .நானும் ,பொள்ளாச்சி ஜெயராமனும் வாரிய தலைவர்கள் பதவியை*.தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் பெற்றிருக்கிறோம் என்று சொல்லியபோது ஜெயராமனை டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் தலைவராகவும்*என்னை வணிகவரித்துறை துணை* தலைவராக நியமித்தார்கள் .ஜெயலலிதா அவர்கள் அந்த துறைக்கு தலைவராக இருந்தார் .* 2 ஆண்டுகள் பதவியில் இருந்தோம்* 1996ல் தி.மு.க.தேர்தலில் வெற்றி பெற்றதும் சிலர் கட்சி தாவினர்கள் .அப்போது* உடுமலையில் இருந்து தொலைபேசியில் நீங்கள் தைரியமாக இருங்கள். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்* .அச்ச படாதீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம் என்று ஜெயலலிதா அவர்களுக்கு சொல்லுமாறு அவரது உதவியாளர் மூலம் சொல்ல சொன்னேன் .அவர் அதை தெரிவித்திருந்தாரா என்பது தெரியாது .பிறகு 1996 இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்தார்கள் தி.மு.க.ஆட்சியில் .அவருக்காக போராடி ,சென்ட்ரல் அருகில் உள்ள மத்திய சிறை சாலையில் அவரை பார்க்க சுமார் 100 பேர்கள் வந்திருக்கிறோம் என்று எழுதி கொடுத்தோம் .* அந்த 100 பேர்களில் எனக்கு,முன்னாள் அமைச்சர் பட்டாபிராமன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகிய மூவருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது அவர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததால் ,சிறை அதிகாரிகள், காவலர்கள் மரியாதையாகத்தான் நடத்தினார்கள் .அவர்கள் மிகவும் வருத்தமாக இருந்த நேரம் .எங்களிடம் ஆலோசித்து செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றி சொன்னார்கள் .அப்போது ராயப்பேட்டையில் சுல்தான் என்பவன் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் தீ குளித்துவிட்டான் .அது விஷயமாக என்னையும் ,சுலோச்சனா சம்பத் அவர்களையும் சிறைக்கு வரச்சொல்லி, கலந்து ஆலோசித்தார் .சுல்தான் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி உத்தரவிட்டார் .தொகை எவ்வளவு என்று நினைவில்லை .அவர் வீட்டிற்கு இருவரும் சென்று நிதி அளித்தோம் .பின்னர் கழக பணியில் ஈடுபட்டிருக்கும்போது* ஜெயலலிதா* அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனபின் ,அண்ணன் காளிமுத்து ,சி.எஸ். ஆனந்தன் என்பவரை எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கும்படி*வேண்டுகோள் வைத்தார் .உடனே ஜெயலலிதா ,அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் திரு.லியாகத் அலிகான் தான் என்று சொன்னதும் காளிமுத்து சரி,அப்படியே செய்யுங்கள் .அவர் பொருத்தமானவர்தான் என்றார் ..அந்த பதவியை நான் கேட்காமலேயே ஜெயலலிதா கொடுத்தார் .அதிலும் சில முக்கிய பணிகளை செய்ய சொன்னார்*
.1986லேயே, ஜெயலலிதா அவர்கள் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும்போது தலைவரின் அனுமதியோடு ,தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு பணிக்கப்பட்டனர் . அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு முன்பாக இதுபற்றி பேசி கொண்டிருக்கிறேன் .அப்போது ஒரு ஹாட்லைன் உண்டு .அதாவது தலைவர் போனை எடுத்தால் ஜெயலலிதா பேசுவார் . ஜெயலலிதா போனை எடுத்தாரேயானால் தலைவர் பேசுவார் .அப்படி ஒரு சிஸ்டம் இருந்தது .என்னை முன்னே வைத்து கொண்டு ஜெயலலிதா ,தலைவரிடம் ஹாட்லைனில் தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்ய யாரை அழைத்து கொண்டு செல்வது என்று கேட்டபோது , லியாகத் அலிகானையும், ஜெ.சி.டி.பிரபாகரனையும் அழைத்து செல் என்றார் .அந்த சூழ்நிலையில் கூட எங்களை தலைவர் ஞாபகம்*வைத்து சிபாரிசு செய்தார் .நாங்கள் ஒருவாரம் பிரச்சாரத்திற்கு சுற்றுப்பயணம் செய்தோம் .முதலில் மதுரையில் இறங்கி, நவநீத கிருஷ்ணன், செல்லூர் ராஜு, சேடப்பட்டி முத்தையா , திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு ,போகிற வழியில் நவநீத கிருஷ்ணன் வீட்டிற்கும் ,பிறகு நான் அழைத்ததின் பேரில் என் வீட்டிற்கும் வந்தார் .அப்போது உடன் சசிகலாவும் வந்தார் .அவர் படி ஏற முடியாத சூழலில் காரிலேயே அமர்ந்துகொண்டார் .ஜெயலலிதா மேல் மாடியில்* உள்ள என் மாமனார் வீட்டிற்கு செங்குத்தான படியில் சிரமம் பார்க்காமல் ஏறி வரும்போது கால் செருப்பு தடுக்கி கீழே விழும் சமயம் ,பின்னால் வந்த கரூர் நாகராஜன் என்பவரும் , எனது மைத்துனர் சையது தாஜுதீன் என்பவரும்நல்ல வேளையாக* சட்டென அவரை பிடித்து கொண்டனர் .எங்கள் இல்லத்திற்கு வந்து என் மாமனார், மாமியார் ,உறவினர்கள் அனைவரையும் சந்தித்து எனக்கு பெருமை சேர்த்தார் .அப்படி தொண்டர்களை மதித்த தலைவியாக திகழ்ந்தார் .அப்போது என் மனைவி உடுமலையில் இருந்தார் .