எங்க வீட்டு பிள்ளை - இந்து இதழில் வெளி வந்த வந்த கட்டுரை மிகவும் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .
Printable View
எங்க வீட்டு பிள்ளை - இந்து இதழில் வெளி வந்த வந்த கட்டுரை மிகவும் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் தீவிர ஆதரவாளரும், மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமணம் நாளை 07-06-2015 அன்று சென்னையில் நாளை (07-06-15) நடைபெறுவதையொட்டி அச்சடித்து விநியோகிக்கப்பட்ட பத்திரிகை :
முன் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/vdjsq8.jpg
உள் அட்டையில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படமும், அழைப்பிதழும்
http://i58.tinypic.com/2n64s3q.jpg
பின் அட்டை தோற்றம் :
http://i57.tinypic.com/33tjaxi.jpg
இன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பக்தர்களும், ரசிகர்களும், அரசு அதிகாரிகளும் ஏராளமான அளவில் திரண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன், மிகப்பெரிய பதாகை கல்யாண மண்டபத்தின் முகப்பில் வைக்கப்படிருந்தது. காண்போர் அனைவரையும் இந்த பதாகை கவர்ந்தது. திருமணத்துக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி இந்த பதாகையையும் அதிலுள்ள வாசகங்களையும் நின்று படித்து விட்டு, நம் மக்கள் திலகத்தை வணங்கி விட்டு, புகழ்ந்து சென்றனர். இது கண் கூடாக கண்ட காட்சி !
குறிப்பு :
பதாகை நிழற்படமும், வாசகங்களும், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின் சில முக்கிய படங்களும் பின்னர் பதிவிடப்படும்.
http://i62.tinypic.com/k3t2zn.jpg
குடிசை மாற்று வாரியத்தலைவராக நியமிக்கப்பட்ட LATE சுலோச்சனா சம்பத் அவர்களுடன் நம் புரட்சித்தலைவர்.
Courtesy : Facebook
உலகில் பலர் தோன்றி உள்ளார்
புகழும் அடைந்துள்ளார்
ஆனால் வறுமை யின் உச்சத்தில்
பிறந்து தன் உழைப்பு ஒன்றே மூலதனமாகஂகொண்டு உழைத்து
இந்த உலகில் எவராலும் அடையமுடியாதஂபுகழ் வெற்றி சாதனை மக்களின் அன்பு பெற்று
தன் சம்பாத்தியம் திறமை அறிவு
மூலம் தனிமனிதனாகவும் அதிகாரஂ
மனிதனாகவும் தமிழகத்திற்க்கு நன்மைகள் பலசெய்து தன்னையே
தந்தவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்
கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்தில் ஒருநாள் முழுவதும் நின்று பாருங்கள் ஒருமனிதன் இத்தனை கோடி மக்களின் மனதில்
கடவுளாய் வாழ்கிறாரே எனஂவியக்கத்தான் முடியும்
ஒருமனிதன் இதை விடஂபுகழ் அடையமுடியாது
தமிழகத்தில் கடவுளுக்கு அடுத்து
மக்கள் பெரும்பபெரும்யோர் மதிக்கும் ஒரே சக்தி எம் ஜி ஆர்
courtesy net
yesterday onwards (05.06.15) aayirathil oruvan screened in thangamani theater at pallikonda
msg conveyed by ramamurthy
சுதந்திரம் கிடைத்தஂஉடன் இயக்கத்தை கலைத்து விடுங்கள்
எனஂகூறினார் காந்திஜீ
அந்த இயக்கத்தின் பெயரில் தமிழகத்தில் ஆட்சி அமைத்து சிலர் வாழஂபலர் வாடஂபஞ்சத்தில் பாமரர்கள் வாடஂ
சதாரணமக்கள் வாழ்வு செழிக்கஂ
அறிஞர் அண்ணா .தி மு கஂதொடங்கி
போராடினார் இந்தஂபோரில் ஜெய்க்கஂ பிரம்மா அஸ்திரம் தான்
வேண்டும் எனஂநினைத்தார்
அண்ணா கூறுகிறார் ஊரில் ஒரு
