1962 இல் சூப்பர் ஹிட் படமாகி,அந்த வருட உச்ச பட்ச வசூல் பெற்று முதலிடம் வகித்த ஆலய மணி எங்கே?
Printable View
டியர் ராகவேந்தர் சார்,
இசையரசியின் 'நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம் நீயே எந்நாளும் என் காதல் கீதம்' பாடல் என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான பாடல். சிறு வயது முதலே வானொலியில் கேட்டுக்கேட்டு மனபாடம் ஆன பாடல். சுசீலாவின் தேன்குரலில் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை மறந்து நின்றுவிடுவேன். குறிப்பாக இரண்டாவது சரணத்தில் 'அன்பே.... அன்பே..ஏ...ஏ...ஏ.....' என்று நீட்டும் அழகு.
முதலில் 'வீரக்கனல்' படத்தில் இந்தப்பாடல் என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் 'ஆடவந்த தெய்வம்' என்று தெரிந்தது.
நல்ல பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி சார்...
அநேகமாக அடுத்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் என்றும், அந்த பக்கம் அடுத்து வெளியிடப்படும் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் பட்டியலின் கடைசி பக்கத்தில் அந்த ஆண்டின் தீபாவளி வெளியீடுகள் (27.10.1962) ஐந்து படங்களோடு முடிந்துள்ளது. (ஆலயமணி 23.11.62). தொடர்ந்து அடுத்த பக்கத்தை வினோத் அடுத்து வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
இன்னொன்று கவனித்தீர்களா?. அந்தப்பட்டியலில் எந்தப்படமும் 100 நாட்கள் ஓடிய விவரமோ, வசூல் விவரமோ இல்லை. எனவே ஆலயமணி இடம்பெற்றிருந்தாலும் இந்த விவரங்கள் இருக்காது.
மனதுக்கு உற்சாகம் அளிக்கும் செய்திக்கு நன்றி கோபால்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வாதத்திறமையால், நடிகர்திலகத்தின் பல புதிய பரிமாணங்கள், மறைக்கப்பட்ட சாதனைகள், வஞ்சிக்கப்பட்ட அங்கீகாரங்கள் உலகின் பார்வைக்கு எட்டட்டும்.
நமது ஜாம்பவான்களின் குரல்களோடு கோபியின் குரலிலும் நம் திலகத்தின் பெருமைகளைக் கூறக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பதையறிந்து நமது திரிகளில் தெரியப்படுத்தினால், அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்த்து இன்புற ஏதுவாகும்...
இனிய நண்பர் கார்த்திக் சார்
சினிமா டைரி - 1962
நவம்பர் - டிசம்பர் 1962 வெளியீடு படங்கள் பட்டியல் அந்த புத்தகத்தில் இடம் பெற வில்லை .
உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .
நீயா நானா-நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமை அன்றும் இரவு 9-00 மணிக்கு ஒளிபரப்பாகிறது
கோபு
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் உளம் நிறை நல்வாழ்த்துகள்.
சங்கராபரணம்.
ஒரு epic ,cult தெலுங்கு படத்தினால் இந்த ராகத்திற்கே ஒரு ப்ராபல்யம் .
ஆனால் இது உண்மையில் மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து சங்கீத மூர்த்திகளின் இஷ்ட ராகம். இஷ்டம் என்றால் அவ்வளவு இஷ்டத்துக்கு வளைக்கலாம்,நெளிக்கலாம்,விஸ்தாரமாக்கி,சோதனை செய்து ,புது புது பாட்டைகள் போடலாம்.
உங்களை பிரபுவாக எண்ணி,ஒரு இஸ்லாமிய மஞ்சத்தில் படுத்து,ஹுக்கா அருந்தி ,தேனை போன்ற மதுவை இதமாக அருந்தி ,ஒரு நெளிவு வளைவுள்ள மங்கையின் இதமான நடனத்தை மணிக்கணக்கில் பருகி,கண் சொக்கும் சுகத்தை நினையுங்கள். அதுதான் சங்கராபரணம்.
இதன் சமம் ஹிந்துஸ்தானியில் பிலாவல் என்றும்,மேற்கத்திய இசையில் C Major (Ionian Mode ) என்றும் மிக மிக அருகில் வருவது.