எங்கள் வீட்டில் ஜெயலலிதா அவர்கள் அரை மணி நேரம் மேலாக இருந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது*எங்கள் இல்லத்திற்கு முன்பாக இரண்டாயிரம் பேர் கூடிவிட்டனர் . இந்த நிகழ்வு என் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நினைவு. நாங்கள் அளித்த ஸ்னேக்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் அருந்தினார் .பின்னர் லியாகத் ,நான் சென்ற பின்னர் ,உங்கள் மனைவிக்கு உங்களால் பதில் சொல்லமுடியாது .அவர்கள் இல்லாத நேரத்தில் இங்கு என்னை அழைத்து வந்து விட்டீர்கள். பரவாயில்லை சென்னைக்கு வரும்போது என் இல்லத்திற்கு உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார் .அதன் பிறகு, ராமநாதபுரம், சிவகாசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் செய்து அவர் பேசுவதற்கு முன்பாக நானும் , ஜெ.சி.டி.பிரபாகரனும் பேசி ,அந்த பேச்சுக்களை டேப் ரிக்கார்டரில் பதிவிட்டு தலைவருக்கு அனுப்பி ,அதை கேட்டு அன்றன்றைக்கே அவர் திருத்தங்கள் சொன்னால் ஜெயலலிதா அவர்களின் யோசனைப்படியும் நாங்கள் பேசிய காலமெல்லாம் உண்டு .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .
திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை* கல்யாண சுந்தரம் எழுதிய திருடாதே பாடலில் வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற வரிகளை எம்.ஜி.ஆர் பாடி நடித்தார் . இந்த வரிகள் மற்றவர்கள் மறந்தாலும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் தன் வாழ்க்கையில் மறக்கவில்லை .அவர் பணநெருக்கடியை சந்தித்து இருந்தாலும், அவரை தேடி உதவிக்காக வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பி சென்றதாக வரலாறே இல்லை .காரணம் என்னவென்றால் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல அவர் கொடுக்க கொடுக்க பணம் ஒரு பக்கம் சுரந்து கொண்டே இருந்தது .ஒவ்வொருவரையும் தேடி தேடி அழைத்து கொடுத்தார் என்று பல வரலாறுகள் சொல்லுகின்றன .ஏனென்றால் அவரிடம் கொடுக்கும் குணம் இருந்தது .தன்*வாழ்நாளெல்லாம் கழித்த ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை தன்னால் சரியாக பேசமுடியாத காலத்தில், வாய்ப்பேச்சும், காதால் கேட்பதை அறிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததால்*வாய்பேசமுடியாத ,காது கேளாத மாணவ மாணவியருக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து ,இலவச கல்வி அளித்து, அதை பராமரிக்க வேண்டிய உதவிகள், வழிவகைகள் கூட தன்* உயிலில் குறிப்பிட்டு இருந்தார் . இன்றைக்கும் அந்த பள்ளிக்கூடம் ஒரு வரலாற்று ஆவணமாக நம் கண் முன்னே இயங்கி கொண்டுவருகிறது .அதனால்தான் அவர் மறைந்தும் மறையாத மாமனிதராக திகழ்கிறார் .*
கடைஏழு*வள்ளல்கள் பற்றி நாம் புத்தகங்களில் படித்து அறிந்துள்ளோம் . ஆனால் வாழ்ந்த* எட்டாவது வள்ளல் என்ற பட்டத்திற்கு உதாரணமாக ஒருவரைத்தான்* குறிப்பிட முடியும் அவர்தான் எம்.ஜி.ஆர். குற்றால*சாரல், குறவஞ்சி பாட்டு ,வாசலுக்கு வந்து வானமே கேட்டாலும் மழை போல் பொழியும்*எட்டாவது வள்ளல் என்று சொல்வார்களே அது அவருக்கு*எத்தனை பொருத்தம் என்பது*அவரோடு*வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல ,அவரால்* இன்றைக்கும்*அவர் பெயார் கொண்டு* ஏன்* என் போன்றவர்கள் எல்லாம் அவரால் வழிகாட்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதுதான் சகாப்தம் நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி, சாதனை .அந்த சாதனைகள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*;/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது*- மாடப்புறா*
2.எங்கே, என் இன்பம் எங்கே* - நாடோடி மன்னன்*
3.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை*- நேற்று இன்று நாளை*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
5.சம்மதமா,நான் உங்கள்கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*
-
தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.
படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.
"நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.
அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
"பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
நாட்கள் 67 416715.90
கிருஷ்ணா. " 67. 265278.45
மேகலா. " 53. 187112.65
---------------------------
மொத்தம் 187. 869107.00
ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டரை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.
"எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.
"பாபு"வுக்கு வசூல் பட்டரையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.
50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
"நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்..........ksr...
