Thank you! I will continue to participate. :)
Printable View
யப்பா! ஈஸ்வரி அக்கா நிஜமாகவே பார்க்க ராட்சஸி மாதிரி இருக்காங்களே எஸ்வி போட்ட படத்துல.
ராஜேந்தர் இசையில் சுசீலா பாடிய சில பாடல்களை இங்கு பதிவிடவைத்த சாமர்த்தியசாலி கிருஷ்ணா சாருக்கு பாராட்டுக்கள்.
சந்திரபாபுவின் படப் பாடல் வரிகள் சில தந்த சின்னக் கண்ணன் சாருக்கு என் நன்றிகள்.
கதை உண்டு.. ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று..
மனம் என்னவோ மயங்குது நின்று
ஆஹா! ஆஹா! எனக்கு உயிரான பாட்டு
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன்னைகரில்லாது இன்று
ரெகமண்ட் செய்த கிருஷ்ணாவுக்கும், வாரி வழங்கிய மதுஜிக்கும் நன்றிகள்.
100 % azhagana ratchasi
http://i57.tinypic.com/2dtb3t1.jpg
http://youtu.be/gs1s0rRYZ-A
நன்றி திரு ராஜேஷ் சார்
ஒருமுறை நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் அவர்கள் இந்த பாடலை திரு இளையராஜா அவர்கள் எழுதியதாக குறிப்பிட்டார் .அந்த நிகழ்ச்சிக்கு திரு இளையராஜா அவர்களும் வந்து இருந்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை .அதனாலேயே ஜனனி ஜனனி பாடல் இளையராஜா எழுதியது என்று பதிவிட்டேன்
மன்னிக்கவும் நிச்சயம் ஜனனி பாடல் வாலி அய்யா அவர்கள் எழுதியது தான் அதில் சந்தேகமே இல்லை . பின்வரும் சம்பவங்களின் கோர்வையின் அடிப்படையில் ஜனனி ஜனனி பாடல் இளையராஜா என்று சொன்னதாக திரு ஜாகிர் உசேன் அவர்கள் கூறினார்
இளையராஜா அவர்களின் இசையில் எத்தனையோ காலத்தால் அழியாப் பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றுள் இன்றும் முதலிடத்தில் இருப்பது சந்தேகமேயின்றி தாய் மூகாம்பிகை படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடல் தான். இன்றைக்கும் அவரது இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் கடவுள் வாழ்த்து பாடலாக பாடப்படுவது இந்த பாடல் தான்.
கேட்போரை ஜாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டு உருகச் செய்வதில் இந்த பாடலுக்குக் நிகர் இந்த பாடல் தான்.
உயிரை உருக்கும் இசை என்பார்களே அதற்க்கு அர்த்தம் இந்த ஜனனி ஜனனி பாடல் தான். இருக்காதா பின்னே . சாட் சாத் அந்த ஆதி சங்கரரே ஆசியளித்த பாடல் அல்லவா அது .!
சென்ற ஆண்டு சென்னை டிரேட் சென்டரில் நடந்த கான்சர்ட் ஒன்றில் இந்த பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா கூறியிருந்தார். அது பற்றிய பதிவு ஒன்றை நண்பர் பால் ஹனுமானின் தளத்தில் படித்தேன். அவசியம் நம் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இங்கு தருகிறேன்.
காலத்தால் அழியாப் பாடல் உருவான சிலிர்க்க வைக்கும் கதையை தெரிந்துகொள்ளுங்கள். பாடலையும் ஒரு முறை கேளுங்கள். அன்னை மூகாம்பிகை ஆசி அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!
