Who is Aish??
Printable View
D/o Rajnikanth
Ennaachu simbu'vukku :confused2:
http://tamil.thehindu.com/cinema/tam...cle5787673.ece
எனக்கு இப்பல்லாம் படம் நடிக்கவே பிடிக்கல : நடிகர் சிம்பு
இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
புதுயுகம் சேனலில் 'நட்சத்திர ஜன்னல்' என்ற நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் சிம்பு பேசியதில் சில துளிகள், "சினிமாவில் எல்லா நிலைகளிலும் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறேன். தானாவே எனக்கு அமைஞ்சுடுச்சு. ஒரு சில படப்பிடிப்புகளில் இருக்கும் போது, நமக்கு சினிமாவே தெரிஞ்சுருக்க கூடாதோனு தோணும்.
சினிமா பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அப்படிங்கிறதுனால, அங்கு நடக்குற காமெடி, தப்புகள் எல்லாமே முன்கூட்டியே தெரியும். சரி என்ன பண்றது, அப்படியே பழகிடுச்சு.
இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு. சின்ன வயசுல ரஜினி சார் மாதிரி வரணும் அப்படினு எல்லாம் எண்ணம் இருக்கும் இல்ல. நிறைய படங்கள் பண்ணனும் அப்படினு தோணுச்சு. 29க்கு அப்புறம் எல்லாம் வாழ்க்கையே வேறமாதிரி இருக்கு. எல்லாமே பாத்ததுக்கு அப்புறம் சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு தோணுது.
சினிமா அப்படிங்குற வட்டத்துக்குல என்னை நான் போட்டு வச்சுருக்கேன். எனக்கு அது பிடிக்கல. நான் வெளியே வர நினைக்கிறேன். உலகத்துக்கு சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். எனக்கு பணமே பிடிக்க மாட்டேங்குது. பணத்தினால் மனிதாபிமானமே போயிடுச்சுனு நினைக்கிறேன். காசு வேணும்ங்கிறதுனால நல்லவங்க கூட கெட்டவங்களா மாறிட்டு வர்றாங்க. சமூகம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. உண்மைத்தன்மை போய்விட்டது. பொறாமை அதிகமாகிவிட்டது. இதுக்கு எல்லாமே காரணம் காசு தான். உலகத்துல பணமே இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன்.
'வாலு' முக்கிய காட்சிகள் முடிஞ்சுடுச்சு. பாடல்கள் பாக்கியிருக்கு. அப்புறம் பாண்டிராஜ் சார் படம், வேட்டை மன்னன் ரெடியா இருக்கு, கெளதம் மேனன் சார் படம், செல்வராகவன் படம் இப்படி வரிசையா இருக்கு.
இப்போ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அனிருத் தான். ஏன்னா நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பான். பிரேம்ஜியும் கேட்பான் புரியாம கேட்பான். ஏதாவது டிஸ்கஸ் பண்ணனும்ன்னா த்ரிஷாவுக்கு போன் பண்ணி பேசுவேன். இப்போ எனக்கு தனிமையா இருக்குது கஷ்டமாக தான் இருக்கு.
இப்போ என்கிட்ட சூப்பரா ஸ்டாரா ஆகணுமானு கேட்டாங்கன்னா. எனக்கு அந்த ஆசையே இல்ல. எனக்கு இன்னும் நிறைய படங்கள் பண்ணனும், பெரிய ஸ்டாரா ஆகணும் அப்படிங்குற எண்ணம் எல்லாம் போயிடுச்சு. நமக்குனு சில கடமைகள் இருக்கும்ல, அதே மாதிரி தான் படம் பண்ணிட்டு இருக்கேன். போட்டி, பொறாமை, கோபம் இப்படி எதுவுமே இல்லை. படம் ஹிட்டானாலும், ப்ளாப் ஆனாலும் இனிமேல் என்னை பாதிக்கவே செய்யாது.
இப்போ ஏன் தனுஷோட ப்ரெண்ட்டாக இருக்க முடியுதுன்னா, போட்டி, பொறாமை, கோபம் எதுவுமே இல்லை அப்படிங்குறதுனால நான் அவரை போட்டியா பார்க்கவே இல்லை. இப்போ நான் தனுஷை, சினிமா துறையில தன்னோட வேலையை நல்லபடியா பண்ணிட்டு இருக்குற ஒருத்தரா தான் பாக்குறேன்.
