-
வினோத் சார்,
இந்த மாதிரி வெடிகுண்டு சமாசார பேட்டிகள் ஏராளம் உள்ளது.கண்ணதாசனுடையதே நிறைய.
ஆனால் எங்களுக்கு நடிகர்திலகத்தை பற்றி எழுதவே ஏராளம் உள்ளதால்,பொருட்படுத்த தக்கதாகவே இல்லாத விஷயங்களை தொடுவதேயில்லை.
ஆனால் உங்கள் நாகரிகமான அணுகல், எங்கே போச்சு என்று தேடும் வகையில் பதிவுகள் இருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனர்.மாற்றி கொள்ளவும்.(நான் பார்ப்பதே இல்லை)
-
இனிய நண்பர் திரு கோபால் சார்
என்னுடைய பதிவுகள் என்றுமே நாகரீகமாக இருக்கும் நண்பரே . உங்களின் தனிப்பட்ட குரோதம்
ஆத்திரம் உங்களின் கண்ணை மறைக்கிறது .தனிமையில் சற்று நிதானமாக யோசித்து பார்க்கவும் .
உங்களின் கவிதையால் ஒரு நட்பு வட்டமே கிடைத்தது .வார்த்தைகள் அள்ளி விடுவது சுலபம் .
யோசிக்கவும் .
-
[quote
ஜெயா டிவி ஒளிபரப்பிய , திரு ரஜினிகாந்த் அவர்களை நகைச்சுவை நடிகர் திரு விவேக் பேட்டிகண்டபோது விவேக் ரஜினியிடம் கேட்ட கேள்வி
கேள்வி - திரை உலகில் நீங்கள் ஸ்டைல் மன்னன் என்று கூறுகிறார்களே .
அதற்க்கு திரு ரஜினியிடம் இருந்து வந்த உடனடி பதில் -
பதில் - இல்லை !
திரை உலகில் ஸ்டைலை முதன் முதலில் கொண்டுவந்தது சிவாஜி சார் தான் !
இதை திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறியது இந்த உலகமே பார்த்த ஒன்று..!
மற்றவருடைய திறமைகளை, சாதனைகளை தனதாக்கி கொண்ட, கொள்ளும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் இந்த, உண்மையை தயக்கமின்றி ஒத்துகொண்ட பண்பு பாராட்டத்தக்கது ![/quote]
உண்மை - ஆனால் இந்த பண்பில் 0.00000001% கூட விவேக்கிடம் இல்லை - விவேகம் இல்லாதவருடைய பெயர் விவேக் - கண்ணிலாதவன் பெயர் "கண்ணாயிரம்" என்பதுபோல் !!
-
பார்த்ததில் பிடித்தது -32
சென்ற பதிவில் 1968 ல் வந்த என் தம்பியை பற்றி எழுதி இருந்தேன் , இந்த பதிவு அதற்கு அடுத்த வருடம் அதாவது 1969 ல் நடிகர் திலகத்தின் முதல் படமான அதுவும் Multi Starrer படமான அன்பளிப்பு படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்
கதை :
காட்டூர் என்ற அழகிய கிரமத்தில் வேலு (சிவாஜி ) ராஜா (ஜெய்ஷங்கர் ) இருவரும் நண்பர்கள் , ராஜா பணக்காரன் , வேலு ஏழை விவசாயி , வேலுவுக்கு ஒரு தங்கை , அந்த தங்கையை விரும்புகிறார் ராஜா , வேலு தன் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்குகிறார் VKR யிடம் இருந்து , VKR க்கு இரண்டு வாரிசுகள் , நாகேஷ் , சரோஜா தேவி . ராஜாவின் அம்மா பண்டரி பாயை தன் தாயாக நினைத்து பாசம் காட்டுகிறார் வேலு , அவரும் அபப்டியே
ராஜா அமெரிக்காவில் படித்து வீடு ஊர் திரும்புகிறார் , அவரின் லட்சியம் தன் கிராமத்தில் அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதே , முக்கியமாக ஒரு ஆலை அமைப்பது அவர் லட்சியம் , பெரிய பணக்காரனாக இருபதினால் அவருக்கு தன் இலட்சியத்தை அடைவதில் சிக்கல் எதுவும் இல்லை , ஆனால் ஆலையை கட்ட இடம் இல்லாமல் தவிக்கிறார் , பெரிய விட்டு பிள்ளை கேட்பதினால் அனைவரும் தங்கள் விவசாய நிலங்களை தந்தது விடுகிறார்கள் , வேலு விவசாயம் தான் முக்கியம் என்று இடத்தை தர மறுக்கிறார் , இந்த இடம் ராஜாவின் தந்தை வேலுவின் தந்தைக்கு தர பட்டது .
