நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 86வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மனியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 86வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2013) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் மயிலை பெரியசாமி கலந்துகொண்டு சிற்றுண்டியை வழங்கினார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
அன்னதான ஏற்பாடுகளை உடல் நலக் குறைவு இருந்தாலும், திரு.சீனிவாசன் மற்றும் நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், என்னுடன் ( K .சந்திரசேகரன்), மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் V சீனிவாசன், E சங்குராஜன், நிர்வாகிகள் T .T .சம்பந்தம், பாஸ்கர், ஹரிராஜன், எம்.ஜி.நடராஜன், நமது ஹப்பர் கிருஷ்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
http://i1234.photobucket.com/albums/...pse3f6aa61.jpg
http://i1234.photobucket.com/albums/...ps423f4252.jpg