வினோத் சார்,
நெல்லையில் தற்போது ராயல் டாக்கீஸ்,பாலஸ்-டி-வேல்ஸ்,பார்வதி
டாக்கீஸ் ஆகியவை இல்லை.ஸ்ரீ ரத்னா டாக்கீஸ்,பாப்புலர் டாக்கீஸ்(கணேஷ்
என்ற பெயரில்)ஆகியவை உள்ளன.
கோபு
Printable View
வினோத் சார்,
நெல்லையில் தற்போது ராயல் டாக்கீஸ்,பாலஸ்-டி-வேல்ஸ்,பார்வதி
டாக்கீஸ் ஆகியவை இல்லை.ஸ்ரீ ரத்னா டாக்கீஸ்,பாப்புலர் டாக்கீஸ்(கணேஷ்
என்ற பெயரில்)ஆகியவை உள்ளன.
கோபு
அய்யய்யோ ,
இது அபாண்டம். நான் அப்படியெல்லாம் சொன்னால் மகிழ கூடியவனா என்ன?ராமண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜி.ராமநாதனிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது முதல், ராமமூர்த்தி போட்ட டியுனை ராமண்ணா விற்கு ஹார்மோனியத்தில் வாசித்து காட்டி , அவ்வப்போது நிரவலாக இரவில் பிள்ளைகள் கேட்டால் பயந்தலரும் கர்ண கடூரமான குரலில் பாட்டை சொல்லி, பதிவின் போது ரெண்டு மூங்கில் குச்சியை கையில் வைத்து , துரு துரு வென்று இருப்பவரை போய் ,வெத்திலை போட்டு கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே படத்தில் இடம் பெற்ற "உருகிடும் வேளையிலும்" பாட்டை எங்கேயும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஜேசுதாஸின் விருத்தத்தைத் தொடர்ந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். ஒரு பழைய திரியில் இந்த லிங்க் கிடைத்தது.
http://www.tfmpage.com/cgi-bin/strea...td/urugidum.rm
ஹிந்தோளம் .
உங்கள் அத்தை பெண் ,நீங்கள் வருவதறிந்து ,ஒளிந்து கொண்டு கொண்டு விளையாட்டு காட்டுகிறாள். நீங்கள் அவளிருக்குமிடம் தெரிந்து,பின்னால் சென்று ,காதை திருகி குதூகலிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் படும் இன்ப பாட்டை ராகமாக்கினால் ,அதுவே ஹிந்தோளம்.ஆரம்பம் முதல் உற்சாகமாய் களை கட்டும் ராகம்.
ரிஷப ,பஞ்சமம் இல்லாத ஐந்து சுரம் கொண்ட (ஸ க ம த நி ஸ , ஸ நி த ம க ஸ ) கொண்ட சுலப சமதள ராகம்.இது pentatonic scale என்பதால் ,இந்த ராகத்தின் சாயல் கொண்ட இசை ,சீனா,இந்தோனேசியா முதல் பல நாட்டு பாடல்களில் நான் கண்டதுண்டு.(மோகனமும் அப்படியே). வெஸ்டேர்ன் முதல் நமது பண்டைய பண்கள் வரை இந்த சாயல் கொண்ட ராகங்கள் உண்டு.இதன் மூலம் நட பைரவியா ,அனும தோடியா என்று இன்றும் பட்டி மன்றம் உண்டு.ஹிந்துஸ்தானி மால் கௌன்ஸ் இதன் சகோதரன்.
சிறு வயதில் ராமர் சம்பந்த பட்ட எந்த பண்டிகை வந்தாலும் ,ஒரு கால் மணி நேரம் ஒரே பாடலுக்கு போய் விடும். கொஞ்சம் கடுப்பாகவே இருந்தாலும் போக போக இந்த நீ(ஈ ஈ ஈ ஈ )ண்ட பாடலில் சுவை காண ஆரம்பித்தேன். லவகுசா என்ற படத்தில் "ஜகம் புகழும் புண்ய கதை "(நடுவில் வேறு ராகங்களும் வரும்).
அடுத்த வீட்டு பெண் என்ற அஞ்சலியின் நகைச்சுவை சூப்பர் ஹிட் படம். அவர் கணவர் ஆதி நாராயண ராவ் கொடுத்த பல சூப்பர் ஹிட் பாடல்கள். மூலம் என்னவோ கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரி பட playback knot தான் என்றாலும் ஜாலிதான்.அதில் டி.ஆர் .ராமசந்திரன் (தங்கவேலு குரலுடன்) பாட்டு வாத்யாருடன் மோதும் சின்ன பாட்டு. பாட்டு வாத்யார் அவசரத்தில் கவிகளும் கண் பாடி விடுவார். படோசன் இதன் remake ."கண்களும் கவி பாடுதே"
அப்போது தெலுங்கு பட வாசனையில் நிறைய தமிழ் படங்கள்.சென்னை ராஜதானி பொட்டி ஸ்ரீராமுலுவினால் பிரியாத காலம்.சில classic பாடல்கள் ராவ் களினால் சுசீலா குரலில் வளம் பெறும் .அப்படி என்னை கவர்ந்த இளம் சுசீலா குரல் பாடல் "அழைக்காதே நினைக்காதே".
இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.
ராஜ சேகரா மோடி செய்யலாகுமா,ராஜ தந்த்ரி நீயடா
என்னை விட்டு ஓடி போக முடியுமா- குமுதம்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்- கர்ணன்.
மனமே முருகனின் மயில் வாகனம்- M .S .பிள்ளை.
சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.
பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை.
மார்கழி பூவே மார்கழி பூவே- மே மாதம்.
ஹிந்தோளம் ஒரு மென்மையான ராகம். அத்தை பெண் காதைக் கூட மிருதுவாகத்தான் திருகணும்...
"பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்.. அதில் பஞ்சமம் கலந்தால் சுருதி பேதம்" அப்படின்னு ஒரு சுசீலா பாட்டு கூட இருக்கு இல்லையா ?
மலேஷியா வாசுதேவன் குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் மாதிரி பாடிய "ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே" பாட்டும் "சின்னப்பூவே மெல்லப் பேசு" படத்தில் வரும் "என்னடா காதல் இது" பாட்டும் கூட இதன் சாயல்தானே... Spb & ஜானகி சங்கராபரணத்தில் ( படத்தின் பேர்தான் ) பாடிய "சாமஜவரகமனா" சரிதானா ?.
பஜரே கோபாலம் என்ற பாடலைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடினால் கோபால் வந்து இன்னும் விஷயங்கள் சொல்லுவாரோ ?
http://www.youtube.com/watch?v=EvPyaIAQ2io
இந்தப் பாடல் ஹிந்தோளம் தானே