-
# கோயபல்ஸ் கூட்டத்தின் புனை சுருட்டுகளும், புதுக்கதைகளும் #
சாதனை என்ற பெயரின் மற்றொரு பெயரே தலைவர் என்ற
சொல்தான் என்பது அகில உலகுக்கே தெரியும்,
ஆனால் இப்போது முகநூலிலும், மற்ற சில
ஊடகங்களிலும் இதிலெல்லாம் பதிவுகள் போட்டால் யார் நம்மை கேட்கப் போகிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்
தமிழில் 288 படத்துக்கு மேல் நடித்தும் எவனும் பைசாவுக்கு மதிக்காத கணேசன் உயிரோடு இருந்த காலத்திலே கிடைக்காத
பெருமை ( அது சரி இருந்தால் தானே ) புகழ்? இவற்றை சேர்க்க
ஒரு சில கோயபல்ஸ் பதர்கள் இப்போது புதிதாக கிளம்பியிரு க்கிறார்கள் அதுவும் எப்போதிலிருந்து?
கர்ணன் படத்தை டிசிட்டல் செய்து ஸ்கூல்
பிள்ளைகளுக்கு இலவச டிக்கெட் கொடுத்து பார்க்க வைத்து ஒரு காட்சி இரண்டு காட்சியாக ஒரு
150 நாள் தள்ளி கரை சேர்த்த பின்பு கொஞ்சம் பேர் தலையெடுத்திருக்கிறார்கள்,
அதிலும் குறிப்பாக கர்ணனுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த பரசுராமர் பெயரில் எழுதும் ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் எழுதும் எழுத்துக்களைப் பார்த்தால் அதைப் படிக்கும் நாலைந்து பேருக்கும் தலை சுற்ற லே வந்து விடும் போல்
இருக்கிறது,
கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்ட ஒரு பதிவில் "திரிசூலம் "படம் 6கோடி ரூபாய் வசூல் செய்தது என்று ஜீரணிக்க முடியாத ஒரு
பதிவை போட்டிருந்தார்
இந்த புளுகு மூட்டை யின் அடையாளம்,
தினத்தந்தி யில் கூட 2கோடியோ 3கோடியோ
தான் போட்டிருந்தா ர்கள், விக்கிபீடியா கூட அதை உறுதி செய்துள்ளது, ஆனால் இந்த புண்ணியவான் போட்ட கணக்கை பார்த்தீர்களா அறிவுல க நண்பர்களே,
எவன் சொன்னாலும் சரி நாங்க ஒரு கணக்கு போடுவோம் அதுதான் உண்மை என்று கொடி பிடிக்க நாலைந்து பேர்,
இது எப்படி இருக்கிறது என்றால் "கல்யாணப் பரிசு " படத்தில் தங்கவேலு மன்னாரன் கம்பெனியில் மேனேஜர் வேலை பார்ப்பதாக மனைவி யிடம் புளுகியிருப்பார்
ஒரு நாள் நிஜமான மேனேஜரான சரோஜா வின் மாமனாரிடம் வசமாக மாட்டிக் கொள்வார், அப்போது உண்மையானவர் கேட்பார் நீங்கள் எந்த கம்பெனியில் வேலை
பார்க்கிறீர்கள் என்று, உடனே சரோஜா சொல்லுவார் மன்னாரன் கம்பெனி யில் மேனேஜராக இருக்கிறார் மாமா என்றதும் அவர் தி டுக்கிட்டு சொல்லுவார்
நான்தானே அந்த கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன் என்றதும்
இடி விழுந்தது போல் ஜெமினி கேட்பார் சார் நீங்க எந்த மன்னாரன் கம்பெனியை பத்தி சொல்றீங்க என்றதும் அவர் சொல்லுவார் என்னப்பா இது மெட்ராஸ்ல இருக்கிறதே ஒரு மன்னாரன் கம்பெனி தானே என்றதும் தங்கவேல் அடிப்பார் பாருங்கள் ஒரு டூப்பு
அதப்பத்தி நமக்கென்ன டா நீ நம்ம கம்பெனியப்
பத்தி சொல்லேண்டா
என்று அசராமல் சொல்லுவார்,
அதே போல் இவர்களாக என்னவோ சிவாஜி சினிமா உலகத்தில் இருந்த போது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரிய சாதனைகளை செய்தது மாதிரி இவர்களாக எல்லா படங்களுக்கும் புதுசாக வசூல் தயாரித்து ( தகவல் உதவிக்கு ஒரு அல்லக்கை) அதை வேறு வெட்கமில்லா மல் வெளியிட்டு அவர்களே மாலை போட்டு அவர்களே கை தட்டிக் கொண்டு மித மிஞ்சிய மதி மயக்கத்தில் ( மது மயக்கம் அல்ல ) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கேட்டால் உலகத்தில் மற்ற எல்லோரும் பொய் சொல்பவர்கள், இவர்கள் மட்டும் அரிச்சந்திரன் அய்யா பக்கத்து வீட்டுக் காரர்கள் மாதிரி வசனம் பேசுவது,
என்ன பொழப்புடா உங்கள் பொழப்பு?
