http://i39.tinypic.com/xo0f91.jpg
Printable View
4000 பதிவுகள் கண்ட அருமை சகோதரர் திரு. லோகநாதன் (அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் இணை செயலாளர்) அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
http://i59.tinypic.com/n6xsvb.jpg
மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “ஆயிரத்தில் ஒருவன்” வெள்ளி விழா கண்டதையொட்டி, விழாவில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற நடிகர் திரு. சத்யராஜ் அவர்களை இன்று (21-12-14) ஞாயிறு காலை அவரது இல்லத்தில் சந்தித்த பின், வெள்ளி விழா கேடயம் மற்றும் 19௦ வது நாள் ஷீல்ட் ஆகியவை ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் திவ்யா பிலிம்ஸ் சார்பில், திரு. பி. எஸ். ராஜு மற்றும் திரு. சொக்கலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது.
இங்கு புகைப்படத்தில் காணப்படுபவர்கள் : (இடமிருந்து வலமாக)
திருவாளர்கள் : இளங்கோவன், பி. ரமேஷ், பி. எஸ். ரா,ஜு அவர்களின் புதல்வன், பி. எஸ். ரா,ஜு, எம். எஸ். மணியம், சத்யராஜ், சொக்கலிங்கம், சௌ. செல்வகுமார், சைதை ராஜ்குமார் மற்றும் ஏ. ஹயாத் ஆகியோர்.
புகைப்படத்தை பதிவிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !
.
பறக்கும் பாவை- படத்தில் வரும் இந்த ' முத்தமோ..மோஹமோ ' பாடலில் , மக்கள் திலகத்தின் இளமை துள்ளும் அட்டகாசமான நடனத்தையும், காஞ்சனாவின் நளினமான நடனத்தையும் காணலாம்..படத்தில் எம்.ஜி.ஆர்.ஒரு சர்க்கஸ் கலைஞர்..செவிலியாக வரும் காஞ்சனா, அவரை ஒருதலையாக காதலிக்கிறார்..கனவில்,கற்பனையில் தானும் தன் காதலரும் ,யானை சிங்கம் எருது முயல் மான் போன்ற விலங்குகள் சூழ,ஆடி பாடுகிறார்.எம்.ஜி.ஆர்.துள்ளி துள்ளி , குதித்து குதித்து, உற்சாகமாக ஆடி இருக்கிறார்..பாடலில் ' என்ட்ரி ' [ entry ]ஆகும்போது , ஒரு குச்சியில் வண்ண வண்ண நீண்ட தாளை , சுழற்றி சுழற்றி ஆடுவார்..ரசிகர்களும் எழுந்து நின்று ஆரவாரம் செய்வார்கள்...டி.எம். எஸ்.குரலில் தனி கவர்ச்சி இருக்கும்..'' உன்னுடனே உறவு கொள்ள பொன்மேனி [ என்மேனி] உண்டானது' - என்று காஞ்சனா பாடுவதும் , பின்னர் அடுத்த சரணத்தில் எம்.ஜி.ஆர்.' கட்டழகை தொட்டுவிடு..தட்டாமல் இன்றாவது...' என்று பாடுவதும் ஒரு ' கிக் ' ஏற்படுத்தும்..[எனக்கும் தான் ]:)Direction: Ramannaa.Music: M.S.V.
https://www.youtube.com/watch?v=4VwcxePe4dE
4000 super postings. Congratulations loganathan sir.
இந்த வார குமுதம் இதழில் வெளிவந்த செய்தி
http://i57.tinypic.com/m9m59c.jpg