டியர் வாசுதேவன்,
சிவந்த மண் ஹிந்தி பதிப்பான தர்த்தி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தை காட்சிக்களித்து அனைத்து ரசிகர்களின் உள்ளங்களிலும் உவகையூட்டியுள்ளீர்கள். நன்றிகள், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
Printable View
டியர் வாசுதேவன்,
சிவந்த மண் ஹிந்தி பதிப்பான தர்த்தி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தை காட்சிக்களித்து அனைத்து ரசிகர்களின் உள்ளங்களிலும் உவகையூட்டியுள்ளீர்கள். நன்றிகள், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
டியர் பாலகிருஷ்ணன்,
தாங்கள் தரவேற்றியுள்ள நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் சிம்ப்ளி சூப்பர். நன்றி.
அன்புடன்
டியர் பம்மலார்,
அடியேனை தரதரவென இழுத்து 1970 ஆகஸ்ட் 15 சாந்தி திரையரங்கிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய நிழற்படங்களை நுழைவுச் சீட்டாக்கி, அமர்த்தி விட்டீர்கள். I may find it difficult to recover from the hangover.
நன்றி
அன்புடன்
டியர் முரளி சார்,
ஒரு யாத்ரா மொழியை ஒரு மலையாள மொழியிலிருந்து ஒரு தமிழ் மொழியாக்கி, மொழிகளைக் கடந்த மொழிஞாயிறின் பெருமையைத் தங்களுக்கே உரிய மொழியில் உரக்கச் சொல்லி விட்டீர்கள்.
நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன்
Thanks Vasu sir very rare Dharti videos?
Pammalar sir, can we get Dharti's Chennai records?
Murali sir, in which Madurai theatre Dharti released and how was the first day first show?
Cheers,
Sathish
டியர் சதீஷ்,
தர்த்தி திரைப்படம் சென்னையில் ஜூன் 1971ல் பிராப்தம் படத்தை எடுத்து விட்டுத் திரையிடப் பட்டது. சென்னையில் அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பிருந்தது. ஆனால் திரையரங்கம் குறைந்த காலத்திற்கே கிடைத்த காரணத்தால் அதிக நாட்கள் திரையிடப்படவில்லை. பம்பாய் நகரத்தை விட அதிகமாக பெங்களூருவிலும் தில்லியிலும் வரவேற்பைப் பெற்ற படம் தர்த்தி.
சென்னை மிட்ல்ண்ட் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியில் முதல் நாள் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
தங்களுக்காக மிட்லண்ட் திரையரங்கில் தர்த்தி வெளியீட்டிற்கான சித்ராலயா வார இதழ் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ralayaAdfw.jpg
இவ்விளம்பரத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் என விளம்பரப் படுத்தியிருந்தனர். ஏற்கெனவே ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி பதிப்பிலும், மனோஹர் ஹிந்தி பதிப்பிலும் நடித்திருந்தார். என்றாலும் இது நடிகர் திலகத்தின் முதல் ஹிந்தி வண்ணப் படம் என்று சொல்லலாம்.
அன்புடன்
1972ம் ஆண்டில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் போது சிவாஜி ரசிகன் பேட்ஜ் ரசிகர்களுக்கு வழங்கப் பட்டது. வசந்த மாளிகை திரைப்படத்தை அக்டோபர் 1, 1972 அன்று சாந்தி திரையரங்கில் பார்த்த பொழுது அனைத்து ரசிகர்களுக்கு்ம் வழங்கப் பட்ட பேட்ஜ், அடியேனுக்கும் கிடைக்கப் பெற்றேன். அதனுடைய நிழற்படம் இதோ
http://i872.photobucket.com/albums/a...nbadgefw-1.gif
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
'தர்த்தி' க்கான தங்களின் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமுவந்த நன்றி.
தாங்கள் பதிவு செய்துள்ள சித்ராலயா இதழின்' தர்த்தி' முதல் நாள் வெளியீட்டு விளம்பரம் அரிய ஒன்று. அதைப் பார்த்து அனுபவித்து மகிழ்ந்தேன்.