இந்த பக்கத்தில் எங்கள்
சங்கர் சார் மூஞ்சி யிலேயே குத்துவது மாதிரி ஆதாரங்களை அள்ளி தெளித்தாலும்
எரும மாட்டுல மழை பெஞ்சது மாதிரி திரும்ப த் திரும்ப அதே பல்லவி யை பாடிக் கொண்டிருப்பது
இந்த மாதிரி இருட்டுல இருந்து கத்தி சுழற்றுவதற்குப் பதில் பொது வெளியிலோ அல்லது வெகு ஜனப் பத்திரிக்கைகளிலோ உங்கள் அய்யனைப் ஏதாவது ஒரு செய்தி வருவதுண்டா?
நீங்கள் இப்படி எல்லாம் செய்தி கொடுத்தால் அவனவன் காறித் துப்ப மாட்டான்?
வசூல் விபரம் கொடுக்கிறார்களாம் அதி புத்திசாலிகள்
ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் (நன்றாக கவனியுங்கள் ஏதாவது செண்டரில் அல்ல ) தப்பித் தவறி தலைவர் படத்தின் வசூலை கொஞ்சம் முந்தி விட்டால் போதும்
உடனே வாந்தி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது ( உதாரணம் மதுரை யில் மண்ணின் மணப் படம் ஒன்று தலைவரின் ஒரு படத்தை விட கொஞ்சம் வசூலில் கூடியது உடனே வெறியுடன் அதை மட்டும் எடுத்துப் போட்டு அல்ப்பைகள் அற்ப சந்தோஷம் அடைவது அதே நேரம் தமிழ் நாடு முழுக்க வசூலை வெளியிடுங்கள் என்று சொன்னால் உடனே பதுங்கு குழியில் போய் பதுங்கிக் கொள்வது
இப்படித்தான் சென்னையில் மட்டும் திருவிளையாடல் படத்தை வசூலை கூட்டிக் காண்பிப்பது,
தங்கப்பதக்கம் படத்தையும் சென்னையில் மட்டும்
கூட்டிக் காண்பிப்பது ( இவ்வளவுக்கும் இந்த இரண்டு படமும் அவர்களின் சொந்த வாந்தியிலும், குத்தகை அரங்குகள் கிரவுன், புவனேசுவரி யிலும் வெற்றி கரமாக ஓட்டப் பட்டது, அதுவும் தகரத்தின் கதையை கேட்டால் நமக்கு தலை மட்டுமல்ல உலகமே சுற்றியது மாதிரி இருக்கும், அது என்னடா சிதம்பர ரகசியம் என்று பார்த்தால் கடைசி நாள் காட்சியில் கூட அரங்கம் நிறைந்திருக்கிறது, (175)
எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்
ஆனால் மற்ற ஊர் அரங்குகளில் பார்த்தால் "தகரத்தை " பழைய இரும்பு எடுத்துக்கிட்டு கிழங்கு கொடுக்கிறவன் கூட வாங்க தயாராயில்லை
இப்படி ஒரு பில்டப்பு,
அட அல்ப்பைகளா )
அப்புறம் கொஞ்ச காலம் கணேசன் ரசிகர் மன்ற வேலை பார்த்த சித்ரா லட்சுமணன் எந்த ஆதாரமும் இல்லாமல் "வசந்த மாளிகை " படம் முதன் முதலாக 200 காட்சிகள் அரங்கம் நிறைந்த சாதனையை செய்தது என்று சொல்லி விட்டால் உடனே அதை எடுத்துப் போட்டு சிலிர்த்துப் போவது,
ஆனால் அதே சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் கர்ணனை விட அதிக வசூல் செய்தது என்று சொன்னால் மண்ணை வாரித் தூத்துவது,
விக்கி பீடியா காரன் சொல்லுவதையும் நம்ப மாட்டோம்,
யூ டியூப் செய்திகள் சேனலில் 1947 முதல் 1978 வரை பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி யார் என்று பட்டியல் இட்டால் எல்லா ஆண்டையும் தலைவருக்கு கொடுத்து விட்டால் பாவம் கணேசன் பிள்ளைகள் என்று இரக்கப் பட்டு ஒன்றிரெண்டு இடங்களை ( உண்மையை சொல்லப் போனால் அதுவும் ஜெமினிக்கு
போக வேண்டியது )
கணேசனுக்கு கொடுத்திருக்கிறது,
அதையும் ஏற்பார்களோ என்னவோ இந்த கோயபல்ஸ் கூட்டம்,
கணேசன் படங்களின் நிலவரம் என்ன என்ற விபரத்தை அவர்களே பதிவிட்டு உள்ளார்கள்,
மீரான்சாஹிப் தெருவில் உள்ள விநியோக அலுவலகம் ஒன்றில் போய் ஒரு கணேசன் படம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம்,
சிவாஜி படத்தை எவனும் பார்க்க மாட்டான் அதெல்லாம் அந்த மூலையில் கிடக்கிறது, எனவே நீங்கள் "சங்கே முழங்கு,
ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்களாம்,
இதை விட ஒரு அவமானம் உலகத்தில் உண்டா?
