நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
-------------------------------
எனக்கு ஒன்றும் தடையில்லை எஸ்.வீ.
எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..
அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.
---------------
ஹைய்யோ..... ஹைய்யோ...
நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,
பாரத் பட்டம் பற்றி எல்லாம் இப்போது தேவையில்லாமல் கருத்து கூறியுள்ளீர்கள். அதற்கு தலைவரே பதிலளித்துள்ளார். தனக்கு கிடைத்த பட்டத்தை கலையுலகுக்கு வழங்கிய வள்ளல் அவர் என்பதோடு, உங்களைப் போன்றவர்கள் சர்ச்சை கிளப்பியபோது அதை தூக்கி எறிந்தார்.
கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் சிரமம் தராமல் நடிப்பது பற்றி குறிப்பிடுகிறீர்கள். ஓஹோ... புரிந்தே விட்டது. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, சந்திப்பு, எமனுக்கு எமன் படங்கள் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படங்களையும் அதில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் விமர்சிக்கத் தயங்காதவராயிற்றே நீங்கள்.
எங்கள் பக்கம் இருந்து indirect dig இருப்பதாகவும் முதலில் அதை பாருங்கள் என்றும் திரு.எஸ்.வி.க்கு கூறுகிறீர்கள். நாங்களும் அதையேதான் உங்களுக்கு கூறுகிறோம். நான் காஞ்சித் தலைவன் படத்தில் தலைவரின் மல்யுத்த சண்டைக் காட்சியைப் பாராட்டி எழுதினால் பதிலுக்கு இதுதான் ஒரிஜினல் மல்யுத்தம் என்றும் 3 அடி அடிக்கும் சலுகை மட்டுமே வில்லனுக்கு உண்டு என்றும், 1964 தீபாவளிக்கு காணாமல் போன காஸ்ட்லி கலர் படங்கள் என்றும், தங்கள் பக்கத்தில் indirect digs மட்டுமல்ல, நேற்று கூட ‘யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர்.’ என்று direct dig (அது பழைய பதிவு என்றாலும் கூட) இடம் பெறுகிறதே. முதலில் அதைப் பாருங்கள். தலைவர் எப்போதும் யாரையும் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர்தான் மற்றவர்களுக்கு பயன்பட்டும் உதவியும் இருக்கிறார். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கூட அவர் கோரிக்கை வைக்காமலே உதவியிருக்கிறார்.
நாகப்பட்டிணத்தில் அவரது மகள் வீட்டில் குடியிருந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும் அதனால் படப்பிடிப்பில் சோகமாக இருந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களிடம் திரு.விஜயகுமார் விசாரிக்க, அவர் விஷயத்தை சொன்னதும் உடனே விஜயகுமார் முதல்வராக இருந்த தலைவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ‘இதை தம்பி (சிவாஜி கணேசன்) ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கூறிய தலைவர், உடனடியாக நாகப்பட்டிணம் போலீசாரிடம் பேசி அடுத்த 20 நிமிடத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்ததை தினத்தந்தி நாளிதழில் திரையுலக வரலாறு தொடராக வந்தபோது திரு.விஜயகுமார் தெரிவித்திருந்தாரே?
திரு.சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் போட்டியாளராகவே கருதவில்லை. அவர் பாணி வேறு. தலைவரின் பாணியே வேறு. ஒரு காலத்தில் போட்டி இருந்திருக்கலாம். 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எங்கள் போட்டியாளராக திரு.கருணாநிதியைத் தான் பார்க்கிறோம்.
உங்கள் திரியில் எழுத்து வன்மையும் விஷய ஞானமும் உடையவர்கள் என்று என் மனதில் ஒரு பட்டியல் உண்டு. அதில் உங்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், சமயத்தில் நீங்கள் இப்படி காமெடி செய்வது வேடிக்கை.
சரி.. போகட்டும். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவரின் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்பதிலும் எங்கள் ரசனையோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்பதிலும் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்களே மேலே குறிப்பிட்டது போல உங்களுக்குப் பிடித்த மாட்டுக்கார வேலன் திரைப்பட விமர்சனத்தை எப்போது எழுதப் போகிறீர்கள்? நவம்பர் 7ல் பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அந்தப் பிறந்த நாளில் உங்கள் எழுத்துக்களால் தலைவருக்கு புகழ்மாலை சூட்டினால் பெருமகிழ்ச்சி அடைவோம்.
சரி... கிட்டே வாருங்கள்... இன்னும் கொஞ்சம்.. அட.. பயப்படாதீர்கள்... ஒன்றும் செய்துவிட மாட்டேன். ..எங்கே? காதைக் கொடுங்கள்... (உங்களுக்கு தலைவரை உள்ளூர பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அது வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே தலைவரைப் பாராட்டும் உங்கள் நண்பர்களை திட்டுவது போல நடிக்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்கள் இரண்டாவது மகனுக்கு தெய்வமகன் பட பாதிப்பால் விஜய் என்று பெயர் வைத்ததாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் தலைவரின் பெயர் விஜய் என்பதால் அந்தப் பெயரை வைத்தீர்களோ? என்று கூட எங்களுக்கு சந்தேகம் உண்டு. நீங்கள் மட்டும் என்ன சும்மாவா? குமரிக் கோட்டத்தில் தலைவரின் பெயர்தானே உங்கள் பெயர். இதற்காகவே உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தலைவரின் ஆசிகள் உண்டு. தலைவரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், அதையும் தாண்டிய விசுவாசிகள் எல்லா தளங்களிலும் உண்டு. அவர்கள் எங்கே, எப்படி, எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் அந்தப் பக்கம் இருக்கிறீர்கள். ம்.. ஜமாயுங்கள்...) இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும். ஹைய்யோ.. ஹைய்யோ.... நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்