http://i39.tinypic.com/103fzw1.jpg
Printable View
மொழி மற்றும் மாநிலம் கடந்த மாட்டுக்கார வேலன்
இதய தெய்வம், புரட்சி நடிகர், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், நடிக பேரரசர், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம், பாரத், பாரத் ரத்னா என்று போற்றப்படும் நம் ஆண்டவன் நடித்த வெள்ளி விழாக்காவியமான 'மாட்டுக்கார வேலன் திரைப்படம் ஆந்திர மாநிலம் வெங்கடேஸ்வரா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது...இந்த போஸ்டரை பார்க்கும்போது நானும் என்னை போன்ற இதய தெய்வத்தின் பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சி, கடலை விட பெரியது..இயந்திர மயமான இக்காலகட்டத்தில், புதுப்படங்கள் படமெடுக்காத பாம்புகள் போல ஓரிரு நாட்களில் பெட்டிக்குள் முடங்கும் இந்த கலியுகத்தில், நம் கலியுக கர்ணனின் திரைப்படம் திருப்பதியில் வெற்றிகொடி நாட்டுவது நம் போன்றோருக்கும்.ஏன்.உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கின்றாரோ அனைவருக்கும் பெருமை..இத்தகைய பெருமையை தமிழருக்கு தேடித்தர நம் தலைவனால் மட்டுமே முடியும்..இதுவரை தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவற்றில் நம் தெய்வத்தின் புகழ் பாடிய பதிவுகள்..ஏழுமலையானின் தேசத்திலும் தொடர்வதை நினைக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை..ஒன்று மட்டும் நிச்சயம்..ஆந்திரா என்ன உலகின் எந்த மூலையில் தலைவர் படத்தை ரி-ரிலீஸ் செய்தால்கூட அந்தந்த மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலில் சாதனை படைப்பது திண்ணம் ..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..
MAKKAL THILAGAM - MANJULA - BEST DUET SONGS
http://youtu.be/3WPVIJTUY_8
http://youtu.be/M1kfaQ4tzwE
அழகு ஓவியத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...
குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பார்கள்..அந்த வகையில் இதய தெய்வத்தால் அறிமுகப்படுத்தபட்டவர்கள், அவருடன் நடித்தவர்கள், அவருடன் நடித்த பிறகே அனைவராலும் போற்றப்பட்ட நிலைதான் அன்றைய திரையுலகம் கண்ட உண்மை. அந்த வகையில் திருமதி மஞ்சுளா அவர்களை நம் ஆண்டவன் அறிமுகப்படுத்திய ரிக்ஷாக்காரன் திரைக்காவியம்... அகில இந்தியாவை ஆண்டது.... பாரத் பட்டம் வென்றது..அதனால்தான் அவரும் தனது நன்றியுரையில் தலைவருடன் நடித்ததால்தான் தனக்கு வாய்ப்புகள் குவிந்ததாக அறிவித்தார்..அவர் தன்வாழ்நாளில் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக எண்ணி வாழ்ந்தார்..திருமதி மஞ்சுளா அவர்கள் மட்டுமல்ல மலைக்கள்ளனில் திருமதி பானுமதி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் லதா, பத்மபிரியா வரை..தலைவருடன், அறிமுகமாகியதாலும் , தலைவருடன் நடித்ததாலும் புகழ் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது..
அஷ்டாவதானி
திருமதி பானுமதி அவர்கள் தமிழ், தெலுங்கு இன்னும் பிற மொழிகள் பலவற்றில் நடித்திருந்தாலும் 'ஜனாதிபதி பதக்கம்' பெற்ற மலைக்கள்ளன், தமிழில் முதல் வண்ணப்படமான 'தலைவரின் அலிபாபா 40 திருடர்கள் மற்றும் தமிழக மக்களின் மனதை கொள்ளையடித்த நாடோடி மன்னன் படங்களுக்கு பிறகுதான் நட்சத்திரமாக மின்னினார்கள்..
அபிநய சரஸ்வதி
அதேபோல் தலைவரின் கொள்கைப்படமான நாடோடி மன்னன் திரைக்காவியத்தில் அறிமுகப்படுதியதன் விளைவாக அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி தமிழ்த்திரையுலகில் வெற்றினாயகியாக வளம் வந்தார்..அந்த நன்றியை மறக்காத அவரும் இன்னும் நம் தலைவனை ஆண்டவனாகப் போற்றி வணங்கி வருகிறார்..மூச்சிலும் பேச்சிலும் தெய்வம்...தெய்வம்...என்று உணர்வுபொங்க வாழ்த்துகிறார்...புரட்சித்தலைவருடன் சரோஜாதேவி அவர்கள் சேர்ந்து மிகப் பொருத்தமான ஜோடி என தமிழகமே வியக்கும் வண்ணம் உலா வந்தார்கள்..