இதனால்தான் ஆரூர் தாஸ் சொன்னார் " எம். ஜி. ஆர் படம் தோல்வி என்று சொல்லப்பட்டாலும் அது " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்பதைப் போன்றது " தோல்வி என்று அவருக்கு எந்த படமும் இல்லை என்று
ஆணித் தரமாக எழுதினார்,
முக்தா சீனிவாசன் ஒருபடி மேலே போய்
"ஒரு எம். ஜி. ஆர் படம் மற்ற நடிகர்களின் 25 படத்துக்கு சமம் " என்று
கணேசனின் மூக்கை உடைத்து கதற விட்டார்,
அடுத்தது எங்கள் தரப்பு
கொடுக்கும் ஆணித் தரமான ஆதாரங்களுக்கு தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு காமெடி செய்வது போல
செய்து தன் தோல்விகளை மறைக்க ப் பார்ப்பது ( இதை விட
கேவலம் எதுவும் இல்லை )
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்
தலைவரைப் பற்றி ஆபாச பதிவுகள் போடுவது,
ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்த மாதிரி கைப்பிடி இல்லாத கத்தியை வைத்து விளையாட்டுக் காட்டுவது மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்,
உடையவனையே பதம் பார்த்து விடும் கவனம்
எங்களுக்கும் "ரத்ன" சுருக்கமாக " பப்பி " ஷேமில் தொடங்கி " காம தேனுவும், சோம பானமும் பாடி "ஸ்ரீ " யே என்று "சி.ஐ. டி "போட்டு
பதிவு போட முடியும்(இதில் இடைச் செருகல்கள் வேறு நிறைய இருக்கிறது ) என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்
அந்தக் கால மஞ்சள் பத்திரிக்கை செய்திகளை இந்த மாதிரி அரங்கேறச் செய்வது " புலியின் கடுங் கோபம் தெரிஞ்சிருந்தும் வாலைப் புடிச்சி ஆட்டுவதற்கு சமம் " என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
தலைவரின் பக்தன்,
ஜே.ஜேம்ஸ் வாட்..........
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/10/20அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------
நாளுக்கு நாள், நாடு ,கடல் தாண்டி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரவேற்பு பெருகி கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆர். திரைப்படங்களை பார்க்க வருபவர்கள் அதை கேளிக்கை அரங்கமாக நினைக்காமல் திருக்கோயிலாக நினைத்தார்கள் .அதனால்தான்1962ல்* அவர் நடித்த பாசம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இறுதியில் இறந்துபோகும் காட்சியை ரசிகர்கள் ஏற்க மனமில்லாமல் துவண்டு போனார்கள். படம் சராசரி வெற்றியை பெற்றது . 1953ல் வெளியான நாம் திரைப்படம் ,எம்.ஜி.ஆருடன்*மற்றவர்கள்* கூட்டு சேர்ந்து தயாரித்து இருந்தாலும் அதில் எம்.ஜி.ஆர். மிக கொடூரமான முகம் கொண்டவராக நடித்ததால் ரசிகர்களின் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லைஏனென்றால் எம்.ஜி.ஆரை ஒரு அலங்கார கடவுளாக நினைத்தார்கள்*.எப்படி தங்களின் கடவுளை ஒருவர் அலங்கரித்து ,தங்களுக்கு வேண்டிய மாதிரி மேளதாளத்துடன், உற்சாகத்துடன் கொண்டாடுவார்களோ அப்படிதான் கொண்டாடினார்கள் . ஒரு கால கட்டத்தில், எம்.ஜி.ஆரின் படப்பெட்டிபேருந்து நிலையத்திற்கு வந்ததும் ,அங்கிருந்து* ,யானை மீதோ, குதிரை வண்டி* மீதோ வைத்து,தாரை ,தப்பட்டை முழங்க* ஊர்வலமாக திரை அரங்கிற்கு* கொண்டுவந்த** காலம் ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும் .*
மக்களை காப்பாற்றத்தான் சட்டங்கள் இருக்கின்றனவே தவிர சட்டத்தை கொண்டு மக்களை துன்புறுத்த கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிக தெளிவாக இருந்தார் .அதனால் தான் நாடோடி மன்னன் படத்தில் அவர் பேசும் வசனங்களில்* சட்டங்கள் இயற்றுவது மக்களுக்காகத்தான் என்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது, திருச்சியில் உள்ள கடை தொழிலாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது .அவர்களுக்கு வார விடுமுறை கிடையாது .இ.எஸ்.ஐ.,பி.எப். போன்ற பல்வேறு சலுகைகள் கிடையாது .இந்த பிரச்னைகளை விவரித்து மனு ஒன்றை ,அண்ணா தொழிற்சங்க தலைவராக இருந்த ரங்கநாதன் என்பவர் ,எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து கொடுக்கிறார் .திருச்சி ரயில் நிலையத்தில் . இறங்கும்போது*அந்த மனுவை வாங்கிய* எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் வைத்து கொள்கிறார் .ஒருவேளை முதல்வர் எங்கே மனுவை படிக்காமல், பார்க்காமல் போய்விடுவாரோ என்று அவரை தொடர்ந்து தேடி போய் மன்னார்புரம் என்கிற அரசு விடுதியில் எம்.ஜி.ஆரை சந்திக்கிறார் .நீங்கள் ஏற்கனவே மனுவை கொடுத்துவிட்டீர்களே.என்ன விஷயம் என்று கேட்க,,இல்லை ஐயா, அது கடை தொழிலாளர் பிரச்னை பற்றியது என்றவுடன் ,எம்.ஜி.ஆர். குறுக்கிட்டு நீங்கள் என்னிடம் மட்டுமா மனு கொடுத்துள்ளீர்கள்,அன்பில் தர்மலிங்கம் மற்றும் சிலரிடம் கொடுத்துள்ளீர்கள் .