================================================== =============
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பவதாரணி, இறைவணக்கப் பாடலாய் ஜனனி ஜனனியைப் பாடி முடிக்கவும் மைக் பிடித்த இசைஞானியின் குரு திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன், இந்த ஜனனி ஜனனி பாடலைக் காலையில் ஒருமுறைக் கேட்டுவிட்டால் அன்று கோயிலுக்குப் போகவேண்டாம்; பூஜை செய்ய வேண்டாம்; அனைத்தும் இந்த ஒரு பாடலிலேயே பொதிந்திருக்கின்றன. இசைஞானி இளையராஜா தன் இசையின் மூலம் உங்களுக்கெல்லாம் இன்பத்தை அள்ளித்தந்துகொண்டிருக்கும் ஒரு மாமேதை. இசையே ஒரு அழகு. அந்த அழகுக்கு அழகுசேர்த்தவர் இவர்தான். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதற்காக நான் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை மெச்சுகிறேன் என்று கூறியமர, இருக்கையை விட்டு எழுந்து வந்து, விரிக்கப்பட்டிருந்த தன் பிரத்யேக வெண்மெத்தையில் வந்தமர்ந்தார் இசைப்பிதா.
இளையராஜா பேசும்போது இங்கே என்ன பண்ணப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. எதுவும் பண்ணிவிடமுடியாது .. இசையைத் தவிர ..! நான் எது செய்தாலும் அது மியூஸிக்தான்..! நான் உங்களைச் சந்திக்க விரும்பியதன் நோக்கம், நான் என் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். உங்களை மட்டுமல்ல.. நாடு முழுக்க இதே போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறேன். எனக்கு வருங்கால மாணவர்களை, இளைஞர்களைச் சந்திக்கவேண்டும்.
நான் இந்த நிகழ்ச்சியை எந்தப் பாடலுடன் துவங்கவேண்டும் என்று நினைத்து வந்தேனோ அந்தப் பாடலைப் பவதாரிணி பாடிவிட்டாள். இந்தப் பாடல் உருவானபோது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
================================================== =
இளையராஜா : டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் தாய் மூகாம்பிகை படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் நார்த் உஸ்மான் ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.
-
அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன்.
-
ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க.. என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.
-
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..! என்று எனக்குத் தோன்றியது.
-
நான் மறுபடியும் சென்று, சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன் என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால் தரரா.. தரரா (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ என்று எழுதினார்.
-
பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..! என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
-
கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன். குருவே.. என் Tuneல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.? என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.
-
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
-
(ஜனனி ஜனனியின் மெட்டில் பாடுகிறார்..)
ஜனனி ஜனனி பாடல்.. பஜகோவிந்தம் Meterல் அமைந்திருந்தது. அடடே.. குருவே !! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..? என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
-
அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும் என்று கூறினார். நான் டைரக்டரிடம், நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
http://rightmantra.com/wp-content/up...hi-Sankara.jpghttp://rightmantra.com/wp-content/up...laiyaraja1.jpg
நாலுபக்கம் ஏரி . மிகப்பிடித்த பாடல் எஸ்.வி சார். அந்த எல்.ஆர்.ஈ யோட.இழுப்பு ந்நாலு பக்கம் ந்நாலு பக்கம் ந்நாலு பக்கம் ஏரி ஏரியிலே ஏரியிலே ஏரியிலே தீவு ரொம்பப் பிடிக்கும்.. தாங்க்ஸ்..
இன்றைய ஸ்பெஷல் (74)
இன்றைய ஸ்பெஷலில் என் உயிரில் கலந்த பாடல். அது இன்று முதல் உங்கள் உயிரிலும் கலக்கட்டும்.
பாடகர் திலகத்தின் என்னுடைய டாப் 10 இல் இடம் பிடித்த பாடல்.
கௌரிக் கல்யாணம்.
"சரவணன் அளிக்கும் சரவணா கம்பைன்ஸாரின் கௌரிக் கல்யாணம்" என்று டைட்டிலின் போது பின்னால் குரல் ஒலிக்கும்.
http://i.ytimg.com/vi/xcY3fXj13y8/hqdefault.jpg
கே.சங்கர் இயக்க, ஜி.வி.சரவணன் தயாரிக்க, ஜெய், ரவி, ஜெயலலிதா, ஷீலா, நாகேஷ், மனோரமா, பண்டரிபாய் என்று நட்சத்திரக் கூட்டம்.
ஒளிப்பதிவு தம்பு.
கதை வசனம் பிலஹரி.
இப்படத்தின் உதவி இயக்குனராக ரா. சங்கரன் இருந்தார். இந்தப் படத்தில் ஜெய்க்கும், ரவிக்கும் கதிகலக்கும் ஒரு சண்டைக்காட்சி ஒன்று உண்டு.