நான் சூப்பரா ஸ்டாரா ஆகணும், ரஜினியா ஆகணும், கலைஞரா ஆகணும், மைக்கேல் ஜாக்சனா ஆகணும்னு சொல்லிட்டு இருக்காங்க இல்லயா.. அதே மாதிரி ஒரு கட்டத்தில் நான் சிம்புவா ஆகணும்னு சொல்லணும். அது தான் என்னோட ஆசை. என்னோட வாழ்க்கைல அது ஒண்ணு தான் ஆசை. அதை நோக்கி தான், இப்போ போயிட்டு இருக்கேன்.
நான் இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பிறந்திருப்பது மிகப்பெரிய பரிசா நினைக்கிறேன். வேறொரு குடும்பத்துல பிறந்து இருந்தேன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன். என்னோட வாழ்க்கைல என்ன நடந்தாலும் புரிஞ்சுக்கிட்டு என்கூடவே நிப்பாங்க.
எனக்கு கல்யாணம் நடக்குமா இல்லையா என்பது எனக்கே தெரியல. நிறைய விஷயங்களில் சரியான முடிவு தான் எடுப்பேன். எல்லா விஷயத்திலும் சரியான முடிவு எடுத்துட்டா கடவுள் ஆச்சே. காதலைத் தவிர மற்ற விஷயங்களில் சரியான முடிவு எடுத்துவிடுவேன். ஏன்னா, காதலில் மூளை வேலை செய்யாதே, இதயம் மட்டும் தானே வேலை செய்யும்.
என்னைப் பார்த்த தப்பா தான் தெரியும். அதுக்காக நான் எதுவுமே பண்ணாம உட்காந்து இருக்க முடியாது. என்னை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. கடவுளைத் தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என்னை வைத்து டீல் பண்ணத் தெரிஞ்சா ரொம்ப ஈஸி. என்கிட்ட அன்பா இருந்தாங்கன்னா, அவங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.
நிறைய தடவை தனிமையா இருந்திருக்கேன். 30 வயது ஆயிடுச்சு இதுவரை நாம தனிமையா இருக்கோம், கல்யாணம் ஆகலையேனு நினைச்சதே கிடையாது. ஏன்னா, எனக்கு என் தங்கச்சி வீட்டில இருந்தாங்க. மனைவியா ஒரு பொண்ணு எனக்கு வீட்டுல தேவைபட்டது இல்ல. இலக்கியா கல்யாணம் ஆகி, காரில் ஹைதராபாத்திற்கு கிளம்பின உடனே அன்றைக்கு முழுநாளும் அழுதுகிட்டே இருந்தேன். அழுது, அழுது மூஞ்சு எல்லாம் வீங்கி அன்றைக்கு ஷூட்டிங் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
எனக்கு வர்ற போற பொண்ணு, பொண்ணு மாதிரி இருந்தா போதும். இப்பெல்லாம் பொண்ணுங்க, பசங்க மாதிரி ஆயிட்டாங்க. எனக்கு பொண்ணு அந்த மாதிரி இருக்கணும், இந்த மாதிரி இருக்கணும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. நான் தான் வேணும் அப்படினு சொல்ற பொண்ணு தான் எனக்கு வேணும். என்ன நடந்தாலும் சரி, நான் தான் அப்படினு நின்னா எனக்கு போதும்.
நிறைய விஷயங்கள்ல என்னைப் பத்தி தப்பு தப்பா நிறைய எழுதிட்டாங்க. அதான் நான் ஓப்பனா சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என்னால, கூட இருக்குறவங்களுக்கும் பாதிக்கப்படுறாங்க. ஆண்டரியா கூட ஒரே ஒரு நாள் நடிச்சேன். உடனே நான் ஆண்ட்ரியா கூட போயிட்டேன்னு எழுதிட்டாங்க.
திருப்பியும் நயன்தாரா கூட நடிக்கிற அப்போ எனக்கு ஒண்ணுமே தோணல. ஏன்னா, சம்பந்தமே இல்லாம நிறைய எழுதுவாங்களேனு பயந்தேன். திருப்பியும் ரெண்டு பேர் நடிக்கிற அப்போ எப்படி எடுத்துகுவாங்க. என்ன நினைப்பாங்க. ப்ளஸ்ஸா, மைனஸா அப்படினு யோசிச்சேன். இயக்குநர் வேணும்னு கேட்டார், நான் ஒ.கே சொன்னேன், அவங்களும் ஒ.கே சொன்னாங்க. நடிச்சிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் குறை சொல்லிகிட்டே இருக்காங்க. ட்விட்டர திறந்தா யாரையாவது குறை சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் வேற வேலையே கிடையாதானு எனக்கு தெரியல.