உங்கள் மனுவை நான் பார்த்துவிட்டேன் .நிச்சயம்*நடவடிக்கை எடுப்பேன் முதல்வர் எங்கே தனக்குள்ள பரபரப்பான செயல்பாடுகளில் மனுமீது நடவடிக்கை எடுக்காமல் போய்விடுவாரோ என்ற*கவலையில் பதற்றத்தோடு திரும்புகிறார் .ஒரு சில நாட்களில் ஒரு கடையில் நண்பர்களுடன் தேநீர் அருந்தும்போது ,ஒரு நண்பர் ஓடி வந்து ரங்கநாதா நீ கொடுத்த மனு சட்டமாகிவிட்டது என்கிறார் .கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை .மருத்துவ விடுப்பு, இ .எஸ்.ஐ.,பி.எப் என்பது போன்ற சலுகைகளை சட்டமாக்கி, முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானமாக* அறிவித்து இருக்கிறார் .சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆரால்* தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ,அந்த செய்தி கிடைத்ததும் ,கடை ஊழியர்கள் ,தலைவர் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .தான் நினைத்ததை, அளித்த மனுவை சட்டமாக்கி,தீர்மானம் நிறைவேற்றி கடை ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்திய ரங்கநாதன் பெருமகிழ்ச்சி அடைந்தார் . இப்படி மக்களுக்கான சட்டங்களை, மக்களுக்காக, மக்களுக்கே ,இயற்றி நிறைவேற்றியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதும், தனிக்கட்சி அண்ணா தி.மு.க. என்று ஆரம்பித்தார் .துக்ளக் பத்திரிகையில் ஒரு வாசகர் கடிதம் எழுதுகிறார் .எம்.ஜி.ஆர். முதல்வராவது போல எனக்கு ஒரு கனவு வந்தது என்று .அதற்கு பதில் சொன்ன ஆசிரியர் சோ, நாடு எவ்வளவு விபரீதமாக போய்க்கொண்டிருந்தால்* உங்களுக்கு இப்படியான ஒருபயங்கர* கனவு வரும் என்று பதில் சொல்லி கேலி செய்கிறார் .அதே சோதான் .எம்.ஜி.ஆர்.முதல்வராகிய பின்னர் எம்.ஜி.ஆர். மக்களால் நேசிக்கப்படும் ஒரு மாபெரும் தலைவர் என்று கருத்து வெளியிட்டார் .இப்படி வேடிக்கையாக பேசியவர்கள் கிண்டல் கேலி செய்தவர்களை எல்லாம் வாயடைக்க செய்தவர் எம்.ஜி.ஆர். ஏனென்றால்,இவர்களெல்லாம் நினைப்பது போல எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பில் முழுமை பெறாவிட்டாலும் ,தன்* வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம் அறிவுத்திறனை பன்மடங்கு பெருக்கி படிப்பாளியாகி விட்டார் .அதனால் ஒன்றும் தெரியாதவர்.விஷயங்கள் புரியாதவர் என்று சொல்வதற்கில்லை .*அதுமட்டுமல்ல எந்த நிகழ்ச்சியிலும், எந்த துறையிலும் எந்த விழாவிலும் எந்த விஷயம் குறித்தும் சிறிது நேரம் உரையாற்ற கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தது* 1954ல் கூண்டுக்கிளி படத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த போது படப்பிடிப்புக்கு வரும் சமயம் எம்.ஜி.ஆர்.அவர்களின் கைகளில் குறைந்த பட்சம் சில புத்தகங்கள் இருக்கும் .* இருவரும் மிக பிரபலமாக இருந்தாலும் மரியாதை விஷயத்தில் இருவரும் சோடை போனவர்கள் அல்ல .படப்பிடிப்பின் இடைவேளையில் சில சமயம் எம்.ஜி.ஆர். புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பார் . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் இருந்து சுமார் 100 அடி தூரம் தள்ளியிருந்து* சிவாஜிகணேசன் புகை பிடிப்பாராம் . காரணம் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது இருந்த மரியாதை .எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்குமோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அறிவுத்திறன் வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் படிப்பாராம் .எம்.ஜி.ஆரும் ,எஸ்.எஸ்.ஆரும்* ஒரு காலத்தில் தி.மு.க.வில் இருந்தபோது மயிலை காவல் நிலையத்தில் சிறையில் சில நாட்கள்*இருக்கும்போது தன் உதவியாளரிடம் வயிற்று பசிக்கு உணவு கேட்க,அவரும் ரொட்டியும், பழங்களும் வாங்கி தந்தார் .வயிற்று பசி தீர்ந்தது .இப்போது அறிவுப்பசி எடுக்கிறது .என்று உதவியாளரிடம் சொன்னார் .இப்படி ஒய்வு நேரங்களில்* புத்தகங்கள் படித்து புத்தகப்புழுவாக இருந்தார் எம்.ஜி.ஆர்*இந்த விஷயங்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் மிக பெரிய தத்துவங்கள்,விஷயங்களை தன் திரைப்படத்தில்அவர்* புகுத்துவதற்கு வழிகாட்டியாக ,வசனங்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக இருந்தது*