மெல்லிசை மன்னர் இசை. அருமையான பாடல்கள். கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், பாரதியார் பாடல்கள்.
வரணும் வரணும் மகராணி, திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும், வெள்ளைக் கமலத்திலே, தொட்டது போலே கனவு கண்டேன் தூக்கக் கலக்கமா... என்று ரகளை பாடல்கள்.
'கௌரிக் கல்யாணம்' படத்தில் போஸ்ட்மேன் ஜெய்சங்கர் சைக்கிளில் அனைவருக்கும் கடிதங்கள் கொடுத்தபடி பாடி வரும்பாடல்.
அப்போதைய கம்யூனிகேஷனுக்கு இருந்த ஒரு சில சாதனங்களில் கடிதம் ரொம்ப முக்கியமானது.
அந்த கடிதத்தின் பெருமையை பறை சாற்றும் அருமையான பாடல் இது.
தபால் இலாகாவுக்கே பெருமை சேர்த்த பாடல். பிரிவுத் துயருக்கு அருமருந்து கடிதத் தொடர்பு. அன்று கன்னியரையும், காளையரையும் இணைத்த பாலம் இந்தக் கடிதம்தானே!
வெளியூரிலிருந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் மணி ஆர்டர் மூலம்தானே அந்த ஏழைத் தாய்க்கு சென்றடைகிறது!
சகோதர சகோதரிகளின் பிரிவை மறக்கடிக்கச் செய்வதும் இந்தக் கடிதம்தானே!
இந்த தபால்காரன் கடிதம் தருவதோடு மட்டுமல்லாமல் "வெளியூரில் இருக்கும் உன் அன்பு மகன் முருகன் அருளால் விரைவில் ஊர் வந்து சேர்ந்து உன்னிடம் அன்பைப் பொழிவான்" என்று ஆறுதலும் கூறுகிறானே!
தபால்காரனாக மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சைக்கிளில் சென்று கடிதம் தருவது இயல்பு.
எல்லாப் புகழும் பாடகர் திலகத்திற்கே. ஒரு தபால்காரனின் எண்ணங்களை அப்படியே அச்சு அசலாக உள்வாங்கி, குரல் வழியே ஏற்ற இறக்க பாவங்களுடன் பிரதிபலிக்க இவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
குரலின் இனிமை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.
பாடலின் இடையே உற்சாகமாகப் பொங்கும் அந்த விசில் சப்தம்.... அதுவும் சில இடங்களில் விட்டு விட்டு ஒலிக்கும் போது சொர்க்கம் காண்பேன்.
http://i.ytimg.com/vi/j_bHKBG6_oc/hqdefault.jpg
இனி பாடலின் முழு வரிகள்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவித் துயரம் பேசிடும் கடிதம்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
(அருமையான விசில் சப்தம்)
காலமகள் எனும் தெய்வ மகள்
கலங்க வைப்பாள் சிரிக்க வைப்பாள்
எந்தெந்த உறையில் என்ன என்ன கதையோ
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ
சுகமும் வரலாம் துன்பமும் வரலாம்
இறைவன் அருளால் நலமே வருக
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
கன்னியரே காலம் வரும்
காதலரின் தூது வரும்
பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருளால்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருள்வான்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருளால்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருள்வான்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
http://www.youtube.com/watch?v=j_bHK...yer_detailpage
இந்த வரிகளை முதன்முறை பாடும் போது 'முருகன் அருளால்' என்றும், அதே வரி பின்னால் திரும்பப் பாடப்படும் போது 'முருகன் அருள்வான்' என்றும் வரும். பாடல் அப்படித்தான் எழுதப்பட்டதா அல்லது ஏதேனும் தவறு நேர்ந்ததா அல்லது 'பாடகர் திலகம்' மாற்றிப் பாடிவிட்டு அது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது என் நெடுநாள் சந்தேகம்.
தந்திருக்கும் பாடல் வீடியோவில் நிறைய வரிகளை 'ஸ்வாஹா' பண்ணி விட்டார்கள். அதனால் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்க
http://www.inbaminge.com/t/g/Gowri%20Kalyanam/