-
-
-
மக்கள் திலகத்தின் ''சென்டிமென்ட் ''
பல படங்களில் மக்கள் திலகத்தின் அறிமுக காட்சியில் அல்லது படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் வெற்றி வெற்றி
என்ற வசனத்துடன் காட்சிகள் இடம் பெற்று இருக்கும் .சில படங்களில் வெற்றி என்ற சொல்லின் பாடல் வரிகள்
இடம் பெற்று இருக்கும் .
ஆயிரத்தில் ஒருவன் - ஆரம்ப காட்சியில் வெற்றி என்ற வசனத்துடன் மக்கள் திலகம் அறிமுகமாகியிருந்தார் .
உலகம் சுற்றும் வாலிபன் - சக்சஸ் என்று வசனம் கூறியிருந்தார் . நமது வெற்றியை நாளை சரித்திரம் ..பாடல் காட்சி .
தேடி வந்த மாப்பிள்ளை - வெற்றி மீது வெற்றி வந்து ..பாடலுடன் அறிமுகமாகியிருந்தார் .
ஆசைமுகம் - கிராண்ட் சக்சஸ் என்று வசனம் பேசினார் .
-
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
-
தாய் சொல்லைத் தட்டாதே!
தேவர் பிலிம்ஸ் திரைப்படங்கள் என்றாலே, எம்.ஜி.ஆருக்கு ஏற்றதுபோல், தாய்மையைப் போற்றும் தலைப்புள்ள படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.
அவற்றுள் ஒன்றுதான், ‘தாய்சொல்லைத் தட்டாதே!’ என்ற படம். 1961 – ஆம் ஆண்டு கண்ணதாசன் வசனம் தீட்டி, சமூகப்படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து, வெற்றிக்கொடி நாட்டிய ‘திருடாதே!’ எனும் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு, மகத்தான வெற்றியை சென்னை மாநகரில் ஈட்டியது.
இப்படத்தில் கண்ணதாசன் எழுதிய எல்லாப் பாடல்களும் கருத்துச்சுவையும், இனிமையும் நிரம்பிய பாடல்களே கே.வி. மகாதேவன் இசையில்,
“காட்டுக்குள்ளே திருவிழா!
கன்னிப் பொண்ணு மணவிழா!
சிரிக்கும் மலர்கள் தூவி,
சிங்காரிக்கும் பொன்விழா!”
என்று, காதல் வெற்றியில் மிதக்கும் கன்னிப்பெண், பாடிக் குதூகலிக்கும் பாடலைக் கவியரசர் இப்படத்திற்காக ஈந்தார்.
இப்பாடல் 1962 – ஆம் ஆண்டு தேனி சட்டமன்றத் தொகுதியில், அன்றைய தி.மு.கழக வேட்பாளராகப் போட்டியிட்ட இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆருக்குப் பிரச்சாரப் பாடலாக மாற்றி ஒலிக்கப்பட்டு பெருமிதம் அடைந்த பாடலாகும்.
தேனியிலே திருவிழா!
தேர்தலெனும் பெருவிழா!
ஜெயிக்கும் எஸ்.எஸ்
ராஜேந்திரனுக்கு வெற்றிவழா!”
என்றமைக்கப்பட்டு, வளமான வரவேற்பைப் பெற்றதாகும்.
இப்படத்தில்,
கேட்போர்க்குப் பாடலாய், பல்லாண்டு வாழும் பாடலொன்றும் உள்ளதை கேட்க வேண்டாமா? கேட்போம்….!
“போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே! – இறைவன்
புத்தியைக் கொடுத்தானே! – அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே! – மனிதன் பூமியைக் கெடுத்தானே!”
கேட்டோம்! பாடலின் ஆரம்பமே பாடந்தானே!
மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தவன் இறைவன் ஆனால்….!
புத்திகுள் பொய், புரட்டு, திருட்டு ஆகியவற்றைக் கலந்து பூமியைக் கெடுத்தவன் மனிதன்!
இங்கே குற்றவாளி யார்? மனிதன் தானே!