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையிலேயே எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .ஆனால் சில நாட்கள் கழித்து தலைவரிடம் பத்திரிகை நிருபர்கள் ,நீங்கள் வலம்புரி ஜானுக்கு, லியாகத் அலிகானுக்கும் அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்படுகிறதே, உண்மையா* என்றுகேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர்.* .வலம்புரி ஜான் தாய் வார இதழின் ஆசிரியராக இருக்கிறாரே அவருக்கு எப்படி தர முடியும் என்று பேட்டியை முடித்துவிட்டார் .என்னை பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் எனக்கு மந்திரி பதவி தரப்போவதாகத்தானே அர்த்தம். அந்த வகையில் நிருபர்கள் என்னை கேட்டார்கள் .நான் அக் ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருக்கும் பட்சத்தில் தலைவர் நியமித்த பதவியில் நிறைவாக இருக்கிறேன் .எனக்கு மந்திரி பதவியில்* உண்மையில்**நாட்டம் இல்லை .எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய பேச்சுக்கள் அடங்கிய கேசட் என்னிடம் உள்ளது .நண்பர் தேவநாதன் என்பவருக்கு அனைத்தும் தெரியும் .நான் முன்பே சொன்னது போல கடலூர் மாநாட்டில் என்னை பற்றியும்* ,ஜெயலலிதா பற்றி யும் தலைவர் பேசிய கேசட்டை நான் யாருக்கும் காண்பித்ததில்லை .காரணம் அந்த பேச்சுக்களால் நான் உயர்வு அடைந்திடுவேனோ என்ற அச்சத்தில் சிலர் என்னை விட்டு விலகி சென்றார்கள். நட்பில் இல்லை .என்னை ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .ஆனால் சிலர் என்னை ஆதரித்தார்கள் . நான் எப்போதும் கட்சியில் ஒரு பிடிப்பாக இருப்பவன் .டான்சி வழக்கில் ஜெயலலிதா அவர்களை கைது செய்தபோது என்னையும் பிடித்து அடித்து உதைத்தார்கள் .அப்போது அடித்த அடி சாதாரண அடியல்ல .* நான் பொதுவழியில்ஐ.ஜி.உத்தரவு மீறி* பேசிக்கொண்டிருந்தபோது டி.சி.ஒருவர் வந்து கலைந்து போங்கள் என்று சாதாரணமாக பேசியவர் திடீரென கண்களை சிமிட்டி உத்தரவிட காவலர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தியதால் கை .கால்களில் பலத்த காயங்கள், கண்ணில் வீக்கம் . தினசரியில் கூட செய்திகள் வெளியாகின .அப்போது தினகரன் முக்கிய இடத்தில உள்ளார் .தினகரன் சொன்ன தகவலின்படி அறந்தாங்கியில் இடைத்தேர்தல் வருகிறது .அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் சக நண்பர் அன்பரசன் போட்டியிட, நானும் பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராக இருந்த நேரத்தில் உங்களை கைது செய்து ,சித்ரவதை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன .ஆகவே நீங்கள் தலைமறைவாக இருங்கள் .சிக்கி கொள்ளாதீர்கள் என்று தகவல் தருகிறார் .பின்னர் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு* வாய்தா வாங்கி வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ,என்னை விடுதலை செய்ய காரணமாக இருந்தவர் சேகர் பாபு ,தற்போது அவர் தி.மு.க.வில் இருக்கிறார்
*.கருணாநிதியை நான் சந்திக்கும்போது கூட எம்.ஜி.ஆர். இயக்கம் என்றுதான் பெயர் வைத்திருந்தேன் .கருணாநிதி கூட என்னிடம் நீ கட்சி நடத்த முடியாமல் அவதிப்பட்டு தி.மு.க.வில் இருப்பாய் என்று நினைத்திருந்தேன் என்று சொன்னதற்கு அண்ணே ,நான் எம்.ஜி.ஆருக்காக தான் உயிர் வாழ்கிறேன் .எம்.ஜி.ஆர்.தான் உயிர் மூச்சு. எனவே அவர் பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி* வருகிறேன் .அந்த இயக்கம் வளர்ந்தாலும், தொய்வுற்றாலும் எனது செயலில்* மாற்றம் இருக்காது,எம்.ஜி.ஆர்.தான் எனக்கு மிக முக்கியம்* என்று சொன்னேன் .ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வாயிலில் சுமார் 50 பேர்கள் நின்றுகொண்டு அவரை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவர்களிடம் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட வண்ணம் இருந்தனர் .உள்ளபடியே யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை .உள்ளே போனவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்ட பின்னர் திரும்பி வந்தனர் .நான் எம்.ஜி.ஆர். இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்தால் கூட ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அவருடன் தொடர்பு கொண்டு ,பழகி வந்த காலங்கள் மறக்க முடியாத நினைவுகள் .இப்போது எப்படி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி பேசும்போது கண்ணீர் வருகிறதோ அதுபோல ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை இப்படி இருப்பதை எண்ணி தாங்க முடியாத துயரம் .நேரடியாக சென்று அவரை பார்க்க அனுமதி* கேட்டபோது பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது .அந்த நேரத்தில் சசிகலா அவர்களை சிலர் அணுகி பேசினர் .அருகில் இ.பி.எஸ்.,மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் அவருக்கு துணையாக இருந்தனர் . ஓ.பி.எஸ். அப்போது பொறுப்பு முதல்வராக உள்ளார் .வருகை பதிவேட்டை சசிகலாவும்,இ .பி.எஸ்.இருவரும் பார்த்து பெரும்பாலான நபர்களை அனுமதிக்கவில்லை .