பழம் ?பிரம்மா அஸ்திரம். . கனிந்து
இருக்கு அது யார் மடியில் விழும்
எனஂகவலையுடன் பார்த்தேன் நல்லவேளை அது என் மடியிலேவிழுந்தது ஆதை எடுத்து
என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் அவர்தான் எம் ஜி ஆர்
அந்த சக்தியை கொண்டு ஆட்சியில்
அமர்ந்த அண்ணா வை காலம் கவர்ந்தது
எம் ஜி ஆர் இல்லை எனஂகூறும் குணம் நட்பு நம்பிக்கையை துணைகொண்டு எம் ஜி ஆர் ஆதரவால் ஆட்சியில் அமர்ந்தஂ
தலைமை நாட்டை மறந்து வீட்டை
பார்க்கஂதொடங்கஂபொங்கி எழுந்தஂ
எம் ஜி ஆர் தலைமையை எதிராக
கேள்வி எழுப்பினார்
கேள்வி கேட்டதால் இந்தஂபழம்
வண்டு துழைத்து விட்டது தூரஂஎறிகிறேன் என்றது தலமை
வண்டு துழைத்தஂபழம் இனிக்கும்
எனஂமக்கள் தங்கள் மனதில் தாங்கி
னார் அண்ணா விற்க்கு மட்டுமே
இதயகனியாகஂஇருந்தஂஎம்ஜிஆர்
கோடி கணக்கான மக்களின் இதயக்கனி ஆனார் மக்கள் அவரை
எவராலும் அசைக்கமுடியாத
முதல்வர் ஆக்கினார்
சாதாரண மக்கள் மேற்கல்வி பயில
ப்ளஸஂடூ அமைத்து உலகதரம் வாய்ந்தஂஅண்ணா பொறியில் கல்லூரி போல் பலபடைத்து கல்வி
மேன்பட்டு தொழில் சிறந்து வளம் பெருகி ஒரு பொற்க்காலஂஆட்சியை
தந்தார் எம் ஜி ஆர்
இன்றும் எம் ஜி ஆர் வழி நடந்தால்
ஆட்சி அமைக்கலாம்
நேற்றும் இன்றும் நாளையும்
எம் ஜி ஆர் தமிழகத்தின் வெற்றியை
நிர்ணயிக்கும் சக்தி
courtesy net
செல்வி ஜெயலலிதா அவசரப் பட்டு முதல்வர் பொறுபேற்றார் என்பது பற்றி கருணநிதி அறிக்கையை படித்தவுடன் எனக்கு ஒரு நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது .. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இதை மெல்லிசை மன்னர் நினைவு கூர்ந்தார் ... அப்படியே வைக்கின்றேன் உங்கள் பார்வைக்காக ...
1960 கள் மெல்லிசை மன்னர் திரைத் துறையில் உச்ச நிலையில் கோலோச்சிய காலக் கட்டம் .... மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் மாறி மாறி படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த காலக் கட்டம் , எப்பொழுதும் பிசி ... அந்த சமயத்தில் தான் கருணாநிதி கொடுத்தனுப்பியதாக ஒரு காகிதத்தை கொண்டு வந்து எம் எஸ் விஸ்வநாதனிடம் கருணாநிதியின் அடிபொடியான அமிர்தம் நீட்டினார் ....
வழக்கம் போல அது கருணாநிதியின் கிறுக்கல் , அதற்கு இசையமைக்க வேண்டும் என்று நெருக்கடி , மெல்லிசை மன்னர் அப்பொழுது ஏகமாக வேலை பளுவில் இருந்த காரணத்தால் , இது போன்ற வரிகளுக்கு எல்லாம் தன்னால் உடனே பாட்டிசைக்க முடியாது என்று மறுத்துவிட்டார் ... வரிகள் பாடல் அமைக்கும் விதமாக இல்லை என்பதையும் தெளிவிபடுத்தினார் .... அத்துடன் அந்த சம்பவம் நிறைவு பெற்றதாகவே மெல்லிசை மன்னரும் நினைத்தார்
நாட்கள் உருண்டோடியது .... பேரறிஞர் அண்ணா அவர்கள் பிப்ரவரி 3 1969 ம் ஆண்டு மறைந்தார் , அடுத்து முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்வு செய்யப் பட்டு முதல்வராக பொறுப்பேற்றது எல்லாம் நமக்குத் தெரியும் , அண்ணாவின் மறைவை ஒட்டி கருணாநிதி பதவியேற்றதால் , அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் கொண்டாட்டத்துடன் அண்டக்கவில்லை என்பதால் . மார்ச் மாதம் கருணாநிதியை பாராட்டி ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர் .
விழாவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் கச்சேரியும் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக சொன்னதால் , அதற்கு ஒப்புக் கொண்டு , கச்சேரிக்கான ஒத்திகையில் எம் எஸ் விஸ்வநாதன் ஈடுபட்டிருந்த பொழுது , ஒரு அதிகாரி அவரிடம் வந்து ஒரு காகிதத்தை நீட்டுகிறார் . என்ன என்று அதைப் பார்த்த பொழுது , பல வருடங்களுக்கு முன்னர் அமிர்தம் தன்னிடம் நீட்டிய அதே காகிதம் தான் என்பது புரிந்தது எம் எஸ் விஸ்வநாதனுக்கு ... முதல்வர் விரும்புகிறார் , இதற்கு நீங்கள் இசையமைத்து கச்சேரியில் பாடவேண்டும் என்று அதிகாரி சொல்லிவிட ... வேறு வழியில்லாமல் அந்த வரிகளுக்கு இசையும் அமைத்து கச்சேரியும் நடக்கிறது ...
கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார் , மேடையில் மக்கள் திலகம் உட்பட அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் , கீழே முன் வரிசையில் எம் எஸ் விஸ்வநாதன் ... காலமெல்லாம் பழிவாங்கும் புத்தியை பிறவிக் குணமாக சுமக்கும் கருணாநிதி , அப்பொழுது சொல்கிறார் " எம் எஸ் விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர் , எனது எழுத்துக்கு பாட்டிசைக்க அவருக்கு நேரமிருக்காது , ஆனால் அவரையே இங்கே வரவழைத்து விடும் அளவிற்கு நான் உயர்ந்திருக்கிறேன் " என்று ....
எம் எஸ் விஸ்வநாதன் கூனிக் குறுகிப் போகிறார் .... மேடையில் இருந்த மக்கள் திலகம் இதை கவனித்து விட ... இறுதியாக மைக்கை பிடிக்கிறார் ... மக்கள் திலகம் பேசியது .... " மெல்லிசை மன்னர் அருமையாக கச்சேரி அரங்கேற்றினார் ... அவர் மாமேதை , எப்படிப் பட்டவர் என்றால் , யாருடைய கிறுக்கலாக இருந்தாலும் எந்தக் குப்பையாக இருந்தாலும் அதற்கு அவர் இசையமைத்து விடுவார் " என்று சொல்ல , அரங்கமே அதிர்ந்தது கை தட்டலில் .... கருணாநிதி முகத்தில் ஈ ஆடவில்லை ...
இப்படிச் சொன்ன மக்கள் திலகம் எப்படிப் பட்டவர் தெரியுமா ? முதல் முறை அவர் முதல்வராக தேர்வு செய்யப் படவிருந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது ... எல்லோரும் அவரை வாழ்த்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றால் , அவரோ , அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களின் படபிடிப்புகளை முடித்துக் கொடுக்க வாஹினி ஸ்டுடியோவில் இருந்தார் .... அவருக்காக 25 நாட்கள் நாடே காத்திருந்தது ... ஜூன் 30 பதவியேற்பு ... ஜூன் 29 ம் தேதி வாஹினி ஸ்டுடியோ வில் டப்பிங் இரவு 11.30 மணி வாக்கில் முடிகிறது ... வெளியே வருகிறார் , ஸ்டுடியோ மண்ணை முத்தமிட்டு வணங்குகிறார் ... அங்கே கூடியிருந்தவர்களிடம் அவர் சொன்னது ...
" திரைத் துறையில் நான் மன்னனாக இருந்து விட்டேன் , நாளை எடுத்துக் கொள்ளப் போகும் பதவி வெறும் மந்திரிப் பதவி தான் , மந்திரியா மன்னனா என்றால் மன்னன் தான் பெரியது என்பேன் .. நான் என்றும் உங்கள் ராமச்சந்திரன் தான் " என்றார் ...
courtesy net
Information about 1959 June 16th incident from srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2009/...i-1661959.html