Quote:
விதி வசத்தால் பெண்தெய்வத்தின் அருள்பார்வை கடாட்சத்தில் கடைந்தெடுத்த கிராமப்புற கோழை மாவீரனாக உருமாற்றம் பெற்று அதேபோல யானை மாலை போட்டதால் ராணியாகி விட்ட கோவை சரளா டைப் (ஷாஜஹான்) பிச்சைக்காரியிடம் தளபதியாகப் பதவி பெறுகிறார்!!
கட்டழகனான தன்னை விட்டுவிட்டு தங்களைப்போலவே விதியின் சதியால் திடீரென்று பேச்சுவரப் பெற்று வசனமழை பாடல் சாரல் ஜெயிலிலும் ஆடல்பாடல் என்று தூள்கிளப்பும் கதியற்ற கவிஞனை தன்னைப் பாராட்டி பாடியே தீர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர நாட்டு மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காத ராணியிடமும் வாயாடிக் கவிஞனிடமும் தீராத கோபத்தை நீறுபூத்த நெருப்பாக பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் கெட்டப்பில் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயேயாக உமிழும் வித்தைக்காரன் போல் இடிச்சிரிப்பு வீரப்பா உள்ளங்கை பிசையும் நம்பியாராக மாறி கிலியூட்டுகிறார் மன்னர்!!