vaai kizhiya arattruvorea -is the correct spelling- kindly ignore, & accept... thank you...
Printable View
vaai kizhiya arattruvorea -is the correct spelling- kindly ignore, & accept... thank you...
When legends like M.G.R and Sivaji sir are still acting, I feel shy to be called as 'Superstar', Kindly Please remove the banners carrying the 'Superstar' title."
- Thalaivar said the above lines to Kalaipuli Thanu, when he was titled as 'Superstar'
MGR's last movie [before AP100, NNK in the 1990's] Maduraiyai Meeta Sundara pandian was released on 14/1/1978 whereas Bhairavi was released on 2/6/1978!
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் .
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் வடிவில் தயாரிப்பு என்று திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அறிவித்த நாள் முதல்
படம் 100 வது நாளை கொண்டாடும் இந்த இனிய நாள் வரை கடந்த ஓராண்டுகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய தகவல்கள் - ஆடியோ டிரைலெர் விழா - வெளியீட்டு விழா - தொடர்ந்து ஒவ்வொரு வார விளம்பரங்கள் - 25-50 -75
நாட்கள் விழாக்கள் என்று சிறப்பாக கொண்டாட சென்னை நகர மக்கள் திலகத்தின் அனைத்து எம்ஜிஆர் மன்றங்கள்
மற்றும் ஆதரவு தந்த தமிழகம் - கர்நாடகம் - புதுவை , வெளிநாட்டில் வாழும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எல்லோருக்கும் இந்த இனிய நேரத்தில் மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .
ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் .
1965ல் திருப்பு முனை உண்டாக்கிய ஆயிரத்தில் ஒருவன் - மீண்டும் 2014ல் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது .
புதுமையான வடிவில் ஆயிரத்தில் ஒருவனை வழங்கிய திரு சொக்க லிங்கத்திற்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படம் - திரு சொக்கலிங்கத்தின் அடுத்த டிஜிடல் படைப்பு என்ற தகவல் மனதிற்கு
மகிழ்வை தருகிறது .விரைவில் அறிவிப்பு வர உள்ளது .
நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.
முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.
இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?
போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.
படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.
கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.
அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!
நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.
நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.
அசத்தல் நாயகர் ஆயிரத்தில் ஒருவன்"
'எங்கள் தங்கம் மக்கள் திலகம்'எம்.ஜி.ஆர்.!!!!................இன்னும் நூறு வருடம் சென்றாலும் அவருக்கு நிகராக மற்றொருவர் இல்லை! புரட்சி தலைவர் மில்லியனுக்கு மேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!
புரட்சி தலைவர் வாழ்க!! —
http://i1170.photobucket.com/albums/...pscf994498.jpg
courtesy facebook mgr fans
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!
பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது. ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்!
டிஜிட்டலில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் 14-ந்தேதி 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார்.
மதுரையில் மதுரையில் மட்டும் சரியாகப் போகவில்லை என்றார்கள். தேர்தல் முடிந்து அங்கு மறுவெளியீடு செய்ததில் படம் நன்றாக ஓடியது. மற்ற ஊர்களில் ஷிப்டிங் முறையில் தொடர்ந்து இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.
மல்டிப்ளெக்ஸ்களில் குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் நல்ல கூட்டம் இந்தப் படத்துக்கு. வேளச்சேரியில் லக்ஸ் அரங்கம் புதிதாக திறக்கப்பட்ட போது திரையிடப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தை அந்த அரங்கில் ஒரு மாதம் வரை திரையிட்டனர். கடைசி நாள் காட்சிக்கும் கணிசமான கூட்டம்.
100வது நாள் இன்றும் குறையாத வசூலுடன் சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.
ஆல்பட் திரையரங்கில் இந்த விழா வரும் 22 ந்தேதி ஆல்பர்ட் தியேட்டரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் அன்று காலை 11 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.
ஊர்வலம் மாலை 3 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆல்பட் தியேட்டர் சென்றடைகிறார்கள்.
சிறப்புக் காட்சி ஆல்பட்டில் மாலை 6.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி நடக்கிறது. இதில் நடிகர்கள், சரத்குமார், விவேக், மயில்சாமி, இயக்குநர் பி.வாசு, இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.
courtesy - one india
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html