சம்பூரண மேளகர்த்தா ராகமான இது ,கல்யாணியின் சுத்த மத்யம உறவினர்.எக்கச்சக்க ஜன்ய குழந்தைகள். அத்தனை குழந்தைகளும் பிரபலம்.ஆரபி,அடானா,பிலஹரி,தேவகாந்தாரி,ஹம்சத்வ னி ,ககன குதூகலம்,சுத்த சாவேரி,பூர்ண சந்திரிகா,ஜனரஞ்சனி,கேதாரம்,குறிஞ்சி,நவரோஜ்,நாகத்வன ி என்று அப்பப்பா ......
இதன் ஸ்வரங்கள் சமமான இடைவெளி விட்டு பிரயோகம் ஆவதால்,இத்தனை விஷயங்களை நுழைக்கலாம்.கிரகபேதம் (ஸட்ஜமம் அடுத்தடுத்த வீட்டுக்கு)செய்தால் கரஹரபிரியா,ஹனுமதோடி,கல்யாணி,ஹரிகாம்போதி,நடபைர வி என்று பல ராகங்கள் விரியும்.
சங்கராபரணம் அளவு சோதனைகள் தாங்கும் ராகங்கள் தோடி,கரஹரபிரியா,கல்யாணி போன்ற சிலவே.
நடிகர்திலகத்தின் நடிப்பில் மிக சிறந்த படங்களில் ஒன்றாக எல்லோர் இதயத்திலும் பூஜிக்க படும் காவியம். வாலியும் ,மெல்லிசை மன்னரும், ஏ.வீ.எம், மேற்பார்வையில் உழைத்து உழைத்து வேலை செய்து இசையில் மெல்லிசை மன்னர்களின் அந்த நாளை நினைவு படுத்தினார்கள்.எல்லாவற்றுக்கும் மேல் தமிழில் இதுவரை அமைந்த எல்லாவற்றிலும் சிறந்த ஜோடி என பலரால் கொண்டாட படும் சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடியின் தமிழில் வந்த சிறந்த பாடல்களில் ஒன்றான "வெள்ளி கிண்ணந்தான் தங்க கைகளில் ".
நான் எம்.டெக் படிக்கும் போது ஹாஸ்டலில் ரெகார்ட் பிளேயர் உண்டு.திடீரென்று ஒரு நாள் காலை சிற்றுண்டிக்கு தயாராக கீழே வந்த போது ஒரு பாடல் என்னை மறந்து அதன் வசீகரத்தில்,composition புதுமையில்,பாடலின் வடிவத்தில் என்னை பறி கொடுத்து, மீண்டும் மீண்டும் வெறி வந்தது போல திருப்பி திருப்பி கேட்டு ,சிற்றுண்டி,வகுப்பு எல்லாம் மறந்து சொக்கி நின்றேன். அந்த படம் இளைய திலகத்தை முன்னணிக்கு கொண்டு வந்த கோழி கூவுது. பாடல்" பூவே இளைய பூவே ,வரம் தரும் வசந்தமே,"
இந்தோனேசியாவில் வேலை செய்த போது ஒரு அலுவலக விஷயமாய் கோவை வந்தேன். குமுதம் பத்திரிகையில் ஒரு article படித்ததிலிருந்து ,அந்த படத்தை பார்க்கும் மோகம் இருந்தது.முதல் நாள் காவேரி திரையரங்கில் நான் மட்டும் மேல் வகுப்பில்.(நண்பர்கள் நிர்தாட்சண்யமாய் வர மறுக்க)படம் பார்த்து உறைந்து போனேன். ஒரு சிறந்த இயக்குனர்,நல்ல நடிகருக்கு வாசல் திறந்து ஸ்லோ ஹிட் ஆன சேது. இளைய ராஜாவின் "மாலை என் வேதனை கூட்டுதடி".
இந்த ராகத்தில் பிற பாடல்கள்.
அங்கும் இங்கும் பாதை உண்டு - அவர்கள்.
தேனே தென்பாண்டி மீனே- உதய கீதம்.
மலையாள கரையோரம் - ராஜாதி ராஜா.
கண்மணி அன்போட காதலன்- குணா.
அப்படி பார்கறதுன்னா வேணாம் -அவன்.
அச்சம் அச்சம் இல்லை - இந்திரா .
சொன்னாலும் கேட்பதில்லை -காதல் வைரஸ் .
கார்த்திக் ஜி , நிலையாக என் நெஞ்சில் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை....
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் நீயா நானா’வில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்
==============
ஜமுனா பாடல்களின் தொடர்ச்சி..
கடவுளின் குழந்தையில் இசையரசியின் குரலில் இதோ அற்புத பாடல்
https://www.youtube.com/watch?v=83ArtEGrRP4