எள் என்றால் எண்ணையாக நிற்கும் தங்களின் பணி தொடரட்டும். நன்றி! வாழ்த்துக்கள்!
Dear goldstar sir,
Many many thanks.
Dear groucho070 sir,
Lot of thanks for your lovely reply.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
அன்பு முரளி சார்,
"ஒரு யாத்ரா மொழி" மலையாளத் திரைப்படத்தின் விளம்பரத்தை மிக அழகாக தமிழ் மொழியாக்கம் செய்திருந்தீர்கள். என்னைப் போன்ற மலையாள மொழி தெரியாத அனைவருக்கும் பேருதவி புரிந்து விட்டீர்கள். அருமை! அருமை! அன்பு நன்றிகள்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
எனக்கு எதற்கு நன்றியெல்லாம்? நான் செய்தது வெறும் ஒரு மொழி பெயர்ப்புதானே! நீங்கள் இன்று கொடுத்திருக்கும் தர்த்தி சுட்டிக்கு நாங்களல்லவா நன்றி சொல்ல வேண்டும்!
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மறைந்து கொள்ளும் புரட்சி வீரன் பேச்சுக் குரலின் மூலம் வந்திருப்பவன் தன் நண்பன் பாரத் என தெரிந்தவுடன் அந்த profile போஸில், தன் கண்கள் வழியாக அந்த நட்பையும் வாஞ்சையையும் வெளிப்படுத்துகிறாரே, அந்த ஒரு காட்சி போதும் படத்தில் நடித்த அனைவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு போக!
சதீஷ்,
தர்த்தி மதுரையில் வெளியாகவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. சென்னையிலே மிக தாமதமாகத்தான் வெளியானது. 1970 பிப்ரவரி 6 அன்று வட இந்தியாவில் வெளியான இந்தப்படம் [அதே நாளில்தான் விளையாட்டுப் பிள்ளை தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் வெளியானது] சென்னையிலேயே 1971 ஜூன் 4 அன்றுதான் வெளியானது. மிட்லாண்டில் வெளியான இந்த ஸ்ரீதர் படம் ஜூன் 18 அன்று அதே ஸ்ரீதரின் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காக மாறிக் கொடுத்தது.
[இந்த நேரத்தில் நமது மதுரையின் பெருமையையும் சொல்லி விடலாம். பிராப்தம் படத்தை பற்றி ராகவேந்தர் சார் குறிப்பிட்டார். அந்த பிராப்தம் திரைப்படம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக நமது மதுரை சென்ட்ரலில்தான் 65 நாட்கள் ஓடியது. அதுவும் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காகத்தான் மாற்றப்பட்டது].
பாலா,
அருமையான புகைப்படங்கள். குறிப்பாக மூன்று படங்களைப் பற்றி சொல்ல வேண்டும். விழா மேடையில் இரு பக்கமும் என்,டி.ஆரும் ஏ.என்.ஆரும் அமர்ந்திருக்க நடுவில் கம்பீரமான நடிகர் திலகம். இரண்டாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாபன். மூன்றாவது அந்த ஜிப்பா அணிந்த அந்த புகைப்படம். அது கூட சிவந்த மண் வெளியான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம். நன்றி!
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
கிடைத்தற்கரிய "தர்த்தி" ஒலி-ஒளிக் காட்சிகளுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !
தாங்கள், திலகத்தின் திரைக்காவியக்களஞ்சியம் என்பதனை ஊர்ஜிதப்படுத்திவிட்டீர்கள் !
தங்களின் வீடியோ பதிவைப் பாராட்டிய கோல்டுஸ்டார் சதீஷ் வினவிய வினாவுக்கு பதிலாக, 'சித்ராலயா' இதழில் வெளியான "தர்த்தி"யின் மிக அரிய சென்னை வெளியீட்டு விளம்பரத்தை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !
"தர்த்தி" பற்றி மேலும் ஒரு பத்திரிகை ஆவணம்:
தர்த்தி(ஹிந்தி)
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1968
http://i1094.photobucket.com/albums/...EDC4351a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4353a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4354a-1.jpg
குறிப்பு:
1. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நடிகர் திலகம் "தர்த்தி"யில் முக்கிய கதாபாத்திரத்தில்[ஆனந்த்] நடித்தார். ஆனால் நடிகர் ராஜேந்திரகுமார் "சிவந்த மண்"ணில் நடிக்கவில்லை. அந்த ஆனந்த் பாத்திரத்தை முத்துராமன் ஏற்று சிறப்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன காரணத்தினால் ராஜேந்திரகுமார் தமிழ்ப்பதிப்பிலிருந்து நடிக்காமல் விலகினார் என்பது அவருக்கே வெளிச்சம் !
2. "தர்த்தி"யில் ஆனந்த் பாத்திரத்தில் சில மணித்துளிகளே வந்தாலும், அதில் வாழ்ந்து காட்டியுள்ள நடிகர் திலகம், அப்பாத்திரத்தின் ஹிந்தி வசனங்களை அதியற்புதமாக முன்னணியில் உச்சரித்தார். பின்னணியில் வேறொரு கலைஞர் அவருக்கு குரல் கொடுத்தார்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
"ராமன் எத்தனை ராமனடி" நிழற்படங்களின் பதிவு, தங்களின் பசுமையான நினைவுகளை தூண்டிவிட்டதென்றால் அது நடிகர் திலகத்தின் கிருபைதான்.
தங்கள் மகிழ்ச்சி நான் பெற்ற பாக்கியம்.
தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றி !
[1972-ம் ஆண்டு 'சிவாஜி பேட்ஜ்' மிக மிக அரியதொரு கலைப்பொக்கிஷம்].
டியர் பாலா சார்,
அபூர்வ புகைப்படங்களுக்கும், அருமையான சுட்டிகளுக்கும் அற்புத நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மல் சார்,
தங்களின் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி! "தர்த்தி" பற்றிய தங்களது பங்களிப்பும் என்ன சும்மாவா?.. 'பொம்மை' இதழின் கட்டுரையை வெளியிட்டு பழைய நினைவுகளைக் கிளர்ந்து எழச் செய்து விட்டீர்கள். இந்த அரிய வரலாற்றுப் பக்கங்களை அன்பிற்குரிய என் தாயார் சேகரித்து வைத்திருந்தார்கள். அசந்தர்ப்பமாக தவறி விட்டது. ( என் தாயார் அவர்கள் அண்ணலின் பரம ரசிகை. சிறு வயதில் எனக்கு சாப்பாடு ஊட்டும் போது கூட நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லிச் சொல்லித்தான் அவர்கள் என்னை ஊட்டி வளர்த்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தங்கள் சார்பாகவும், நம் 'ஹப்' அங்கத்தினர்கள் சார்பாகவும் நன்றி கூறிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்).
அற்புதமான அந்த வரலாற்று ஆவணத்தை அளித்ததற்கு நன்றி!
டியர் முரளி சார்,
தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் அந்த குறிப்பிட்ட profile போஸை நீங்கள் வர்ணித்திருக்கும் விதமே அலாதி. அது மட்டுமல்ல..தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது , கதவு தட்டப் பட்டவுடன் தட்டை வைத்துவிட்டு, படு கேஷுவலாக சாப்பிட்ட கையை பின்னால் சட்டையில் அவர் துடைத்துக் கொண்டே நடக்கும் அழகே அழகு!..என்ன ஒரு திறமை! எப்படிப்பட்ட ஒரு உடல் மொழி!
நன்றியுடன்,
நெய்வேலி வாசுதேவன்.
hats of to you pammal sir
Thanks a lot Ragavendran and Pammalar and Murali sir.
As usual, "Naanga ellu entru sonna neenga yennaiya vanthu alli tharreenga".....
In English simply I say "Thank You"...
Cheers,
Sathish
அன்புள்ள பம்மலார் சார், ராகவேந்தர் சார், மற்றும் வாசுதேவன் சார்.....
வர வர நம்ம திரி 'ஜெட்' வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அசத்தலோ அசத்தல் என்று அசத்துகிறீர்கள்.