* நான் தனிக்கட்சி தலைவர் ,எம்.ஜி.ஆர். இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் எப்படியோ என்னை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள் .இ .பி.எஸ்.அவர்கள் வருகை பதிவேட்டின்படி யாரெல்லாம் வந்தார்கள் என்று தனி லிஸ்ட் எடுக்க சொன்னார் .அப்போது அங்கே அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ,,தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அங்கு கூடியிருந்தார்கள் . அவர்களிடம் விசாரித்தபோது ஜெயலலிதா அவர்கள் சகோதர உணர்வுடன் நன்றாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர் . நானும் இ .பி.எஸ். அவர்களும் ஒன்றாக அமைப்பு செயலாளர்களாக இருந்தவர்கள் .இப்போது அவர் முதல்வராக இருந்து நட்பு, பாசத்தின் அடிப்படையில், நான் கேட்காமலேயே என்னை ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக நியமித்தார் .இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ். அவர்களும் எத்தனை பேர் கூடியிருந்தாலும் என்னை பார்த்ததும் ,வணக்கம் தெரிவித்து ,தனியாக நலம்* விசாரித்து* அன்பு பாராட்ட கூடியவராக இருக்கிறார் .இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்றால் புரட்சி தலைவர் என்,மீது வைத்திருந்த அளவற்ற அன்பு, பற்று, பாசம் என்று சொல்லி கொண்டே போகலாம் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
வாழ்க்கையில் நான் கஷ்டப்படும்போது* இவர் உதவினாரா இல்லை. நான் பட்டினியாக இருக்கும்போது இவர் உதவினாரா .இல்லை .என்பதெல்லாம் மனிதனுக்கு இயல்பாக தோன்றுவது .அவர்கள் பெரிய பணக்காரர்களாக ,லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாளிகைக்கு பின்னால் இருந்து பழைய நண்பர்களை பார்ப்பதை தவிர்ப்பார்கள் .இவர்களுக்கு உதவுவதை தவிர்த்து ,இவர்களெல்லாம் நமக்கு உதவாதவர்கள் என்று எண்ணி பழி வாங்குவார்கள், கேவலப்படுத்துவார்கள் .இதுதான் நடைமுறையில் இருந்து வரும் வாழ்க்கைமுறை .ஆனால் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு எல்லாம் வித்தியாசமானவர் .அவர் முதல்வராக இருந்தபோது உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்து ,தன்னால் இயல்பாக பேச முடியாமல் அவதிப்பட்ட மூன்று வருட காலத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் திக்கி திணறி பேசுவதை பலர் கேலியாகவும் , கிண்டலாகவும் மேடையில் பல நிகழ்ச்சிகளில் பேசினால்* கூட ,அந்த இயல்பாக பேச முடியாத துயரம், மன அழுத்தம் இருக்கிறதே அதை புறந்தள்ளி, தான் வாழ்க்கையில் ஈட்டிய சொத்துக்களில்* ஒரு பகுதியை வாய் பேச முடியாத , காது கேளாத சின்னஞ்சிறார்களுக்கு அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம்*எழுதி வைத்தார் .* அதாவது தன் துயர் பிறர் படட்டுமே என்ற மனிதர்கள் இருந்த உலகத்தில் ,தான் பட்ட, அனுபவித்த துயர், மன* அழுத்தம் போல பிறர் துயர் பட கூடாது என்று நினைத்த ஒரு தாயுள்ளம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்தது*என்பதால் இன்றைக்கும் ராமாவரம் தோட்ட வளாகத்தில் அந்த பள்ளி உயிர்ப்புடன் வளர்ந்து ,பெருகி ,நம் கண் முன்னால் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சேவை செய்து வருகிறது என்பது எம்.ஜி.ஆர்.அவர்கள் காலம் கருதி செய்த உதவியால் அவர்களின் வாழ்வில் கலங்கரை விளக்கமாக ,ஒளி விளக்காக திகழ்கிறார் .
ஒவ்வொரு நாட்டிற்கும், மண்ணிற்கும் நதி என்பது ஆதாரம் .அப்படி திரையுலகம் மட்டுமல்ல, உலக தமிழர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒரு வற்றாத ஜீவநதியாக அந்த மன்னாதி மன்னனின் நினைவுகள் வாழ்வாதாரமாக ஓடி கொண்டிருக்கிறது*என்பதற்கு நமக்கு வருகிற வரவேற்பு செய்திகளும் நமக்கு தொடர்ந்து அந்த உற்சாகத்தை அளித்து கொண்டிருக்கிறது .* அந்த உற்சாக பெருவெள்ளமான சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
2.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்*
3. நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*
4.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*
5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
6.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
-
வி.சி.கணேசன் பிள்ளைகளுக்கு சரியான*பதிலடி கொடுத்த*தலைவரின்*பக்தர்கள்*திரு.ஜேம்ஸ்*வாட்*,மற்று ம் கே.எஸ்.ஆர்.ஆகியோருக்கு அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*கூட்டமைப்பு சார்பில்*ஏகோபித்த நன்றி . அதை பதிவிட்ட*நண்பர் சுகாராம்*அவர்களுக்கும் கனிவான*நன்றி .தொடரட்டும்*தீவிர*தாக்குதல்கள் .........!!!!!!!!!!!!