கலைச்செல்வி
இன்று தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் செல்வி. ஜெயலலிதா நம் ஆண்டவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்திற்குப் பிறகுதான் தமிழ்த் திரைவானில் தாரகையாக உலா வர முடிந்தது..தலைவருடன் மட்டும் 28 படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று, இன்று தமிழக மக்களையே ஆள்கின்றார்..இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் என்பதை சொல்லவும் வேண்டுமோ..
..தொடரும்..
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' திரைப்படம்
http://i44.tinypic.com/2hex3cz.png
மதுரை - அலங்கார் அரங்கில் 26.7.2013 முதல்
http://i42.tinypic.com/2iv1b1t.png
பவனி வருகிறார் .
திரு வினோத் அவர்களுக்கு,
தாங்கள் பதிவிட்ட, மக்கள் திலகத்தோடு காலம்சென்ற மஞ்சுளா அவர்கள் நடித்த பாடல்கள் வீடியோ தொகுப்பு அருமை. மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் அனைவரும் மிக மிக விரும்பி ரசித்த அற்புதமான பாடல்கள். பதிவிட்ட தங்களுக்கு நன்றி.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-----------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------
மக்கள் திலகத்தின் பாடல் -சாதனை
''இதயக்கனி '' படத்தில் இடம் பெற்ற
http://youtu.be/Fi_I4UgfOAA
தென்னகமாம் இன்ப திரு நாட்டில் என்று துவங்கும் இந்த
பாடலை சீர்காழி கோவிந்தராஜன் - டி.எம்..எஸ் - ஜானகி
மூவரின் இனிய குரலில் புலமைபித்தனின் பாடலை
மெல்லிசை மன்னரின் இசையில் படமாகப்பட்டவிதம் அருமை .
காவேரி உற்பத்தியாகும் தலைக்காவேரி யில் துவங்கி
காவேரி ஆறு பாயும் கர்நாடகம் - தமிழக எல்லைகளை
பசுமையான வயல்கள் - நீர் பாயும் கல்லணை - திருச்சி -தஞ்சை
மாவட்டம் பகுதிகளை அழகாக படம் பிடித்து மீண்டும்
சத்யா காபி தோட்டம் என்று கர்நாடக மாநிலம் குடகு எஸ்டேட்
காட்சியில் மக்கள் திலகம் அறிமுகமாகும்
''நீங்க நல்ல இருக்கணும் '' பாடலில்
மக்கள் திலகம் - ரத்னா - எஸ் .வி .சுப்பையா -ஐசரிவேலன்
நடித்த புகழ் பெற்ற பாடல் சூப்பர் .
திரை உலக வரலாற்றில் முதல் முறையாக மக்கள் திலகம்
மிகவும் துணிச்சலாக தன்னுடய அரசியல் இயக்கமான
அண்ணா திமுக கட்சியின் சின்னத்தையும் , கொடியினையும்
பாடல் முழுவதும் அறிமுகபடுத்தியது மாபெரும் சாதனையாகும் .
மக்கள் திலகத்தின் தனிப்பட்ட பெருமைகளையும் , அதே நேரத்தில் காவேரி நதியுடன் அவருடைய பெருமைகளை
ஒப்பிட்டும் சமுதாய ஒற்றுமையை விளக்கியும் ,நதியின் பெருமையும் கூறி ,மக்கள் திலகம் - காவேரி என்ற ஒப்பீடு
கடந்து அண்ணா திமுக கட்சியின் கொடி, சின்னம் ,கொள்கை
என்ற மூன்றையும் ஒரே பாடல் மூலம் மக்களுக்கு
விருந்தளித்தவர் நம் மக்கள் திலகம் .
திரைப்பட சாதனத்தை தன பக்கம் ஈர்த்து , தன்னுடைய அரசியல் -சினிமா இரண்டையும் சரியான நேரத்தில்
சரியான இடத்தில பயன் படுத்தி வெற்றி கண்ட தலைவர்
நம் மக்கள் திலகம் .
இன்று பார்த்தாலும் இந்த பாடல் கண்ணுக்கும் மனதிற்கும்
உற்சாகம் தரும் பாடல் . அரசியல் காரணமாக சன் டிவி -கே டிவி - முரசு - சன் லைப் ஊடகங்கள் இந்த பாடலை தணிக்கை அல்லது நீக்கி விட்டு ஒளி பரப்புவர்கள் .
ஒரு பாடல் மூலம் ஒரு வரலாறு படைக்க முடியும் என்றால்
அது மக்கள் திலகத்தின் பாடல் என்று வரலாறு நமக்கு
என்றென்றும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் .
மக்கள் திலகம் - மஞ்சுளா டூயட் பாடல்களின் வீடியோ பதிவு அருமை.
லில்லி மலருக்கு கொண்டாட்டம் - மக்கள் திலகத்தின் நடனம் மற்றும் முகபாவனை அசத்தல்..
நன்றி வினோத் ஸார்..