ஆகஸ்ட் 14-லிருந்து அள்ளித்தெளிக்கப்பட்ட காவியங்களின் ஆவணங்கள்தான் எத்தனை எத்தனை...
** 'மூன்று தெய்வங்கள்' விளம்பரங்கள், வீடியோ கவர், மற்றும் துக்ளக் விமர்சனம்.
** 'சாரங்கதாரா' விளம்பரங்கள் மற்றும் விமர்சனம்
** 'ராமன் எத்தனை ராமனடி' வெளியீடு, 50வது நாள், 75வது நாள், 100வது நாள் விளம்பர வரிசை, டிவிடி உறைகள் மற்றும் அபூர்வ புகைப்ப்படங்கள்
** 'ஒரு யார்த்ரா மொழி' பட விளம்பரம், அது தொடர்பான செய்தித்தொகுப்புகள்
** 'முதல் மரியாதை' பட விளம்பர வரிசை, புகைப்படத் தொகுப்பு, மற்றும் கட்டுரை.
** 'கட்டபொம்மன்' நினைவுக்கோட்டை, அதன் உட்புறத்தோற்றம், நடிகர்திலகம் அமைத்த கட்டபொம்மன் சிலை, படத்தில் அவரது ஆக்ரோஷமான தோற்றம். (ராகவேந்தர் சார், இவ்வளவு உயரமான சிலைப்பீடம் தமிழ்நாட்டில் கிடையாது. அதற்கு முன் உயரமானதாகக் கருதப்பட்ட சென்னை தாமஸ் மன்றோ சிலையின் பீடத்தை கட்டபொம்மன் தோற்கடித்தார். இதிலும் வெள்ளையனைத் தோற்கடித்த பெருமை அவருக்கே).
** 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. சிறை வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம். அவர் இழுத்த செக்கு இவற்றின் காணக்கிடைக்காத புகைப்படங்கள். (இந்த சுதந்திர நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியது நமது திரிதான் என்பதில் மகிழ்ச்சி).
** 'சிவாஜி ரசிகன்' இதழின் சுதந்திர தின சிறப்பிதழ் அட்டைப்படம், உள்ளே நடிகதிலகத்தின் சிறப்புக்கட்டுரை, கண்கவர் சிவாஜி ரசிகன் பேட்ஜ்.
** பொன்விழாக் கொண்டாட்டத்தின் நிறைவுப்பதிகள்.
** 'தர்த்தி' படத்தின் காணக்கிடைக்காத விளம்பரம், அதில் நடிகர்திலகத்தின் பாத்திரம் பற்றிய 'பொம்மை' இதழின் கிடைத்தற்கரிய அரிய தகவல் பொக்கிஷங்கள்.
** இதுபோக, 'பாலா' அவர்கள் அள்ளியளித்த ஏராளமான வீடியோ தொகுப்புகள்.
அடேயப்பா.... அடேயப்பா.... அடேயப்பா....
சர்க்கஸில், ஒருபக்கம் பார் விளையாட்டு, ஒருபக்கம் சைக்கிள் சாகசங்கள், இன்னொருபக்கம் மிருகங்களின் சாகசங்கள், பிறிதொருபக்கம் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டம் அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, எதைப்பார்ப்பது என்று காலரியில் உட்கார்ந்து விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் ரசிகனாக இருக்கிறேன் நான்.
எவ்வளவு ஆதாரங்கள், எவ்வளவு ஆவணங்கள்..... எல்லோரும் ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறீர்கள்.
நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி....
