இன்று (18/10/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "சர்வாதிகாரி " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/fp3rys.jpg
Printable View
இன்று (18/10/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "சர்வாதிகாரி " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/fp3rys.jpg
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.
courtesy - dinamalar
எம்ஜிஆரின் மக்கள் சக்தி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.
இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.
“நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.
“என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.
இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..
பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.
பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!
மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.
“நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.
“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?
“இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?
“சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.
இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
courtesy கொ.வை. அரங்கநாதன்.
நன்றி நண்பரே. தாங்கள் கூறியது சரிதான். இதயக்கனி படம் சிந்தாமணியில் சாதனை படைத்தது. நேற்று இன்று நாளை படம் உட்பட புரட்சித் தலைவரின் பல படங்கள் சிந்தாமணியில் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றன.
சிந்தாமணி அரங்குக்கு உள்ள இன்னொரு சிறப்பு மிகவும் சிறிய திரை கொண்ட தியேட்டர். என்றாலும் படம் பார்க்கும்போது அது தெரியாது. வருத்தத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
http://i66.tinypic.com/2qtjod2.jpg
புரட்சித் தலைவர் தனக்கு எதிரே இருக்கும் யாரிடமோ பேசுகிறார். சாதாரணமாக இயற்கையாக பேசும்போதுகூட என்ன ஒரு அழகு. ஸ்டைல்.
"சர்வாதிகாரி" ..... !!!
முதலில் அப்படத்திற்கு 'வீரவாள்' என முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை 'சர்வாதிகாரி' என மாற்றியவரே எம்ஜிஆர் தான்...
இப்படத்தின் கதாநாயகி அஞ்சலிதேவி. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகயிருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலிதேவிக்கு உண்டு. இதற்கு முக்கியகாரணம் எம்ஜிஆர் தான்...
சர்வாதிகாரி படப்பிடிப்பில் ஒரு முக்கிய, நெகிழ வைக்கும் நிகழ்வு... !!!
ஒரு பாடல்காட்சியில் அஞ்சலிதேவி பம்பரமாகச் சுழன்று தரையில் விழவேண்டும். எல்லோருக்கும் அக்காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓகே சொல்லிவிட்டார்...
ஆனால் எம்ஜிஆர் மட்டும் 'மறுபடியும் ஒரு டேக் எடுங்க' என்றார். யாருக்கும் புரியவில்லை எதற்காக இப்படிச் சொல்கிறாரென்று..?? எம்ஜிஆரின் வற்புறுத்தலால் அக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. இம்முறை எம்ஜிஆருக்குத் திருப்தி. அக்காட்சிக்கு ஓகே சொன்னார். 'இரண்டு டேக்கிலும் ஒரே மாதிரி தானே அஞ்சலிதேவி நடித்தார்..?? எதற்காக மறுபடியும் 'ரீ டேக் எடுக்க சொன்னார் ..?? என எல்லோரும் எம்ஜிஆரைப் பார்த்தனர்...!!!
எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே 'முதல்முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றுவரும் போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால் தான் காட்சியை மறுமுறை எடுக்கச்சொன்னேன் ' என விளக்கிய எம்ஜிஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலிதேவி நெகிழ்ந்து போனார். படக்குழுவினரும் தான். ...!!
ஒரு காட்சி படமாக்கப்படும் போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி , கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் மிக நுட்பமாக கவனிப்பவர் தான் நம் மக்கள்திலகம் எம்ஜிஆர்.
Courtesy - facebook
http://i63.tinypic.com/acxzza.jpg
இன்று (19/10/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தொழிலாளி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
நேற்று (18/10/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) கொள்கை வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் )
நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2e33hvb.jpg