-
இதனால் நட்பில் சிறு விரிசல் , இது தான் சரியான நேரம் என்று பணம் கொடுத்த VKR , மற்றும் ராஜாவின் financial advisor நம்பியார் இருவரும் , அந்த விரிசலை அதிக படுத்தி விடுகிறார்கள் . 2 நாட்களில் பணம் கட்ட விட்டால் நிலத்தை எடுத்து கொள்ள போவதாக மிரட்டுகிறார் VKR (தன் பெண்ணை காதலிக்கிறார் என்பதை அறிந்தும் ) இந்த நேரத்தில் ராஜாவின் தாய் வேலுவுக்கு பணம் தர அதை வைத்து கடனை அடைத்து விடுகிறார் , VKR வீட்டுக்கு வரும் நம்பியார் வேலு பணம் கொடுத்ததை அறிந்து , VKR அசந்த நேரமாக பார்த்து ஆபீஸ் ல் திருடிய பணத்தை மாற்றி VKR யிடம் கொடுக்கிறார் (இரண்டும் , (வேலு கொடுக்க வேண்டிய பணமும் , நம்பியார் திருடிய பணமும் ) 3000/- ரூபாய்கள் )
ஆபீஸ் ல் பணத்தை காணவில்லை என்று ராஜா தேட , நம்பியார் போலிசிடம் தகவல் கொடுக்க , அந்த நேரம் வேலு கடனை அடைத்த செய்தி ராஜாவுக்கு கிடைக்க , வேலு வீட்டில் போலீஸ் தேடுகிறது , வேலு தான் குற்ற்றவாளி என்று நினைத்து ,அவரை அவமான படுத்த வேண்டாம் என்று கொடுத்த புகாரை வாபுஸ் வாங்குகிறார் ராஜா , நொந்து போகும் வேலு நிலத்தை ராஜா பெயரில் எழுதி வைத்து ஊரை விட்டு போக முடிவு செய்கிறார் , ராஜா ஆலையை தீ வைத்து கொளுத்த முயற்சி செய்யும் நம்பியார் , வேலுவையும் அந்த ஆலைக்குள் வைத்து பூட்டுகிறார் (ஒரு மில் அதிபரிடம் ராஜா உங்க மில்லை விட பெரிய மில்லாக என் மில்லை கொண்டு வருகிறேன் என்று சொல்ல , அந்த மில் அதிபர் வைர மோதிரத்தை லஞ்சமாக கொடுத்து நம்பியாரை தன் வசபடுதி கொள்ளுகிறார் )
முடிவில் ஆலை எரிந்து போகும் பொது வேலு ராஜாவை காப்பாற்ற , நண்பர்கள் சேர்ந்து சூழ்ச்சியை முறியடித்து , ராஜா வேலு வின் தங்கையை திருமணம் செய்து கொள்ள , வேலு சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள , ஒன்றாக சேர்ந்து பொங்கல் கொண்டாட நாம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம்
-
படத்தை பற்றி :
இந்த படம் பார்க்கும் போதும் , எழுதும் போதும் , பல படங்களுக்கு இந்த படம் inspiration என்று புரிகிறது , இரு நண்பர்கள் , அவர்களில் ஒருவர் ஏழை , மற்றுஒருவர் பணக்காரர் என்பது beaten to death என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் சொல்ல பட்ட கதைகளில் ஒன்று . ஆனால் இந்த type கதையின் வெற்றி 100 % சதவிதம் ஒழுங்காக handle செய்யப்படும் பட்சத்தில் . படம் வந்தது 1969 ல் அதே சாயல் உள்ள படம் தலைவர் ரஜினி நடித்த அண்ணாமலை (இதிலும் நில பிரச்சனை தான் மையம் ) அண்ணாமலை படமே Khudgarz, ஹிந்தி படத்தின் ரீமேக் தான் .