டியர் கார்த்திக் சார்,
நமது திரியை ஆகஸ்ட்14-வரை திரும்ப ரீவைண்ட் செய்து பார்க்க வைத்தது உங்கள் அழகான விமர்சனம்.அதற்காக இதோ பிடியுங்கள் ஒரு சபாஷ்.....நன்றி சார்!....திரு.ராகவேந்திரன் சார் சொன்னது போல நமது திரி பல சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி. அந்த மனமகிழ்வோடு 'பண்பாளர்' திரு.பம்மலார் அவர்கள் சார்பாகவும், 'ரசிகவேந்தர்' திரு, ராகவேந்திரன் சார் அவர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வழக்கம் போல், நடிகர் திலகத்தின் காவியங்களின் ஆவணப் படங்களையும், செய்திதாள் சாதனை விளம்பரங்களையும், வீடியோ பதிவுகளையும் பதிவிட்டு அசத்திக் கொண்டிருக்கும் திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
சிவந்த மண்ணின் ஹிந்தி வடிவம் "தர்த்தி"-இல் இடம் பெற்ற நடிகர் திலகம் இடம் பெரும் காணக் கிடைக்காத வீடியோ காட்சிகளைப் பதிவிட்ட திரு. நெய்வேலி வாசுதேவன் சாருக்கு தனிப்பட்ட முறையில் மிக்க நன்றி. எப்போதெல்லாம் வட இந்தியாவுக்கு வேலை நிமித்தமாக செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் படத்தின் இந்தி வடிவத்தைப் பெற முடிந்தவரையில் பிரயத்தனம் செய்தும், இது வரை வெற்றி அடைந்ததில்லை. இப்போது, நீங்கள் அந்தக் காட்சிகளைப் பதிவிட்டவுடன் சொல்லொணா மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி. திரு. முரளி அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை (அந்த சைட் போஸ் முக பாவம்!) வர்ணித்த விதம் அருமை.
திரு. கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தத் திரி அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
[QUOTE=rangan_08;725528]Mr. Partha Sarathy, your feelings about Raman Ethanai Ramanadi was nice. Let's hope to see it in Shanthi theatre, soon.
Dear Mr. Mohan Rangan,
Thanks. Raman Ethanai Raamanadi has always been one of my favourite Top Ten movies and it will remain so forever. I saw this movie in late 90's in Sangam theatre (I don't remember the no. count) along with 2 of my friends on a Sunday Matinee with Full House. I still remember the way the crowd went berserk from the scene NT enters his village as Actor Vijayakumar till the sad version of "Ammaadi Ponnukkuth Thanga Manasu"; especially, for this song when he elegantly touches his head after starting the song "thanga manasu ... thanga manasu... thanga manasu...".
Thanks once again,
R. Parthasarathy
தர்தி பற்றிய பதிவுகள் அருமை. நன்றி திரு.ராகவேந்திரன் & திரு.பம்மலார். ஒலி ஒளி காட்சிகளை இணைத்து மெருகூட்டிய திரு வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !
தங்களைப் போன்றதொரு ரசிக ரத்தினத்தை எங்களுக்கு தந்ததற்காகவே, தெய்வீக நடிகரின் சிகர ரசிகையான தங்களது அன்னையாருக்கு நாங்கள் என்றென்றும் நன்றிகளைக் காணிக்கையாக்கக் கடமைப்பட்டுள்ளோம் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு எனது நன்றி !
தாங்களும் ஆகஸ்ட் 14 & 15 இருதினங்களில் அளிக்கப்பட்ட ஆவணப்பதிவுகளை அழகுறப் பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள். [அதில் ஒரு சிறுதிருத்தம் - "முதல் குரல்" காவியத்திற்குத்தான் கட்டுரை இடுகை செய்யப்பட்டது].
1986 பொன்விழாக் கொண்டாட்டங்கள் எமது அடுத்த பதிவில் நிறைவு பெறுகின்றன.
Dear kumareshanprabhu Sir, Thank you so much !
Dear goldstar Satish, My sincere thanks for your special praise !
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கும், பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
டியர் சந்திரசேகரன் சார், நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு நண்பர்களுக்கு,
இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு ஹம்ஸத்வனி என்ற சபா சார்பில் நாளை, 18.08.2011 மாலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கப் படுகிறது. அதனுடைய அழைப்பிதழைக் கீழே தருகிறேன். அந்த அழைப்பிதழின் முன்பக்கத்தில் அந்த அமைப்பின் மின்னஞ்சல் தரப்பட்டுள்ளது. பாலச்சந்தர் அவர்களுக்கு விருது வழங்குவதைப் பற்றிய நமது கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் அவரைப் பற்றிய குறிப்பு பின்பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அக்குறிப்பில், நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் பாலச்சந்தர் சார் மேம்படுத்தினார் என்று கிட்டத்தட்ட பொருள் வரும் வகையில் எழுதப் பட்டுள்ளது. அதனை அந்த நிழற்படத்தில் நாம் படிக்கலாம்.
