http://i67.tinypic.com/svkuvb.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நீரும்நெருப்பும் '' - 18.10.1971
45 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த பிரமாண்ட படைப்பு . பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரட்டை வேடங்கள் - நடிப்பு அபாரம் . அனல் பறக்கும் சண்டை காட்சிகள்
இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .
நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .
பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.
தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!
தமிழகத்தின் தீபாவளி’
தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.
இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.
திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.
ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.
தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.
அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.
அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
courtesy . கலைவேந்தன்
அதிமுக உதயமான நாள் இன்று -17.10.1972.
44 ஆண்டுகள் நிறைவு பெற்ற இயக்கத்தின் 15 ஆண்டு கால சாதனைகள் .
1972- புரட்சி நடிகர் எம்ஜிஆர் - 17.10.1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார்
1973- திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட வெற்றிகள்
1974- புதுவை - கோவை தேர்தல்களில் முழு வெற்றி .
1975- அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றம் .
1976 - தமிழக அரசியலில் ஆளும் கட்சி டிஸ்மிஸ் -.அதிமுக ஆசூர வளர்ச்சி
1977- பாராளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுக ஆட்சி . எம்ஜிஆர் தமிழக முதல்வர் .
1978 - முன்னேற்ற பாதையில் தமிழகம் .
1979 - மத்திய அரசில் அமைச்சரவையில் முதல் முறையாக அதிமுக இடம் பெற்றது
1980 - மீண்டும் மக்கள் திலகம் தமிழ்க் முதல்வர் .
1981 - மதுரையில் உலக தமிழ் மாநாடு
1982 -உலக புகழ் சத்துணவு திட்டம் .
1983- இடைதேர்தல்களில் மாபெரும் வெற்றிகள்
1984 - ஏராளமான சோதனைகள் - அரசியல் விளையாட்டுகள் - எம்ஜிஆர் மரணத்தை வென்று மீண்டும் ஆட்சி .
1985- மீண்டும் மூன்றாவது முறை மக்கள் திலகம் பதவி ஏற்பு .
1986 - முன்னேற்ற பாதையில் தமிழகம்
1987 - மக்கள் திலகத்தின் பிரிவு - சோதனையான கட்டங்கள்
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972
41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .
திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .
கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .
கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி
ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்
மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை
கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி
இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .
மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்
என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .
ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று
லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .
திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு
உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .
பிம்பமும் நிஜ வாழ்வும்
அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
Article from the hindu
ஒரு சோகமான நிகழ்வு.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. கீழமாசி வீதியில் அமைந்திருந்த சிந்தாமணி தியேட்டர். புரட்சித் தலைவர் நடித்த பல படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடி வசூலைக் கொட்டிக்குவித்தன. அடிமைப்பெண் திரைப்படம் சிந்தாமணி தியேட்டரில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.
சில வருடங்களாகவே சிந்தாமணி தியேட்டர் மூடப்பட்டுதான் இருந்தது. அங்கு படங்கள் திரையிடப்படுவது இல்லை. ஒரு ஜவுளிக்கடை குடோன் ஆக இருந்தது. இருந்தாலும் கட்டடம் இருந்தது ஒரு ஆறுதலாக இருந்தது. இங்குதான் அடிமைப்பெண் வெள்ளி விழா கொண்டாடியது என்ற நினைப்புடன் கட்டிடத்தைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும்.
இப்போது அந்தக் கட்டிடம் இடிக்கப்படுகிறது. இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தாமணி.
http://i63.tinypic.com/2zgd8h1.jpg
இன்னும் சில நாள்களில் அந்தக் கட்டிடமும் இருக்காது என்பது வருத்தமாக இருக்கிறது. பழைய தியேட்டர்கள் ஒவ்வொன்றாக மறையும்போது நமது நினைவு மட்டுமே இனிமேல் அதன் சுவடுகளாய் இருக்கும் என்று நினைக்கிறதுபோது ரொம்ப கஷ்டமாக உள்ளது.
புரட்சித் தலைவரின் அடிமைப் பெண் திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது எங்கள் மதுரையின் சிந்தாமணியில். அந்த விளம்பரம்.
http://i68.tinypic.com/2vs3ew5.jpg
சிந்தாமணி தியேட்டரின் கட்டிடத்துக்கு கனத்த இதயத்துடன் பிரியாவிடை கொடுக்கிறது புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் எங்கள் மதுரை.
http://i64.tinypic.com/30tmbh5.jpg
எங்கள் மதுரையின் சிந்தாமணி தியேட்டரில் அடிமைப்பெண் வெள்ளிவிழா கொண்டாடியதை முன்னிட்டு நடந்த வெற்றி விழாவில் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தி இந்து தமிழ் நாளிதழில் எம்ஜிஆர் - 100 தொடரில் 91-வது பாகத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பகுதி . சிந்தாமணியின் நினைவாக.
நன்றி - தி இந்து
எம்ஜிஆர் 100 | 91 - ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!
எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.
ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!
திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.
http://i63.tinypic.com/fu5ff8.jpg
‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழாவின்போது மதுரை சிந்தாமணி திரையரங்கில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பண்டரிபாய்.
தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.
ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!
எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!
‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...
‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,
நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் தகவலுக்கு நன்றி. வருத்தம் தெரிவிக்கக்கூடிய செய்திதான். தங்களின் விமர்சனங்கள், அப்போதைய நிகழ்ச்சியின் புகைப்படங்களோடு பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.
இதே மதுரை சிந்தாமணியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின், " இதயக்கனி "
146 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது என்பது தங்களின்
கவனத்திற்கு.
தற்போது புதுயுகம் டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்."தனிப்பிறவி" பிற்பகல் 2 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
http://i65.tinypic.com/1z18a6h.jpg