எனக்கும் சரி, தனுஷிற்கும் சரி, எங்களை அங்கீகரிக்க தெரிஞ்சது. அதனால தான் இந்த இடத்திற்கு வந்திருக்கோம். இப்போ உள்ள நடிகர்களுக்கு அது தெரியல. அவங்களை வேற ஏதோ நினைச்சுகிறாங்க. எதனால மக்கள் அவங்கள பாக்குறாங்க அப்படிங்குறதை அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. இப்போ இருக்குறவங்கள்ல எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப SENSIBLEஆ இருக்காரு. தலை கால் புரியாம எல்லாம் இல்ல. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்குனு நினைக்கிறேன்.
என்னை பிடிக்காதவங்க தேவையில்லாம பேசி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க. அதை எல்லாம் விட்டுட்டு வேறு ஏதாவது வேலை இருந்தா பண்ணுங்க. என்னோட அப்பா, அம்மா தவிர என்னோட மிகப்பெரிய சொத்து என்னோட ரசிகர்கள் தான். கிட்டதட்ட 2 வருஷமா என்னோட படங்கள் எதுவுமே வரல அப்படின்னாலும், என்னை பிடிச்சுகிட்டே இருக்காங்க. அவங்களையும் நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். அதுவும் கூடிய சீக்கிரத்தில் சரி பண்ணிடுவேன். " என்று கூறியுள்ளார்.
He is really affected by break-up
http://www.youtube.com/watch?v=J7WIHQUlIrc
http://www.youtube.com/watch?v=pLM8vHDHxjs
thambikku love ellam saripattu varathu pola,pesama 2,3 vayasu kooda ulla nalla ponna paatu kalyama panni kitta nalla irukum life-fu!!! [sontha anubavam]annan sollaren keluppa thambi simpu..
http://tamil.webdunia.com/article/ta...1000011_1.html
மீண்டும் சிம்பு, நயன்தாரா நெருக்கம்
http://media.webdunia.com/_media/ta/...07935-2715.jpg
தொடங்குமா சிம்பு - செல்வராகவன் படம்?
'இரண்டாம் உலகம்' பட பிரச்சினையால் ஏப்ரலில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த சிம்பு - செல்வராகவன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டார் இயக்குநர் செல்வராகவன். ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டார்கள். த்ரிஷா நாயகி, யுவன் இசை, மது அம்பாட் ஒளிப்பதிவு என படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது இப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு - செல்வராகவன் படத்தினை தயாரிக்க திட்டமிட்ட வருண்மணியன், "செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் இடையேயான பிரச்சினைகளை முடித்தவுடன் தான், சிம்பு படத்தினை தொடங்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது 'வாலு' படத்திற்காக வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, சென்னை திரும்பியவுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவோடு நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
Kottallam azhichitu thirumba first la irundhu aarambikrranga :shaking:. Simbhu's latest instagram picture.
https://www.facebook.com/photo.php?f...1754493&type=1
Eagerly waiting for Vaalu. Release cheyyandi
Sent from my iPhone using Tapatalk
Waiting for thalaivar's next movie.
thatstamil kaaranunga maari oru yechakala paper kaaaranunga yevanum irukaa maatanunga "banghead:.
vinod :lol:
செளந்தர்யா பற்றி கருத்து: ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை - hindu
இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னைப் பற்றி கூறிய கருத்துகளுக்கு, திட்டித் தீர்த்த ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை கூறியுள்ளார். 'கோச்சடையான்' படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக படம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் டி.வியின் 'காபி வித் டி.டி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
அப்போது இந்த திரையுலகினரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று டி.டி கேட்டுவிட்டு, ஒவ்வொரு நடிகர் பெயராக குறிப்பிட்டுக் கொண்டே வந்தார். அதில் சிம்புவின் பெயரை குறிப்பிடும் போது செளந்தயா "பாடாதே சிம்பு நிறுத்திடு. ப்ளீஸ்" என்று குறிப்பிட்டார்.
அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் திட்டி தீர்த்தார்கள்.
இச்செயல் குறித்து சிம்பு, "அனைவருக்குமே மற்றொருவரின் செயல் குறித்து விமர்சிக்க உரிமையுண்டு. ஆகையால், எனது ரசிகர்கள் இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மற்றவர்களையும் என்னை மதிப்பது போல மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை நீங்கள் மற்றவரிகளிடமும் காட்ட வேண்டும், நன்றி. என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறினார்.