இப்படிப்பட்ட அபத்தமான கருத்தை எழுதியது யார் எனத் தெரியவில்லை, அதைப் பற்றி நாம் கவலையும் படத்தேவையில்லை. ஆனால் அந்த அமைப்பிற்கு நாம் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பது கடமை என நான் எண்ணுகிறேன். நான் என் எதிர்ப்பைத் தனியாக அவர்களுக்கு தெரிவிக்க உள்ளேன். இதைப் படிக்கும் நம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என விரும்புகிறேன்.
தங்களுடைய தகவலுக்காக மின்னஞ்சல் முகவரி கீழே தரப்படுகிறது
info@hamsadhwani.org.in
hamsadhwani@vsnl.net
http://i872.photobucket.com/albums/a...aniiKB01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...aniiKB02fw.jpg
நாம் படிப்பதற்கு ஏதுவாக நடிகர் திலகத்தைப் பற்றிய கருத்து உள்ள பத்தி மட்டும் தனியாக ஹைலைட் செய்து காட்டப் பட்டுள்ளது.
அன்புடன்
'சாம்ராட் அசோகன்' ஓரங்க நாடகம் : "அன்னையின் ஆணை(1958)" திரைக்காவியம்
இந்த ஓரங்க நாடகம் மற்றும் முழுப்பட வசனம் : அமரர் முரசொலி மாறன்
http://www.youtube.com/watch?v=vh1k-W_bkCg
[இந்த வீடியோவில் 5 நிமிடம் 30 விநாடி சென்றபின் 'சாம்ராட் அசோகன்' ஓரங்க நாடகம் வருகிறது].
[தொடர்ந்து கீழ்க்கண்ட வீடியோ காட்சியில் முதல் நான்கு நிமிடங்கள் இந்த ஓரங்க நாடகம் தொடர்ந்து நிறைகிறது].
http://www.youtube.com/watch?v=_BIByVzdCmU&feature=related
இன்று 17.8.2011 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்-மத்திய அமைச்சர் அமரர் முரசொலி மாறன் அவர்களது 78வது பிறந்ததினம்.
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
Text of my letter to Hamsadhwani
Quote:
Dear Sir,
First let me convey my best wishes for the 21st Annual Day Program of the Hamsadhwani and congratulate Dadasaheb Phalke Award winner, Shri K.
Balachander for being chosen for the confernment of the Distinguished Citizen Award.
While sincerely appreciating your efforts, I am compelled to painfully bring to your notice of the lines mentioned in the introductory note of
Shri K.B. Sir, on the reverse of the Inviitation.
"In the course of several decades of KB's close involvement in Kollywood, he played a prominent role in further shaping the careers of a few of
the yester-year's icons of Tamil Cinema such as Shivaji Ganesan, Sowcar Janaki, the inimitable Nagesh, Muthuraman and others."
As an ardient fan of Nadigar Thilagam Sivaji Ganesan, I was shocked to read this line. I hope it must be due to some slip or error and believe
it is not intentional, since you may know more than me, that by the time KB Sir entered Tamil cinema in 1964-65, Nadigar Thilagam Sivaji
Ganesan, completed his 100 movies and was reigning supreme, which he never stooped from till his last. K.B.Sir's first film with Nadigar
Thilagam was his 105th film, NEELAVANAM, released on 10.12.1965, by which time Shri Sivaji Ganesan had completed 13 years of his film career,
since Parasakthi. And KB Sir's next association with Nadigar Thilagam was the 139th film of Sivaji, ETHIROLI, released on 27th June 1970.
These were the only 2 films KB Sir worked with Nadigar Thilagam. As it is a known fact, Sivaji Ganesan never looked back from the very first
film. A man who won Padma Awards, Afro-Asian Awards, Chevalier award and above all fans in millions the world over, was Sivaji Ganesan.