இந்த மாதிரி இரண்டு பிரபல நாயகர்களை வைத்து இயக்கம் பொது , இவருவருக்கும் சம பங்கு கொடுக்கும் படி திரை கதை அமைக்க பட வேண்டும் அப்போது தான் இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியும் , அதே போல் இரு ஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும் கொஞ்சம் விட்டு கொடுத்து அப்போது தான் அதன் தாகம் திரையில் தெரியும் , இந்த காலத்தின் பாஷையில் சொல்லுவது என்றால் CHEMISTRY நன்றாக இருக்கும் .
இந்த படத்தில் நடித்து இருபதோ இரண்டு gentleman , ஒருவர் நடிகர் திலகம் , அடுத்தவர் ஜெய் ஷங்கர் , என்னக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் . இந்த பெருமை எல்லாம் இருவரயும் சமமாக balance செய்த இயக்குனர் ACT மற்றும் இரு தரப்பு ரசிகர்களின் மனநிலையை புரிந்து provoke பண்ணாத படி வசனம் எழுதிய அரூர் தாஸ் இருவரை சாரும்
முக்கியமாக screen space யை ஷேர் செய்ய ஒத்து கொண்ட நடிகர் திலகம் , மற்றும் மக்கள் கலைஞர் இருவருக்கும் ஒரு hats off .
-
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி என்ன சொல்ல , பல பதிவுகள் எழுதியும் , அவர் நடிப்பை பற்றி எழுத bore அடிக்க வில்லை .
நடிகர் திலகம் கெளரவம் , ஞான ஒலி போன்ற பல படங்களில் அவர் ஆங்கிலம் பேசும் ஸ்டைல் அதுவும் ஒரு வித accent உடன் பேசும் அழகையும் பார்த்து இருக்கேன் , இந்த படத்தில் வருவதை போல் தப்பும் தவறுமாக அங்கிலம் பேசுவதை பார்க்கும் பொது , எப்படி இந்த பிறவி கலைஞன் மட்டும் இப்படி நடிக்கிறார் , என் என்றால் ஒரு நபர் சரியாக அங்கிலம் பேசுகிறார் என்றால் அவரால் தவறாக பேச இயலாது , அபப்டியே பேசினாலும் அது cliched அல்லது திணித்து போல் இருக்கும் ,இந்த மாதிரி இயல்பாக இருக்காது . இது எங்க சிவாஜி சாருக்கு மட்டுமே சாத்தியம்
-
தன் நண்பர் ஊருக்கு வரும் பொது அவருக்கே தெரியாமல் ஒளிந்து இருந்து பார்ப்பது , தலையில் தூண்டு போட்டு அவர் அனந்த கண்ணீர் உடன் பார்க்கும் காட்சி , நடிப்பு எதார்த்தம் . தன் நண்பன் நல்லபடியாக வந்து சேர்ந்ததுக்கு சந்தோசம் படும் காட்சியும் , தன் நண்பனை பற்றி பேசும் பொது , அவர் வந்து டேய் வேலு என்று குப்பிடும் பொது வேலவேளுது போவதும் , சின்ன முதலாளி என்று சொன்னதும் ஜெய் கோபம் அடைந்து டேய் என்று கூப்பிட சொல்ல , நம்மவர் ரொம்பவும் கஷ்ட பட்டு , பல்லை கடித்து கொண்டு டேய் என்று குபிடுவதும் , அதை தொடர்ந்து சகஜமாக பேசுவதும் , தன் நண்பன் கொண்டு வந்த கொடுத்த pant shirt யை போட்டு கொண்டு அவர் வீட்டில் போய் குதிப்பதும் சாரி ஆடுவதும் , ஜெய் மேலே இருந்து சிரித்து விட்டு , பின் தானும் சேர்ந்து கொண்டு ஆடுவதும் , அந்த பண்ட போட்டு கொண்டு நம்மவர் ட்விஸ்ட் டான்ஸ் ஆடுவதும் , பின் ராமர் லக்ஷ்மணர் என்ற வரி வரும் பொது ஜெய் சாரை தூக்குவதும் நடப்புக்கு எடுத்துகாட்டு