சிம்புவை பற்றி கூறிய கருத்து குறித்து செளந்தர்யா, " சிறுவயதில் இருந்தே எனக்கு சிம்பு நண்பர் தான். நான் விளையாட்டாக தான் கூறினேன். எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்று கூறியுள்ளார்.
:lol: Attagaasathin uchchikke poreengada.
Quote:
STR crowns the new 'Young Super Star' ...
http://behindwoods.com/tamil-movies-...uper-star.html
Earlier, we reported about STR shedding off his prefix 'Young Super Star'. He said, “I have decided to shed off these extra packages that inflates ego. Being a socially conscious person myself, I fully understand the impact these 'not so important' tags' have over the image of a growing individual. I am confident that my fans who had been very supportive to me all through my career will understand and endorse this stand of mine too.”
However, due to shortage of such fancy tags, another young star from the industry has taken up the now free 'Young Super Star' tag – none other than Premgi Amaren!
He said, “My thalaivar STR has given me his Young Super Star name. So I am Young Super Star Premgi from today.”
Best Wishes Young Super Star Premgi Amaren!
Premgi amaren @Premgiamaren
My thalaivar STR has given me his young super star name https://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.png so I am young super star premgi from today https://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.png @iam_strhttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.png
Lol funny guy. I wish him success as the new Young Super Star!
சர்ச்சை வீடியோவில் இருப்பது நான் இல்லை: சிம்பு
சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் நடிகர் சிம்பு பதிலளித்துள்ளார்.
ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்று, ஒரு இளைஞரும் யுவதியும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருப்பது கன்னட நடிகை ஹர்ஷிகாவும், சிம்புவும் தான் என்று இணையத்தில் பகிரப்பட்டது. அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் சந்தித்ததாகவும், அப்போதைய பரிச்சியத்தின் விளைவே ஹோட்டல் லாபியில் இருவரும் முத்தமிடும் வரை வந்துள்ளது என்றும் தகவல்கள் பரவின. இது குறித்து, இதுவரை சிம்புவோ, ஹர்ஷிகாவோ ஊடகங்களில் பேசவில்லை.
தற்போது, சிம்புவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
:lol2:
pal ullavan pagoda saapdraan
pal illathOr pugaichalil
Narayana
Intha kosu tholla thaanga mudiyala ! Ithu satharana kosu illa, ithu ratchasa kosu, Ranguski!
Yaara Param solreenga?
#Simbu saved this small boys life, sponsoring his emergency medical expenses
Attachment 3575
SIMBU in IRON MAN getup
ஏழைச் சிறுவனின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி: தந்தையின் நெகிழ்ச்சிப் பேட்டி - hindu
"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.
யாருடன் வேண்டுமானாலும் நடப்பது கல்யாணம் அல்ல: சிம்பு பேட்டி - hindu
உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து..
‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்?
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும்.
உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ?
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும்.
வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.
உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல?
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை.
நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே?
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான்.
இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு.
தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்?
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது.
இயக்குநர் சிம்பு என்ன ஆனார்?
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன்.
ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா?
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன்.
காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்?
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.
உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன?
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே.
ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம்.
கேப்டன் மகனுக்காக பாடல் பாடிய சிம்பு !
விஜயகாந்தின் ’வல்லரசு’, ’நரசிம்மா’, ’தென்னவன்’, ’சுதேசி’, ’அரசாங்கம்’, ’விருதகிரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த திரு.எல்.கே.சுதீஷ் இப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ’சகாப்தம்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆளியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்திலும் 20 நாட்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் விஜய்காந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yearender 2014: Most shocking celebrity splits this year - IBN
Hansika Motwani and Simbu: Hansika Motwani called it quits with Simbu in February. The reason behind their breakup was the entry of another woman in Simbu's life.(???)
http://ibnlive.in.com/photogallery/17415.html
எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் - சிம்பு! பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, ஆண்ட்ரியா சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. படம் கோடைகால விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டீஸர் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியானது. இதுவரை படத்தின் டீஸரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.டீஸரில் சூரியின் கவுண்டர் டயலாக்குகளும், காதல், பெண்கள் குறித்து சிம்பு பேசும் வசனங்களும் இளைஞர்களை சற்றே கவர்ந்திழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்களித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி.இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்' என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிர கூறினார் எஸ் டி ஆர்.
Photoshoot
Attachment 3944Attachment 3945