I earnestly place with you, a simple question that comes to my mind?
Do you believe that Sivaji Ganesan was waiting for KB Sir for further shaping of his career?
Do you believe that KB Sir himself would accept this?
Till now I keep HAMSADHWANI at high esteem which is sincere and serious in promoting art.
In that spirt, I expect that the least, you may do, is to
EXPRESS A REGRET FOR THIS REMARK AT THE STAGE DURING THE FUNCTION TO HONOUR KB SIR.
With a heavy and pained heart,
V. Raghavendran
www.nadigarthilagam.com
டியர் ராகவேந்திரன் சார்,
நமது நாட்டில் பிரகஸ்பதிகளுக்கு பஞ்சமேயில்லை. இந்த விருது வழங்கும் விழாவினுடைய அழைப்பிதழின் பின்பக்க குறிப்புகளை எழுதிய நபரும் இது போன்றதொரு பிரகஸ்பதியே. [இந்த பிரகஸ்பதிக்கு ஒரு வேளை "சிவாஜி" கணேசனுக்கும் "ஜெமினி" கணேசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விட்டதோ !]
ஒரே ஒரு முறை மட்டுமே நமது NTயை இயக்கிய KBயின் அபிமானியான அந்த பிரகஸ்பதிக்கு நமது வன்மையான கண்டனங்களை பல முறை "எதிரொலி"க்கிறோம்-"எதிரொலி"ப்போம் !
தங்களது மின்னஞ்சல் பதிவு ரத்தினசுருக்கமாகவும் அதேசமயம் "சுறுக்"கென்றும் உள்ளது. தங்களது திருத்தொண்டுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய வணக்கங்கள் மற்றும் நன்றிகள் !
பகிரங்க அறிவிப்பு
தனது 'நாடக உலக ஆசான்' என்று நமது நடிகர் திலகமே குறிப்பிட்டுள்ள
"திரு.சின்ன பொன்னுசாமி படையாச்சி"
மற்றும் தன்னை 'வாழ வைத்த தெய்வம்' என்று நமது திலகத்தால் புகழ்ந்துரைக்கப்பட்ட"திரு.பி.ஏ.பெருமாள் முதலியார்",
இந்த இரு பெருந்தகையாளர்கள் மட்டுமே
திரும்பவும் பலமாக அடித்துச் சொல்கிறேன்
எத்தனை முறை வேண்டுமானாலும் அடித்துக் கூறுவேன்
இந்த இரு பெருந்தகையாளர்கள் மட்டுமே
அவரது கலையுலக வாழ்க்கையின் முக்கியஸ்தர்கள் !
வேறு எவரும் எந்தவிதத்திலும் எதையும்
நமது திலகத்திடம் சொந்தம் கொண்டாட முடியாது.
ஈடு-இணை சொல்லமுடியாத பெருந்தன்மையின் காரணமாக - வளர்ந்து வருபவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக - எல்லோரையுமே மிச்சம்-மீதி வைக்காமல் வானளாவப் புகழ்ந்துரைத்திருக்கிறார் நடிகர் திலகம். அதனைக் கருத்தில் கொண்டு ஆளாளுக்கு தலை-கால் தெரியாமல் குதிக்கக்கூடாது.
அவர் தனது அபரிமிதமான-அபாரமான-அற்புதமான நடிப்புத்திறமையால் மட்டுமே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எதிரிகளையும்-துரோகிகளையும் வீழ்த்தத் துடிக்கும் வீரத்திலகம்
http://i1094.photobucket.com/albums/...RER101-1-1.jpg
NT Devotee,
பம்மலார்.
பொன்விழா நாயகன்
கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா
தொடர்ந்து களைகட்டி நிறைகின்றன
1.10.1986 : புதன் : சென்னை
[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]
வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/...EDC4305a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4306a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4308a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4310a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மகாகவி காளிதாஸ்
[19.8.1966 - 19.8.2011] : 46வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1966
http://i1094.photobucket.com/albums/...EDC4355a-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.