தன் உயிர் நண்பன் கேட்டும் நிலத்தை கொடுக்காமல் இருப்பதும் , தன் தரப்பு வாதத்தை பாமரதனமாக எடுத்து வைப்பதும் , எதோ இடத்தை கேட்டான் நான் கொடுக்கவில்லை அதற்காக சண்டை என்று ஆகிவிடுமா ? என்று அப்பாவித்தனமாக கேட்பதும் , தன் நண்பன் தன்னை திருடன் என்று நினைத்து ஒரு வித ஏளன பார்வை பார்த்த உடன் , மனம் வெறுத்து தன் காதலி , மற்றும் தங்கை இருவரிடமும் வெறுத்து போய் பேசுவதும் , என்னக்கு தங்கை இருக்குதே என்று பார்கிறேன் இல்லையென்றால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்று துண்டை கழுத்தில் வைத்து சொல்லும் காட்சி , brand நடிகர் திலகம். கிருஷ்ணர் நடனத்தில் நடிகர் திலகம் கிருஷ்ணராகவும் , நாகேஷ் பெண் வேடம் போட்டு ஆடுவதும் - superb , நாகேஷ் சாரின் நளினம் பெண் வேடத்தில் அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அவர் காட்டும் dedication - veteran என்பதை நிருபிகிறது . சரோஜா தேவிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை .
நம்பியார் வழக்கம் போல்
-
நடிகர் திலகம் மற்றும் மக்கள் கலைஞர் combination காட்சிகள் :
மக்கள் கலைஞர் சண்டை காட்சிகளில் முத்திரை பதித்தவர் என்று நம் அனைவருக்கும் தெரியும் ,இந்த படத்தில் அவர் சிலம்பம் சுத்தும் காட்சி டாப் , அது முடியும் தருவாயில் நடிகர் திலகம் தன் சிலமப்தை வைத்து ஜெய் ஷங்கரை தடுக்கும் பொது , முதலில் இவர் மறுத்து , பின்பு ஒரு friendly மேட்ச் ஆடுவதும் , அதில் இருவரின் action பலே .
அதே போல் வழுக்கு மரம் ஏறுவதும் , போலீஸ் தன் நண்பனை கைது செய்து விடும் என்பதை அறிந்து ஜெய் சிவாஜி ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து இது என் குடும்ப விஷயம் என்று சொல்லும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , இவர்களின் combination ல் பிரமாதமாக வந்து உள்ள காட்சிகள் . ஒரு படித்த நபர் விவசாய நிலத்தை அழித்து factory அமைக்க நினைப்பது இப்போ சர்வசாதரணமாக நடக்கும் விஷயம் - gobalilsation அப்போது அரிது
படத்தின் மினுஸ் காமெடி track , சரோஜா தேவி , சிவாஜி காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லாதது
கலப்படம் இல்லாத - முழு entertainment + கிராமத்து மனம் வீசும் படம்
-
Dear Murali sir,
Hats off for your article about Deiva Magan. Your eye for details astonishes me every time.
Also pl write about your theatre viewing experience