மனிதனின் செயல்களுக்குள் மறைந்திருக்கும், மர்மங்களையும் நாம் அறிய வேண்டாமா? கவிஞரே சொல்லட்டும்….! அறிவோம்!
“கண்களிரண்டில் அருளிருக்கும்! – சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்!
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்! – அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்!”
அறிந்தோமா?
‘கண்ளோ அருள் பொழியும் அருவி!
உள்ளமோ பொய்நிறைந்த கடல்!
கருத்தினிலோ ஆயிரம் பொருள்கள்! – அவையே
கருவுக்குள் பிறந்தோரைக் கொல்லும் ஆயுதங்கள்!’
மனிதச் செயல்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் இவ்வளவுதானா?
படத்தில் நடிக்கும் மக்கள் திலகம், மக்களுக்குச் சொல்லும் பாடமாகக் கவியரசர் அள்ளித்தரும் கருத்துகளை இன்னும் கேட்பீர்களாக!
“பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே! – புலியின்
பார்வையில் வைத்தானே! – இந்தப்
பாழும் மனிதனின் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே! – இதயப்
போர்வையில் மறைத்தானே!…
கைகளைத் தோளில் போடுகிறான்! – அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்!
பைகளில் எதையோ தேடுகிறான்! – கையில்
பட்டதை எடுத்தே ஓடுகிறான்!”
கேட்டீர்களா?
‘பாயும் புலியின் கொடுமை பார்வையில் பாழும் மனிதனின் குணங்கள் இதயப் போர்வையில்! அப்படியானால்….!?
பாயும் புலியின் கொடுமையிலிருந்து தப்பலாம்? பாழும் மனிதனின் மறைக்கப்பட்ட குணக்கேடுகளில் இருந்து தப்பமுடியுமா?
தப்ப முடியாது தவிக்கும் மனிதனுக்குத் தொடர்ந்து வரும் சோதனைகளைப் பாருங்களேன்!
பழகிவிட்டது போன்ற பாவனையில், வருகிறான் ஒருவன்; வந்தவன் தனது கைகளை அருகில் உள்ளவன் தோள்களில், கருணை என்ற போர்வையில் போடுகிறான்! உரிமையோடு பைகளில் எவற்றையோ தேடுகிறான்! கைகளில் அகப்பட்டதை எடுத்தே ஓடி விடுகிறான்…..!
கருணைக்கும், உரிமைக்கும் இடம் தந்தவன் ஏமார்ந்து நிற்கிறான்!’
இப்படி, மனித சமுதாயத்தில் உலாவும், இந்தப் போலிகளை அடையாளம் காட்ட, புரட்சிநடிகர் புகட்டிய புரட்சிக் கருத்துகளுக்கு ஏற்றவாறு, எவ்வளவு அருமையாகப் பாடலைப் புனைந்து தந்துள்ளார் கவியரசர். இத்தகு பாடல்கள் அமையும் வண்ணம், தான் நடிக்கும் படங்களில் கருத்தைச் செலுத்தி வென்ற எம்.ஜி.ஆரை எப்போதும் கண்ணதாசன் பார்த்த பார்வைகளும் பரவசம் ஊட்டுவனவே எனலாம்.
-
மக்கள் திலகத்தின் ராசி எண் -7
1968 பொங்கலுக்கு முன் வந்த படம் - ரகசிய போலீஸ் 115- கூட்டு எண் -7
7ந் தேதி அன்று வந்து மாபெரும் வெற்றிகளை தந்த படங்கள்
காவல்காரன்
நம்நாடு
தாய் சொல்லை தட்டாதே
உரிமைக்குரல்
மக்கள் திலகத்தின் கார் எண் - 4777
மக்கள் திலகம் முதல்வர் - 1977
நன்றி - முக நூல்
-
-
இந்த வார குமுதம் இதழில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி கவுரவம்மாள் தமது கணவரைப்பற்றி தெரிவித்த செய்தி.
http://s29.postimg.org/rhex77elz/scan0004.jpg
http://s18.postimg.org/t6n4zptbd/scan0001.jpg
-
-